2/05/2009

திமிசுக் கட்டையும், நாட்டுக் கட்டையும்!

வணக்கம்! இன்னைக்கு நம்ம வட்டாரத்தில அலசின விசயம் வந்துங்க‌, அமெரிக்காவுல ஒரு பெண் ஒரே பிரசவத்துல 8 குழந்தைகளப் பெத்துகிட்டதுதான். அந்தப் பொம்பளைக்கு ஏற்கனவே ஆறு குழந்தைக இருக்காம். இப்ப, ஆறு பையன், ரெண்டு பெண் குழந்தைக ஒரே பிரசவத்துல. ஆக மொத்தம், பதினாலு. தொலைக்காட்சி, புத்தகங்கள்ன்னு அவங்க அனுபவத்தை சொல்லுறதுக்கு பல கோடிக்கணக்கான வெள்ளிகள் மதிப்பு ஒப்பந்தம் காத்திட்டு இருக்காம். நாம என்னத்த சொல்ல?

சரி, தம்பி ஸ்ரீராம் நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டைகளப் பத்தி பதிவு போடச் சொல்லி இருக்காரு. இஃகிஃகி! அதை நாம பாப்பமா இப்ப‌?! பொதுவா நீங்க பல கட்டைகளக் கேள்விப்பட்டு இருப்பீங்க. நாட்டுக் கட்டை, திமிசுக் கட்டை, உருட்டுக் கட்டை, கர்லாக் கட்டைன்னெல்லாம். அது போக, கட்டை பிரம்மச்சாரின்னு சொல்லுறோம். பிரம்மச்சாரின்னா நமக்குத் தெரியும். இஃகிஃகி! அதென்ன கட்டை பிரம்மச்சாரி? அது ஒன்னும் இல்லங்க, கட்டையாட்டம் உறுதியான பிரம்மச்சாரி! கட்டைகள‌, ஒன்னொன்னா விலேவாரியாப் பாக்கலாம் வாங்க! என்ன செய்யுறது?! தெரிஞ்சோ தெரியாமலோ உள்ள வந்திட்டீங்க, பொறுமையா இருந்து படிச்சிட்டுப் போங்க! (என்னா வில்லத்தனம்?)


நாட்டுக் கட்டை: கட்டைன்னா உடல்ங்ற அர்த்தமும் இருக்கு. அதே சமயத்துல, மரக்கட்டையையும் கட்டைன்னே சொல்லுறோம். ஒசரங் குறைஞ்சதையும், சிறு பொருளையுங்கூட கட்டையா இருக்குன்னு சொல்லுறது உண்டு. உறுதியக் குறிக்கும் போதும் கட்டை உடம்புன்னு சொல்லுறோம். அப்புறம், நிலையில ஒன்னை நிறுத்துறதை நாட்டுதல்ன்னு சொல்லுறோம். உதாரணம், செங்கோல் நாட்டினான், நிலை நாட்டினான். அந்த வரிசையில, ஒன்னை நிலை நிறுத்துற கட்டைப் பொருளை நாட்டுக் கட்டைன்னு சொல்லுறது. நாட்டுப்புறத்துல இருந்து வர்ற கட்டைன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் மாட்டேன்னு சொல்ல முடியுமா என்ன?!

திமிசுக் கட்டை: திமிசுன்னாங்க மேலும் கீழுமாவோ, அல்லது பக்கவாட்டுலயோ அசையுற ஒன்னு. படகுல இருக்கும், கைத்தறியில இருக்கும், இப்படி எங்கயும் அது இருக்கும். அந்த மாதிரியான கட்டைகளச் சொல்லுறது, திமிசுக் கட்டைன்னு. அது செய்யுற வேலை, ந்ல்லா வலுவா இருக்குறதுக்காக, நல்லா குண்டா, கனமா இருக்குற கட்டைகளைக் கொண்டு செய்து இருப்பாங்க. வாசல்ல, கல் மண்ணை வெச்சி காரை போட்ட பின்னாடி, கல்லுக மேல தூக்காம இருக்குறதுக்கு இப்பிடியான கனமான திமிசுக் கட்டைய மேலயும் கீழயுமா அடிப்பாங்க, அதுல கல்லுகெல்லாம் அமுங்கிடும். இந்த திமுசுக் கட்டைய, கிராமங்கள்ல எத்து மசைன்னும் சொல்லுவாங்க.

