4/23/2009

அமெரிக்காவின், ’அலேக்’ அண்டவெளி ஓடம்!

(மூலம்: மின்னஞ்சல்)

இப்ப, ஊர்வழில ’அலேக்கா’த் தூக்கிட்டான்றாங்க. அலாக்காத் தூக்கிட்டுப் போயிடுச்சுங்றாங்க. அங்கவாரு, அலாக்காப் போவுது பாருங்கறாங்க... அதென்ன இந்த அலேக்கா? இஃகிஃகி!

’அலேக்கா’ ’அலேகம்’ன்னு சொல்லிச் சொல்றதுக்கு, இலகுவாக காற்றில் பறக்கவல்ல பனை இலை, இலகுவாக மேலோங்குகிற மணற்துகள் இப்படியானதுங்களாம். அதுல இருந்து, இலகுவா மேல போற எல்லாத்துக்கும் வந்தது அலேக், அலாக் அப்படீங்ற வழக்கு. இஃகிஃகி!!

13 comments:

Mahesh said...

அலேக் நிரஞ்சன் !!

அப்பாவி முரு said...

அப்ப ”கொத்தவரங்க்காய் போலிருப்பான் அலேக்” - என்கிற நாகேசின் பாட்டி வரிக்கு என்ன அர்த்தம்?

பழமைபேசி said...

//Mahesh said...
அலேக் நிரஞ்சன் !!
//

இஃகி! அது கிருட்டிண பரமாத்வோட பெயர் ஆச்சுங்களே?!

பாலா... said...

அந்தியூரில இருந்து ஆர்லண்டோவுக்கு அலேக்கா தூக்கிட்டீங்க தம்பி. அது சரி, பெருமாளு அவ்வளவு சொல்லியும் பழமை பயந்து போய் இருக்கு போல. ஆளக்காணம். டிஸ்கவரிலதான் தேடிப் பிடிக்கணும்.

உருப்புடாதது_அணிமா said...

:-)

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அப்ப ”கொத்தவரங்க்காய் போலிருப்பான் அலேக்” - என்கிற நாகேசின் பாட்டி வரிக்கு என்ன அர்த்தம்?
//

பாட்டியோட வரியக் கேட்டதே இல்லீங்களே?!

பழமைபேசி said...

//பாலா... said...
அந்தியூரில இருந்து ஆர்லண்டோவுக்கு அலேக்கா தூக்கிட்டீங்க தம்பி.
//

அண்ணே, உங்களுக்கு அந்தியூருன்னு எப்படித் தெரிஞ்சது? :-0|

ஆ.ஞானசேகரன் said...

அடடவே அலெக்கா சொல்லிடேளே!...

பாலா... said...

/அண்ணே, உங்களுக்கு அந்தியூருன்னு எப்படித் தெரிஞ்சது? :-0|/


அதுவா? மாட்டு வண்டிய அக்கு வேற ஆணி வேறனு கேட்டு தெரிஞ்சத பின்னாள்ள மெகானிகல்(இயந்திரத்துறை?)எஞ்ஜினீர்(பொறியியலாளர்?) ஆவீங்கன்னு விளையும் பயிர் முளையிலேயான்னு கேட்டப்ப, ஸ்ரீநிதி யாருன்னு கேட்டப்பவே தெரியுமே? அப்போல்லாம் ஏன் தம்பிக்கு இப்படி கேக்க தோணல=))

பாலா... said...

”கொத்தவரங்க்காய் போலிருப்பான் அலேக்”

அது ' வாழத் தண்டு போல உடம்பு அலேக்' பாட்டுல வருதுங்க. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001754 இங்க சுட்டுங்க கேக்கலாம்.

பழமைபேசி said...

// உருப்புடாதது_அணிமா said...
:-)
/

என்ன சிரிப்போட போயிட்டீங்க மலைக்கோட்டையார்?!

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
அடடவே அலெக்கா சொல்லிடேளே!...
//

ஞானியார்...வாங்க, வணக்கம்!

பழமைபேசி said...

//பாலா... said...
அதுவா? மாட்டு வண்டிய அக்கு வேற ஆணி வேறனு கேட்டு தெரிஞ்சத பின்னாள்ள மெகானிகல்(இயந்திரத்துறை?)எஞ்ஜினீர்(பொறியியலாளர்?) //

இப்பத்தெரிஞ்சு போச்சுங்களே! இஃகிஃகி!!