4/14/2009

இந்தாடா கள்ளிப்பழம்!

செழிப்புமிகு வா.வேலூர், சலவ நாயக்கன் பட்டிப் புதூர் பகுதியில் ஓடிக் கொண்டு இருந்த காட்டாற்றில், பூக்களை நழுவவிட்ட பழமைபேசி, அந்த ஆற்றின் கரையோரமாக வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த ஆறினாலேயே அந்த ஊர்கள் மிகச் செழிப்பு பெறுகிறது.

பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும், தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.

இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமைபேசி, அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமைபேசியைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.

”பழமை, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”

“ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”

“இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”

“சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”

“இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”

“சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”

“உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.

செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.

செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமை?”

“தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”

”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமைபேசி வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.

இதைக் கேட்ட பழமைபேசிக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமைபேசியிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.

“இந்தாடா பழமை, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”

“ம்ம்ம்... ம்ம்ம்... செரீங்க...ம்ம்!”

சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமைபேசி மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!

பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!


48 comments:

ஆ.ஞானசேகரன் said...

//”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமைபேசி வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.
//

நானும் தாங்கோஓஓஓஒ...

ஆ.ஞானசேகரன் said...

நண்பா பல வார்த்தைகளை(ஊர் வழக்கு வார்த்தைகள்)புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கு

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
நண்பா பல வார்த்தைகளை(ஊர் வழக்கு வார்த்தைகள்)புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கு
//

என்னன்ன வார்த்தைகள்ன்னு சொல்லுங்க சிங்கை ஞானியார்!

Mahesh said...

முள்ளுக் குத்தாம கள்ளிப்பழம் திங்கறது ஒரு கலை !!

அப்பாவி முரு said...

அண்ணா.,

சின்ன வயசுல நடந்தெல்லாம அப்பிடியே மனசுல வச்சுருக்கியேண்ணா...

பலே ஆளுண்ணா நீயி..

குறும்பன் said...

//வா.வேலூர்//

வா எத குறிக்குங்க?

//அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமைபேசி வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.//

சின்னமுத்து மட்டுமல்ல நானுந்தாங்க அஃகஃகா ன்னு சிரிச்சேன்.

பழமைபேசி said...

//குறும்பன் said...
//வா.வேலூர்//

வா எத குறிக்குங்க?
//


_/\_
வாகத்தொழுவு வேலூர்

மிஸஸ்.தேவ் said...

நல்லா இருக்குங்க ... உங்க அளவுக்கு வட்டார வழக்குல பொளந்து கட்ட நமக்கு தெரியாதே அண்ணா ."சராங்கமானா சீக்ரமா சொல்லுங்கன்னு அர்த்தமா?" கே.எஸ்.ரவிக்குமார் படம் பார்த்த மாதிரி ஒரு எஃபெக்டுங்க அண்ணா .

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

ஸ்ரீதர் said...

v.n.p. voted.

ஸ்ரீதர் said...

அதாவது வழக்கம் போல நல்ல பதிவு.

பழமைபேசி said...

//Mahesh said...
முள்ளுக் குத்தாம கள்ளிப்பழம் திங்கறது ஒரு கலை !!//

ஆமாங்க அண்ணே....

ஆ.ஞானசேகரன் said...

//என்னன்ன வார்த்தைகள்ன்னு சொல்லுங்க சிங்கை ஞானியார்!//

கடினமாக இருக்கு ஆனால் புரிந்துக்கொண்டேன்...

அதுசரி அது என்னங்க சிங்கை ஞானியார்?

Poornima Saravana kumar said...

உங்கள் கள்ளிப் பழத் தோழர் எப்படி இருக்கார்??

Poornima Saravana kumar said...

ஏனுங்ண்ணா இது நீங்க எத்தனாப்பு படிக்கும் போது நடந்துச்சு???

Poornima Saravana kumar said...

அப்றம் சின்ன முத்துவின் கதை டாப்பு:)))

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
ஏனுங்ண்ணா இது நீங்க எத்தனாப்பு படிக்கும் போது நடந்துச்சு???
//

நாலாம் வகுப்புங்க...

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...

அதுசரி அது என்னங்க சிங்கை ஞானியார்?
//

சிங்கப்பூர் ஆ.ஞானசேகரன்

பழமைபேசி said...

