4/13/2009

வெல்லந்தின்ற பழமைபேசி!

பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமைபேசி எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான்.

“எங்கடா போற?”

“தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”

“ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”

“ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”

”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”

”சரிடா பெருமாளு!”

அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமைபேசி.

“பழமை, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”

“இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”

“அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”

“என்னாத்தா இருக்குது?”

“கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”

“அப்பிடின்னா என்னாத்தா?”

“கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”

“எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”

“டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!

பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.

அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமைபேசி. அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,

“கண்ணூ பழமை! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

“அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”

அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமைபேசி அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.

கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமைபேசி:

சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!

27 comments:

அப்பாவி முரு said...

//“கண்ணூ பழமை! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

“அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”//

ஏங்கண்ணு, அந்தாளு அம்மாகிட்ட சொல்லுறேன்னு சொல்லியும், வெள்ளம் வாங்கி திண்ணியா?

தைரியமான ஆளுன்னா நீ?

ஆ.ஞானசேகரன் said...

//சிந்தாம சிதறாமப் பொறித்தேனே பூவே,
சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!
//

நல்லாதான் பாடுரீங்க

vasu balaji said...

உலகம் மொத்தமும் இப்படி மனுசங்களா மாறிட்டா எவ்வளவு அழகா இருக்கும். புத்தாண்டு அழகா விடிஞ்சது பழமை. முதல் வரியிலிருந்து கூடவே வந்தேன். ரொம்ப நிறைவா இருக்கு. நன்றி! மிக்க நன்றி!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...

தைரியமான ஆளுன்னா நீ?
//

சோகத்தை இப்பிடிக் கூட சரிக்கட்டலாமா?!

இராகவன் நைஜிரியா said...

பழைய நினைவுகள். ம்...

அழகா எழுதிட்டீங்க..

இப்ப எல்லாம் வெல்லம் ஆட்டும் இடத்தைப் பார்ப்பதும் இல்லை...

அதுமாதிரி வெல்லம் ஆட்டும் இடங்களில், குழந்தைகளை அன்புடன் கூப்பிட்டு இரண்டு வெல்லக்கட்டிகளை கொடுப்பாரும் இல்லை.

(எனக்குத் தெரிந்து வெல்லம் செய்யும் இடங்களை வெல்லம் ஆட்டும் இடம் என்று சொல்லுவோம் .. இது சரிங்களா?)

சிறு வயதில் கிராமத்து பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, வயல் வழியாகத்தான் வீட்டுக்கு வருவோம். அப்போது வேர்கடலை பிடுங்கும் போது, தம்பி இந்தா மல்லாக்கொட்டை (நான் இருந்த ஊர்களில் இப்படித்தான் சொல்லுவார்கள்) என்று சொல்லி, நிஜார் பாக்கெட் முழுக்க போட்டு அனுப்புவார்கள்.

அந்த ஞாபகம் உங்க பதிவைப் படிக்கும் போது வந்துவிட்டது.

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லாதான் பாடுரீங்க//

நன்றிங்க சிங்கப்பூர் ஞானி! இஃகி!!


Viji said...
:)
//

இஃகி!

பழமைபேசி said...

//பாலா... said...
உலகம் மொத்தமும் இப்படி மனுசங்களா மாறிட்டா எவ்வளவு அழகா இருக்கும். புத்தாண்டு அழகா விடிஞ்சது பழமை. முதல் வரியிலிருந்து கூடவே வந்தேன். ரொம்ப நிறைவா இருக்கு.//

வாங்க பாலாண்ணே! வணக்கம்!! நன்றி! மிக்க நன்றி!

பழமைபேசி said...

// இராகவன் நைஜிரியா said...
பழைய நினைவுகள். ம்...

அழகா எழுதிட்டீங்க..//

இராகவன் ஐயா, வாங்க, வணக்கம்! நன்றி!!


//அதுமாதிரி வெல்லம் ஆட்டும் இடங்களில், குழந்தைகளை அன்புடன் கூப்பிட்டு இரண்டு வெல்லக்கட்டிகளை கொடுப்பாரும் இல்லை.//

ஃகா, போட்டுத்தாக்கிட்டீங்க... மிகச் சரியானது!

(//எனக்குத் தெரிந்து வெல்லம் செய்யும் இடங்களை வெல்லம் ஆட்டும் இடம் என்று சொல்லுவோம் .. இது சரிங்களா?)//

ஆமுங்க ஐயா!


