8/15/2009

கொடைக்கு மாறுங்க மக்களே!

தானந் தவமிரண்டுந் தங்கா தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின் - குறள்.

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
- நல்வழி

தானம் என்பது தமிழ்ச் சொல்லே அல்ல என்பது சரியன்று; அப்படி இருப்பின் இந்த சங்ககாலப் பாடல்களில் அச்சொல் இடம் பெற்றிருக்காதே?


வானம்பாடிகள் said...

ஈகையும் தானமும் ஒன்னில்லிங்களா பழமை?

பாலாண்ணே, நான் இது போலச் சிக்கலான இடங்கள்ல நாடுவது G.U. போப் அவர்களைத்தான். மனுசன், ஆங்கிலச் சொற்களோடு ஒப்பிட்டு அவ்வளவு சுலுவா விளக்குவாரு. இஃகிஃகி, அவரோட புத்தகத்துலதான்; பின்ன என்ன அவரு எங்க அப்பிச்சியாட்டம் கனவுலயா வர்றாரு?

ஈகை, தானம், கொடை, ஐயம் இந்த சொற்களை நாம, நாம படிச்ச அளவுல தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ஈகை: ஒருத்தர், அடுத்தவர்க்கு எதனாக் கொடுத்தாதான் அது ஈகையா? கண்ணுகளா, இது ஒரு பண்புச் சொல். ஆங்கிலத்துல, caringனு சொல்லுறாங்களே, அதுக்கு இந்த ஈகை வரும்ங்றாரு G.U.P. யாருடைய குழந்தையோ ஒன்னு, அங்க விளையாடிட்டு இருக்கு. அந்த பக்கமாப் போற, பாம்பைக் கண்டதும் பதறியடிச்சி துடிதுடிக்கிறான் ஒருத்தன். அவன் ஈகைக் குணம் உள்ளவன், அதனால அவன் பதறுறான்.

தானம்: தானாக எனும் நிலையில் இருப்பது தானம்; நிலை கொள்வது தானம்; சன்னிதானம், சமீபத்தில் நிலை கொள்வது; பிர + தானம், முதன்மை நிலை கொள்வது பிரதானம்; அவம் என்கிற நம்பகமற்ற நிலையைக் கொள்வது அவதானம். ஆக, தானாகச் செய்வது தானம்.

கொடை: கேட்டுக் கொடுத்தாலும் சரி, கேக்காமக் கொடுத்தாலும் சரி, கொடுக்கும் குணமிருந்தா அது கொடைதான். என்ன, அதுல உதவும் மனப்பாங்கு இருக்கணும். அதுக்காக பிரதிபலனை மனசுல வெச்சிக் கொடுத்தா, அது கொடையாகாது!

ஐயம்: பிச்சை எடுத்தல் என்பது ஐயம். ஐயம் இட்டு உண் என்றால், இரப்போர் யாராவது இருந்தால், அவர்களுக்கு இட்டு உண் என்றாகும்.

ஆகவே, நாம புரிஞ்சிகிட்டதுல இருந்து சொல்ல வர்றது என்னன்னா, இந்த சொற்கள் எல்லாமே ஒன்னுக்கொன்னு தொடர்புடையதுதான், ஆனால் அவை தனித்தன்மை கொண்ட சொற்கள். Yes, they are unique!

வரவழைச்சுக் கொடுத்தாக் கொடை, போய்க் கொடுத்தா தர்மம் (அ) தானம். உயர்த்திக் கொடுத்தா கொடை, கை தாழ்த்திக் கொடுத்தா தானம். இதை எல்லாம் ஏற்க மனசு தயங்குதுங்கோ!

15 comments:

vasu balaji said...

ரொம்ப நன்றி பழமை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதுக்காக பிரதிபலனை மனசுல வெச்சிக் கொடுத்தா, அது கொடையாகாது!//

ஆஹா.., அப்ப நன்கொடை அப்படின்னா கப்ஸாவா தல..,

இராகவன் நைஜிரியா said...

பல நாள் சந்தேகம் நிவர்த்தியானது ஐயா... நன்றிகள் பல.

ஈரோடு கதிர் said...

//ஈகை, தானம், கொடை, ஐயம் இந்த சொற்களை நாம, நாம படிச்ச அளவுல தெரிஞ்சிக்கலாம் வாங்க.//

தெரிஞ்சிக்கிட்டோம்
நன்றி மாப்பு

//அவை தனித்தன்மை கொண்ட சொற்கள். Yes, they are unique! //

மாப்பு
இது ஏன் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி
இஃகிஇஃகி ihiihi

நிகழ்காலத்தில்... said...

அவதானம் என்பதன் வேறுபொருள்

கவனித்தல், பார்த்த மாதிரியே இருக்காது ஆனா சரியா கவனித்திருத்தல்

இது சரியா, தவறா!!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

இஃகிஃகி!

@@SUREஷ் (பழனியிலிருந்து)

தலை, நீங்கதான் சொல்லிட்டீங்களே!

@@இராகவன் நைஜிரியா

வணக்கம் ஐயா!

