இன்மைக்கு மட்டுமே ஒரு இடுகைன்னா, உண்மை கோவிச்சிக்கிடும்ல பழமை? உள்ளது உள்ளபடி சொல்றது உண்மைன்னா, சத்தியம்னா என்ன? உண்மைக்கு நிரூபணம் தேவை. சத்தியத்துக்கு தேவை இல்லைன்னு சொல்லுவாங்களே. அதனாலதான் நீதிமன்றத்தில் நான் சொல்லுவதெல்லாம் உண்மைன்னு பிரமாணம் வாங்குறாங்களா?
--வானம்பாடிகள்
எங்க ஊர்ப் பெருசை நினைச்சு இடக்குமுடக்கு! இடுகை இட்டாலும் இட்டோம், எத்தனை மின்னஞ்சல்கள்? விவாதங்கள்? பாராட்டுகள், விமர்சனங்கள், கேள்விகள்?! நெம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. இந்த காலகட்டத்துல இந்த மாதிரியான விபரங்களைக் கூட, கேட்க, படிக்க ஆட்கள் இருக்குறாங்கன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.
திருப்பூர்ல இருந்து நிகழ்காலத்தில் பதிவர்கிட்ட இருந்து வரவும் போகவுமா வினாக்களும் விடையளித்தலுமா மின்னஞ்சல் தொடர்! கடைசியில, உங்ககிட்ட இப்ப வைர மாலை இருக்கான்னு ஒரு கேள்வி கேட்டேன். மச்சான் ஒரேயடியா சரண் அடைஞ்சுட்டாரு! இஃகிஃகி!!
சரி, விசயத்துக்கு வருவோம் வாங்க. உண்மைன்னா உள்ளமைன்னு முந்தைய இடுகையில விபரமாவே அலசித் தொவச்சிக் காயப்போட்டாச்சி. பாலா அண்ணன், அப்ப சத்தியம்ன்னா என்னன்னு கேட்டு இருக்காரு.
உண்மைக்கு மெய்ப்பு (அ) நிரூபணம் தேவை. அதேபோல சத்தியத்துக்கும் மெய்ப்பும் தேவை; சான்றும் தேவை. இங்கதான் நாம அடிக்கடி சொல்ற, தமிழ் ஒரு நுண்ணிய (sensitive language) மொழிங்றதை நாம எல்லாரும் கவனத்துல கொள்ளணும்.
சத்தியம்(திசைச்சொல்)ன்னா என்ன? வாக்குக் கொடுப்பது அல்லது உறுதிமொழி அளிப்பது, வாய்மை(தப்பாமொழி)! வாய்மொழி வாக்கும் புழக்கத்துல, பண்டைய காலத்துல இருந்தது. அதை மெய்ப்பிக்கிறதுக்கு ஒரு சான்றுதான் சாட்சி. அதாவது அவர் சொன்னதைக் கேட்டதாகச் சொல்ல மற்றொருவர்.
வாய்வாக்குத் தவறுதல் ஓங்கி வந்த காரணத்துக்காக, பின்னாளில் வந்தது அத்தாட்சி. அதாவது சொல்வதை எழுத்தில் பதிந்தது. அந்த அத்தாட்சியை, சாட்சியுடன் முழுமைப்படுத்துவதும் செயலில் வந்தது. அதன் கூறுகள்தான், சான்றவன், சான்று, சான்றுரைஞர், சான்றோன் இப்படி எல்லாமும்.
சத்தியம் தவறிட்டான் அவன்னு சொன்னா, உண்மையில் இருந்து பிறழ்ந்தவன்னு சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க பொருட்பிழையான புரிதல். கொடுத்த வாக்கில் இருந்து தவறிவிட்டவன், அல்லது வாக்கு காப்பாற்றும் நீதியிலிருந்து தவறியவன்னுதான் வரும், வரணும்.
நான் சொல்லுவதெல்லாம் உண்மைன்னு நீதிமன்றத்துல ஒருத்தர் சொல்றார். அதுக்கென்ன அர்த்தம்? உள்ளவற்றை மட்டுமே சொல்வேன் நான் அப்படீங்றதுதான் பொருள். அந்த வாக்கைச் சான்றுரைக்க நீதியரசரே இருக்கிறார்.
ஆக முடிவா நாம சொல்றது என்னன்னா, உண்மைக்குத் தேவை மெய்ப்பு. சத்தியம் (அ) உறுதிமொழிக்குத் தேவை சாட்சியும், அத்தாட்சியும் உள்ளடக்கிய சான்று. வாய்வாக்குக்குத் தேவை மானம். மானம் என்கிற வார்த்தையெல்லாம் அகராதிய விட்டு ஓடி, நெம்ப நாள் ஆச்சுங்க! அதுவும் கழகங்கள் வந்ததின் பிறகு சொல்லவே வேணாம்!
இதுமாதிரி (Semantic) பொருட்பிழைகள் சமீப காலங்கள்ல நிறைய புகுத்தப்பட்டு வருது. சாமான்யர்கள் இதை அதிகமாச் செய்யுறது கிடையாதுங்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம். எல்லாமே, நாலுந்தெரிஞ்ச ஆட்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள் செய்யுற வேலைதான்.
மொழியைக் கட்டி எழுப்புறதுக்கு நம்ம மூதாதையர்கள் எவ்வளவு உழைச்சிருப்பாங்க?! பல்லாயிரக்கணக்கான வருடங்களாகக் காப்பாற்றிட்டு வந்து நமக்குக் கொடுத்துட்டுப் போன செல்வம் அது அல்லவா? அடுத்த தலைமுறைக்குத் தந்துட்டு போகணுமா, வேண்டாமா?
