6/27/2009

அமெரிக்காவாழ் பொட்டிதட்டிகளே!

வணக்கம் கண்ணுகளா! பொருளாதார மந்தம், கடுமையான வேலைவாய்ப்பின்மை... இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல எந்த நெளிவு சுழிவுகளுக்கு சுலுவுல வேலை கிடைக்கும்? இப்பிடிப் பல கேள்விக நம்மளைச் சுத்தியுமு...

இந்த சூழ்நிலையிலதாங்க, தொழில் செயல்முறையாக்க மென்பொருளுக்கு (Business Process Management) சந்தையில இருக்குற அபரிதமான வளர்ச்சி, அது சம்பந்தமான வேலைவாய்ப்புகள் பெருக்கம், இதெல்லாம் மகிழ்வான விசயம். நாம அதுலதான கடந்த மூனு ஆண்டுகளா பொழப்பை ஓட்டிட்டு வர்றோம். உண்மையிலேயே நல்ல நிலையை நோக்கிப் போயிட்டு இருக்குற துறைதாங்க இது.

இங்கதாங்க, ஒரு கவன ஈர்ப்புத் தகவல்! இன்றைய சூழல்ல, Pega - PRPCங்ற மென்பொருளுக்கு ஏக மவுசு, சந்தையில படு கிராக்கி, அந்தத் துறையில அதான் முதல் இடத்துல இருக்கு. ஆகவே, நம்மூர்ல இருந்து நிறையப் பேரு அந்த மென்பொருள் பாவிக்கிறது எப்படின்னு தெரிஞ்சிட்டு இங்க வர்றாங்க. வந்து அவங்க நடத்துற பட்டயத் தேர்வுல தேர்ச்சி பெற்றதாகவும் உபசங்கார(resume)த்துல குறிப்பிடுறாங்க.

இவ்வளவு நாள் பெருசா அதை யாரும் கண்டுகிடலை. பாருங்க, போனவாரத்துல நிறைய பேர்த்தை ஆய்வு செய்ததுல வெறும் 2 பேர்தான் உண்மையாலுமே அந்த certification, pass ஆகி இருக்காங்க. மத்தவங்க எல்லாம் ச்சும்மாவே தேர்ச்சி பெற்றதா போட்டுகிட்டாங்க. ஆக அவங்க first name, last namesystemல பதிஞ்சாச்சு. இனி அவங்க அந்தத் தேர்வுல கலந்துக்க முடியுமா? இஃகிஃகி!

அதனால certified PRPC System Architectனு, ச்சும்மா ச்சும்மா கொல்டிகளை மாதர நீங்களும் போட்டுடாதீங்க என்ன? அது ஒன்னும் பெரிய IAS தேர்வு கிடையாது. நம்ம சனங்களுக்கு அது நெம்பச் சுலுவு இராசா, நெம்பச் சுலுவு!

அடுத்து? அண்ணே, அட்லாண்டாவுல Fetna ஆண்டு விழா நடக்குறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நான் நுழைவுச் சீட்டு வாங்காமத் தவறிட்டேன் கண்ணுகளா! நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா! உங்களுக்கு சித்த புண்ணியமாப் போகும்!! மக்களே என்னோட விபரப் பட்டையில இருக்குற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்க... நன்றி உடையவனாயிருப்பேன்!

நன்றி! நன்றி!!நன்றி!!!

Fetna, தமிழ்விழாக் குழுவினரே தொடர்பு கொண்டு ஒரு நுழைவுக்கான அனுமதியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்கு இடையில அப்படியொரு வாய்ப்பை எமக்கு வழங்கிய அவர்களுக்கு மிக்க நன்றி!

28 comments:

அது சரி(18185106603874041862) said...

//
நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா! உங்களுக்கு சித்த புண்ணியமாப் போகும்!
//

மேல சொன்ன கொல்டிங்கள்ட்ட கேட்டு பாருங்க...அவங்களே டிக்கட் அடிச்சி தருவாங்க :0))

அது சரி(18185106603874041862) said...

யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....நாந்தான் பஸ்ட்டு...பஸ்ட்டு...பஸ்ட்டு...

பழமைபேசி said...

// அது சரி said...
மேல சொன்ன கொல்டிங்கள்ட்ட கேட்டு பாருங்க...அவங்களே டிக்கட் அடிச்சி தருவாங்க :0))
//

அகஃகா! சரியா சொன்னீங்க போங்க... எதுவும் செய்வாங்க அவுங்க...

குடுகுடுப்பை said...

நான் மட்டும் தமிழ்ன், என்னைச்சுத்தி முப்பது கொல்டி குடும்பம். குடியிருப்புல இல்லைண்ணே ஆபிஸ்லே

RRSLM said...

அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட வேல செய்யற அத்தனை கொல்டிகளும் போன் பண்ணவும், ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் தான் அலுவலகம் வருவானுங்க........

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நான் மட்டும் தமிழ்ன், என்னைச்சுத்தி முப்பது கொல்டி குடும்பம். குடியிருப்புல இல்லைண்ணே ஆபிஸ்லே
//

எல்லாரும் இங்க இருக்காங்க... ஆந்திராவுல வேற யாருதான் இருக்காங்கண்ணே?

Subash said...

Business Process Management நானும் இதைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன் பிளாக் மற்றும் நிபுணர்களின் கட்டுரைகளினூடாக.
இப்ப மார்க்கட்டில் ஹாட் இதுதான்.
Business Process Management + ERP க்கு ஏதுனா நல்ல சைட் ஆர்ட்டிகல்ஸ் கிடைச்சா தருவீங்களா?
நன்றிகள்.

சீமாச்சு.. said...

//ஆக அவங்க first name, last nameஐ systemல பதிஞ்சாச்சு. இனி அவங்க அந்தத் தேர்வுல கலந்துக்க முடியுமா? //

என்ன பழமைபேசியாரே.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளுங்களா நாங்க. நாங்க resume ல போடறதே முழு பேரு கிடையாது.. இதுல நீங்க உங்க ஸீஸ்டத்துல என்ன போட்டுக்கிட்டா எங்களுக்கு இன்னா?

இன்னா, வெள்ளாடறீங்களா?

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai....

இராகவன் நைஜிரியா said...

//நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... //

நீங்களுமா இப்படி... எப்படு ஆச்சு இப்படி...

இராகவன் நைஜிரியா said...

// Seemachu said...

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai.... //

எந்த ஊரு நியாங்க இது... பேரைப் படிக்கவே மூச்சு வாங்குது, இதுல First Name, Last name எல்லாம் யாருங்க கண்டு பிடிப்பது...

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said... //

ஐயா, உங்க ஊர் தொலைபேசி, அலைபேசி எண் தாங்க...

ஷங்கி said...

விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தகவலுக்கு.
அண்ணன், தங்கத் தமிழ்மகன் பழமைபேசி, அட்லாண்டா சென்று வந்து இடும் இடுகையை எதிர்நோக்கி...

priyamudanprabu said...

அண்ணே
என் வலைபதிவு
http://www.priyamudan-prabu.blogspot.com/

இதை இப்போது திறக்க முடியவில்லை
திறந்தால்

This domain name expired on Jun 23 2009 05:01AM
Click here to renew it.


என்று வருகிறது

அதை கிளிக் செய்தால்

[r4] Error Message: The URL you have typed is either incorrect or has been changed. Please contact our Support desk if you continue to get this error.

என்று வருகிறது

என்ன செய்வதுன்னு தெரியலை
பெரியவா நீங்காள் உதவ முடியுமா????


மின்னஞ்சல்
priyamudan_prabu@yahoo.com.sg

சீமாச்சு.. said...

//ஐயா, உங்க ஊர் தொலைபேசி, அலைபேசி எண் தாங்க...
//

என் பின்னூட்டத்துக்கு பதில் எழுதாமல் அண்ணன் நைஜீரியா ராகவன் அவர்கள் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் அளித்த பழமைபேசியாரை அன்புடன் வன்மையாகக் கண்டிக்கிறேன் !!

