6/04/2009

இது இதுதான்....

சில பல நேரங்களில் நாம் ஒன்றைச் சொல்ல, அது அதுவாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அதைப் பரங்கியர் மொழியில் misunderstanding என்கிறோம். நமது மொழியில் விகற்பம் என்கிறோம்.

அந்த ஒன்றே அதுவாகவும், வேறொன்றுமாகவும் இருப்பது உண்டு. அந்த நேரத்தில், மறுபக்கத்தில் இருப்பவர் வேறொன்றாகக் கருத்தில் கொள்வதை பரங்கி மொழியில் misinterpreted என்கிறோம். தமிழில் பிறழ்ச்சி என்கிறோம்.

ஒன்று, அதுவாகவும் வேறொன்றாகவும் பொருள் கொள்ளும் வகையில் குறிப்பிடுவது சிலேடை நயம். ஈரடிப்பயன் என்றும் சொல்கிறோம்.

இந்தப் பின்னணியில் நாம் இப்போது காணப்போவது சில விகற்பங்கள். கடந்த சில இடுகைகளில், நாம் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்று தகுந்த இடங்களில் எழுதி வந்தோம். இன்றும் அதையேதான் சொல்கிறோம். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.

ஆனால் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்றதை, உணர்வு வயப்படுதலைத் தவிர்த்தல் நலம் என்ற பொருளில் பலர் பொருள் கொண்டதை நாம் காண முடிந்தது. ஆகவே இந்த விகற்பத்தைக் களைய முற்படுவோம் வாருங்கள்.

உணர்வு என்றால் மனதில் ஏற்படும் ஒரு மாற்றம். உணர்வு(conscious)வயப்படுதல் என்பது, மனதார ஒன்றை கிரகித்துக் கொண்டு செயல்படுதல், mentally responding. உணர்ச்சி(feeling)வசப்படுதல் என்றால், ஏதோ ஒன்று உங்களை ஊக்குவித்ததின்(trigger) நிமித்தம் நீங்கள் உணர்ச்சியினூடாக செயல்படுதல், with physical response. உணர்ச்சிகள் என்பது, அழுகை, கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு முதலானவை.

போராளி(militant) என்பவன் தலைவன் இட்ட கட்டளைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், சுக துக்கங்கள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான்.

மருளன்(fanatic) என்பவன் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவன். ஏதோ ஒரு கிரியாவூக்கிக்கு(trigger) ஆட்பட்டவுடனே, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுபவன். மகிழ்ச்சியான தருணமானால், எள்ளி நகையாடுவான். சினமாயிருந்தால், அடித்து நொறுக்குவான். வெறுப்பாயிருந்தால், கொச்சையால் பேசி உமிழ்வான்.

மேலே சொன்னவை ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. ஆனால், உணர்வு வயப்படுவதும் உணர்ச்சி வசப்படுவதும் சாமன்யனுக்கும் பொருந்தும். தமிழ்த் தலைவரின் உரை கேட்டு, இனி தமிழில்தான் எழுதவேண்டும் என எண்ணும் போது அவன் உணர்வுமயம் ஆகிறான். அதே தலைவரின் பேச்சைக் கேட்டு அழுதான் என்றால், அவன் உண்ர்ச்சிமயம் ஆகிறான் என்றாகிறது.

இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்.

அதே போல வாழ்வும், வாழ்க்கையும் ஒன்றல்ல. அவன் வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் அவனுடைய வாழ்வு சிறப்பாக இல்லை. இது சரி. எப்படி? அவன் அன்றாட நியதிகளைச் சரியாகக் கையாண்ட போதும், பிறந்ததிலிருந்து இன்றைய நாள் வரையிலான நாட்கள் அவனுக்கு சிறப்பாக அமையவில்லை என்று பொருளாகிறது. பரங்கியர் மொழியில் சொல்ல வேண்டுமானால், வாழ்வு என்பது life. வாழ்க்கை என்பது livelihood. ஆக, ’அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையப் பாரு’ என்பது தவறு. ’அவன் வாழுற வாழ்க்கையப் பாரு’ அல்லது ’அவனுக்குக் கிடைச்ச வாழ்வு பாரு’ என்று வர வேண்டும்.