மசைன்ன உடனே எனக்கு இனியோன்னும் ஞாவகத்துக்கு வருது. எழுதுறதுக்கு மசை தீந்து போச்சுன்னு சொல்லுவோம். ஆமுங்க, பேனாவுல ஊத்துற அந்த நீல அல்லது கருப்பு நிற மைய(ink)ச் சொல்லுறது மசைன்னு. இஃகிஃகி! மாட்டு வண்டியில, அச்சாணிக்கு ஊத்துறது(lubricant) கூட மசைதான். அதை கீலுன்னும் சொல்லுறது உண்டு. விளக்கெண்ணயில, மெதுவான துணி, கரித்துண்டையும் ஊற வெச்சி, இந்த மசை செய்வாங்க. அதேபோல, வேங்கை மரத்தையுஞ் சொல்லுறது திமிசுன்னு. ஆக, சந்தனக் கட்டை, தேக்குக் கட்டை, இது மாதிரியான மரங்களோட வரிசையில வரும் இந்த திமிசுக் கட்டையும். ஆனா, நல்லாக் குண்டா, வாட்ட சாட்டமா, எதையும் அமுக்குற திமிசுக் கட்டை மாதிரி வர்ற பொம்பளையப் பாத்து திமிசுக் கட்டைன்னோ, எத்து மசைன்னோ நீங்க சொன்னா, அதுக்கு நான் எப்பிடி பொறுப்பாக முடியும்?

கர்லாக் கட்டை: கர்மம்ன்னா உங்களுக்குத் தெரியும், வேலை, பணி அல்லது ஆக்கம் அப்பிடின்னு. அதனோட தொடர்புச் சொல்தாங்க, கர்லா, வேலைக்கானங்ற அர்த்தத்துல வரும். அப்ப, வேலைக்கான கட்டையச் சொல்லுறது கர்லாக் கட்டை. உடற்பயிற்சியில, பயிற்சிக்கான வேலைக்குப் பொழங்குற கட்டைய கர்லாக் கட்டைன்னு சொல்றோம், அது உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். கட்டையா, சிறு உருவத்துல இருக்குறவிங்களை, கர்லாக் கட்டை கணக்கா இருக்கான்னு நீங்க சொன்னா, அது நல்லாவா இருக்கு? நீங்களே நல்லா ரோசனை செஞ்சி பாருங்க, என்ன?!

சரி, இதுக்கு மேலயும் ஒக்காந்து பொட்டி தட்டிட்டு இருந்தா எனக்கு பதார்த்தஞ் செய்யுற உருட்டுக் கட்டையில விழுந்தாலும் விழலாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! நான் வாறேன்!!

இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!

32 comments:

தேவன் மாயம் said...

காலையிலேயே
நல்லா மாட்டிக்கிட்டேன்
உங்க கட்டை...

தேவா...

தேவன் மாயம் said...

சாமி
நல்ல
மூடில
இருப்பிய போல..
2,3 கட்டய வச்சி ஒரு வீட்டயே
கட்டி போட்டியளே....

Mahesh said...

//இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!
//

சூப்பர் !!

Mahesh said...

இப்பிடியே கட்டுஞ் செட்டுமா இருங்க !!

நசரேயன் said...

அண்ணே சிக்குனது நாட்டுக்கட்டையா? திம்சுக்கட்டையா?

ஸ்ரீதர்கண்ணன் said...

இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!

அது என்னங்க? :-)

வேத்தியன் said...

ஐயா கட்டைகளைப் பத்தி கட்டம் கட்டீட்டிங்க போங்க...

Anonymous said...

அண்ணே நாட்டுக் கட்டைக்கு மட்டும் தான் நான் விளக்கம் கேட்டேன்.
ஆனால் நீங்களோ திமிசு கட்டை, கர்லா கட்டை வரைக்கும் விளக்கம் கொடுத்து அசத்திப் புட்டீங்க போங்க ...

