நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். இறுதியில் பல புத்தகங்களை புரட்டிப் பார்த்ததில் விபரம் தெரிய வந்தது. இதோ அது உங்கள் மேலான கவனத்திற்கு:
அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.
இதிலிருந்து மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உணர முடிகிறது. அதே போல ஊறு (feeling) என்பது எப்படியெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.
வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (கனமற்றது), சீர்மை(கனமானது), இழுமை (வழுவழுப்பு), சருச்சரை( சுரசுரப்பு) என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியாகத்தான், சீரும் சிறப்புமென்பது, வலுவாகவும் சிறப்பாகவும் என்று பொருள்படுகிறது.
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா?
25 comments:
கலக்கறீங்க பழமைபேசி...!!!!!!!
வணக்கம்!
உங்கள் வலைப்பதிவினைஎங்கள் தளத்தின் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி
நட்புடன்
4Tamilmedia Team
இணைப்பைக் காண
வழக்கம் போல் கலக்கல். அந்த கிணற்றுநீர் எதுக்கு?
/ 4தமிழ்மீடியா said...
வணக்கம்!
உங்கள் வலைப்பதிவினைஎங்கள் தளத்தின் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். /
நல்ல அறிமுகம். வாழ்த்துகள்.
அவ்வாறெனில் கவட்டி செய்பவர்கள் அடிமரத்திலிருந்து செய்வார்களா?
தன்மை வேறு தண்மை வேறா. இரண்டும் ஒன்றென்றே நினைத்திருந்தேன்.
ஆஹா. அருமை பழமைபேசி
அருமை sir..
:) wow! interesting pazhama ...
அருமை பழமைபேசி.
இத்தனை பிரிவு.
நாமோ கம்பு ,குச்சி என்று வெறுமனே பேசிவிட்டுப் போகிறோம்....
//4தமிழ்மீடியா said...
வணக்கம்!
உங்கள் வலைப்பதிவினைஎங்கள் தளத்தின் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் இணைத்துள்ளோம் //
மாப்பு வாழ்த்துக்கள்
இன்னும் வேகமா கவக்கோலுல கல்லு விட்டுட்டுத்தான் இருக்குறீகளாக்கும்:)
கவக்கோலை எடுத்து வரச் சொன்னவங்க, அதை வைச்சு என்ன பண்ணுவாங்கன்னும் கொஞ்சம் விளக்கலாமே????
Simply superb !!!
அருமையான விளக்கம்.
//கவக்கோலை எடுத்து வரச் சொன்னவங்க, அதை வைச்சு என்ன பண்ணுவாங்கன்னும் கொஞ்சம் விளக்கலாமே????//
எங்கூர்ல கவக்கோல வெச்சு மாடு தின்னுட்டு பொரட்டி வெச்சுருக்குற வைக்கப்புல்லையெல்லாம் கூட்டி ஒதுக்கி வெப்பாங்க. மாட்டுக்கட்டுத்தரையெல்லாம் சுத்தம் பண்ணறதே கவக்கோல வெச்சுத்தான்.
என்ற அய்யனுக்கு காத்தால சித்த நேரமாவது போய் கட்டுத்தரைய கூட்டுனாத்தான் சோறு உள்ள எரங்கும்னா பாத்துக்கோங்களேன்..
//.. நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள்..//
எங்க ஊர்லயும் இதைத்தான் கவக்கோல்னு சொல்லுவாங்க..
கவக்கோல் வேற கவட்டிகோல் வேறனு சொல்லுறிங்களா..??
இல்ல கவட்டிகோல் மருவி கவக்கோல் ஆயிடுச்சா..??
//செந்தழல் ரவி said...
கலக்கறீங்க பழமைபேசி...!!!!!!!
//
நன்றிங்க செந்தழல்!
//4தமிழ்மீடியா said...
வணக்கம்!//
நன்றிங்க, நன்றிங்க!!
//வானம்பாடிகள் said...
வழக்கம் போல் கலக்கல். அந்த கிணற்றுநீர் எதுக்கு?
//
இஃகிஃகி, உங்க திறமைய யாராலும் அள்ளிகிட்டுப் போக முடியாதுன்னு சொல்லத்தான்.... ஒரு லொள்ளுன்னு கூட வெச்சிக்கலாம்!
//சுல்தான் said...
அவ்வாறெனில் கவட்டி செய்பவர்கள் அடிமரத்திலிருந்து செய்வார்களா?//
கவடுன்னா பிரிந்த ஒன்றுங்க ஐயா! கவட்டுல அடிச்சிருவேன்னு சொன்னா, ஆண் குறியை அடிப்பது என்று பொருளாகும். ஆக, V வடிவில் இருப்பது எதுவும் கவடு, கவட்டு, கவுட்டு, கவிட்டி என சொல்லப்படுகிறது ஐயா!
கவை என்றால் குறிப்பாக, அடிமரத்தில் இருக்கும் பிரிவு!
//தன்மை வேறு தண்மை வேறா. இரண்டும் ஒன்றென்றே நினைத்திருந்தேன்.//
ஆமாங்க ஐயா! தண்மை என்பது குளிர்மை. தண்ணீர், வெந்நீர்.... தண்மையான நீர் தண்ணீர், வெம்மையான நீர் வெந்நீர்.
தன்மை என்பது தன்னகத்தே உள்ள பண்பு.
//ஆஹா. அருமை பழமைபேசி//
நன்றிங்க ஐயா!
//சூர்யா//
நல்ல தகவல்... நன்றிங்க தம்பி!
@@Karthikeyan G
@@இயற்கை நேசி|Oruni
@@வல்லிசிம்ஹன்
@@கதிர் - ஈரோடு
@@ராஜ நடராஜன்
@@பதி
@@Gurusamy
@@அக்பர்
@@பட்டிக்காட்டான்..
நன்றிங்க எல்லாருக்கும்!
ஏவண்டி கவண்டிய எடு, இங்க ஒருத்தரு டேட்டாபேசுல பேரூ போட்டிடுக்குது
aahaa! veNmai, venmai,.........ippadi pala rhyming words kuduththutteengaLE? Vairamuththu idhai vachchu 15 paattu ezhudhi kaasu sambaadhucchuduvaar :-)
கலக்கறீங்க பழமைபேசி...!!!!!!!
வேற என்ன சொல்லுறது??@??!?!?!?!?
///அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.///
அழகு மிக அழகு.... பாராட்டுகள் பழம
அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு.
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் தம்பிக்கு நன்றி.
அண்ணன் நாஞ்சில் பீற்றர்.
//naanjil said...
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் தம்பிக்கு நன்றி.
அண்ணன் நாஞ்சில் பீற்றர்.
//
அண்ணா, தங்களிடம் பாராட்டுப் பெறுவது மிக்க மகிழ்வாக உள்ளது; நன்றி!
@@ஆ.ஞானசேகரன்
@@பிரியமுடன் பிரபு
@@Raja
@@குடுகுடுப்பை
மிக்க நன்றிங்க!
// கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா? //
கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாதேனினும்
பூமியைப் பற்றித்தான் பயமெனக்கு...! ங்க அண்ணா
Post a Comment