//ஸ்ரீதர் said...
அதாவது வழக்கம் போல நல்ல பதிவு.
//

நன்றிங்க, உங்க ஆதரவும் ஊக்குவிப்புந்தான எழுத வைக்குது!!

பழமைபேசி said...

//மிஸஸ்.தேவ் said...
நல்லா இருக்குங்க ... உங்க அளவுக்கு வட்டார வழக்குல பொளந்து கட்ட நமக்கு தெரியாதே அண்ணா ."சராங்கமானா சீக்ரமா சொல்லுங்கன்னு அர்த்தமா?"
//

ஆமாங்கோ... நன்றிங்!!!

ராஜ நடராஜன் said...

என்னையெல்லாம் கூப்பிடனுமாக்கும்?கண்ணுல பட்ட உடனேயே வந்திட மாட்டேனாக்கும்:)

ராஜ நடராஜன் said...

//எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.//

இம்புட்டு தூரம் பயணமா? எனக்குத் தெரிந்ததெல்லாம் அமராவதியும் அமராவதிப் பாலமும்தான்.

ராஜ நடராஜன் said...

சின்னமுத்து!சின்னமுத்து.

ராஜ நடராஜன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நண்பா பல வார்த்தைகளை(ஊர் வழக்கு வார்த்தைகள்)புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கு
//

ஞானசேகரனை,கவுண்டமணி,சரளக்கா,பாக்யராஜ் மூணு பேருகிட்டயும்(மூணுபேருமே கால்ஷீட் இல்லாமத்தான் உட்கார்ந்திருக்காங்க)படிக்கச் சொல்லி அனுப்புங்க.

பேசற பழமயப் பாரு.

பாலா... said...

ஊரழகு, மக்களழகு, ஆறழகு, வட்டாரப் பேச்சழகு, கதை சொல்லும் பாங்கழகு, பழமை பாட்டழகு, அழகோ அழகு. நாலாம்பு படிக்கிற பழமை கண்ணு முன்ன தெரியுது. பாவமா. ஆனாலும் அழகான பாட்டில சூரிப்பழம் விட்டது குறை. சின்னமுத்து குடுக்கலையா? ம்ம்..ம்ம். வந்து..வந்து..சூரிப்பழம்னா என்ன?

பாலா... said...

நேத்து பழமை பாட்டில அருணாசலகவி தெரிஞ்சாங்க. மனசுக்குள்ள ஓடிட்டே இருந்திச்சி. பாராட்டுக்கள்.

குடுகுடுப்பை said...

பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!//

கள்ளிப்பால் பத்தி ஒரு பாட்டு போடறது

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
அப்றம் சின்ன முத்துவின் கதை டாப்பு:)))
//

என்னை வெறுப்பேத்துனதுல உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி!

கலகலப்ரியா said...

:-) ரொம்ம்ப்ப நல்லா கதை சொல்றீங்க.. இதையாவது.. பழமையின் கள்ளிக் காட்டு இதிகாசமா பண்ணலாமே..

கலகலப்ரியா said...

"மடிந்த" பழமைபேசின்னா.. இப்போ பேசிண்டிருக்கிறது யாருன்னு திகைச்சி போயிட்டேன்..:p

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
"மடிந்த" பழமைபேசின்னா.. இப்போ பேசிண்டிருக்கிறது யாருன்னு திகைச்சி போயிட்டேன்..:p//

ஆகா, அந்த மடிந்த இல்லீங்க....

மடிக்கப்பட்ட = மடிந்த

இஃகிஃகி!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

கள்ளிப்பால் பத்தி ஒரு பாட்டு போடறது
//

வாசகர் விருப்பமா போட்டிடுவோம்...

பழமைபேசி said...

//பாலா... said...
நேத்து பழமை பாட்டில அருணாசலகவி தெரிஞ்சாங்க. மனசுக்குள்ள ஓடிட்டே இருந்திச்சி. பாராட்டுக்கள்.
//

நன்றிங்க பாலாண்ணே!

பழமைபேசி said...

//பாலா... said...
ம்ம்..ம்ம். வந்து..வந்து..சூரிப்பழம்னா என்ன?
//

அறுசுவையுங் கொண்ட பழமுங்க அது. சின்னதா, இலந்தை மாதிரியே, வேலியில நிறைய இருக்கும்.

கலகலப்ரியா said...