//அந்த ஞாபகம் உங்க பதிவைப் படிக்கும் போது வந்துவிட்டது.
//

ஃகஃகா! அஃகஃகா!! இராகவ் ஐயாவும் மாட்டிகிட்டாரு, மகேசு அண்ணே, வாங்க சீக்கிரம். இராகவன் ஐயாவும் பதிவுன்னு சொல்லி இருக்காரு... அஃகஃகா!!

கலகலப்ரியா said...

அடடா உங்க ஊரு கண் முன்னாடி தெரியுதுங்க.. ரொம்ப அழகா இருக்கு.. பேசுற பாஷை அத விட அழகா இருக்கு.. :( அப்டியே நம்ம ஊரு ஞாபகம் வந்திடிச்சி

KarthigaVasudevan said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்,தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்னு சொல்லத் தான் ஆசை! என்ன இருந்தாலும் சித்திரை ஒன்னு தான் என்னைப் பொறுத்தவரை தமிழ் வருடப் பிறப்பா மனதில் நிக்குது .

கரும்பு ஆலைன்னதும் எனக்கு எங்க ஊர் ஞாபகம் ,இப்பவும் அங்கே வெல்லம் காய்ச்சுவது உண்டு ,சென்ற தசரா விடுமுறை சமயம் கூட அந்தப் பக்கம் வயல்களின் ஊடே காலாற நடந்து போய் நானும் ,பாப்புவும் இளம் சூடான வெல்ல அச்சுக்களை உள்ளங்கையில் வாங்கி அந்த பாகு மணம் நாசியில் நிரம்ப கூடவே கண்களைக் குளிர வைத்த பச்சை பசும் வயல்களை கண் நிறைய பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம் ,

உங்க ஊர்ல தெயவாத்தா கடைனா...எங்க ஊர்ல அங்கம்மா ஆச்சி கடை ... அங்கம்மா ஆச்சி கடைல இட்லி...தோசை தேங்காய் சட்னி ,காரச் சட்னி ,வெல்லப் பணியாரம் தான் கிடைக்கும் .எடுப்புச் சோறு ,கட்டுச் சோறு ,ஏகாந்த போசனம் எல்லாம் அங்க இல்லை,

வாசிக்க சுவாரஸ்யமான அருமையான மலரும் நினைவுகளா இருக்கே ? தொடர்ந்து எழுதுங்க படிக்க ஆர்வமா இருக்கோம் ...

இராகவன் நைஜிரியா said...

//ஃகஃகா! அஃகஃகா!! இராகவ் ஐயாவும் மாட்டிகிட்டாரு, மகேசு அண்ணே, வாங்க சீக்கிரம். இராகவன் ஐயாவும் பதிவுன்னு சொல்லி இருக்காரு... அஃகஃகா!!//

ஆஹா... மாட்டிகிட்டேனா?

இது வாழ்த்துகள் மாதிரி ஆகி போச்சுங்க... எல்லா இடத்துலேயும் ”க்” சேர்த்து அடிச்சுட்டு அப்புறம் மாத்திகிட்டு இருக்கேன்.

மண்டையில “இடுகை” என்பதற்கு “பதிவு” என்ற வார்த்தை பதிந்து போச்சுங்க.. மாத்திக்கணும்.

சரண் said...

வழக்கம்போல அசத்தல் பதிவு தலைவா...
எங்கயன்னும் நான் சிருசா இருந்தப்ப கரும்பாலதான் வெச்சுருந்தாங்க.. நானும் போய் வெல்லஞ்செயரதியெல்லாம் பாத்திருக்கேன்.. தாரபுரத்துல வெல்லமண்டிக்கும் போய் ஏலத்துக்கெல்லாம் கணக்கெழுதியிருக்கேன்..
ம்ஹும்.. பழம பேசறேன்னுட்டு எப்பப்பாத்தாலும் பழய நெனப்பையெல்லாம் கிளறியுட்டறீங்க..

ராஜ நடராஜன் said...

//“கண்ணூ பழமை! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”//

மணியண்ணா!வெல்லம் செய்ற இடத்துக்குப் போனா எப்படின்னாலும் கொஞ்சம் ஓசு வெல்லம் கிடைச்சுடுமில்ல!