SUBBU said...

னல்ல கட்டபா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

இராகவன் நைஜிரியா said...

ம்....

இரண்டு பதிவா ஒரே கட்டைய பத்தி போட்டுகிட்டு இருக்கீங்க...

என்ன விசயம்...

பழமைபேசி said...

//thevanmayam said...
காலையிலேயே
நல்லா மாட்டிக்கிட்டேன்
உங்க கட்டை...

தேவா...
//

வந்து மாட்டினதுக்கு நன்றிங்க!

பழமைபேசி said...

//thevanmayam said...
சாமி
நல்ல
மூடில
இருப்பிய போல..
2,3 கட்டய வச்சி ஒரு வீட்டயே
கட்டி போட்டியளே....
//

கட்ட வெச்சுட்டாங்க ஐயா, கட்ட வெச்சிட்டாங்க!

பழமைபேசி said...

//Mahesh said...
இப்பிடியே கட்டுஞ் செட்டுமா இருங்க !!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பழமைபேசி said...

//நசரேயன் said...
அண்ணே சிக்குனது நாட்டுக்கட்டையா? திம்சுக்கட்டையா?
//

உருட்டுக்கட்டை, அவிங்களுக்கு!

பழமைபேசி said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது!

அது என்னங்க? :-)
//

வாங்க கண்ண பரமாத்மா! நீங்க நினைக்குறதேதான்....

பழமைபேசி said...

//வேத்தியன் said...
ஐயா கட்டைகளைப் பத்தி கட்டம் கட்டீட்டிங்க போங்க...
//

வாங்க வேத்தியன்...எதோ, நம்மால ஆனது!

பழமைபேசி said...

//Sriram said...
அண்ணே நாட்டுக் கட்டைக்கு மட்டும் தான் நான் விளக்கம் கேட்டேன்.
ஆனால் நீங்களோ திமிசு கட்டை, கர்லா கட்டை வரைக்கும் விளக்கம் கொடுத்து அசத்திப் புட்டீங்க போங்க ...
//

வாங்க தம்பி...நீங்க சொன்னா கேட்டுத்தான ஆவனும்!

பழமைபேசி said...

//Subbu said...
னல்ல கட்டபா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
//

வாங்க சுப்பு, வந்து போங்க!

ராஜ நடராஜன் said...

கட்டைகளைப் பற்றி படிச்சிகிட்டே வந்தேனா திடிர்ன்னு உங்களுடைய பழம //மசைன்ன உடனே எனக்கு இனியோன்னும் ஞாவகத்துக்கு வருது. எழுதுறதுக்கு மசை தீந்து போச்சுன்னு சொல்லுவோம்.//

இது மசி தீந்து போச்சுன்னுதான் கோவை வழக்கு.மையை செந்தில் சொல்ற மாதிரி மசைன்னும் சொல்லலாம்,மசியின்னும் சொல்லலாமோ?

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
இது மசி தீந்து போச்சுன்னுதான் கோவை வழக்கு.மையை செந்தில் சொல்ற மாதிரி மசைன்னும் சொல்லலாம்,மசியின்னும் சொல்லலாமோ?//

வாங்ண்ணா, ஆமாங்கோ, நம்மூர்ப் பள்ளிக்கூடத்துல எல்லாம் மசின்னுதான் சொல்லுறது. ஆனா, மசைன்னும் தச்சுப் பட்டறைல எல்லாம் சொல்லுவாங்க, நம்மூர்லயே கூட!

மசையனாட்டாம், இதையெல்லாம் எழுதறனே, பதிவுலகத்துல என்னப் பத்தி என்ன நினைக்குறாங்களோ போங்க?!

ராஜ நடராஜன் said...

நாட்டுக் கட்டை பார்த்திருக்கிறேன்
திமிசுக் கட்டை என்னன்னே தெரியாது உருட்டுக் கட்டை உவ்வே
கர்லாக் கட்டை சுத்தியிருக்கேன்

ராஜ நடராஜன் said...

