6/22/2009

இடுகைக்கு எதிர்வினை!

அபிமானத்திற்கு உரிய தம்பி, சின்னாளப்பட்டி சிங்கம் முருவின் இன்றைய இடுகைக்கான எதிர்வினையாக இந்த இடுகை!


“பாலுணர்வைக் கிளர்த்துகிற கதைகளை நான் எழுதியது இல்லை. பாலுணர்வு பற்றிய பிரச்சினைகளைப் பற்றியே நான் கதை எழுதுகிறேன்.

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கிறேன்.

அந்த மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.

ஏழைகளின் உழைப்பைத் திருடுகிற மாதிரி, அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான சுரண்டல் என்று நான் உணர்ந்திருக்கிறேன்.”

- ஜெயகாந்தன்

உப்பைக் குறைச்சிக்கலாம்!

14 comments:

அப்பாவி முரு said...

//உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான சுரண்டல் என்று நான் உணர்ந்திருக்கிறேன்.”

- ஜெயகாந்தன் //

பெரிய மனிசனுக்கு தெரியும்...

தீப்பெட்டி said...

தயவு செய்து இந்த விசயத்தில் பொட்டில் அறைந்தது போல உண்மையை உரக்க சொல்லுங்கள்..

உங்கள் எதிர்வினை எனக்கு புரியவில்லை..

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
தயவு செய்து இந்த விசயத்தில் பொட்டில் அறைந்தது போல உண்மையை உரக்க சொல்லுங்கள்..//

உணர்ச்சிகளைத் தூண்டிப் பிரபலமடைவது சமுதாயத்துக்கு எந்த பலனும் உண்டு செய்யாது என்பதுதான் எதிர்வினை! அது தனிநபரைப் பிரபலமாக்குமே ஒழிய, பிரச்சினைக்குத் தீர்வாகி விடமுடியாது.

என்றாவது ஒருநாள் உணர்ச்சிவசப்படுவது மனிதனின் இயல்பு... உணர்ச்சிவசப்படுவதே பொழுதாக்கிக் கொள்வதென்பது சரியா? அதற்கு இரையாகும் மக்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்!

thevanmayam said...

என்ன இது?
படிச்சுட்டு வருகிறேன்!!

ராஜ நடராஜன் said...

உணர்ச்சி வசப்படனுமா?படக்கூடாதா?நல்லா எனக்கு உறைக்கிற மாதிரி சொல்லுங்க!

(சரியான வில்லங்கமானவங்களா இருப்பீங்க போல இருக்குதே!உப்பையும் கொறைக்கச் சொல்றீங்க.இப்ப நியாயமா உணர்ச்சி வசப்பட்டா தப்பில்ல ஆனா அதத் திருடறதுதான் தப்புன்னு சொல்ற மாதிரி எனக்குத் தோணுது)

நிலாவும் அம்மாவும் said...

ஒன்னியும் புரிலப்பா

லவ்டேல் மேடி said...

ஆஹா....!! ஓஹொ.......!!!

பேஷ்.....!!! பேஷ்....!!!!!

சான்ஸே இல்ல....!!!!

எப்புடி இப்புடியெல்லாம்...!!!!

எப்புடி கத்துகிட்டீங்க.......????

இஃகிஃகிஃகி .........

நசரேயன் said...

அண்ணே நீங்களுமா ?

ஸ்ரீதர் said...

சரி சரி விட்டுத் தள்ளுங்க.

வருங்கால முதல்வர் said...

என்னா ஆச்சு.

ஆ.ஞானசேகரன் said...

அந்த அளவிற்கு பிரியல

Mahesh said...

அண்ணன்களா... பிசினஸ் உமனுக்கெல்லாம் பதில் லாவணி பாடிக்கிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்... உருப்படியான வேலைன்னு ஒண்ணு இல்லாததாலதான் இப்பிடியெல்லாம் கவுஜ பாடிக்கிட்டு இருக்காங்க..... அவுக வேலையை அவுக பாக்கட்டும்.. நம்ம வேலைய நாம பாப்போம்...

இந்த மாதிரி கவுஜ 'அ'ழுததுக்கு நம்மாளு தந்தி தபால் அனுப்புனதே மேலோன்னு தோணுது !!

Joe said...

ஜெயகாந்தன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!

பழமைபேசி said...

//Mahesh said...
அண்ணன்களா... பிசினஸ் உமனுக்கெல்லாம் பதில் லாவணி பாடிக்கிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்...
//

அஃகஃகா.... அந்த மாதிரி உணர்ச்சிகளை வறுத்து காசாக்குறதையும் ஆதரிக்கிறவங்களுக்கு அண்ணே....