2/27/2009

பிறழ்ந்தது: அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா 'வேட்டு'!


ப‌திவ‌ர்க‌ளைக்

கொல்வேன்

அன்பால்!

ம‌க்க‌ளே, மேல‌ சொன்ன‌ வாச‌க‌த்தைப் பார்த்துட்டு, ப‌ழ‌மைபேசி ப‌திவ‌ர்க‌ளைக் கொல்வேன்னு சொல்லுறான்னு போயி நாலு பேர்கிட்ட‌ சொன்னீங்க‌ன்னா, உங்க‌ளுக்கு க‌டுமையான‌ ஊட‌க‌ நோய் இருக்குன்னு அர்த்த‌ம். இதையே ஊர்ல‌ பெரிய‌விங்க‌, எங்க‌ளைத் திட்டும் போது சொல்லுற‌து, "என்ன‌டா ப‌ழ‌மை இது? மொட்டைத்தாச‌ன் குட்டையில‌ விழுந்த‌ க‌தையாட்ட‌ம் பேசிகிட்டு?"ன்னு கேப்பாங்க‌.

அது ஒன்னுமில்லைங்க! அய்ய‌, அப்ப‌ச் ச‌ரின்னு கிள‌ம்புறீங்க‌ பாத்தீக‌ளா? சித்த‌ இருந்து வெவ‌ர‌த்தைக் கேட்டுப்போட்டுப் போங்க‌! ஒரு நாள் பெருமா கோய‌ல்ல‌ பூசை பண்ற‌ தாச‌ன், புர‌ட்டாசி மாச‌ம் க‌டைசி ச‌னிக் கெழ‌மையின்னுச் சொல்லி, பெருமாளுக்கு மொட்டை போட்டுட்டு, ஊருக்கு கெழ‌வ‌ர‌ம் இருந்த‌ குட்டையில‌ குளிக்க‌ப் போனான்.

என்ன‌ கேள்வி இது? தாச‌ன் எப்பிடி பெருமாளுக்கு மொட்டை போட‌ முடியும்? பெருமாளுக்கு நேர்ந்துகிட்டு, அவ‌ன் மொட்டை போட்டுகிட்டான். இப்பிடி குறுக்க‌ குறுக்க‌ கேள்வியெல்லாம் கேக்க‌ப்ப‌டாது, ஆம்மாஆ!!

அந்த நேரத்துல குட்டையில இருந்து ஊருக்குள்ள வந்துட்டு இருந்த ஒருத்தன், குட்டைக்குள்ள தாசங் குதிக்கிறதப் பாத்துட்டு வந்து, ஊருக்குள்ள சொன்னான், "தாசன் குட்டையில உழுந்துட்டான்!"ன்னு. ஒடனே, ஊர்க்காரங்க எல்லாருமா குட்டைக்கு நடந்து போனாங்க. அப்பப் பாத்தா, தாசன் குளிச்சிட்டு, மேல் வேட்டிய போர்த்திகிட்டு வந்துட்டு இருந்தான். ஒடனே, ஊர்க்காரவிக கேட்டாங்க, "ஏன்டா, குட்டையில விழுந்திட்டேன்னு சொன்னாங்களே?". ஆமா, விழுந்து விழுந்து குளிச்சேன். இனிப்போயி படையல் வெச்சி, உச்சி பூசைய நடத்தீர வேண்டியதுதான், வாங்க அல்லாரும் போலாம்ன்னான் வெகுளி மாதிரி.

அது போலப் போயி, பழமைபேசி கொல்வேன்னு சொன்னான்னு மொட்டையாச் சொல்லிடாதீங்க. அன்பால கொல்வேன்னு சொல்லி இருக்குறேன் மக்கா! அதே போலத்தான், அதிபர் ஒபாமாவும் வரி விலக்குல இருந்து அவிங்களை விலக்குவேன்னு சொல்லி இருக்காரு. அயல்க் கொள்முதல்(outsourcing ) செய்ய மாட்டோம்ன்னு அவர் சொல்லவே இல்லை! இல்லை!! இல்லை!!!

