பழங்காலத்துல எல்லாம் குளிக்கும் போது சவக்காரம்(soap) எல்லாம் போட்டுக் குளிக்க மாட்டாங்களாம். கடலை மாவு, பயித்த மாவு இதெல்லாம்ந்தான் போட்டுக் குளிப்பாங்களாம். வீட்டுக்குப் பின்னாடி கெணறு இருக்கும், அதுல தண்ணி இறைச்சிக் குளிப்பாங்க. கெணறு இல்லாதவிங்க கொளம், குட்டை, ஓடை, ஆத்துலன்னு குளிப்பாங்க. அப்படித் தண்ணி வாக்குற எடத்துல எல்லாம் கமுகு (பாக்கு) மரம் இருக்குமாங்க. அதுல போயி முதுகு தேச்சுக் குளிப்பாங்களாம். ஒடம்பு தேய்க்க பீங்கங்காய் நாரு, தேங்காய் மஞ்சினு ஒரு சிலதைப் பாவிப்பாங்க.
அதே மாதிரி ஆடு மாடுன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் இருக்குற, நீர் நிலைங்க, குளம், குட்டை, ஆத்துப் படுகை இங்கெல்லாம் பெரிய பெரிய கல்லுகளை போட்டும் நட்டும் வெச்சி இருப்பாங்களாம். தண்ணி குடிச்ச பின்னாடி, அதுகெல்லாம் இந்த மாதிரி இருக்குற கல்லுல போயி ஒடம்பை ஒரசி ஒரசி சொகம் கொள்ளுமாம். விவரமானதுக, ஒடம்ப ஒரசி ஒரசி குளிக்கவும் செய்யுமாம். இந்தக் கல்லுகளைத் தாங்க ஆவுரோஞ்சிக் கல்னு சொல்லுறது.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
எங்கண்ணே தகவல் எடுக்க்றீங்க
நமக்கு தெரிஞ்சதெல்லாம் இளவட்டக் கல்லுதான் :)
ஆவு= பசு ( தெலுங்கு மொழியில்)
உராயும் கல், உராய்ஞ்சுக்கும் கல் இப்படி எல்லாம் சேர்ந்துதான் ஆவுராய்ஞ்சிக்கல்ன்னு வந்துருக்குமோ?
ஆமாம்...பைபாஸ் பொட்டின்னு அந்தக் காலத்துப்பெருசுகள் சொல்வாங்க. அது என்னன்னு தெரியுமா? :-))))
இந்த Pumice Stone கறதுதானா இது?
//
குடுகுடுப்பை said...
எங்கண்ணே தகவல் எடுக்க்றீங்க
//
அடிக்கடி வந்து போங்க... குழுமம் கூடும் போது எடுக்குற தகவல்....அப்புறம் கொஞ்சம் இறக்குமதி, கொஞ்சம் பெத்தவங்ககிட்ட அப்படி நாலுங் கலந்து....
//
புதுகை.அப்துல்லா said...
நமக்கு தெரிஞ்சதெல்லாம் இளவட்டக் கல்லுதான் :)
//
அடிக்கடி வந்து போங்க... :-)
//
துளசி கோபால் said...
ஆவு= பசு ( தெலுங்கு மொழியில்)
உராயும் கல், உராய்ஞ்சுக்கும் கல் இப்படி எல்லாம் சேர்ந்துதான் ஆவுராய்ஞ்சிக்கல்ன்னு வந்துருக்குமோ?
ஆமாம்...பைபாஸ் பொட்டின்னு அந்தக் காலத்துப்பெருசுகள் சொல்வாங்க. அது என்னன்னு தெரியுமா? :-))))
//
வணக்கம்! தகவலை சொல்லுங்க...
//
Mahesh said...
இந்த Pumice Stone கறதுதானா இது?
//
அது வேற போல இருக்கே....
//
முரளிகண்ணன் said...
very useful
//நெசமாங்ளா? நன்றிங்கோ....
ப்யூமிஸ் கல்லு தண்ணீரில் போட்டால் மிதக்கும். இது தெரியுமா? யாராவது கவனிச்சீங்களா?
அது தக்கைபோல் கனமில்லாதது. நிறையை காத்துக்குமிழ்கள் குடியிருக்க ஏதுவான நுண்ணிய ஓட்டைகள் நிறைந்தது.
பைபாஸ் பொட்டி = ஃபயர் பாக்ஸ் பொட்டி. தீப்பெட்டி:-)))))
@ துளசி கோபால் :
ரைட்டு... ப்யூமிஸ் கல் தண்ணியில போட்டா மெதக்கும்.... கொஞ்ச நேரத்துக்கு :)
துளைகள்லயெல்லாம் தண்ணி சேந்ததும் மூழ்கிடும்... சிலபேரு இதுதான் ரமர் இலங்கைக்குப் போக பாலம் கட்ட (அய்ய்யொ...பகல்ல பக்கம் பாத்து...ராத்திரில அத்வும் பேசாத ம்பாங்க) பயன்படுத்தினார்ரும்பாங்க...ஆனா அது வேற...அது ஒரு கடல்பாசி (குறிப்பா பவழம் corel) இனம்...
@ துளசி கோபால்
@ மகேசு
நல்ல தகவல்! நன்றிங்க....
Post a Comment