4/26/2009

இப்ப போகுறயே சோரம்?!


பழசை நல்லா மறந்துடுவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!

பாங்கா நாலும்பேசி உசுப்புவான் - அந்த
உசுப்பலுக்கு நல்லா கையுந்தட்டுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!
இப்ப போகுறயே சோரம்?!

பேச்சுல சுதி ஏறஏற, இவனுக்கு
மழுங்கித்தான போகுது மதி?!
எதிரியின்னும் சொல்லுறான், துரோகிக்கு
எதிரி மேலுன்னும் சொல்லுறான்! ரெண்டுல
ஒன்னுக்கு சரணாகதியின்னும் சொல்லுறான்! ரெண்டுல
ஒன்னுக்கு சரணாகதியின்னும் சொல்லுறான்!!

சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்
இப்ப போகுறது சோரம்!
பழச நல்லா மறந்துருவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!!

தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??
அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!

சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?! தமிழா நீ
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?!

16 comments:

ஆ.ஞானசேகரன் said...

//சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!//

ஆகா....

ஆ.ஞானசேகரன் said...

//அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//

இதுதான் புரியல எப்படினு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??//

தெரியலயே தல.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பேச்சுல சுதி ஏறஏற, இவனுக்கு
மழுங்கித்தான போகுது மதி?!//


சுதி ஏற.......... ஏற.......

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
//அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//

இதுதான் புரியல எப்படினு?
//

49-O, அதுவும் இல்லையா, மூணாவதா யார் பெரிய ஆளோ அவரு....

பழமைபேசி said...

//SUREஷ் said...
//தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??//

தெரியலயே தல.....
//

மருத்துவருக்கே தெரியலையா? அவ்வ்வ்வ்.....

vasu balaji said...

உறைக்கும்ங்கிறீங்க? என்னா தெனாவட்டா இனிமே யோசிக்க எதுவுமில்ல. வெற்றின்னு வெக்கம் கெட்டு சாவ சொல்லுது. தல எழுத்து.

Machi said...

புது மகுடிக்கு மயங்கலே
பழைய மகுடியை நம்புனேனே
மோசம் போனேனே

எதிரியை விட துரோகி மோசம்
இது தான் அவனுக்கு தண்டனை
கொடுக்கும் காலம்.
துரோகிகளுக்கு ஒரு பாடம்.
மீண்டும் துரோக சிந்தனை
வராம தடுக்கும் பாடம்.

ஆ.ஞானசேகரன் said...

///பழமைபேசி said...
//ஆ.ஞானசேகரன் said...
//அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//

இதுதான் புரியல எப்படினு?
//

49-O, அதுவும் இல்லையா, மூணாவதா யார் பெரிய ஆளோ அவரு....///

49 ஓ ரகசியமாக்க படவில்லையே...

பழமைபேசி said...

//குறும்பன் said...
புது மகுடிக்கு மயங்கலே
பழைய மகுடியை நம்புனேனே
மோசம் போனேனே

எதிரியை விட துரோகி மோசம்
இது தான் அவனுக்கு தண்டனை
கொடுக்கும் காலம்.
துரோகிகளுக்கு ஒரு பாடம்.
மீண்டும் துரோக சிந்தனை
வராம தடுக்கும் பாடம்.
//

அகஃகா.... நல்ல முயற்சி....

தொகுதிக்கு 5% வாக்கு தமிழனின் இன்னலுக்கு எதிர்ன்னு, நீரூபணம் செய்திருந்தா, அது புத்திசாலித்தனம். இராசீவ் காந்தி சாவுல வெற்றியடைஞ்சு, பின்னாடி அந்த வெற்றிக்கு காரணமே நான் தான்னு சொன்ன வாய், இதை ஏற்றுக் கொள்ளுமா?

இல்லை, தேர்தல் நடந்த 232 தொகுதியிலும் தோக்க வெச்சு அழகு பார்த்த வரலாறு இருக்கையில, துரோகத்தனதுனாலதான் தோற்றுப் போனோம்ன்னு ஒப்புக்கத்தான் போறாங்களா??

ஆக, இனமானத்துக்குன்னு ரெண்டு பக்கமும் ஒரு மரியாதை, மதிப்பு கிடையாது....

அது மாத்தி இது, இது மாத்தி அதுன்னு சவாரி ஏறி ஏறி, தமிழுணர்வு பட்டுப் போனதுதான் மிச்சம்....

வரலாறு முக்கியம் அன்பரே!

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
///பழமைபேசி said...
//ஆ.ஞானசேகரன் said...
//அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//

இதுதான் புரியல எப்படினு?
//

49-O, அதுவும் இல்லையா, மூணாவதா யார் பெரிய ஆளோ அவரு....///

49 ஓ ரகசியமாக்க படவில்லையே...

//

சரீ, அப்ப மூனாவது ஆள் யாரோ, அங்க அமுக்க வேண்டியதுதான்.... இல்ல, சுயேட்சைக்குப் போடுங்க...

அப்பாவி முரு said...

//தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//

ஹே ஹே...

அண்ணே, இத்தினி நாள உள்ள இருந்தீங்களா????

Muniappan Pakkangal said...

Puthu mahudi & pazhasu,nalla karuthu.

தமிழ் நாடன் said...

//தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!//
எவனுக்கண்ணே அந்த தெகிரியம் இருக்கு! பொட்டிய பாத்த ஒடனே மகுடி குடிச்ச பாம்பாட்டம் ஆடுதானுங்க! பேரம் படிஞ்சிருந்தான்னு... ஒருத்தன் புலம்பனானே கேட்டீங்களா?!!

ராஜ நடராஜன் said...

//தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??//

அழகான வரிகள்.

பழமைபேசி said...

வருகை புரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ!!!