//மடிக்கப்பட்ட = மடிந்த//
வித்தியாசம் ஒண்ணும் தெரியலீங்க.. முதலாவது செயற்பாட்டு வினை.. மற்றது செய்வினை..
ம்ம்.. சின்னம்மையை ஈழத்தில் சின்னமுத்து என்று சொல்வதுண்டு.. கள்ளிப் பழத்திற்குப் பதிலாக.. சின்னமுத்துவால் மடிந்தன்னு போட்டிருந்தா.. என்ன ஆகி இருக்கும்..? என்னமோ பொழைச்சி போங்க..

அது சரி said...

ஏதோ கோயம்புத்தூர் கிராமத்தில காலார நடந்துட்டு வந்த எஃபெக்ட்டு!

//
அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமைபேசியிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.
//

ஆமா, கள்ளின்னா இந்த நிறைய முள்ளோட, வேலிப்பக்கம் வளர்ந்திருக்குமே சப்பாத்திக் கள்ளி தான? அது பழத்தை திங்கலாமா? பாய்ஸன் இல்ல?? எங்க ஊர்ல அதை கிளிக்கு மட்டும் தான் குடுப்போம்...சில சமயம் கோழிக்கும்...

கலகலப்ரியா said...

நல்லா இருக்குடா சாமி..! விஷம்னா கோழி, குருவிக்கு கொடுப்பாங்களாம்..!!! அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா கோழி, கிளின்னு பொறக்கப்டாது... அப்டியே பொறந்தாலும்.. இவங்க ஊர்ல பொறக்கப்டாதுடா சாமி..

அது சரி said...

//
கலகலப்ரியா said...
நல்லா இருக்குடா சாமி..! விஷம்னா கோழி, குருவிக்கு கொடுப்பாங்களாம்..!!! அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா கோழி, கிளின்னு பொறக்கப்டாது... அப்டியே பொறந்தாலும்.. இவங்க ஊர்ல பொறக்கப்டாதுடா சாமி..
April 15, 2009 5:45 PM
//

ப்ரியா...இது என்னங்க புதுக்கதையா இருக்கு??

விஷம்னா கொல்ற விஷம் இல்ல...கள்ளிப்பழம், ஊமத்தங்காய், நுவ்வா பழம், அப்புறம் பம்பரக்காய்னு ஒண்ணு இருக்கு... இதையெல்லாம் மனுஷங்க சாப்பிட்டா ஊமையாயிடுவங்கன்னு சொல்வாங்க...அதனால கள்ளிப்பழம் ரொம்ப அழகா சிவப்பா இருந்தாலும் அதை யாரும் சாப்பிட மாட்டோம்...எங்க வீட்ல கிளி இருந்துச்சி...அது நல்லா சாப்பிடும்...சமயத்துல கோழியும்....அந்த கிளியும் கோழியும் பேசி நாங்க அதுவரை பார்த்ததே இல்லைங்கிறதுனால அது ஊமையாயிடும்னு பயம் இல்ல...:0))

ஏங்க, செத்துரும்னு தெரிஞ்சே யார்னா விஷம் கொடுப்பாங்களா??

அது சரி said...

நல்ல வேளை உங்க பின்னூட்டத்தை நான் பார்த்தேன்...இல்லாட்டி "கிளிக்கு விஷம் கொடுத்த கொடூரன்"ன்னு பட்டம் கொடுத்திருப்பீங்க போல...:0))

பழமைபேசி said...

பொண்ணுகளை மடிக்கறாங்க... நான் மடிச்சிட்டேன்ன்னு அவன் சொன்னா, அவ மடிஞ்சுட்டதாத்தானே அர்த்தம்.
அந்த மாதர "மடிந்த" இது.... இஃகிஃகி!

தஞ்சாவூரான் said...

:)))

பழமை, 'இட்டேரி' ன்னா என்னன்னு சொல்ல முடியுமா? (சின்ன வாய்க்கால்??)

கள்ளிப் பழம் சாப்பிட்டா அது நடுவுல இருக்குற முள்ளு தொண்டையில மாட்டி செத்துப் போயிடுவோம்னு எங்கள பயமுறுத்தி வச்சுருந்தாங்க பெருசுங்க. அதையும் தாண்டி சாப்பிட்டுப் பாத்துட்டோம்ல :)

கள்ளிப் பழத்தைக் கழுவி சாப்பிட்டு நான் பாத்ததில்ல. முள்ளு போக தேச்சுதான் சாப்பிடுவாங்க!!

