9/08/2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு - 3

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம். அதுபத்திக் கவி காளமேகம் பாடினது, திருநள்ளாறு கோவில் வரைவுன்னு இரு வேறு பதிவுகள கடந்த காலங்கள்ல பதிஞ்சு இருந்தோம். இப்ப, இது மூனாவது பதிவு இது குறிச்சு.

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

--அபிராமிப் பட்டர்.
  1. நோயற்ற வாழ்வு
  2. கல்வி
  3. தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
  4. தனம்
  5. அழகு
  6. புகழ்
  7. பெருமை
  8. இளமை
  9. அறிவு
  10. சந்தானம் (குழந்தைச் செல்வம்)
  11. வலிமை
  12. துணிவு
  13. வெற்றி
  14. ஆயுள்
  15. ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்)
  16. நுகர்ச்சி

12 comments:

rapp said...

:):):)

Unknown said...

நல்ல தொகுப்பு. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.

Mahesh said...

பதிவுக்கு ரொம்ப நல்ல தேர்வு...

இந்த 16-ல 15 இந்த பிறவிக்கு....

நல்லூழ் - அடுத்த பிறவிக்கு

ஏன்னா பேறுகள்லாம் சாதாரண ஆளுகளுக்கு.... பெரும் பேறான் 'வீடுபேறு' அடையணும்னா இந்த பேறுகள் மீதான பற்றை விடணும்.

பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றை
பற்றுக பற்று விடர்க்கு.

Mahesh said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

பழமைபேசி said...
// rapp said...
:):):)
//

Ayya rapp,

விடை தரலைன்னாலும் பரவாயில்ல. வருகைப் பதிவேட்டுல உங்க வருகைய பதிவு செஞ்சீங்க பாருங்க... அங்கதான் நீங்க பிரத்யேகம்!!!

பழமைபேசி said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
நல்ல தொகுப்பு. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.
//
பாராட்டுக்கு நன்றி!

பழமைபேசி said...

//Mahesh said...
பதிவுக்கு ரொம்ப நல்ல தேர்வு...

இந்த 16-ல 15 இந்த பிறவிக்கு....

நல்லூழ் - அடுத்த பிறவிக்கு

ஏன்னா பேறுகள்லாம் சாதாரண ஆளுகளுக்கு.... பெரும் பேறான் 'வீடுபேறு' அடையணும்னா இந்த பேறுகள் மீதான பற்றை விடணும்.

பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றை
பற்றுக பற்று விடர்க்கு.
//
மேலதிகத் தகவலுக்கு நன்றி மகேசு!

குடுகுடுப்பை said...

ரசனையா இருக்கு, அப்படியே காளமேகப் புலவர் மாதிரி புதுமையா ஏதாவது ஒப்பிடுங்களேன்.

தமிழ் ஆர்வலர் ஆகிய நீங்கள் கண்டிப்பாக என் இந்த பதிவைப் பார்க்கவும்
தமிழ்வழிக்கல்வி

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
ரசனையா இருக்கு, அப்படியே காளமேகப் புலவர் மாதிரி புதுமையா ஏதாவது ஒப்பிடுங்களேன்.

தமிழ் ஆர்வலர் ஆகிய நீங்கள் கண்டிப்பாக என் இந்த பதிவைப் பார்க்கவும்
தமிழ்வழிக்கல்வி
//

நல்ல தொகுப்பு! பாராட்டுக்கு நன்றி!!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹி ஹி.........

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஹி ஹி.........


//
சிரிப்புக்கு நன்றி தலைவா....

மு.வேலன் said...

வாழ்த்துக்கள்! நல்ல பதிவு.

16 செல்வங்களையும் கிடைக்க உதவியது அபிராமிப் பட்டர். அவர் தம் வீடு நம் சமயத்தின் ஒரு சின்னம்; நமக்கு பெருஞ்செல்வம். இந்த மாபெரிய செல்வத்தை இன்று இழந்து விட்டு நிற்கிறோம்.