அப்ப அவர் என்னதான் சொன்னாரு? அவர் சொன்னது இதாங்க, No more tax breaks for companies that send jobs overseas! இதனோட முழு அர்த்தமும் தெரியணுமின்னா, மொட்டைத்தாசன் எதுக்காக, எப்படி விழுந்தான்னு பார்க்கணும் நாம. ஆமுங்க, அது என்ன அந்த Tax Break?அதைத் தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி, இன்னும் கொஞ்சம் விபரங்களை அலசியாகணும்.

Offshore : வெளிப் பிரதேசத்துக் கொள்முதல்
Nearshore: அண்டைப் பிரதேசத்துக் கொள்முதல், கனடா மற்றும் மெக்சிகோ
Onshore: உட்பிரதேசத்துக் கொள்முதல்
Outsourcing: அயல்க் கொள்முதல், வெளிப்பிரதேசம் எதுவேணாலும்

இந்தப் பின்னணியில, வெளிப்பிரதேசத்துக் கொள்முதல்ல நிறைய சாதகமான அம்சங்கள் நிறுவனங்களுக்கு இருக்கு.


  • மலிவான விலை, சேவைக்கான குறைந்த ஊதியம் (ஒப்பிடும்போது)
  • நேர மாற்றம்(time difference), காலை நேரம் ஆரம்பிக்கும் போது, தேவையான அலுவல் முடிஞ்சு தயாரா இருக்கும்படி செய்ய முடியும்.
  • வெளிநாட்டு அரசுகள் வழங்குற சகாய வசதிகள், தொழில் வரி விலக்கு இப்படி....
  • கடைசியா வர்றது, உள்நாட்டுல இருக்குற நிறுவன (35% corporate tax.) வரியில சாதகமான அம்சத்தைப் பாவிக்கிறது. அவ்வளவுதான், இது கூட சகாயம்ன்னு சொல்ல முடியாது.

மேல சொன்னதுல கடைசியா இருக்கு பாருங்க, அதைதாங்க அதிபர் ஒபாமா சொல்லுதாரு Tax Breakன்னு. அதாவதுங்க, வரி கட்டுற முறையில இருக்குற ஓட்டை அல்லது சாதகமான அம்சத்தை அவர் நீக்கப் போறாராம். அதனால, வெளியூர்க்குப் போகும் வேலை வாய்ப்புகள் குறையும். கடைசிக்கு, அரசுக்கு மேலதிக வருமானமாவது வரும். இது அவங்க எதிர்பார்ப்பு. சரியான திட்டமும் கூட.

சரி, அது என்ன அந்த சாதகமான அம்சம் அல்லது ஓட்டை? இஃகிஃகி! சம்பளத்துக்கு வேலை செய்யுறவங்களைத் தவிர, மத்த எல்லார்த்துக்கும் வரிக் கண்க்கு காமிக்கிறதுல பல ஓட்டை ஒடசலுக உலகம் பூராவும் இருக்கத்தான் செய்யும். இதென்ன பிரமாதம்? முடிஞ்சா, அரசு கொஞ்ச ஆட்களை நெருக்கிப் பிடிச்சி, மத்தவங்களுக்கு ஒரு அச்சுறுத்தலைக் கொண்டு வந்து, அதன் மூலமா வரிய வசூல் செய்யலாம். வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னெல்லாம் கணக்குப் பாக்கவே முடியாது. இதுதான் யதார்த்தம்.

அதே பின்னணிதாங்க இதுவும். வெளிநாடுகள்ல இருந்து வர்ற வருமானத்த, அமெரிக்க‌ நிறுவனங்கள் அடுத்த அடுத்த வருசங்களுக்குத் தள்ளித் தள்ளி, கடைசியில கன கச்சிதமா அந்த 35% வரிய ஏப்பம் விடலாம். இதைத்தாங்க அவங்க கிடுக்கிப் பிடி பிடிக்கப் போறாங்களாம்.

