“அப்பிச்சி வாங்க வாங்க, என்ன நெம்ப நாளா உங்களை இந்தப் பக்கமே காணமுங்களே?”
“ஆமாடா பேராண்டி, நீயுமு விடுப்புல கொழந்தைகளோட நெம்ப முசுவா இருந்துட்டு கூடவே இடுகைகளையும் போட்டுட்டு இருந்தியா, அதான் எதுக்கு தொந்தரவுன்னு வருல!”
“ஓ அப்பிடீங்ளா?”
“ஆமா, நீயி இன்னியுமு முசுவாத்தான் இருக்குற மாதரத் தெரியுதூ? தமிழ்ச்சங்க விழாவுக்கு எதோ படிக்கிறயாமா? என்றா சங்கதியது?!”
“அதொன்னுமில்லீங், பல்லூடக(multimedia) நிகழ்ச்சியில கலந்துக்கலாமுன்னு....”
“அட்றா சக்கை, அட்றா சக்கை... நீயே ஒரு அரை வேக்காடு, நீ என்னத்தறா அவுங்க கேக்குற கேள்விகளுக்கு பதிலு சொல்லப் போற?”
“என்னுங்க அப்பிச்சி இப்பிடிக் கேட்டுப் போட்டீங்? நீங்க இப்பிடி வந்து சொல்லிட்டுப் போறதெல்லாமு ஞாவகத்துல வெச்சிருந்து சொல்லமாண்டனாக்கூ? அப்பிடியே அட்லாண்டாவுல நம்ம சனத்தையுமு பாத்து போட்டு வர்லாமல்லோ, அதான்...”
“அப்பச்செரி, அப்பச்செரி”
“நீங்க அப்ப எதுனா சொல்லுங்க இன்னிக்கி!”
“ஆமாமா, உங்கிட்ட கேக்குறதுக்கு விசியம் இருக்குதுறா... ஆமா, நாவல்ன்னா என்ன? சிறுகதைன்னா என்ன? காப்பியம்ன்னா என்ன??”
“நாவல்ன்னா பெரிய அளவுல எழுதுறது. சிறுகதை சின்ன அளவுல எழுதுறது. காப்பியம்ன்னா நெம்பப் பெரிய அளவுல எழுதறது. செரிதானுங் அப்பிச்சி?”
“நீயி இன்னமு ஒரு அரை வேக்காடுங்றது செரிடா பேராண்டி! ஏஞ்சொல்லுறேன்னா, நீயி சொன்னதுல அரவாசி செரி, அரவாசி செரியில்ல, அதான்!”
“என்னுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்? அப்ப நீங்களே சொல்லுங் சித்த!”
“செய்யுள், அல்லன்னா பாட்டுலயே ஒரு கதை, கருத்தைத் தொடர்ந்து சொல்லுறதுதான் காவியம், காப்பியம்ங்றது. அந்தக் காலத்துல எல்லாமே பாட்டுத்தேன்... அப்பறமா, நாம பேசற மாதரயே, பழமயிகள அடிப்படையா வெச்சி எழுதுனது நாவல். இந்தப் பழக்கம் சீமையில இருந்து வந்த பழக்கம்!”
“ஆமாங்க அப்பிச்சி, இப்பத்தான் இது ஞாவகத்துல வருது... அப்ப சிறுகதைக்குமு நாவலுக்குமு?”
“அந்த ரெண்டுமே உரைநடைகதான். சிறுகதைங்றது, ஒன்னைப் பத்தி தனிமரமாட்டம் நின்னு சொல்றது. நாவல்ங்றது பலதரப்பட்ட மரங்க ஒன்னு சேந்தா மாதர இருக்குற தோப்பு போலக் கட்டி எழுதுறது!”
“அப்ப புராணம், இதிகாசமுங்றது?”
“புராணம்ன்னா நெம்ப பழையது, அதுனால பழைய பழக்க வழக்கங்கள், வரலாறு இதுகளையெல்லாமுஞ் சொல்ற நூல் புராணம். இதிகாசமின்னா, வட மொழியில உண்மை நிகழ்வுகளைத் தழுவினதுன்னு அர்த்தம்.”
“ஆகமமுன்னா?”
“ஆகமம் அப்படின்னா வந்ததுன்னு அர்த்தம். ஆக, வழி வழியா தொன்று தொட்டு வர்ற மரபுகள், பழக்க வழக்கங்களை விவரணம் செய்யுறது ஆகமம்ன்னு சொல்லிச் சொல்றதுறா பேராண்டி!”
