4/03/2009

என்னா இழவுடா இது?

இந்த வாரம் ஒரே வேலை முசுவுங்க. வலைப்பக்கம் தலை வெச்சிக்கூடப் படுக்க நேரமில்லை. எருமைக்குப்(Buffalo, NY) போயிட்டு இராவுல வந்து சேர்ந்தாச்சு. இனி எதையாவது சொல்லி இடுகை ஒன்னைப் போடுவம்ன்னுதான்... இஃகிஃகி!!

போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!

இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே!

இப்படிப் பாட்டுலயே அழுகைக்கு நான்கு காரணங்கள் இருக்குன்னு தொல்காப்பியர் சொல்றாருங்க.

இளிவு, இழிவு, இளப்பம்ங்றது ஒரு பொருட் கிளவிகள். இழிவாகுறது, வலியன் எளியன் ஆகுறதுங்க. அப்ப, அடுத்தவங்க இழிவைக் கண்டு தான் அழுவறதும், தன்னோட இழிவு கண்டு அடுத்தவங்க அழுவுறதும் இந்த வகையில வருதுங்க.

இழவு, இழப்புங்றது ஒரு பொருட் சொல்லுகள். இழவுங்றது, உயிரோ, பொருளோ, எதோ ஒன்னை இழந்து போறது. அடுத்தவங்க இழப்புக்கும், தன்னோட இழப்புக்கும் அழுவுறது.

அசைவு, தளர்ச்சி, நிலைமாறுகைங்றது ஒரு பொருட்கிளவிகள். அதாவது, இருந்த நிலையிலிருந்து தாழ்ந்து போறது.

வறுமை, நல்குரவுங்றதும் ஒரு பொருட் சொல்லுகதான். வறுமைன்னா என்னன்னு சொல்லத் தேவை இல்லை. இல்லாமல் போதல்!

இதுகெல்லாந்தாங்க, அழுகைக்கான மூல காரணங்கள். சரி, வந்துட்டீங்க, இந்த கணக்குக்கும் விடை சொல்லிட்டுப் போங்க!! இஃகிஃகி!!

ஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன், 300 படி பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழி(ஒரு படி)பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?


25 comments:

அப்பாவி முரு said...

ஐ நான் தான் பஸ்டு...

அப்பாவி முரு said...

கணக்குக்கு விடை

தலா ஒன்னா???

24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா???

தேவன் மாயம் said...

போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!///

நாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
கணக்குக்கு விடை

தலா ஒன்னா???

24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா???
//

இவ்வளவு சுலுவுல கணக்கா? வாயிற்காரர்கள் எடுத்துக் கொண்ட பாலைக் கவனத்தில் கொள்க!

குடந்தை அன்புமணி said...

திரும்பவும் கணக்கா? வுடுஜீட்!

Mahesh said...

அது என்ன எளவோ போங்க...

இராகவன் நைஜிரியா said...

// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//

உங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்?) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே
// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி!!//
அப்படின்னு போட்டு இருக்கீங்க..

குழப்பா இருக்குங்க.. எது சரி..

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//

உங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்?) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே
// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி!!//
அப்படின்னு போட்டு இருக்கீங்க..

குழப்பா இருக்குங்க.. எது சரி..
//

வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... ஆனா, என்னை நான் திருத்திகிடலை.... அவ்வ்வ்வ்....

நன்றிங்க ஐயா! இப்ப திருத்திட்டேன்.... இடுகைதான் சரி!!

இராகவன் நைஜிரியா said...

// வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, //

திரும்பவும் தப்பு...

என்னோட இடுகையைப் பாத்திட்டு?

இராகவன் நைஜிரியா said...

/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?/

=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..

உதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால்
24/300 x 24 = 1.92

(1+2+3+.....24) = 300 என்பது சரிதானே?

இராகவன் நைஜிரியா said...

// தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... //

ஐயா என்ன ஆச்சு உங்களுக்கு.. அது தமிலீசு இல்லீங்க... தமிழிஷ்..

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில் ஓட்டு போட்டாச்சுங்க..

தமிழ் மணத்திலும் ஓட்டு போட்டாச்சுங்க

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?/

=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..

உதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால்
24/300 x 24 = 1.92

(1+2+3+.....24) = 300 என்பது சரிதானே?
//

ஐயா, கலக்கீட்டீங்க!! கணக்கு ஆய்வாளர்களுக்கெல்லாம் மேலாளர்ங்றது நீரூபணம் ஆயிடுச்சுங்கோ!! வாழ்த்துகள்!!!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// வாங்க ஐயா! வணக்கம்!! என்னோட பதிவைப் பாத்துட்டு, //

திரும்பவும் தப்பு...

என்னோட இடுகையைப் பாத்திட்டு?
//

தப்புதானுங்க... ஆனாலும் சமாளிக்க இடம் இருக்கு.... ப்திவைப் பார்த்துட்டுன்னா, blogஐப் பார்த்திட்டுன்னு கூட பொருள் கொள்ளலாம்...

ஆனா, நான் பிழை விட்டது உண்மை...இஃகிஃகி!!

Mahesh said...

மணியாரே...

ஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது.

பின்னூட்டத்துல எல்லாம் "நல்ல பதிவு"ன்னுதான் வருது...

பழமைபேசி said...

//Mahesh said...
மணியாரே...

ஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது.
//

பழமைபேசி said...
//குறும்பன் said...
இந்த இடுகைய படிச்சதுல என்ன தெரிஞ்சுதுன்னா எல்லோரும் இடுகைக்கும் பதிவுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளார்கள்.
பழமைபேசிக்கு(ம்) தெரியலையா?

இடுகை - post
பதிவு - blog
//

post - பதிவு, இடுகை
blog - வலைப்பூ

March 29, 2009 4:03 PM
குறும்பன் said...
தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் உள்ளதல்லவா? முதலில் அதை சூடான பதிவுகள் என குறிப்பிட்டார்கள், பின்னர் பலர் அத்தவறை சுட்டிக்காட்டியவுடன் மாற்றிவிட்டார்கள்.
தமிழ்மணத்தின் முகப்பு menu வில் இடுகைகள், பதிவுகள் என இருக்கும்.

blog - வலைப்பூ, வலைப்பதிவு

மக்கள் postக்கும் blogக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாற கூடாது (பலர் தடுமாறினர்) என்பதால் இப்பெயர் முறையை கொண்டுவந்தனர்.

பழமைபேசி said...

//Mahesh said...
அது என்ன எளவோ போங்க...

//

எந்த ஊர்ல இருக்கீங்க மகேசு அண்ணே?!

குடுகுடுப்பை said...

கணக்கப்பிள்ளை நான் படிச்சது BA history. எனக்கு கணக்கு தெரியாது சொல்லிப்புட்டேன்

கயல் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!

வில்லன் said...

இப்படி பல வகையான அழுகைகள் இருக்குன்னு சொல்லி எங்கள அழ வச்சிடிங்களே

பழமைபேசி said...

//thevanmayam said...
போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!///

நாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி!
//

வாங்க மருத்துவர் ஐயா!

நசரேயன் said...

அண்ணே எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது

பழமைபேசி said...

திண்ணைக்கு வந்த அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்!!!

vasu balaji said...

அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா?

பழமைபேசி said...

//பாலா... said...
அப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா?
//

வாங்க பாலாண்ணே! நல்ல கேள்வி!!


கண்ணீர் வடிப்பதுங்றது வேற, அழுதல்ங்றது வேறங்க அண்ணே!

மெய்ப்பாடு எட்டுங்க. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை இதெல்லாம். இதுல எது ஒன்னுக்கும் கண்ல இருந்து நீர் வெளிப்படலாம்.