சரி, இதுக்கும் இந்த வேட்டு கீட்டுன்னாங்களே, அதுக்கும் என்ன தொடர்பு? ஒரு தொடர்புங் கிடையாதுங்றது, என்னோட வேலை செய்யுற வெள்ளைச் சாமிகள், டிம் செரக், டாம் கோத் அவங்களோட கருத்து. இதுல ஒருத்தன் சனநாயகக் கட்சியோட அபிமானி. ஒருத்தன் குடியரசுக் கட்சி. ஏன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லுறாங்க?

இப்ப TCS, Satyam, InfoSys மாதிரி நிறுவனங்களுக்குத் தர்ற வேலை, ஒப்பந்த வேலை. அவங்களுக்குத் தர்ற ஊதியம், அமெரிக்க நிறுவன‌ங்களோட செலவு கணக்குல வந்திடும். ஆக, இதுக்கும் அந்த ஓட்டை ஒடசலுக்கும் தொடர்பு இல்லை. மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், ஐ.பி.எம் மாதிரி நிறுவனங்கள் இருக்கு பாருங்க, அவங்க நல்லாவே அந்த ஓட்டை ஒடசலைப் பாவிக்கலாம். ஏன்னா, அவங்களோட நிறுவனத்தோட ஒரு பகுதி நேரிடையா வெளியூர்ல இருக்கு. ஆக, அவங்க அந்த வெளியூர்ப் பிரிவுகள் மேல கணிசமான தொகைய இலாபமாக் காமிச்சி, 35% சதக் கழிவை எடுத்துகிடலாம்.

இப்ப சொல்லுங்க, இந்த 35% ஓட்டைய அடைக்குறதுனால, அந்த நிறுவனங்கள் எல்லாம் கடைய மூடிட்டு வெளிநாட்டுல இருந்து வெளியேறிடுவாங்களா? அப்படியெல்லாம் ஒரேயடியா, மூடிட மாட்டாங்க இராசா! மூடிட மாட்டாங்க!! ஏன்னா, மேல சொன்ன சாதகமான அம்சங்கள்ல ஒன்னு வேணா இல்லாம ஆயிடலாம். இன்னும் மத்தது இருக்கே?! நல்லாக் கூட்டி கழிச்சிப் பாருங்க, கணக்கு சரியா வரும்.

அமெரிக்காவுக்கு வேலை செய்யுற இந்திய நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? அவங்களுக்கும் இந்த 35% ஓட்டைக்கும் என்ன தொடர்பு? அப்புறம் எதுக்கு இந்த பீதி?? ச்சும்மா, நிம்மதியாத் தூங்க விடுங்கப்பா சனங்களை!

ஆபத்துக்குப் பயந்து ஆத்துல விழலாமா?

30 comments:

அ.மு.செய்யது said...

ஹைய்...சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்களே !!!

நன்றி பழமை பேசியாரே !!!

ஆனா இன்னும் உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

ஹைய்...சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்களே !!!

நன்றி பழமை பேசியாரே !!!

ஆனா இன்னும் உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

இப்ப‌டிக்கு,
ஆப்ஷோர் ஆசாமி.

குடுகுடுப்பை said...

வரிச்சலுகையை விட அவுட்சோர்ஸ் செய்தால் கிடைக்கும் லாபம் அதிகம்.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
வரிச்சலுகையை விட அவுட்சோர்ஸ் செய்தால் கிடைக்கும் லாபம் அதிகம்.
//

அண்ணே, நீங்க சொல்ல வர்றது சரி. ஆனா, வரிச்சலுகைன்னு சொல்லாதீங்க. ஒரு சலுகையும் கிடையாது. யாராவது உள்நாட்டு வேலைய வெளில கொண்டு போறதுக்கு சலுகை தருவாங்களா? சாதகமான அம்சம், அவ்வளவுதான்!