இயன்றது செய்கிறேன் என்பதும், முடிந்தது செய்கிறேன் என்பதும் ஒன்றல்ல. I do whatever I could என்பதும், I do whatever I am able to என்பதும் ஒன்றல்ல. என்னால் இயன்றது என்றால், தன் சக்திக்கு ஆன வரையிலும் என்றாகிறது. முடிந்தது என்றால், தன் சக்தியோடு சேர்த்து இன்ன பிற அம்சங்களையும் கூட்டி அதனால் ஆவது என்று பொருளாகும்.

கொசுறு: உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க, மிதமிஞ்சிய உப்பு, காரம், புளியுடன் சேர்த்து கத்தரிக்காயையும் குறைப்போம். உணர்வுவயப்படுதலை ஊக்குவிக்க, வெண்பூசணிக்காய் மற்றும் மோர் பாவிப்பதை அதிகப்படுத்துவோம்!

27 comments:

தினேஷ் said...

ஏங்க நீங்க எதும் புத்தகம் எழுதி வைத்து விட்டு தினம் பிட்ட போடுறிங்களா ?

இல்ல தினம் இப்படி உக்காந்து யோசிக்கிறிங்களா ..

vasu balaji said...

உணர்வு வயப்பட்டு இந்த மாதிரி எழுத முயற்சி பண்ணி உணர்ச்சி வசப்பட்டு பிள்ளையார்--குரங்கா போகுதே. என்ன பண்ண.

ஆமாம். ஊருக்கு வந்தாச்சா?

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அருமையான விளக்கம். நன்றிகள் பல.

misunderstanding - இதைப் படிக்கும் போது ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தததுங்க...

மாடியில் இருப்பர் கீழே கன்னிப் பெண் கீழே நிற்கிறாள் ஒரு வார்த்தையில் என்பதை எப்படி சொல்லுவார் ...

மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்...

திட்டாதீங்க..

குறும்பன் said...

நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி பழமைபேசி.

ஒரு ஐயம்.

"அவன் வாழுற வாழ்க்கை பாரு" இது சரியா அல்ல "அவன் வாழுற வாழ்க்கை பாரு" இது சரியா?

பழமைபேசி said...

//குறும்பன் said...
"அவன் வாழுற வாழ்க்கை பாரு" இது சரியா அல்ல "அவன் வாழுற வாழ்க்கைய பாரு" இது சரியா?
//

மக்கள், எப்பிடி நாகரிகமாப் போட்டுத் தாக்குறாங்கப்பா? இஃகிஃகி!

சரி செய்துட்டேன்... ச்சும்மா பேச்சு வழக்குல இருக்குறதப் போட்டுட்டேன்...

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said... //

இஃகிஃகி! நன்றிங்க ஐயா!!

பழமைபேசி said...

//பாலா... said...

ஆமாம். ஊருக்கு வந்தாச்சா?
//

இன்னும் இல்லைங்க பாலாண்ணே!

அது சரி(18185106603874041862) said...

வழக்கம் போல உபயோகமான பதிவு...

பழமைபேசி said...

//சூரியன் said...
இல்ல தினம் இப்படி உக்காந்து யோசிக்கிறிங்களா ..
//

சனங்க யோசிக்க வைக்குறாங்க, சனங்க யோசிக்க வைக்குறாங்க சூரியன்!

பழமைபேசி said...

//அது சரி said...
வழக்கம் போல உபயோகமான பதிவு...
//

அண்ணாச்சி, வலையிலதானா? வாங்க, வாங்க!!

நசரேயன் said...

அண்ணே நீங்க ஒரு பல்கலைகழகம்

பழமைபேசி said...

//நசரேயன் said...
அண்ணே நீங்க ஒரு பல்கலைகழகம்
//

ஏன் இது? நான் என்ன தப்பிதம் செஞ்சேன்? எல்லாம் நீயூயார்க் இரயிலடிக்கு ஆள் வர்ற தெகிரியம்??!

ஆ.ஞானசேகரன் said...

விடயங்கள் தெரிந்துகொண்டேன்... நன்றி நண்பா..

அன்புடன் அருணா said...