@@கதிர் - ஈரோடு

தாங்கள் கூறுவது, You mean I act like Peter?! இஃகிஃகி!

@@நிகழ்காலத்தில்...

ஆமாங்கோ, அஸ்டாவதானி, தசாவதானி... ஒரே நேரத்தில் பலதும் காணுதல்

Thekkikattan|தெகா said...

interesting... thanks! (no tamil fonts working with new ex9)

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
interesting... thanks! (no tamil fonts working with new ex9)
//

its alright buddy!

vasu balaji said...

ஏனுங்க. கொடைக்கு மாறி வாக்களிச்சிதானே தேர்தலுக்கு அர்த்தமே மாறிப் போச்சு. நீங்க வேற இப்பிடி சொல்றீங்களே.

naanjil said...

தம்பி மணி:

அருமையானப் படைப்பு. வாழ்த்துக்கள்.

தானம் பற்றி ஆ. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாம்ணியில் கூறியிருப்பது. தானம் தலைப்படுதானம்,
இடைப்ப்டுதானம், கடைப்படுதானம் என மூன்று வகைப்படும்.

அறந்தான் ஈட்டிய பொருளை முக்குற்றம் அற்ற நற்றவத்தோரைக் கொள்க எனப் பணிந்து குறை இரந்து தம் உள்ளம் உவந்து ஈதல் தலைப்படுதானம்.

ஆதுலர், குருடர், மாதர்முதல் பிறர் சிறுமையைப்பற்றி மனம் இரங்கி ஈவது இடைப்படுதனம்.

புகழ், ஆர்வம், கைமாறு, அச்சம், கண்ணோட்டம், காரண்ம், கடைப்பாடு இவற்றைப்பற்றி ஈவது கடைப்படுதானம்.

நன்றி
நாஞ்சில் பீற்றர்

பழமைபேசி said...

// naanjil said...
தம்பி மணி:
//

அண்ணா, வணக்கம்! மேலதிகத் தகவலுடன் கூடிய தங்களின் பாராட்டுதலுக்கு என்றும் கடமைப்பட்டு உள்ளேன்!

Unknown said...

நல்ல விளக்கங்கள் பழைமைபேசி. மேலும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

Unknown said...

//ஐயம்: பிச்சை எடுத்தல் என்பது ஐயம். ஐயம் இட்டு உண் என்றால், இரப்போர் யாராவது இருந்தால், அவர்களுக்கு இட்டு உண் என்றாகும்.
//
ஐயம் - இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குல்ல ? ஐயம் - பயம் ?

-வெங்கி

பழமைபேசி said...

//சுல்தான் said...
நல்ல விளக்கங்கள் பழைமைபேசி. மேலும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
//

நன்றிங்க ஐயா!

//Venkatesan said...
ஐயம் - இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குல்ல ? ஐயம் - பயம் ?

-வெங்கி
//

ஆமாங்க வெங்கி!

Unknown said...

என்
மனதில் இருக்கும் ...
மரியாதைக்குரிய.....
பெயர் தெரியாதவருக்கு...........

வணக்கம் சார் , , ,
சலசலன்னு பேசுற கொலுசு பொண்ணோட கால்ல இருக்கு , , ,
மௌனமா இருக்குற சங்கிலி பொண்ணோட கழுத்துல இருக்கு , , ,
அதிகம் பேசுனா கீழதான் போணும் , , ,
அதனால ....
ரெண்டே ரெண்டு விசயத்த
ரெண்டே ரெண்டு நிமிடத்துல எழுதுறேன்,

முதல் விசயம்

கிரண்பேடி IPS அவர்களை முதன் முறையாக நடிக்க வைத்து
இளையராஜா இசையில்
The Real Salute
என்ற தேசபக்திமிக்க குறும்படத்தை 5 மொழிகளில்
எடுத்து 17 விருதுகளுக்குமேல் பெற்றிருக்கிறேன்,

இரண்டாவது விசயம்

ஒளியும் ஒலியும் என்ற திரைப்படத்தை (Art Film)
கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி இயக்கி இருக்கிறேன் , , ,

The Real Salute குறும்படத்தையும்

http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo

ஒளியும் ஒலியும் தி்ரைப்படத்தில் இரண்டு பாடல்களையும்,

http://www.youtube.com/watch?v=DnaXxVv0ZqA

http://www.youtube.com/watch?v=HqGUamRQ2Ls

http://www.youtube.com/watch?v=_tzev_PVmh4

http://isai.in/tamil/?p=836

பத்திரிக்கையின் பாராட்டுக்களையும் இத்துடன் அனுப்பி இருக்கிறேன்,

இந்த இரண்டு விசயமும் எதுக்கு ? ? ?

இப்போது கொஞ்சம் கமர்சியல படம் எடுக்க இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் (தயாரிப்பாளர்கள் producer )
தொடர்ப்புக்கு

shakthichellam@gmail.com
sakthichellam15@gmail.com

+919884571566
+919942222977

பணிவுடன்
சக்தி செல்லம்