6/21/2009

கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டவன்!

இராமசாமி நாயுடு வித்தியாலயம்! எண்ணற்ற கல்விமான்கள் உருவான கருவறை அது. அந்தக் கருவறையைத் தரித்த அழகுபொழில் நல்லூர்தான் இலக்குமி நாயக்கன் பாளையம்! பேருந்துக் கட்டுமானத்திலும், நூற்பஞ்சாலைகளிலும், பற்சக்கர உற்பத்தியிலும் கோலோச்சி கொங்கு நாட்டுப் பொருளாதாரத்தின் விடிவெள்ளியெனத் திகழ்ந்த L.G.B Brothers Ltd, Elgi Equipments, LRG Naidu Trust என எண்ணற்ற நிறுவனங்களின் நிறுவனர் பாலகிருஷ்ணன் அவர்களைப் பெற்றெடுத்த நல்லூர்தான் இந்த இலக்குமி நாயக்கன் பாளையம்!

ஊரின் தென்கிழக்கில், அழகிய மரங்கள் புடைசூழ கண்ணுக்கு விருந்தாய் ஊருக்கு எழிலாய் இருப்பதுதான் கல்விக்கண் திறக்கும் அந்த பாடசாலையான இராமசாமி நாயுடு வித்தியாலயம். பிற்பகல் நேரம், பள்ளியில் இருக்கும் விடுதியில் மதிய உணவின் போது சர்க்கரை கலந்து உண்ட புளித்த மோரின் கள்ளுக்குண்டான சுதியுடன் இவன்; தமிழ் ஆசிரியர் அமரநாதன் போதிக்கிறார்! மாணவர் பகுதியில் இருந்த இவனுக்கு, மாணவிகள் பகுதியில் இருக்கும் ரேணுகாவின் பக்கவாட்டு முகச்சாயலே இவ்வுலகமாய்!!

நித்தம் நித்தம் அவளழகில் சொக்கி அதிலவன் தன்னையே தொலைத்தவனாய் இருக்கக் கண்டு, அவனைத் தட்டி எழுப்புகிறார் ஆசிரியர் அமரநாதன் அவர்கள். இவன் மறுமொழிகிறான்,



மாமரத்தில் கொம்புத்தேனடை
என அவள் அழகாய்
இருக்கக் காண்கிறேன்!
அம்மரத்தினடி நானமர்ந்து
தேன்வடியுமெனக் கையேந்தி
இம்முடவன் காத்திருக்கிறேன்!!
இன்றில்லா ஆயினும்
என்றோ ஒருநாள் அதுவடிய
நக்குவன் நானாவேன்!
இப்பொழுதில் வெறும்நினைவே
தேனாய் நான்னக்க நீர்
காண்கிறீர் ஆசானே!!!


என்றான். வகுப்பினர் கொல்லென சிரிக்க, சினமுற்ற ஆசிரியர் யாதென வினவ, இவன் சிலேடையில், ”தேன் கூட்டைக் கண்டு முடவன் ஆசைப்பட்டுத் தேன்வடியுமெனக் கையேந்திக் காத்திருப்பது போன்று காத்திருக்கிறேன். இப்பொழுதில் ஆசையெனும் வெறுங்கையை நக்குபவன் நான் ஆயினும், என்றோவொரு நாள் எம்கரம்தனில் அவள் தவழத்தான் போகிறாள்!” என்பதே தாங்கள் சொன்ன பாடலின் பொருள் என்று முடித்தான். அத்தருணத்தில் ஆசிரியர் போதித்த குறுந்தொகைப் பாடல்,

குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் கண்டாலும்
உள்ளத்துக்கு இனிதே!

(குறிப்பு: அந்த கொம்புத்தேன் எந்த மவராசனுக்கு வாய்ச்சதோ தெரியாது! அந்த நினைவுகள் மட்டுமே இவனுக்கு; கும்மியடிச்சி விட்டுறாதீக என்ன?! இஃகிஃகி!!)

22 comments:

குடுகுடுப்பை said...

கன்ணுக்கு

//

ஃகிஃகிஃகி

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
கன்ணுக்கு

//

ஃகிஃகிஃகி
//

ஆகா, அண்ணே, கிடுக்கிப்பிடி பிடிச்சுட்டீங்களே... இஃகி ஃகி, நன்றிங்கோ!

வருண் said...

நீங்க எழுதி இருக்கிற இந்த மேட்டர் நல்லா இருக்குங்க!

ஆனால் எனக்கு இந்தப் பழமொழி இயலாதவர்களை கஷப்படுத்துவதுபோல் இருப்பதால் சுத்தமாகப் பிடிக்காது :(

+1 for your poem! :)

பழமைபேசி said...

