6/29/2009

தூர்ந்து மறைந்த சகோதரர்களே!

சித்திரச் சோலைகளே-உமை நன்கு
திருத்தஇப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓஉங்கள் வேரினிலே!

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே-உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!

தாமரை பூத்த தடாகங் களேஉமைத்
தந்தஅக் காலத்திலே-எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே!
--பாவேந்தர் பாரதிதாசன்


Life Goes On...
Keep Your Head Up
My shoulders are there to hug you
Things may go wrong
But take it for advice
From a person who cares you most of all
Keep your head up my friend
Life Goes on...
--பழமைபேசி
Given as due to: Joe

18 comments:

Viji said...

super

அது சரி said...

நல்லாருக்கு...ஆனா, நான் பாரினிலேங்கிறதை கொஞ்சம் தப்பா "பார்"னு படிச்சிட்டேன்...:0))

பாவேந்தர் சொல்றதெல்லாம் பழைய காலம்ங்க...

"கொடுவாளினை எடடா கொடியோர் செயல் மிக அறவே", "இனி பொறுப்பதற்கில்லை தம்பி எரிதழல் எடுத்து வா"..

இதெல்லாம் பாரதிதாசன் சொன்னது தான்...

இப்பல்லாம் இதை சொன்னா "சும்மா உக்காந்துகிட்டு அதை எடுத்துக்கிட்டு வா, இதை எடுத்துக்கிட்டு வான்னு...போய் எடுத்துக்க வேண்டியது தான"ன்னு கேப்பாங்க...

படிச்சதும் தோனிச்சி...சொல்லிட்டேன்...தப்பா எடுத்துக்காதீங்க...

பழமைபேசி said...

//அது சரி said...

பாவேந்தர் சொல்றதெல்லாம் பழைய காலம்ங்க...

போய் எடுத்துக்க வேண்டியது தான"ன்னு கேப்பாங்க...
//

அஃகஃகா.... அதான் படைப்பாளிங்க கடுவா முடுவான்னு படைக்க ஆரம்பிசுட்டாங்கன்னு சொல்ல வர்றீங்களாக்கூ?

குடுகுடுப்பை said...

இன்னாத்துக்கு இது இப்போ.?

பழமைபேசி said...

// Viji said...
super
//

நன்றிங்க விஜி!

//குடுகுடுப்பை said...
இன்னாத்துக்கு இது இப்போ.?
//

அய்ய... இரசிக்கணும்...ஆராயக் கூடாது...தெர்தா?

இஃகிஃகி...நானும் சென்னைத் தமிழ்ல...

பதி said...

:))))))))

thevanmayam said...

நன்னாகிட்டு உண்டு!!

தீப்பெட்டி said...

பேஸா இருக்கு போங்கோ..

Joe said...

மேலே சொன்ன கவிதை புரிகிறது.

Life goes on என்ற ஆங்கிலக் கவிதையும் புரிகிறது, ஆனால் இரண்டுக்கு தொடர்பென்ன, எதற்கு Given as due to Joe?

அமெரிக்காவில கஞ்சா எளிதில் கிடைக்கிறதோ நண்பருக்கு?

"It must've been the ganja, or the marijuana...." raps Eminem in the background.

பழமைபேசி said...

//அமெரிக்காவில கஞ்சா எளிதில் கிடைக்கிறதோ நண்பருக்கு?//

என்ன விளையாடுறீங்களா? மைக்கேல் ஜாக்சன் போன கவலையில நண்பர் இருக்காரேன்னு இதமாப் பதமா போட்டா, இப்பிடிக் கவுத்துட்டீங்களே?? அவ்வ்......

Joe said...

ஓஹோ, மன்னிக்கணும் தூக்கக் கலக்கத்தில ஏதோ பேசிட்டேன்.

நீங்களும் கொஞ்சம் தெளிவா "Given as due to Joe : w.r.t to MJ's death"-ன்னு சொல்லிருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

பாரதிதாசனின் நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

சுல்தான் said...

'நான் ஏன் பிறந்தேன்' என்ற எம்ஜிஆர் படத்தில் வரும்.
நடுவில் வரும் பாரா தெரியவில்லை. எனவே அதில் வராது என நினைக்கிறேன்.
எத்தனை முறை பாடிய பாட்டு. எங்க ஊர் கடவுள் இல்லை தமிழ் ஆசிரியர் எப்போதும் என்னை பாடச்சொல்லி கேட்கும் பாட்டு.
'ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே!- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ எங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்....'
என்று பாடும் போது, பாடும் என்னோடு அவரும் உணர்ச்சி வயப்படுவார்.
பழைய நினைவுகள் பழைமைபேசி.

லவ்டேல் மேடி said...

அருமை...!!! பாவேந்தரின் வரிகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி.....!!!

குறும்பன் said...

கீழ பாவேந்தர் பேரை படிக்கும் முன் பழைமையார் தான் இப்படி அருமையா கவிதை எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன்.

நிலாவும் அம்மாவும் said...

அய்ய... இரசிக்கணும்...ஆராயக் கூடாது...தெர்தா?
////////ரசிசுட்டேன்...ஆராயலை

பழமைபேசி said...

@@பதி
@@thevanmayam
@@தீப்பெட்டி
@@ஆ.ஞானசேகரன்
@@லவ்டேல் மேடி
@@குறும்பன்
@@நிலாவும் அம்மாவும்

மக்களே, நன்றிங்க!

பழமைபேசி said...

//சுல்தான் said...
'ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே!- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ எங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்....'
என்று பாடும் போது, பாடும் என்னோடு அவரும் உணர்ச்சி வயப்படுவார்.
பழைய நினைவுகள் பழைமைபேசி.
//

ஐயா, வணக்கம்!

வயித்துல பால் வார்த்தீங்க...

இப்பத்தான் இடுகைக்கே ஒரு சிறப்பு! எனக்கு மிகவும் பிடித்த பாடல்...