6/09/2009

அமெரிக்கா: கிலி பிடித்தவன் எஞ்சி, மிஞ்சி நிற்பான்!

1996 ஆம் ஆண்டு! அமெரிக்கப் பொருளாதாரம் தொழில் நுட்பத்தில் கொடிகட்டிப் பறந்த நேரம். உலகமயமாக்கல், பொருளாதார மயமாக்கல், தாராளமயமாக்கல், அயலாக்கம்(outsourcing), இப்படிப் பல புதிய பரிமானங்களுடன், மென்பொருள், கணினி, வலைச்சந்தை, நவீனமயப்படுத்தும் வேலைகளுடன் ஏற்றம் ஒன்றே கண்களுக்கு புலப்பட்ட தருணமது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தில், Intel Andrew S. Grove அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்,

கிலி பிடித்தவன் எஞ்சி நிற்பான்!
Only the Paranoid Survive!

உலகமே ஏற்றத்தில் பயணிக்கும் போது இவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என மற்றவர்கள் வியந்தனர். வெகு சிலரே அவரை ஏறெடுத்துப் பார்த்தனர். மற்றவர்களுக்கு அவர் சொல்வதைப் பரிசீலித்து, சரியான திறம்(strategy) கொள்வதற்கு நேரம் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏற்றத்தில் இருப்பவனுக்கு ஒவ்வொரு மணித் துளியும் அறுவடைத் தருணம்; அதை அவன் வேறொன்றில் முதலீடு செய்யும் போது, உடனடி இலாபம் பாதிக்கப்படும், எனவே எவரும் அதைக் கவனிக்கவில்லை.

இனி, ஏன் அவர் அப்படிக் கூறினார் என்பதைப் பார்ப்போம். முதலாவது காரணம், அசுர வேகத்தில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்கள். அதுமட்டுமே முக்கிய காரணம் என்றும் சொல்லிவிட முடியாது, கூடவே மனித சக்தி, சந்தையின் புதிய பரிமானம், போட்டியாளர்கள், கச்சாப்பொருட்கள், உற்பத்தி நிகழும் இடம் என பல அம்சங்களில் நிகழும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

வியாபாரமாகட்டும், தொழிலாகட்டும் எந்தப் புள்ளியில் துவங்குகிறதோ, அங்கிருந்து சில காலத்திற்கு முன்னேற்றப் பாதையில் செல்லும். ஏனென்றால், அது நடப்புத் தொழில் நுட்பத்தையும் இன்ன பிற அம்சங்களையும் துவங்கும் தருணத்தில் கொண்டிருப்பதால்! B'se they are up-to-date!!

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வியாபாரமோ தொழிலோ, அது மேற்கூறிய மாற்றங்களையும் அவ்வப்போது உள்வாங்கி இருக்க வேண்டும். இல்லாவிடில், அந்த ஒரு நிலையில் வியாபாரம் வீழ்ச்சியை நோக்கி இறங்கு முகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க இயலாமற்ப் போகும். அந்த ஒரு நிலைதான் திறம்மாறு புள்ளி என்பது(Strategic Inflection Point).
ஆக, நிகழும் மாற்றங்களை உள்வாங்கித் தகுந்த திறம்(strategy) பாவிக்கத் தவறினால், வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம். அப்படியாகக் கிலி கொண்டவன் எஞ்சி நிற்பதைக் காணும் நிலையில்தான் இன்று அமெரிக்கா! மற்றவர்கள் நிலை??

நிறுவனங்கள் கிலி பிடித்தவையாக இருக்க வேண்டும் என்கிற நிலை, தற்போது தனி மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கிறது என்பது கண்கூடு. உலகின் மறுபக்கத்தில் எப்படியோ தெரியாது, அமெரிக்காவில் இன்றைய நிலை இதுதான்!

ஆக, ஒருவன் இனியாவது கிலி பிடித்தவனாக இருப்பது அவசியம் ஆகிறது. நன்னம்பிக்கை கொண்டவனாக இரு! அதே தருணம் மாற்றங்களைக் கற்பவனாகவும் இரு!! Be a paranoid optimist!!!

தொழிலில், வியாபாரத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்றாற்ப் போல் தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பணிபுரிவோர், புதிதாக அறிமுகப் படுத்தப்படும் தொழில்நுட்பக் கூறுகள், நேரடி உற்பத்தி(hands on) முதலியவற்றிலான தேர்ச்சியை மேம்படுத்துதல் வெகு முக்கியம்.

எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! ஆகவே, உங்களுக்கான அடுத்த சவாலுக்குத் தயாரா? Only the Paranoid Optimist Survive!!

(இது குறித்து இடுகை இடக் கோரிய அண்ணன் சீமாச்சு அவர்கட்கு, இந்த இடுகை அன்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது)

35 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம்.//


சினம் கொண்ட சிங்கம்?

பழமைபேசி said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
// வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம்.//


சினம் கொண்ட சிங்கம்?
//

சமயோசிதம் கொண்ட சிங்கம் மட்டுமே வெல்கிற யுகம் இது நண்பரே!

vasu balaji said...

/யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை!/

சரியாத்தான் இருக்கு. ஆனா இந்த மாய மான விரட்டியே வாழ்க்கை முடிஞ்சு போகுதே..அவ்வ்வ்வ்.

பழமைபேசி said...

//பாலா... said...
/யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை!/

சரியாத்தான் இருக்கு. ஆனா இந்த மாய மான விரட்டியே வாழ்க்கை முடிஞ்சு போகுதே..அவ்வ்வ்வ்.
//

வாங்க பாலாண்ணே, வணக்கம்! நல்லா இருக்கீங்களா?

இங்க இந்த மேலாளர் வேலை பாக்குறவங்க கொஞ்சம் சூதானமா இருக்கணும்... கூடவே 35+ வயசானவங்களும்.... இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

//எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! ஆகவே, உங்களுக்கான அடுத்த சவாலுக்குத் தயாரா? Only the Paranoid Optimist Survive!! //

எவ்வளவோ பார்த்தாச்சு!இதையும் மக்கள் பார்க்க மாட்டாங்களா என்ன?நாணல் எப்படியும் வளையும்தானே!

ராஜ நடராஜன் said...

//இங்க இந்த மேலாளர் வேலை பாக்குறவங்க கொஞ்சம் சூதானமா இருக்கணும்... கூடவே 35+ வயசானவங்களும்.... இஃகிஃகி!//

வந்தமா இடுகையப் போட்டோமான்னு இல்லாம இப்படியெல்லாம் கமெண்டிகிட்டு இருக்கக்கூடாது ஆமா!

SPIDEY said...

reminds me of this dialog "HOPE FOR THE BEST, PLAN FOR THE WORST" from this movie bourne ultimatum. GOOD POST)))

தீப்பெட்டி said...

நல்ல பதிவு..

//சமயோசிதம் கொண்ட சிங்கம் மட்டுமே வெல்கிற யுகம்//

இந்த பதிலுக்கு நூத்துக்கு நூறு மதிப்பெண்கள்..

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வந்தமா இடுகையப் போட்டோமான்னு இல்லாம இப்படியெல்லாம் கமெண்டிகிட்டு இருக்கக்கூடாது ஆமா!
//

அஃகஃகா, வாங்க மேலாளர் ஐயா! இதென்ன ஒப்புதல் வாக்குமூலமா?

சணல் தண்டா இருந்தாப் பரவாயில்லை, அசைஞ்சு குடுக்காத மரமா அல்ல இருக்கு?

பழமைபேசி said...

//SPIDEY said...
reminds me of this dialog "HOPE FOR THE BEST, PLAN FOR THE WORST" from this movie bourne ultimatum. GOOD POST)))
//

yes buddy, I hail from such a City where our people took management jobs and are facing tough time now... :-0(

You are right, we always got to have "What If"....

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
நல்ல பதிவு..

//சமயோசிதம் கொண்ட சிங்கம் மட்டுமே வெல்கிற யுகம்//

இந்த பதிலுக்கு நூத்துக்கு நூறு மதிப்பெண்கள்..
//

வாங்க தீப்பெட்டியார்... நன்றி!

Mahesh said...

fittest always survives !!

பழமைபேசி said...

//Mahesh said...
fittest always survives !!
//

Annae, _/\_
that's the key... needs to be fit! :-0)

Blogger said...

Very Nice Post..

Recommended Documentaries:
Zeitgeist
Obama Deception

Things would become more clear when you watch them

பழமைபேசி said...

//The Rebel said...
Very Nice Post..
//

thanks buddy, and also for the info!

குறும்பன் said...

நல்லா சொன்னிங்க.

பணவீக்க வலைவு எல்லாம் போட்டு படம் காமிச்சிறுக்கறீங்க, ஒன்னும் புரியலை , கொஞ்சம் விலாவாரியா எங்களுக்கெல்லாம் புரியற மாதிரி சொல்லறது.

//உங்களுக்கான அடுத்த சவாலுக்குத் தயாரா? //

இப்ப தான் தட்டுத்தடுமாறி ஒரு நிலைக்கு வந்து இருக்கோம் அதுக்குள்ள அடுத்த சவாலா? தொடர்ச்சியா சவால் வந்தா தாங்கமாட்டோம்பா.

ஆ.ஞானசேகரன் said...

//ஆக, நிகழும் மாற்றங்களை உள்வாங்கித் தகுந்த திறம்(strategy) பாவிக்கத் தவறினால், வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம். அப்படியாகக் கிலி கொண்டவன் எஞ்சி நிற்பதைக் காணும் நிலையில்தான் இன்று அமெரிக்கா! மற்றவர்கள் நிலை?? //


உண்மை நண்பா, நானும் இதைப்பற்றி சொல்லவேண்டும் என்று இருந்தேன்

ஆ.ஞானசேகரன் said...

//எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது;//


நச்ச்ச்ச்ச்ச்

vasu balaji said...