//வருண் said...
ஆனால் எனக்கு இந்தப் பழமொழி இயலாதவர்களை கஷப்படுத்துவதுபோல் இருப்பதால் சுத்தமாகப் பிடிக்காது :(
//

சரியான கருத்து...தலைப்பு மாற்றப்பட்டது நண்பா!

அப்பாவி முரு said...

//கும்மியடிச்சி விட்டுறாதீக என்ன?! //

என்னங்ண்ணா...

என்ன சொன்னீங்ண்ணா??

அப்பாவி முரு said...

//ரேணுகாவின் பக்கவாட்டு முகச்சாயலே இவ்வுலகமாய்!!//


பக்கவாட்டு முகமே இவ்வுலகென்றால்,

முழுமுகத்தை - ஏரேழு உலக்கத்து ஈடென்பீரோ???

Unknown said...

நெம்ப சூப்பர் ...!!!!! அருமையான மொழிநடை....!!!!


பைனலா என்ன சொல்ல வரீங்கோ தலைவரே.......????

அப்பாவி முரு said...

//என்றோவொரு நாள் எம்கரம்தனில் அவள் தவழத்தான் போகிறாள்!//

இன்னும் அந்நினைவு உள்ளதா?
(நான் கவிதைதையைக் கேட்க்கிறேன்)

வருண் said...

***சரியான கருத்து...தலைப்பு மாற்றப்பட்டது நண்பா!***

நன்றிங்க :)

Take it easy :)

vasu balaji said...

வணக்கம் பழமை. வாத்திக்கு மட்டும் புரிஞ்சிருந்துதோ தேன் கிடைக்குதோ இல்லையோ கொம்பு கிடைச்சிருக்கும். இஃகி இஃகி.

kicha said...

குறுந்தொகை பாட‌லை பின் த‌ள்ளி உங்க‌ள் க‌விதையை முன் கொண‌ர்ந்த‌து அருமை. இதே போல‌ சில‌ உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் நான் எழுதிய ப‌திவை, நேர‌ம் கிடைத்தால் ப‌டித்து பார்க்க‌ வேண்டுகிறேன்.

http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/18-18.html

ஆ.ஞானசேகரன் said...

கொம்புதேன் கிடைத்ததா? நண்பா

தீப்பெட்டி said...

குறுந்தொகைப் பாடலை இவ்வளவு எளிமையாக இனிமையாக கதையாக்கி, கவியாக்கி தந்த பழமைபேசியாருக்கு நன்றிகள்..

அப்புறம் புது புராஜெக்ட் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு பாஸ்..

ரிதன்யா said...

//அந்த கொம்புத்தேன் எந்த மவராசனுக்கு வாய்ச்சதோ தெரியாது! //

தெரிஞ்சுக்கனும் சாமி
அத விட என்ன பெரிசா சாதிக்க போறோம்.

பழமைபேசி said...

மக்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... கொஞ்சம் வேலைப் பளு அதிகம்...அதான், உடனுக்குடனே வந்து எசைப்பாட்டு பாட முடியறது இல்ல....பொறுத்துகுங்க என்ன?! இஃகிஃகி!

நசரேயன் said...

// குடுகுடுப்பை said...

கன்ணுக்கு

//

ஃகிஃகிஃகி//

எப்படி.. எப்படி .. இப்படி !!!!!!!!!!

பாவக்காய் said...

அருமை நண்பரே ! - செந்தில்

ப்ரியமுடன் வசந்த் said...

கிஃகி கிஃகி

நிலாமதி said...

மாமரத்து தேன்....விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

@@நசரேயன்
@@பாவக்காய்
@@பிரியமுடன்.........வசந்த்
@@நிலாமதி

நன்றிங்க மக்கா!

payani said...

கண்டாலும் என்பது மூலத்தில் காண்டலும் என்று வரும். பார்த்தாலும் என்பதற்கு மாறாக, பார்ப்பதும் என்று பொருள் வரும்.

பளிச்சென்ற திடமான எழுத்து உங்களுடையது. தொடருங்கள்.

சுமி said...

அட‌..உங்க‌ உல‌க‌த்தை இன்னிக்கு தான் பாக்றேன்..உண்மையாக‌வே ரொம்ப‌ அழ‌கா இருக்கு...சின்ன‌ வ‌ய‌சுல‌ என் கிராம‌த்துல‌,ப‌ள்ளிக்கூட‌த்துல‌ ஆடிய‌,பாடிய‌ விஷ‌ய‌ங்க‌ள் ஞாப‌க‌ம் வ‌ருது..