பழமைபேசி said...

//அ.மு.செய்யது said...
ஹைய்...சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்களே !!!

நன்றி பழமை பேசியாரே !!!

ஆனா இன்னும் உங்க கிட்டர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்.

ஹைய்...சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்களே !!!

இப்ப‌டிக்கு,
ஆப்ஷோர் ஆசாமி.
//

மவனே, எதோ கேட்டுட்டீங்களேன்னு கை ஒடிய ஒக்காந்து சமத்தாப் போட்டு இருக்கேன்.... இன்னுமா? நான் வலையுலகத்தை விட்டே ஓடுறேன் போங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

தென்னவன். said...

இதெல்லாம் சொன்னா என்னக்கு பொண்ணு தரமாட்டேனு சொல்றவங்க நம்புவாங்கனு நெனைக்கரீங்களா........

என்னவோ நேரம் சரி இல்ல

ILA (a) இளா said...

//வரிச்சலுகையை விட அவுட்சோர்ஸ் செய்தால் கிடைக்கும் லாபம் அதிகம்.//
இதுதான் நச் உண்மை. கொஞ்சம் சேர்த்து கட்டனும் அவ்வளவே

பழமைபேசி said...

//Thennavan Ramalingam said...
இதெல்லாம் சொன்னா என்னக்கு பொண்ணு தரமாட்டேனு சொல்றவங்க நம்புவாங்கனு நெனைக்கரீங்களா........

என்னவோ நேரம் சரி இல்ல
//

வாங்க ஐயா, அதெல்லாம் நல்ல காலம் பொறக்கும்...யாரோ ஒருத்தர்க்கு நீங்கங்றது இல்லாம ஆயிடுமா என்ன?!

பழமைபேசி said...

//ILA said...
//வரிச்சலுகையை விட அவுட்சோர்ஸ் செய்தால் கிடைக்கும் லாபம் அதிகம்.//
இதுதான் நச் உண்மை. கொஞ்சம் சேர்த்து கட்டனும் அவ்வளவே
//

:-o)

நசரேயன் said...

இதுக்கு பயில் அவுட் இருக்கா?

பழமைபேசி said...

//நசரேயன் said...
இதுக்கு பயில் அவுட் இருக்கா?
//

நீர் தளபதிங்றதை நிரூபிச்சிட்டீர் ஓய்.... அதான் நடக்கப் போகுது... அந்த 35% சதத்துக்கு மீட்பு கேட்பாங்க...இல்லைன்னா, எங்க தலைமையிடம் இந்தியா, சிங்கப்பூர், ஏன் புளியங்குடின்னு கூடச் சொல்வாங்க...இஃகிஃகி! தலைமையிடம் எங்க இருக்கோ, அந்த சட்டத்துக்கு உட்பட்டு வரி செலுத்துனாப் போதும்ங்றது சொல்லித் தெரியணுமா என்ன?? இஃகிஃகி!!

வேத்தியன் said...

உள்ளேன்...
கொஞ்சம் வேலை..
சற்று பொறுத்து வரேன்...
:-)

தமிழர் நேசன் said...

அருமை(!) நண்பரே!! என் ஊரில்(சென்னை) இப்போது தான் தூங்கி எழுந்தேன்.. இந்த வரிவிதிப்பு கொள்கையின் வித்தியாசமான கோணத்தை காட்டியதற்கு நன்றி..

இரண்டு நாட்களுக்கு முன் இந்த செய்தியை ஊதி, இந்திய ஊடகங்களில் பீதியை கிளபிட்டானுக... நான் கூட ஒரு நிமிஷம் அப்படியே சாக்(!) ஆயிட்டேன்.. நிறையா பய புள்ளைக பொலம்ப ஆரம்பெச்சிடிச்சுக...

