8/02/2009

தமிழ்த் திருவிழாவில் புதுமை!

சேரன் செங்குட்டுவன் அணி

ஈழப்புலவர் பூதன்தேவனார் அணி


வட அமெரிக்கத் தமிழர் பேரவையின் தமிழ்த் திருவிழாவில், நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் நடத்திய புதுமையான பல்லூடக நிகழ்ச்சி அனைவரது வரவேற்பையும் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே! இந்த நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய விநாடி வினாவாக மலர்ந்தது. அதன் காணொளியைக் கீழே கண்டு களிப்பீராக!




இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இடம் பெற்ற முழு பல்லூடக மூலக் கோப்புகளை இந்தச் சுட்டியில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நிறையத் தமிழிசை மற்றும் சுவாரசியமிக்க விபரங்களுடன் கூடிய இந்நிகழ்ச்சியின் கோப்புகளை ஒரே உறையில் (folder) இட்டு, அனைவரும் கண்டு களித்து இன்புறலாம்.

நிகழ்ச்சியின் மூலக் கோப்புகள் முழுக்க முழுக்க தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமே பாவிக்கப்பட வேண்டுமே அல்லாது, வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்பதை, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மேன்மைமிகு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோப்புகள் மற்றும் நிகழ்ச்சியைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு நாஞ்சில் பீற்றர் அய்யா(peter.yeronimuse@gmail.com) அவர்களைத் தொடர்பு கொள்ளவும். மேலும் அருமையானதொரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, தமிழ் வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் அவர்தம் பணியை தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டு உள்ளது.

திரு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களுடன்!



(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

8 comments:

தேவன் மாயம் said...

சங்க காலத்தில் இருப்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!

VSK said...

நல்லதொரு பதிவு! சுவையான தகவல்கள்!

ஆமாம்! நீங்களும் ஏன் பீட்டர் எனச் சொல்லாமல் பீற்றர் எனச் சொல்லியிருக்கீங்க!

அவர் ஒன்றும் பீற்றிக் கொள்பவரில்லையே!
குடத்திலிட்ட விளக்குதானே!

ஓ! அறிமுகத்தில் அப்பட்க் கொடுத்திருந்தாரோ!
அப்ப, உங்க மேல தப்பில்லை!
:))
தொடர்ந்து நீங்கள் ஆற்றிவரும் அரிய சேவையைப் பாராட்டுகிறேன்!

பழமைபேசி said...

//தேவன் மாயம் said...
சங்க காலத்தில் இருப்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது..
//

நன்றிங்க மருத்துவரே!

பழமைபேசி said...

//VSK said...
தொடர்ந்து நீங்கள் ஆற்றிவரும் அரிய சேவையைப் பாராட்டுகிறேன்!

July 29, 2009 9:59 PM
//

அடுத்து வந்த மருத்துவருக்கும், மதிப்பிற்குரிய ஐயா வர்கட்கும் மிக்க நன்றி!

பழமைபேசி said...

முழுக்கோப்பும் தரவிறக்க மேலே குறிப்பிட்டு உள்ள தொடுப்பில் download எனும் வில்லையை அமுக்கி, அதனுள் கொடுக்கப்பட்ட குறிச் சொல்லை இடவும்.

vasu balaji said...

நன்றி பழமை பகிர்தலுக்கு.

பழமைபேசி said...

//பாலா... said...
நன்றி பழமை பகிர்தலுக்கு.
//

நன்றிங்க பாலாண்ணே!