8/21/2009

வெட்டாப்பு!

கண்ணுகளா, வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்விழா ஆரம்பிச்ச நாள்ல இருந்து, July 03 2009, இன்னைக்கு வரைக்குமு கொஞ்சங்கூட வெட்டாப்பு இல்லாம, கொறைஞ்ச பட்சம் தினமொரு இடுகைன்னு இட்டுட்டு வந்தமில்ல?! இப்ப அதுல இருந்து வெட்டாப்பு உடுற நேரம் வந்துடுச்சு.

ஆமாங், ஊருல இருந்து எங்க தாய்மாமம் பையன், என்ற மாப்புளை இன்னிக்கி கோயமுத்தூர்ல இருந்து, சாயங்காலம் அமெரிக்காவுக்கு வாறானுங்... அவனைக் கெவனிக்கோணுமல்லோ? அதான்! எழுதுறலிருந்து வெட்டாப்பு!

எங்க ஊருல அப்பிசி மாசம் அடை மழை, கொஞ்ச நேரம் தூத்துறதுல இருந்து இடைவெளி விடும்போது சொல்லுறது வெட்டாப்புன்னு.


செரி, தகவலைச் சொல்லிப் போட்டு எங்கூர்க் காடுகளைப் பத்தி ஒரு தகவலைச் சொல்லாமப் போனா நல்லாவா இருக்கும்?

கோம்பைன்னா கண்ணூ, தோட்டங்காட்டுல ஓரத்துல இருக்குற வேலியைச் சொல்றது கண்ணு. அதான், வேலி பிரதானமா இருக்குற காட்டைச் சொல்றது கோம்பைக்காடு.

தாழ்வான பகுதிகள்ல, அதாவது இறங்குமுகமாகவோ, இறக்குத்தலயோ இருக்குற காடு, எறங்காடு (இறங்கு + காடு). மேடான பகுதியில இருக்குறது மேட்டாங்காடு.


இப்ப எல்லாக்காடும், புழுதிக்காடாவோ கட்டங்களாவோதான் இருக்கும். என்ன செய்யுறது கண்ணு, காலந்நேரமும் ஒரே கெடையிலா இருக்குது? மாறிட்டேதான இருக்கு? அதான், எல்லாமே மாறுது...

அப்ப நான் வெட்டாப்பைக் கலைச்சிட்டு மறுக்காவும் வர்ற வரைக்கும் நீங்களும் பாத்துப் பதனமா இருங்க... குதூகலமாவும் இருங்க! வாறங்கண்ணூ அப்ப!!

17 comments:

தமிழ் said...

/அப்ப நான் வெட்டாப்பைக் கலைச்சிட்டு மறுக்காவும் வர்ற வரைக்கும் நீங்களும் பாத்துப் பதனமா இருங்க... குதூகலமாவும் இருங்க! வாறங்கண்ணூ அப்ப!! /

செரிங்க
:))))))))))))))))))

ஈரோடு கதிர் said...

மாப்பு

நொசநொசனு பேயற அப்பிசி மழைல வெட்டாப்பு உட்டா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்...

நீங்க வெட்டாப்பு உடறதில சந்தோசமில்லையப்பா

சட்டுபுட்னு மாம்பயன அனுப்பியூட்டு வந்துங்கோ

- இரவீ - said...

செரிங்...

vasu balaji said...

நலமா போய் வாங்க.

Karthikeyan G said...

//தாழ்வான பகுதிகள்ல, அதாவது இறங்குமுகமாகவோ, இறக்குத்தலயோ இருக்குற காடு, எறங்காடு (இறங்கு + காடு). மேடான பகுதியில இருக்குறது மேட்டாங்காடு.//

கொறங்காடுனா என்னங்க.
"கொறை" போடற காடா?

அப்பாவி முரு said...

அண்ணே உண்மையிலேவா????


உங்களைவிட்டு எப்பிடி நாங்க இருப்போம்.,

மாமம்பையனப் பார்த்துக்குறதுக்கு இடையில எங்களையும் கவனிச்சுக்கங்கண்ணா!!!

இராகவன் நைஜிரியா said...

சரிங்கண்ணே... பாத்துக்கிறோம்...

பழமைபேசி said...

@@திகழ்மிளிர்
@@கதிர் - ஈரோடு
@@Ravee (இரவீ )
@@வானம்பாடிகள்

நன்றிங்க மக்களே!

//Karthikeyan G said...
//தாழ்வான பகுதிகள்ல, அதாவது இறங்குமுகமாகவோ, இறக்குத்தலயோ இருக்குற காடு, எறங்காடு (இறங்கு + காடு). மேடான பகுதியில இருக்குறது மேட்டாங்காடு.//

கொறங்காடுனா என்னங்க.
"கொறை" போடற காடா?
//

கொறைன்னா, தரிசு. கொறங்காடுன்னா தரிசு நிலம்.

@@அப்பாவி முரு
@@இராகவன் நைஜிரியா

நன்றீங்கோ!

குடந்தை அன்புமணி said...

எங்க ஊர்ப்பக்கம் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தை முக்கூட்டுச்சாலை(ரோடு) என்பார்கள். இது எதுக்கு இங்கன்னு கேட்காதீங்க... சும்மா ஒரு இதுக்குத்தான்... இஃக்கி... இஃக்கி...

Unknown said...

சரி கண்ணு. அதெல்லாம் பாக்கனுந்தானுங்.
அதுக்காவ பெருசா வெட்டாப்பு விட்றாம வெரசா வா கண்ணு.

செல்வநாயகி said...

உங்க எழுத்துக்கள் மழையாத் தூறிக்கிட்டு இருந்துதுன்னு நீங்களே முடிவு பண்ணி இப்ப "வெட்டாப்பு" னு அறிவிச்சிருக்கீங்களே, இல்லை அது அக்கினி வெய்யிலாத்தான் இருந்துதுன்னு நாங்க சொன்னா, இந்த "வெட்டாப்பு" பொருந்தாதே:)) என்ன பண்ணுவீங்க:)) (இது சும்மா லொள்ளுக்கு)

ரொம்ப‌ வெட்டாப்புடாம‌ சீக்கிர‌மே வாங்க‌:))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நாலு நாள் கணினி பக்கம் வரல,அதுக்குள்ளே இத்தனை இடுகைகளை தவறவிட்டு விட்டேனா?

Joe said...

Enjoy the break, mate!

அது சரி(18185106603874041862) said...

வெட்டாப்பு :0))

ஆ.ஞானசேகரன் said...

உங்க வெட்டாப்புக்கு சரிதான்.. எங்களையும் ஞாபகம் வச்சுக்கங்கோ சாமி....

நாகராஜன் said...

ரொம்ப வெட்டாப்பு உட்டராதீங். கொஞ்சம் சீக்கிரமா வந்து சேருங்கோவ்.

priyamudanprabu said...

வெரசலா வாங்கோ