இத படிச்ச அப்பறந்தான் நிம்மதியா ஒரு கொழப்பமும் இல்லாம ஒரு குழம்பி(?!) குடிக்கிறேன் சாமி...

ஜியா said...

நல்ல தெளிவான பதிவு... இதுக்குத்தான் உங்கள மாதிரி பழமைபேசிக்கள் இருக்கோனும் :))

இராகவன் நைஜிரியா said...

இன்றுள்ள சூழ்ந்லையில் அவுட் சோர்ஸிங்கை எடுக்க இயலாது.

மேலும் அவுட்சோர்சிங்க் செய்வதில் பல பலன்கள் உள்ளன. முதலில் வருவது, Indirect cost cutting and the yearly increment.

நிச்சயமாக அவர்கள் அவுட் சோர்ஸிங்கை கைவிட மாட்டார்கள்.

பழமைபேசி said...

//தமிழர் நேசன் said...
அருமை(!) நண்பரே!! என் ஊரில்(சென்னை) இப்போது தான் தூங்கி எழுந்தேன்.. இந்த வரிவிதிப்பு கொள்கையின் வித்தியாசமான கோணத்தை காட்டியதற்கு நன்றி..
//

வாங்க தமிழ்நேசரே... நீங்க போடுடான்னு சொன்னதுக்கப்புறம் போடாம விட்டா எப்பிடி? ஒரு மணி நேரம் தட்டி, ஒன்னு ரெண்டு தடவை படிச்சி...போட்டிருக்கோம்... இஃகிஃகி!!

ஆதவா said...

இரண்டு தடவ படிச்சேன்.. அப்பத்தான் தெரிஞ்சது, இது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர்னன!!!!

ம்ம்.... ஏதோ நல்லது சொல்லியிருக்கீங்கன்னு மட்டும்
தெரியறதது!!!!

பழமைபேசி said...

//ஆதவா said...
இரண்டு தடவ படிச்சேன்.. அப்பத்தான் தெரிஞ்சது, இது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர்னன!!!!
//

வாங்க ஆதவரே! குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி இருந்ததாக்கூ? அந்த மொட்டைத்தாசங் கதை புரிஞ்சி இருக்கணுமே?!

S.R.Rajasekaran said...

\\ப‌திவ‌ர்க‌ளைக்

கொல்வேன்\\


இத நீர் சொல்லிவேற எங்களுக்கு தெரியனுமா .

S.R.Rajasekaran said...

\\"ஏன்டா, குட்டையில விழுந்திட்டேன்னு சொன்னாங்களே?". ஆமா, விழுந்து விழுந்து குளிச்சேன்.\\


இக்கி, இக்கி ..............அது ஒன்னும் இல்ல சிரிச்சேன்

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

"என்ன‌டா ப‌ழ‌மை இது? மொட்டைத்தாச‌ன் குட்டையில‌ விழுந்த‌ க‌தையாட்ட‌ம் பேசிகிட்டு?"

அப்படின்னா என்ன? சரியாய் வெளக்கம் கொடுத்திங்க தேங்க்ஸ்.

அப்புறம் ஒரே பொரலியா கெளப்பிட்டு இருகாங்க. இது நல்ல வெளக்கத்த கொடுக்கு ராசா!!!!! சூப்பர்.

ராஜ நடராஜன் said...

//ப‌ழ‌மைபேசி ப‌திவ‌ர்க‌ளைக் கொல்வேன்னு சொல்லுறான்னு போயி நாலு பேர்கிட்ட‌ சொன்னீங்க‌ன்னா, உங்க‌ளுக்கு க‌டுமையான‌ ஊட‌க‌ நோய் இருக்குன்னு அர்த்த‌ம்.//

இஃகி!இஃகி! இன்று புதியதாக ஊடக நோய் என்ற புது வார்த்தை கற்றுக் கொண்டேன்.