நடை அருமை.

பழமைபேசி said...

//தஞ்சாவூரான் said...
:)))

பழமை, 'இட்டேரி' ன்னா என்னன்னு சொல்ல முடியுமா? (சின்ன வாய்க்கால்??)
//

இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை, இருபுறங்களிலும் வேலி அமையப் பெற்றது) இரட்டைவேலி. இட்டேரி ஆனது.

தண்ணீர் இல்லாத பட்சத்துல முள்ளை மழுக்கிவிட்டு, தின்பதுதான். இருக்கும் பட்சத்தில் அலசி, மழுக்கி தின்போம். :-0)

நன்றிங்க!!

பழமைபேசி said...

//அது சரி said...
நல்ல வேளை உங்க பின்னூட்டத்தை நான் பார்த்தேன்...இல்லாட்டி "கிளிக்கு விஷம் கொடுத்த கொடூரன்"ன்னு பட்டம் கொடுத்திருப்பீங்க போல...:0))
//

அது சரி அண்ணாச்சி, சும்மா ப்ரியா அல்லங்க, கலகலப்ரியா... இஃகிஃகி!!

கலகலப்ரியா said...

//அது சரி said...//

அது சரி!!! உங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் கள்ளிப் பழம் கொடுத்தே அதுங்கள வாய் பேசாத பண்ணிட்டாங்க போல. (இப்போதானே உண்மை வெளில வருது) அப்புறம் நீங்க எப்டி பார்க்கிறது. கள்ளிப் பழம் புடிக்காத ஒண்ணு, ரெண்டு கிளி தப்பிச்சி கொஞ்சம் பேசுதுங்க போல..
உங்க பாட்டன் பண்ண தப்புக்கு உங்கள எப்டி கொடூரன்னு சொல்ல முடியும்.. ஹும்..

கலகலப்ரியா said...

//சும்மா ப்ரியா அல்லங்க, கலகலப்ரியா...//

ம்ம்.. நக்கலு.. இருக்கட்டு இருக்கட்டு..!

கலகலப்ரியா said...

//பொண்ணுகளை மடிக்கறாங்க...//

அடங்.......... கடுதாசிய மடிச்சாலும் அதும் மடிஞ்சிட்டுதானே அர்த்தம்.. அது தெரியாமத்தான் இருந்தோம் பாருங்கோ.. அவ்வ்வ்வ்...

(ஓஹோ பொண்ணுங்கள மடிக்கிறீங்களோ.. பண்ணுவீங்க பண்ணுவீங்க.. எல்லாம் நேரம்டா.. கள்ளிப் பழத்துக்கே மடிஞ்சதுங்கல்லாம்.. இப்டி பேசி கேக்க வேண்டி இருக்கு..)

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...//

அது சரி!!! உங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் கள்ளிப் பழம் கொடுத்தே அதுங்கள வாய் பேசாத பண்ணிட்டாங்க போல. (இப்போதானே உண்மை வெளில வருது) அப்புறம் நீங்க எப்டி பார்க்கிறது. கள்ளிப் பழம் புடிக்காத ஒண்ணு, ரெண்டு கிளி தப்பிச்சி கொஞ்சம் பேசுதுங்க போல..
உங்க பாட்டன் பண்ண தப்புக்கு உங்கள எப்டி கொடூரன்னு சொல்ல முடியும்.. ஹும்..
April 16, 2009 2:48 PM
//

எங்க பரம்பரையவே கொடூரனுவன்னு சொன்னப்புறம் என்னைத் தனியா சொன்னா என்ன சொல்லாட்டி என்ன?? :0))

எப்படியோ, கொடூரன்னு நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க...இப்ப சந்தோஷம் தான?? நல்லா இருங்க...

:0))

கலகலப்ரியா said...

அது சரி!!!! நீங்க வேற.. அதுங்களும் பேசிண்டிருந்தாக்க என்ன ஆயிருக்கும்? நல்லதுதான் பண்ணி இருக்காங்க அவங்க..! அழுவாதீங்க.. பழமைபேசி கிட்ட ஒரு கள்ளிப் பழம் கடனா வங்கி கொடுக்கிறேன்..!