9/26/2012

அணைப்பு

வங்கிக்கு எழிலூட்டும்
இளநங்கையவள்
இன்முகத்தோடு
வரவேற்று
பட்டுக் கை
கை பற்றிக் குலுக்க
அதன் நீட்சியாக
நன்றி தெரிவிக்கையில்
தடுத்தணைத்தேன்
உங்க குதிரைவால்
நல்லா இருக்கு
எனச்சொல்லக் கிளம்பிய
உள்மனச் சிறுவனை!!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சில நேரங்களில் / சில இடங்களில் அந்தச் சிறுவனுக்கு கடிவாளம் போடுவதே நன்று...

Ramani said...

அந்தச் சிறுவன் எப்போதும் நம்முடன் இருப்பதால்தானே
வாழ்க்கை சுவாரஸ்யமாகப் போகிறது
சுவாரஸ்யமான வித்தியாசமான சிந்தனை. பதிவு
தொடர வாழ்த்துக்கள்

tamil Naththam said...

தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

பூங்குழலி said...

குறும்பு கவிதை ..சிறுவர்கள் என்றாலே குறும்பு தானே