தமிழ்ன்னு அல்ல, எல்லா மொழிகளையும் நேசிக்கணும். We are not here to abuse any language; Building such a sensitive language takes so many years, efforts and dedication. Let's try to make use of it, rather abusing!!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//We are not here to abuse any language; Building such a sensitive language takes so many years, efforts and dedication. Let's make use of it, rather abusing it!!
//
தொர, என்னாதிது? :-):-)
உங்களுக்கு மொழி வெறி கிடையாதுன்னு புரியுது அதுக்குன்னு இப்படித்தான் நிரூபிக்கறதா? :-):-)
அய்யோ பாவம் நீங்க.
@@ கபீஷ்
இலண்டன் திருவாட்டி வாங்க.... இஃகிஃகி.... ஆங்கிலக் காணொளித் தொடுப்பு கொடுத்து இருந்தேன்...
அதுக்கு வாகாத்தான் அந்த வாசகங்கள்... மறுபடியும் நெம்ப வாலாட்டக் கூடாதுன்னு அதை எடுத்துட்டேன்... அதான் விபரம்!
இஃகிஃகி........
//மொழியைக் கட்டி எழுப்புறதுக்கு நம்ம மூதாதையர்கள் எவ்வளவு உழைச்சிருப்பாங்க?! //
ஆமால்ல..,
//எல்லா மொழிகளையும் நேசிக்கணும். We are not here to abuse any language//
செஞ்சிடுவோம்
தம்பி மணி
"இவன் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன்.'
"அவன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்
கொண்டான்." இந்த வரிகளில் உள்ள
பொருட்களில் எங்கு 'உண்மை' அல்லது 'உள்ளண்மை" மறைந்துள்ளது.
'அறம்' என்ற பதத்தில் 'தர்மம்' (ஈகை) அடங்கி இருப்பதுபோல சத்தியத்திற்குள் உண்மை,மெய்மை எல்லாம் அடங்கி உள்ளது என கொள்ளலாமா?
அல்லது சத்தியம் என்பதை வாக்குறுதி (promise)என்ற பொதுச்சொல்லாகக் கொள்ளலாமா?
பொய்ச்சத்தியம், கள்ளச்சத்திய்ம் என்ற சொற்கள் பழக்கத்தில் உள்ளது அல்லவா? ஆனால் நல்லச்சத்தியம் என்று யாரும் கூறுவதில்லை.
நமது ப்ண்டைய இலக்கியங்களில் சத்தியம் என்ற சொல் ப்யன்படுத்தப் பட்டுள்ளதா?
உங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள்
அண்ணன்
நாஞ்சில் பீற்றர்
சில்வர் ஸ்பிரிங்
@@கபீஷ்
எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க இலண்டன் சீமாட்டி!
@@லவ்டேல் மேடி
ஒரே சிரிப்பு! பல்லு சுளிக்கிக்கப் போகுதுங்கோய்....
@@SUREஷ் (பழனியிலிருந்து)
நன்றிங்க நம்மூர் மருத்துவர் ஐயா!
//naanjil said...
தம்பி மணி
"இவன் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன்.'
"அவன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்
கொண்டான்." இந்த வரிகளில் உள்ள
பொருட்களில் எங்கு 'உண்மை' அல்லது 'உள்ளண்மை" மறைந்துள்ளது.
//
வாங்க அண்ணா, வணக்கம்! அண்ணா, சத்தியம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது திசைச்சொல்.
வடசொல் என்றும் வாதிடுவர். எம்மைப் பொறுத்த மட்டிலும், அடுத்த மொழியிலிருந்து எடுத்து தமிழில் சேர்க்கப்பட்ட திசைச்சொல் அது.
சத்தியம் என்பதிலே உள்ளண்மை கிடையாது. வாக்குறுதி மட்டுமே உள்ளது.
//நமது ப்ண்டைய இலக்கியங்களில் சத்தியம் என்ற சொல் ப்யன்படுத்தப் பட்டுள்ளதா? //
நான் கண்டதில்லை அண்ணா!
கலக்கலான அலசல்
விளக்கியமைக்கு மிக்க நன்றி பழமை.
//இதுமாதிரி (Semantic) பொருட்பிழைகள் சமீப காலங்கள்ல நிறைய புகுத்தப்பட்டு வருது. சாமான்யர்கள் இதை அதிகமாச் செய்யுறது கிடையாதுங்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.//
ஆமாம்.. சாமனியர்களுக்கு எப்பொழுதும் தவறு செய்துவிடக்கூடாது என்ற பயம் உண்டு
//ஊடகங்கள் செய்யுற வேலைதான்.//
கசப்பான உண்மை
//மொழியைக் கட்டி எழுப்புறதுக்கு நம்ம மூதாதையர்கள் எவ்வளவு உழைச்சிருப்பாங்க?!//
ஆமாம்
//அடுத்த தலைமுறைக்குத் தந்துட்டு போகணுமா, வேண்டாமா?//
கண்டிப்பாக
//தமிழ்ன்னு அல்ல, எல்லா மொழிகளையும் நேசிக்கணும்.//
ம்ம்ம்ம்
மாப்பு மிக அருமையான இடுகை
வாழ்த்துகள்
மிக அருமையான விளக்கம். எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுதோ?
ரொம்ப நல்லா இருக்கு. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
-பணிவான மாணக்கன், வெங்கி.
செல்வன் அண்ணாச்சிக்கு பிரத்தியேக நன்றி! வாய்மைங்க்ற சொல்லை நினைவுபடித்தியமைக்கு!!
Post a Comment