வணக்கம். நல்லாருக்கேன் பழமை.

பழமைபேசி said...

//குறும்பன் said...
நல்லா சொன்னிங்க. //

//எங்களுக்கெல்லாம் புரியற மாதிரி சொல்லறது. //

இது நல்லா இல்ல...ஒன்னுக்கொன்னு முரணா இருக்குங்களே?! இஃகிஃகி!

அதுங்களா... அதானுங்க, மொதல்ல கொஞ்ச நாளைக்கு நல்லாப் போகும்...அப்புறம் சரியாக் நம்மளை நாம மேம்படுத்திகிலைன்னா புள்ளிக் கோடு(dotted line) மாதர படுத்துக்கும்னு சொல்றாரு அவரு.

கல்கி said...

//எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! //

ஆமாண்ணே,

Saturation pointன்னு வேற ஒண்ணு இருக்குல்ல... அது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்ல...

வருண் said...

***எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! ***

நீங்க என்ன ஒரே தத்துவ மழையா பொழிகிறீங்க! :-)))

எனக்குத் தத்துவம் ரொம்ப பிடிக்கும் :-)))

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான் அண்ணே

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
@@கல்கி
@@வருண்
@@நசரேயன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ!

வருண் said...

இப்போ +1 போட வந்தேன். அதுக்கும் நன்றியை சேர்த்துக்கிறேன் :)))

Rex said...

Good Article.

In Modern Economy Greed & Competition runs the show by kicking out "Calculative Risk".

பழமைபேசி said...

//வருண் said...
இப்போ +1 போட வந்தேன். அதுக்கும் நன்றியை சேர்த்துக்கிறேன் :)))
//

:-0)

//Rex said...
Good Article.

In Modern Economy Greed & Competition runs the show by kicking out "Calculative Risk".
//

yes buddy, thanks for the comments!

Poornima Saravana kumar said...

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! //

உண்மைதான் அண்ணாச்சி..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நிறுவனங்கள் கிலி பிடித்தவையாக இருக்க வேண்டும் என்கிற நிலை, தற்போது தனி மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கிறது என்பது கண்கூடு. //

மறுக்க முடியாத உண்மை.

ராஜ நடராஜன் said...

உங்களத்தான் தேடிகிட்டு இருக்கேன்.பதிவுங்கறத இடுகைன்னு சொல்லணுமுன்னு சொல்லி சொல்லி இடுகை வந்து நல்லா அமுக்கமா ஒட்டிகிச்சி.அப்ப பதிவர என்னன்னு கூப்பிடறது?இடுகையன்!இடுகையர்?

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
உங்களத்தான் தேடிகிட்டு இருக்கேன்.பதிவுங்கறத இடுகைன்னு சொல்லணுமுன்னு சொல்லி சொல்லி இடுகை வந்து நல்லா அமுக்கமா ஒட்டிகிச்சி.அப்ப பதிவர என்னன்னு கூப்பிடறது?இடுகையன்!இடுகையர்?

//

blog - பதிவு

person who is writing the blog is blogger - பதிவர்

blog contains posts - பதிவு இடுகைகளைப் பெற்றிருக்கிறது.

நாட்டை ஆள்பவன் மன்னன்! அப்படியானால் நாட்டில் இருக்கும் குட்டை ஆள்பவன் குன்னனா???

Joe said...

//
எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை!
//

நல்ல பதிவு.

எளிமையான முறையில் விளக்கிச் சொல்லியிருக்கீங்க!

பழமைபேசி said...

//Joe said... //

நன்றிங்க சப்பான்!

சீமாச்சு.. said...

ஐயா, ரொம்ப சந்தோஷம். நாம பேசினதை அப்படியே உள் வாங்கி, தொடர்ந்த ஆராய்ச்சிகள் செய்து உங்க பாணியிலே அசத்தலா எழுதியிருக்கீங்க..

நல்லாயிருக்கு. Andy Grove இந்த தலைப்பில் எழுதிய புத்தகத்தையும் படிச்சிப் பாருங்க. இன்னும் நல்லாருக்கும்.

இடுகையை சுடச்சுட படிச்சிருக்கணும் ஐயா !!கொஞ்சம் லேட்டாயிரிச்சி. வீட்டுல எல்லாரும் ஊருக்குப் போனாங்களா அதனால கொஞ்சம் நேரம் கிடைக்கலை.. மன்னிச்சிருங்க..

பழமைபேசி said...

//Seemachu said...
ஐயா, ரொம்ப சந்தோஷம். நாம பேசினதை அப்படியே உள் வாங்கி, தொடர்ந்த ஆராய்ச்சிகள் செய்து உங்க பாணியிலே அசத்தலா எழுதியிருக்கீங்க..//

அண்ணன்மார் வழிகாமிச்சு, நாங்க செய்யுறதுல என்ன இருக்கு? எல்லாம் உங்களுக்கே சேரும்!

//கொஞ்சம் நேரம் கிடைக்கலை.. மன்னிச்சிருங்க..
//

இது நல்லா இல்லை.... :-0(