6/04/2009

’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?

குதிரைகள்ல தலைவர்கள், வீரர்கள் உட்கார்ந்திருக்கிற மாதிரியான சிலைகள் பார்த்து இருப்பீங்க. அப்படிப்பட்ட சிலைகள்ல முன்னிரு கால்களும் தூக்கினா மாதிரி இருந்தா, அவர் போர்க்களத்துல இறந்திட்டாரு. வலதுபக்க முன்கால் மட்டும் தூக்கினா மாதிரி இருந்தா, போர்ல பட்ட குண்டடியினால இறந்திட்டாரு. இடதுபக்க முன்கால் தூக்கினாமாதிரி இருந்தா, போர்க் களத்துல ஏற்பட்ட விபத்துனால இறந்துட்டாரு. நாலு காலும் நிலத்துல இருந்தா, அவருக்கு ஏற்பட்டது இயற்கை மரணம். நாலுகாலும் நிலத்துல ஊன்றி இருக்காம இருந்தா, உங்களைப் போல அவரும் உயிரோட இருக்கார்ன்னு தானே அர்த்தம்?

அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரற்கடை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?

ஒருத்தர் நாய் மாதிரி, எட்டு வருசம் ஏழு மாசம் ஆறு நாட்களுக்கு குரைக்குறதுக்கு செலவாகுற சக்தியானது, ஒரு கோப்பை காப்பித் தண்ணி சூடு செய்யுறதுக்கு உண்டான அளவாம். அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?!

உலக மக்கள் தொகையில 51% பெண்கள்; 49% ஆண்கள். உலகப் பணத்துல பாதி, வெறும் ஆறு சதமான மக்கள்கிட்டவே முடங்கி இருக்கு. இந்த ஆறுல ஒரு சதம் சாகும் தருவாயில இருக்குறவங்க. ஒரு சதம் பிறந்து சில நாட்களே ஆனவங்களாம். இந்த ஆறு சதத்துல, இந்தியாவுக்கு எத்தனை சதம்?

தன்னோட சாம்பலை எடுத்து, அதை சுருக்கிப்(compress) படிகக் கல்லா மாத்தி, அந்தக் கல் வெச்ச மோதிரத்தை விருப்பமானவங்ககிட்டத் தர ஒரு நிறுவனம் $14000 விலை வெக்கிறாங்களாம்; விருப்பமிருக்குறவங்க கிட்ட இருந்து விண்ணப்பங்களைக் கோரி விளம்பரமும் செய்யுறாங்களாம். மோதிரத்துக்கு ஆசைப்பட்டு, உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?

வருசத்துக்கு சராசரியா நாற்ப்பத்து இரண்டு இலட்சம் தடவை ஒருத்தரோட கண் இமைகள் மூடித் திறக்குதாம், அதாவது அவ்வளவுதடவை அவரு கண் சிமிட்டுறாரு. தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்னன்னு கேக்குறாரு வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன். கேள்வி நியாயமானதுதானே?

17 comments:

பழமைபேசி said...

மக்களே, ஒரு ஆர்வக் கோளாறுல இது இன்னைக்கு இடுற ரெண்டாவது இடுகை...ஆகவே, முதல் இடுகையான இது இப்படித்தான்... ங்ற இடுகையும் படிச்சிடுங்க!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கேள்வி, நல்ல செய்தி நன்றி பழம

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரல்க்கட்டை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?
//


அது விலகிப் போகுதாமே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// இந்தியாவுக்கு எத்தனை சதம்?//

சச்சின் 42 சதமாமே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

எம்.எம்.அப்துல்லா said...

//அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரல்க்கட்டை, சப்பானை நோக்கி நகருது. //

அதுகிடக்கட்டும்...என்னுடைய சம்பள உயர்வு ஒரு விரல்க்கட்டை அளவுகூட என்னை நோக்கி நகர மாட்டேங்குது :(

vasu balaji said...

/நாலுகாலும் நிலத்துல ஊன்றி இருக்காம இருந்தா, உங்களைப் போல அவரும் உயிரோட இருக்கார்ன்னு தானே அர்த்தம்?/

அவரும் இல்லை. அவர்தான் உயிரோட இருப்பார். குதிரை பரலோகம் போயிருக்கும். குதிரை தூங்குறப்போ கூட நின்னுட்டே தானே தூங்கும்.

/இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா? /

இந்தியத் தலைவர்கள்தான் நகருராங்க. அடுத்தது முதலாளிகள் நகரலாம். 132 தொழிலதிபர்கள் ஆர்வமாமே. எரியிற வீட்டில பிடுங்கி லாபம் பார்க்க.

/அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?! /

ஆகா. ஊருக்கு வந்தாச்சி போல. என்னா தைரியம்?

/உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?/

அதெப்படி. சாவற ஆளுதானே மோதிரத்துக்கு தண்டம் அழணும்.

/தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்ன/

முடியாதே. செருப்பில்லாம தான இங்க வீட்ல ரோட்ல இருக்கிறது. எர்த் ஆயிடும்.

ஆ.ஞானசேகரன் said...

நண்பரே உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள்
இங்கு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான பதிவு.ஆனால் வழக்கமான சுவை கொஞ்சமும் குறையாமல்.

தீப்பெட்டி said...

நல்லா கேட்குறீங்கப்பா கேள்வி...

பதி said...

:)

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@எம்.எம்.அப்துல்லா

நன்றிங்க, நன்றிங்க!!

@@பாலா...

உங்கபாணியிலயே பதிலா... நன்றிங்க அண்ணே!

@@ஸ்ரீதர்
@@தீப்பெட்டி
@@பதி

நன்றிங்க!

Muruganandan M.K. said...

"குதிரைகள்ல தலைவர்கள், வீரர்கள் உட்கார்ந்திருக்கிற மாதிரியான சிலைகள் ...."
நல்ல சுவார்ஸமான தகவல்.

சவுக்கடி said...

விரல்க்கட்டை - thavaru
விரற்கடை - sari
nanri : g.devaneyappaavaanarukku!

mannikka!
thamizhil thattachcha eyalavillai.

நசரேயன் said...

ஒ..அப்படியா

குறும்பன் said...

//வலதுபக்க முன்கால் மட்டும் தூக்கினா மாதிரி இருந்தா, போர்ல பட்ட குண்டடியினால இறந்திட்டாரு. இடதுபக்க முன்கால் தூக்கினாமாதிரி இருந்தா, போர்க் களத்துல ஏற்பட்ட விபத்துனால இறந்துட்டாரு//

இது எனக்கு புது சங்கதி.

பழமைபேசி said...

@@சவுக்கடி

நன்றிங்க, மாத்திட்டேன்!

@@நசரேயன்
@@குறும்பன்

நன்றிங்கோ!!!!