”அப்பிச்சி, என்னங்க நெம்ப நாளா ஆளே காணோம்?”
“ஆமாடா பேராண்டி, நீ நாலும் எழுதுறே! முசுவா வேற இருந்தே, அதான் வரலை. ஆனா எவனோ பொழப்பத்தவன் பூனை மயிரை சிரைச்ச கதையாட்டம் எழுதத் தலைப்பட்ட மாதரத் தெரிஞ்சது. அதான், ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்!”
“அப்படியெல்லாம் இல்லீங்க அப்பிச்சி. இனத்துக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க முடியுமா? அதானுங்க!”
“அதெல்லாம் செய்யணும்டா... ஆனா, பாத்து நடந்துக்க!”
“சரிங்க அப்பிச்சி, வழக்கம் போல கேள்வி கேட்டு என்னைப் படுத்தாதீங்க. நான் எதுக்கும் இன்னைக்குத் தயாரா இல்லைங்க!”
“சரி விடு, நீ கேளு, நான் கிளத்துறேன்! கேட்டலும் கிளத்தலும்ன்னு இருக்கட்டும்”
“அப்படி வாங்க வழிக்கு! உங்ககிட்ட கேக்கோணுமின்னே காத்துட்டு இருந்தேன், நீங்களே சொல்லிட்டீங்க. அப்பிச்சி, பேச்சு வழக்குல சொல்லுறமே, அது அரைகுறையா? அறைகுறையா?? இதுல எது சரிங்க அப்பிச்சி???”
”அடேய், எங்க காலத்துல எல்லாம் அறைகுறையாத்தான் இருந்துச்சு. உங்க காலத்துல அது அரைகுறைன்னு மாறிடுச்சு. அறைச்சொல் அப்படீன்னா, எழுத்துல இல்லாம வாய்வழிப் புழக்கத்துல மட்டுமே இருக்குற சொல்லு. நீ எழுதுறதுல அரைவாசி, அறைதானடா பேராண்டி? அவர்கள்ங்றது தமிழ்ச் சொல். அதையே, அவுங்கன்னு சொல்லிப் பேசினா, அது அறைச்சொல். அப்படி ஒருத்தன், பாமரத்தனமா, அடுத்தவங்க விளங்காதபடிக்குப் பேசினாச் சொல்லுறது, அவன் அறைகுறையாப் பேசுறான்! இதனோட வழக்கத்துல, பழுதுபடப் பேசுறதையும், பழுதான ஒன்னைச் சொல்லுறதும் அறைகுறைன்னு ஆச்சுதுடா பேராண்டி. அதே நேரத்துல, பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறைங்றதுல தப்பில்லை”
“இப்ப விளங்குதுங்க அப்பிச்சி. வாங்க அடுத்த வினாவுக்கு போகலாம். கோயம்பத்தூருக்கு கோவை. திருநெல்வேலிக்கு நெல்லை. தஞ்சாவூருக்கு தஞ்சை. சுருக்கமாச் சொல்லுறாங்கன்னு புரியுது. அதெப்படீங்க அப்பிச்சி, இராமநாதபுரம் மாவட்டம் முகவைன்னு ஆச்சுது? புரியலீங்களே??”
”அதுவா? இராமநாதபுரம், அதை ஒட்டி இருக்குற நிறைய இடங்களை ஆண்ட இராசா சேதுபதி, இராமநாதபுரம் தனக்கு முகம் போல சிறப்பா இருக்குன்னு நினைச்சாராம். அந்த ஊரை நினைச்சு, மகிழ்ச்சிக் கடல்ல ஆழ்ந்து போயி நான் முகவை நாட்டு இராசான்னு பெருமையாச் சொல்லி மகிழ்வாராம். அதுல இருந்து வந்ததுதான் இந்த முகவை!”
”அப்படீங்களா கதை!”
"சரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
(......கனவுல இன்னும் வருவார்......)
29 comments:
முகவையில் நாலு அகவையை கழித்தேன்.
//அரைகுறையா? அறைகுறையா??//
யாரு நம்ம அரசியல்வாதிகளா??
//குடுகுடுப்பை said...
முகவையில் நாலு அகவையை கழித்தேன்
//
அண்ணே, முகவைக்காரரா நீங்க? தஞ்சாவூர் இல்லையா??
//அப்பாவி முரு said...
//அரைகுறையா? அறைகுறையா??//
யாரு நம்ம அரசியல்வாதிகளா??
//
அரசியலா? அவ்வ்... அப்பிச்சி இன்னைக்கும் வந்து இம்சை பண்ணுவாரு....
// பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறை//
அறைகுறை ஆடைங்கறது சரிதான தல,
// இராமநாதபுரம் தனக்கு முகம் போல சிறப்பா இருக்குன்னு நினைச்சாராம். //
பழைய ராம்நாடு போல...
//SUREஷ் said...
// பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறை//
அறைகுறை ஆடைங்கறது சரிதான தல,
//
வாங்க ஐயா! வணக்கம்!!
அரைகுறை = imperfect
அறைகுறை = trouble of mind
// SUREஷ் said...
// பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறை//
அறைகுறை ஆடைங்கறது சரிதான தல,
//
புத்தி பேதலிச்சி, அரைகுறை ஆடைல வந்தா, அது அறைகுறை ஆடைதானுங்களே?! இஃகிஃகி!!
//“சரிங்க அப்பிச்சி, வழக்கம் போல கேள்வி கேட்டு என்னைப் படுத்தாதீங்க. நான் எதுக்கும் இன்னைக்குத் தயாரா இல்லைங்க!”//
ராவுல அப்பிச்சிகிட்ட சிக்கிட்டீங்களா? கி.கி.கி.