ஒரு மாதிரிக் குழப்பி என்ன எழுதினாலும் பாப்புலர் ஆகிடறீங்க!!!!! ம்ம்ம் நடத்துங்க!

dondu(#11168674346665545885) said...

//போராளி(militant) என்பவன் தலைவன் இட்ட கட்டளைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், சுக துக்கங்கள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான்//.

அதே சமயத்தில் தலைவன் என்பவனோ தன் பிள்ளைகள் பேரன்கள் தேவைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். பெறவேண்டிய மந்திரி பதவிகளுக்கான இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், மற்றவரது சுக துக்கங்கள்/இனக்கொலைகள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான். அதே சமயம் உணர்ச்சி வசப்படுவதுபோல சீன்உம் காண்பித்து செயல்படும் தலைவனுக்கோ ஈடு இணையே இல்லைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் said...

அறிந்து
பயன் படுத்த வேண்டிய தகவல்கள்

/இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்./இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்./

தெலுங்கில் இப்பொழுது சரியாக பயன் படுத்துகின்றார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
கொசுறு: உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க, மிதமிஞ்சிய உப்பு, காரம், புளியுடன் சேர்த்து கத்தரிக்காயையும் குறைப்போம். உணர்வுவயப்படுதலை ஊக்குவிக்க, வெண்பூசணிக்காய் மற்றும் மோர் பாவிப்பதை அதிகப்படுத்துவோம்! //


இது இதுதான் தல முக்கியம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஜனநாயகக் கடமை செய்தாகிவிட்டது

ப்ரியமுடன் வசந்த் said...

அவ்வ்வ்வ்வ்வ்......

என்னாமா சொல்லுறாருங்க......


நல்லா கேக்குறான்யா டீடெய்லு என்பவர்களுக்கு.......

தீப்பெட்டி said...

பயனுள்ள பதிவு பழமைபேசியாரே..

இனிமே நம்ம தமிழ் வாத்தியார் நீங்க தான்..
(வகுப்பு சத்தமெல்லாம் கிடையாது ;) - இந்த வாக்கியம் சரிதானா பாஸ்?)

பழமைபேசி said...

//அன்புடன் அருணா said...
ஒரு மாதிரிக் குழப்பி என்ன எழுதினாலும் பாப்புலர் ஆகிடறீங்க!!!!! ம்ம்ம் நடத்துங்க!
//

செய்ப்பூர் அம்மணி வாங்க! நான் குழப்புறேனா? அவ்வ்வ்வ்......

பழமைபேசி said...

//dondu(#11168674346665545885) said...

அதே சமயத்தில் தலைவன் என்பவனோ தன் பிள்ளைகள் பேரன்கள் தேவைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். பெறவேண்டிய மந்திரி பதவிகளுக்கான இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், மற்றவரது சுக துக்கங்கள்/இனக்கொலைகள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான். அதே சமயம் உணர்ச்சி வசப்படுவதுபோல சீன்உம் காண்பித்து செயல்படும் தலைவனுக்கோ ஈடு இணையே இல்லைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

அஃகஃகா! நல்லா இருக்கு, நல்லா இருக்கு... கலக்கல்ங்க ஐயா! மக்களே, உணர்ச்சி வசப்படுதல், உணர்வுவயப்படுதல்... ஐயா எப்படி நல்ல உதாரணத்தோட சொல்லி இருக்கார் பாருங்க...

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said...
அறிந்து
பயன் படுத்த வேண்டிய தகவல்கள்
//

நன்றிங்கோ!

பழமைபேசி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஜனநாயகக் கடமை செய்தாகிவிட்டது

June 4, 2009 9:44 PM
//

நன்னிங்கோ!

பழமைபேசி said...

//பிரியமுடன்.........வசந்த் said...
நல்லா கேக்குறான்யா டீடெய்லு என்பவர்களுக்கு.......
//

இஃகிஃகி!!

//தீப்பெட்டி said...
பயனுள்ள பதிவு பழமைபேசியாரே..
//

வாங்கோ, கேட்டது சரிதானுங்கோ!!

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பதிவு சாரே..

பழமைபேசி said...

//உழவன் " " Uzhavan " said... //

நன்றிங்க நண்பரே!