இப்ப கடையில தேடிப்பிடிச்சு கொண்டு வந்து வச்சேன்.அம்மணி அப்படியே விட்டுருச்சா இல்லை பாயாசத்துல கலந்துருச்சான்னு தெரியல.

வீட்டுக்குப் போனா இன்னிக்கு முதல் வேலையா டப்பாக்களைத் தேடுறதுதான்!

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
அடடா உங்க ஊரு கண் முன்னாடி தெரியுதுங்க.. ரொம்ப அழகா இருக்கு.. பேசுற பாஷை அத விட அழகா இருக்கு.. :( அப்டியே நம்ம ஊரு ஞாபகம் வந்திடிச்சி
//

நன்றிங்க.... அதான் எங்க ஊர் வட்டார மொழிங்க!

கயல் said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு அதுவுமா நல்ல இனிப்பான நினைவு கூறல்! ஊரு ஞாபகம் வந்துடுச்சு!!

சவுக்கடி said...

எழிலாய்ப் பழமை பேச - என்றிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழறிந்தாரிடம் கேட்டுக் கொண்டு தவறாயின் திருத்தி எழுதுங்கள்.

பழமைபேசி said...

//savuccu said...
எழிலாய்ப் பழமை பேச - என்றிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழறிந்தாரிடம் கேட்டுக் கொண்டு தவறாயின் திருத்தி எழுதுங்கள்.
//

ஒற்று மிகாது சவுக்காரே, ஒற்று மிகாது!!

குடுகுடுப்பை said...

நீங்க வெல்லம் மட்டுமா சாப்புடிறீங்க.

அது சரி(18185106603874041862) said...

//
அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமைபேசி அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.
//

பூவு யாருக்குங்??

அப்பலையே பூவோட தான் அலையறதாக்கும்? :0))

பழமைபேசி said...

//மிஸஸ்.தேவ் said...
வாசிக்க சுவாரஸ்யமான அருமையான மலரும் நினைவுகளா இருக்கே ? தொடர்ந்து எழுதுங்க படிக்க ஆர்வமா இருக்கோம் ...
//

நன்றிங்க சகோதரி... முயற்சி செய்யுறோம்.... உங்க அளவுக்கு கவிதையில பொளந்து கட்ட முடியுமா என்ன?!

பழமைபேசி said...

//சூர்யா said...
பழம பேசறேன்னுட்டு எப்பப்பாத்தாலும் பழய நெனப்பையெல்லாம் கிளறியுட்டறீங்க..
//

வாங்க, வாங்க, எங்க பொன்னான நெம்ப நாளாக் காணமுங்களே?!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வீட்டுக்குப் போனா இன்னிக்கு முதல் வேலையா டப்பாக்களைத் தேடுறதுதான்!
//

வணக்கமுங்க, அதைச் செய்யுங்க மொதல்ல... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//கயல் said...
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு அதுவுமா நல்ல இனிப்பான நினைவு கூறல்! ஊரு ஞாபகம் வந்துடுச்சு!!
//

உங்களுக்கும் வாழ்த்துகள்! :-o)

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நீங்க வெல்லம் மட்டுமா சாப்புடிறீங்க.
//

நான் அப்படிச் சொல்லவே இல்லியே.... அவ்வ்வ்.....

பழமைபேசி said...

//அது சரி said...
பூவு யாருக்குங்??

அப்பலையே பூவோட தான் அலையறதாக்கும்? :0))
//

வணக்கங்க அது சரி அண்ணாச்சி!

சரண் said...

//வாங்க, வாங்க, எங்க பொன்னான நெம்ப நாளாக் காணமுங்களே?!//

தென்னங் பண்ணறது.. வாரிசு ஒண்ணு பொறக்கப்போறதால ஊட்டையெல்லாம் வண்ணமடிக்கச் சொல்லி ஊட்டுக்காரியோட உத்தரவு.. தட்டமுடியுங்களா? அதேன் மம்மாறியா வேல செஞ்சுட்டிருக்கேனுங்..

அப்புறம்முங்.. இந்த ஒவ்வாமயெல்லாம் சரியாபோச்சுங்களா?

பழமைபேசி said...

//சூர்யா said...
அப்புறம்முங்.. இந்த ஒவ்வாமயெல்லாம் சரியாபோச்சுங்களா?
//

நான் இப்ப Buffaloல இருக்கறனுங்களா, அதனால பிரச்சினை இல்லீங்க... இங்க இன்னும் பசுமை தட்டுல அதானுங்க...