பழமைபேசி said...

//Seemachu said...
என் பின்னூட்டத்துக்கு பதில் எழுதாமல் அண்ணன் நைஜீரியா ராகவன் அவர்கள் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் அளித்த பழமைபேசியாரை அன்புடன் வன்மையாகக் கண்டிக்கிறேன் !!
//

ஐயா...நான் சாப்பாட்டுக்கு இங்க சரவணன் ஐயா விட்டுக்கு போற அவசரத்துல இருந்தேன்...இப்பத்தான் வந்தேன்.... அதுக்குள்ள இப்பிடிப் போட்டுத் தாக்கிட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்.......

பழமைபேசி said...

//RR said...
அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட வேல செய்யற அத்தனை கொல்டிகளும் போன் பண்ணவும், ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் தான் அலுவலகம் வருவானுங்க........
//

இஃகிஃகி....

பழமைபேசி said...

//Subash said... //

வாங்க சுபாசு...விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துறேன்...

பழமைபேசி said...

//Seemachu said...


இன்னா, வெள்ளாடறீங்களா?

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai....
//

இஃகிஃகி, இப்படியெல்லாம் செய்யப் போயித்தான் பல ஆய்வுகள், பல பரிசோதனைகள்ன்னு போட்டுத் தாக்குறாங்க.... இனி SSN மட்டும் resumeல போட்டாப் போதும்ன்னு சொல்ற காலம் வரும் போல.... அவ்வ்... ஏடு கொண்டலவாடா... சேமிச்சுறா பகுவந்த்தா.....

பழமைபேசி said...

//சங்கா said...
விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தகவலுக்கு.
அண்ணன், தங்கத் தமிழ்மகன் பழமைபேசி, அட்லாண்டா சென்று வந்து இடும் இடுகையை எதிர்நோக்கி...
//

வாங்க சங்கா... இன்னும் நுழைவுச் சீட்டு கிடைக்கலீங்களே?

பழமைபேசி said...

//பிரியமுடன் பிரபு said... //

பிரபு, நெல்லைத்தமிழ்க்காரங்க சுத்தல்ல வுட்டுட்டாங்க போல இருக்கு...இருங்க அது என்னன்னு பாக்குறேன்...

தேவன் மாயம் said...

ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்னென்ன்மோ சொல்லியிருக்கீக !! ஒன்னும் புரியல!

பழமைபேசி said...

//thevanmayam said...
ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்னென்ன்மோ சொல்லியிருக்கீக !! ஒன்னும் புரியல!
//

மருத்துவர் ஐயா வாங்க...புரியுற மாதிரி இடுகை இட்டாச்சு....இஃகிஃகி!

Arasi Raj said...

தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா/////


அயோ பாவம்...

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா/////


அயோ பாவம்...
//

இன்னும் கிடைக்கலீங்களே.... என்னையா இது? ஒரு பதிவருக்குன்னு ஒரு சீட்டு, அதுவும் காசு வாங்கிட்டுத் தர்றதுல என்ன பிரச்சினை? குடுங்க ஐயா, தயவு செஞ்சி யாராவது குடுங்க... இப்படிப் புலம்புற மாதிரி ஆயிடிச்சே?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல எந்த நெளிவு சுழிவுகளுக்கு சுலுவுல வேலை கிடைக்கும்? //

எங்க ஆத்தா சொல்லிக்கேட்டது இந்த "சுலுவ"..... நம்ம ஊருப்பேச்சு உங்களுக்கு சுலுவா வருதுங்க..

யு.எஸ்.தமிழன் said...

உபசங்காரம் -> Summary / Conclusion. Resumeக்கு பயன்படுத்தலாமோ?

பணியுரை, முகவுரை, திறனுரை?

ஒரு காசு said...

தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா.

Subash said...

வாங்க சுபாசு...விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துறேன்...

thanks a lot