9/08/2012

சேட்டை

குளக்கரையில்
உடற்பயிற்சியின்போழ்தான
கவனிப்பில்
நடந்தவை இவைதான்!

தான் வைத்திருந்த

நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

மீண்டும்

தான் வைத்திருந்த
நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

நாய்க்காரர்

என்ன நினைத்தாரோ
இம்முறை 
நீலவண்ணத் தட்டினை 
நாயுக்குத் தெரியாதபடி
இடக்கையில் வைத்துக்கொண்டு
வெறுமனே தன் வலக்கையை மட்டுமே
வீசினார்.
சரியாய்க் கவனித்த நாய்
வாலைக் குழைத்தபடி
இடத்தை விட்டு
நகரவே இல்லை!!

இம்முறை

தான் வைத்திருந்த
நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

நாய்க்காரர்

மீண்டும் 
என்ன நினைத்தாரோ என்னவோ
நீலவண்ணத் தட்டினை வீசாது
வெறுமனே 
தன் வலக்கையை மட்டுமே வீசினார்.
வழக்கம் போல
நீலவண்ணத்தட்டு பறக்கும் திசையினூடாக
மேலே பார்த்தபடி
கூடுதல் ஓட்டத்துடன் ஓடிய நாய்
ஓடியே போய் விட்டது!!
நாயைத் தொலைத்த
நாய்க்காரரோ
அடிக்கடி திரும்பி
என்னைப் பார்த்தவண்ணம்!
சேட்டை, 
நாய்க்கா?
நாய்க்காரருக்கா??
எனக்கா???
அல்லது, இதைப் படிக்கிற உங்களுக்கா????

1 comment:

வருண் said...

***நாய்க்கா?
நாய்க்காரருக்கா??
எனக்கா???
அல்லது, இதைப் படிக்கிற உங்களுக்கா????***

ஆறறிவுவுள்ள அனைத்து அயோக்கியர்களுக்கும்- உங்க கவிதையைப் படிக்காதவங்களுக்கும்-தான், மணியண்ணா!