ராஜ நடராஜன் said...

//"தாசன் குட்டையில உழுந்துட்டான்!"ன்னு. ஒடனே, ஊர்க்காரங்க எல்லாருமா குட்டைக்கு நடந்து போனாங்க.//

கவுண்டமணி/செந்தில் கூட இந்த மாதிரி ஒண்ணு
கிணத்துல பாடி கிடக்குது ன்னு ஒரு படத்துல எடுத்து விடுவாரு.

ராஜ நடராஜன் said...

// * மலிவான விலை,
* நேர மாற்றம்(time difference)
* வெளிநாட்டு அரசுகள் வழங்குற சகாய வசதிகள், தொழில் வரி விலக்கு இப்படி....
* கடைசியா வர்றது, உள்நாட்டுல இருக்குற நிறுவன (35% corporate tax.)//

நாலுக்கு ஒண்ணு சொத்தை மாதிரிங்கிறதால அனுகூலங்களை பெரும் நிறுவனங்கள் விட்டு விடாதென்றே தெரிகிறது.

இங்கே கூட பெருசு பெருசா கட்டடங்கள் பாதி வேலையிலே நிக்குது.அதுக்குன்னு கட்டுன வேலைய பாதியில விட்டுடுவாங்களா என்ன?பக்கத்து வீட்டு துபாயில பீதியக் கிளப்புறாங்கப்பா.இதுகள கட்டி முடிக்கிறதுக்குள்ள ஒபாமா பொருளாதாரம் சீர்பட்டு விடும்.

எங்கேயோ அடிபட்டா எங்கேயோ நெரி கட்டுது.

cheena (சீனா) said...

அநாவசிய பீதியக் கெளப்பாம - வெளங்கச் சொன்னதுக்கு நன்றி

பழமைபேசி said...

//
வில்லன் said...
"என்ன‌டா ப‌ழ‌மை இது? மொட்டைத்தாச‌ன் குட்டையில‌ விழுந்த‌ க‌தையாட்ட‌ம் பேசிகிட்டு?"

அப்படின்னா என்ன? சரியாய் வெளக்கம் கொடுத்திங்க தேங்க்ஸ்.

அப்புறம் ஒரே பொரலியா கெளப்பிட்டு இருகாங்க. இது நல்ல வெளக்கத்த கொடுக்கு ராசா!!!!! சூப்பர்.

February 28, 2009 10:54 PM

//

வாழ்க வளமுடன்...நன்றிங்க மாப்ளே! நல்லா இருக்கீகளா?

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

இங்கே கூட பெருசு பெருசா கட்டடங்கள் பாதி வேலையிலே நிக்குது.அதுக்குன்னு கட்டுன வேலைய பாதியில விட்டுடுவாங்களா என்ன?பக்கத்து வீட்டு துபாயில பீதியக் கிளப்புறாங்கப்பா.இதுகள கட்டி முடிக்கிறதுக்குள்ள ஒபாமா பொருளாதாரம் சீர்பட்டு விடும். //

ஆமாங்க அண்ணா, இது ஒரு தற்காலிக இக்கட்டான நிலை...அவ்வளவுதான்!

பழமைபேசி said...

//cheena (சீனா) said...
அநாவசிய பீதியக் கெளப்பாம - வெளங்கச் சொன்னதுக்கு நன்றி//

உங்களுக்குத்தான் நன்றி சொல்ணும்....

பழமைபேசி said...

//February 27, 2009 11:50 PM
இராகவன் நைஜிரியா said...
இன்றுள்ள சூழ்ந்லையில் அவுட் சோர்ஸிங்கை எடுக்க இயலாது.
//

ஐயா, வாங்க, வணக்கம்! ஆமுங்க...

Unknown said...

எப்படியோ நல்லது நடந்தா சேரி..

ஊருக்குள்ள புதுசா வந்துருக்கிரவன்..