“இவ்வளவு இருக்குதுங்ளா இதுல?”
“ஆமாடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
(......கனவுல இன்னும் வருவார்......)
21 comments:
me FIRST??
\Halo Mr. \Kaalamekam,
LONG TIME NO SEE??
//உருப்புடாதது_அணிமா said...
\Halo Mr. \Kaalamekam,
LONG TIME NO SEE??
//
மலைக்கோட்டையார் எப்படி இருக்கீங்க?
விரிவான விளக்கம்
சரியான விளக்கம்
அப்புச்சி நல்லா இருக்காரா
நன்றிண்ணே
நன்று
அண்ணா எவ்வளவு விளக்கமா?
எப்படிண்ணே யோசிக்கிறீங்க?
எங்க அண்ணா எவ்வளவு அறிவாளி
எனக்கு ரொம்ப சந்தோசம்.
நாவலில் கதை இருக்கக் கூடாது. ஒரு கதையை சிறியதாக எழுத முடியாமல் பெரிதாக எழுதினால், அதை பெருங்கதை எனலாம், அது நாவல் ஆகாது! வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் சொன்னது இது.
//kicha said...
நாவலில் கதை இருக்கக் கூடாது. ஒரு கதையை சிறியதாக எழுத முடியாமல் பெரிதாக எழுதினால், அதை பெருங்கதை எனலாம், அது நாவல் ஆகாது! வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் சொன்னது இது.
//
நன்றிங்க, ஆனா நான் எங்க அப்பிச்சி சொன்னதை மீற மாட்டனே.... இஃகிஃகி!
Story: . a narrative, either true or fictitious, in prose or verse, designed to interest, amuse, or instruct the hearer or reader; tale.
Novel: a fictitious prose narrative of considerable length and complexity, portraying characters and usually presenting a sequential organization of action and scenes.
நன்றி பழம...
என்னா போங்க... உங்களுக்கு தூக்கம் வாரதில்லையா... இல்ல அப்பிச்சி ஒரேடியா தூங்கிப் போயிட்டாரோன்னு ஒரே ரோசனையா இருந்திச்சு... ஒரு வழியா மனுசன் வந்தாரா? நல்லாருந்துச்சு..
//Story: . a narrative, either true or fictitious, in prose or verse, designed to interest, amuse, or instruct the hearer or reader; tale.
Novel: a fictitious prose narrative of considerable length and complexity, portraying characters and usually presenting a sequential organization of action and scenes.//
நாவலில் கதை இருக்கக் கூடாது என்றால் என்ன இருக்கவேண்டும்? எது இருக்கக் கூடாது என்பதை சொல்வது தான் ஒரு விமர்சகனின் வேலை, எது இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு படைப்பாளியின் வேலை! இதுவும் வலம்புரி ஜான் அதே உரையில் சொன்னதே. இதை கேட்டபொழுது வித்தியாசமாக இருந்தது, அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
இன்னிக்கு பாடம் முடிஞ்சது..
நல்ல விளக்கமுங்க. அப்ப நான் எழுதியிருப்பது சிறுகதையா? நாவலா? படிச்சிட்டு சொல்லுங்க!(போட்டிக்கு சிறுகதை போட்டிருக்கேன்)
தமிழன் வளர வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை உடனே அப்புரப்படுத்தவேண்டும்!
மலயாளிகல்தான் நமது தமிழ் இனத்தின் கழுத்தை திறுகி சாகடித்த ஜாலக்காரர்கள்!
இதை செய்வீர்களா,திருமா?
அருமையான விளக்கம்....
நன்றி..
தாத்தா மறுபடியும் கனவுல வந்துட்டாராக்கும்!
மக்கள் அனைவருக்கும் நன்றிங்கோ!
தாத்தா மீண்டும் உங்க கனவில் வந்ததில் மகிழ்ச்சி...நீங்க கோவை வழக்கு மொழியில எழுதியிருக்கும் விதம் அற்புதம் அண்ணே.
//இங்கிலீஷ்காரன் said...
தாத்தா மீண்டும் உங்க கனவில் வந்ததில் மகிழ்ச்சி...நீங்க கோவை வழக்கு மொழியில எழுதியிருக்கும் விதம் அற்புதம் அண்ணே.
//
தம்பீ வாங்க...இருக்கீங்களா? நம்ப நைஜீரியச் சிங்கம் அங்க நடமாடுதாமுங்க...போயி இரு விசுக்காப் பாருங்க...
Post a Comment