ராவுல அப்பிச்சிகிட்ட சிக்கிட்டீங்களா? கி.கி.கி.
//அரைகுறையா? அறைகுறையா?? இதுல எது சரிங்க அப்பிச்சி???” //
அறைகுறையா சொல்லாம முழுசா சொல்லுங்க
//கோவை. திருநெல்வேலிக்கு நெல்லை. தஞ்சாவூருக்கு தஞ்சை. சுருக்கமாச் சொல்லுறாங்கன்னு புரியுது.//
அப்போ "திருப்பூருக்கு" சுருக்கம் என்னான்னு சொல்லுங்க?
//"சரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"//
பாசக்கார அப்பிச்சி!
அறைகுறையும், அரைகுறையும் எனக்கு அரைகுறையா புரியுதுங்கோ..
நீங்க அறைகுறையா சொல்லவில்லை நாந்தான் அரைகுறையா புரிஞ்சிகிட்டேனுங்கோ...
தமிழை கனவுல கலகுரிங்க.... அப்புச்சிய கேட்டதாக சொல்லுங்கோ
கனவுலயும் தமிழ் அழகா வருது. முகவைக்கு இப்படி காரணம் இருக்கிறத இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் மாதிரி, பழமை கனவிலயும் தமிழ் தான். நிறைய கனாக் காணுங்க.கத்துக் குடுங்க. நன்றி
முகவை பற்றி அறிந்து கொண்டேன். நன்றி நண்பா!அடிக்கடி வரச்சொல்லுங்க அப்பிச்சியை!
அதெல்லாம் செய்யணும்டா... ஆனா, பாத்து நடந்துக்க//
ஆமா பாத்து நடங்க இல்லன்னா நடவண்டி வாங்கி அனுப்பிடுவேன்..
எவனோ பொழப்பத்தவன் பூனை மயிரை சிரைச்ச கதையாட்டம் எழுதத் தலைப்பட்ட மாதரத் தெரிஞ்சது//
இந்த கதையை ஒரு நாளைக்கு சொல்லுங்களேன்...
முகவை விளக்கம் அருமை:)
கோயம்பத்தூருக்கு கோவை. திருநெல்வேலிக்கு நெல்லை. தஞ்சாவூருக்கு தஞ்சை. //
அண்ணே அப்ப சேலம் என்ற ஊரை சேலை என்று கூப்பிடலாமா?
இதையும் கவிப் புலவர் கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க...
அப்புறம் அரைகுறை அறைகுறை தகவல் என்னை மாதிரி அரைகுறைங்களுக்கு எல்லாம் விளங்கர மாதிரி இருந்துச்சு...பகிர்தலுக்கு நன்றி
இராமநாதபுரம் தனக்கு முகம் போல சிறப்பா இருக்குன்னு நினைச்சாராம். //
அப்ப முகவையை நாம முகரை என்று அறைகுறையாய் கூறலாம் இல்லீங்களா?
//
அப்ப முகவையை நாம முகரை என்று அறைகுறையாய் கூறலாம் இல்லீங்களா?//
இக்கி, இக்கி
என்னடா அப்பிச்சி லீவுல இந்தியா போயிட்டாரோன்னு நினைச்சேன்..
"அறைதல்"னாலே "பேசுதல்"னுதானே அர்த்தம்?
//அதெப்படீங்க அப்பிச்சி, இராமநாதபுரம் மாவட்டம் முகவைன்னு ஆச்சுது? புரியலீங்களே??”//
வந்ததுக்கு முகவை தகவல் கிடைச்சது.
கோயம்பேடு வாடின்னு பாட்டுப் போடறாங்களே!அதுமாதிரி முகவைன்னா என்னன்னு ஒரு பாட்டு போட்டு வச்சுருந்தா சனங்களுக்கு நல்லாயிருந்திருக்குமே!
கண்ணதாசன் காரைக்குடி இன்னும் கொஞ்சம் நாள் ஊத்திக் குடிக்காம இருந்திருந்திருக்கலாம்.
//அண்ணே அப்ப சேலம் என்ற ஊரை சேலை என்று கூப்பிடலாமா?
இதையும் கவிப் புலவர் கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க...//
இந்த உரிச்சபழ உச்சரிப்பு சோம்பேறித்தனந்தானே வேண்டாங்கிறது:)ஏன் சே ன்னு வச்சுகிட்டா இன்னும் நாக்கு சுளிக்கிக்காம இருக்குமில்லங்க அண்ணா!இஃகி கி கீ (என்னங்க நான் பேசற பழம சரிதானுங்களே)
வந்து, மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி... இப்ப, வேலைக்கு போக நேரம் ஆச்சு... சாயுங்காலம் வந்து பதில் சொல்லுறேன்.
மகேசு அண்ணனுக்கு பிரத்யேக நன்றி... ஆமா, பேசுதல், உரைத்தல், கதைத்தல், அறைதல், இயம்புதல், பறைதல், செப்புதல், கூறுதல்ன்னு அடுத்த இடுகைக்கு அச்சாரம் போட்டாச்சு இல்ல?!
அப்போ கனவில சொன்னது நெசமுங்களா? :-? என்னோட கனவில எலிசபெத் மஹாராணி வந்து அரைகுறைன்னா half reduction அப்டின்னு அழுதாங்க.. நான் கனவில ஒண்ணும் சொல்லல.. அப்புறம் அட கனவுன்னு விட்டுட்டேன்..
சரி சரி அரைகுறையை பதிவ போடாதிங்க..... கொஞ்சம் முழுசா போடுங்க சரியா......
நல்ல விளக்கம் அண்ணே
Post a Comment