//மசையனாட்டாம், இதையெல்லாம் எழுதறனே, பதிவுலகத்துல என்னப் பத்தி என்ன நினைக்குறாங்களோ போங்க?!//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ங்கிற மாதிரி

இலக்கியத்தில இதெல்லாம் ரசனைங்க. யாரையும் கண்டுக்காம கிக் ஏத்துகிட்டே இருங்க! இஃகி!இஃகி.

பழமைபேசி said...

ராஜ நடராஜன் said...
நாட்டுக் கட்டை பார்த்திருக்கிறேன்
திமிசுக் கட்டை என்னன்னே தெரியாது உருட்டுக் கட்டை உவ்வே
கர்லாக் கட்டை சுத்தியிருக்கேன்


தென்னம்புள்ளை சாயாம இருக்குறதுக்கு ந்ட்டு வைக்குறது நாட்டுக் கட்டை!
கைத்தறியில முன்னாடி, பின்னாடி போய்ட்டு வர்ற கட்டை திமிசுக் கட்டை!!
தேகப் பயிற்சி சாலைல, பயில்வான் சுத்துறது கர்லாக் கட்டை!!!
அம்மினி உங்களை அன்னக்கி அடிச்சதா சொன்னது, உருட்டுக் கட்டை!!!!


அஃக்ஃக்ஃகா..அஃக்ஃக்ஃகா..அஃக்ஃக்ஃகா..

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ங்கிற மாதிரி

இலக்கியத்தில இதெல்லாம் ரசனைங்க. யாரையும் கண்டுக்காம கிக் ஏத்துகிட்டே இருங்க! இஃகி!இஃகி.
//

நொம்ப நன்றிங்ண்ணா... எதோ நீங்கெல்லாம் வந்து போற தெகிரியத்துலதான் எழுதுறேன்...நீங்க அல்லாரும் வரலைன்னா, நிறுத்திப் போடுவேன்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

பழமைபேசி said...


//பிரம்மச்சாரி என்பவர்கள் கல்யாணம் ஆகாதவர்களே...அதென்ன கல்யாணமாகாத பிரம்மச்சாரி ?
கல்யாணமான பிரமச்சாரிகளும் உண்டோ? விளக்கம் தேவை!//



நல்லா யோசிங்க ஐயா.... கல்யாணம் ஆகியும் கொஞ்ச நாள் நாங்க பிரம்மச்சாரியா இருந்தோம்... விதி! அது போல, பிரம்மச்சாரியாவே இருக்குறவிங்களும் இருக்காக. அவிங்கெல்லாம் கல்யாணமான பிரம்மச்சாரி! கல்யாணம் ஆகாமலும் பிரம்மச்சாரியா இல்லாம இருக்கலாம். அதான், கல்யாணமாகாத பிரம்மச்சாரிங்றது வழக்கத்துல இருக்கு! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
ம்....

இரண்டு பதிவா ஒரே கட்டைய பத்தி போட்டுகிட்டு இருக்கீங்க...
என்ன விசயம்...
//


இராகவன் ஐயா வாங்க! இது நேயர் விருப்பமுங்க ஐயா!!

S.R.Rajasekaran said...

இதுல சம்சாரி கட்டை ன்னு ஒன்னு சேத்துக்கோங்க .இவ்ளோ விளக்கமா சொல்றத விட ஒரு நாலு அஞ்சி கட்டைகள் படத்த போட்ட தெளிவா புரிஞ்சுக்குவம்லா .அதுசரி நீரு வீட்டுக்கு நடிக்கிறதுன்னு முடிவு பண்ணிடீறு நாங்க எந்த கட்டய கேட்டாலும் புரியாத மாதிரி வேறு ஏதாவது கட்டய பத்தி சொல்லி கடுப்ப கிளப்பிராதரும்.

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
இதுல சம்சாரி கட்டை ன்னு ஒன்னு சேத்துக்கோங்க .இவ்ளோ விளக்கமா சொல்றத விட ஒரு நாலு அஞ்சி கட்டைகள் படத்த போட்ட தெளிவா புரிஞ்சுக்குவம்லா .அதுசரி நீரு வீட்டுக்கு நடிக்கிறதுன்னு முடிவு பண்ணிடீறு நாங்க எந்த கட்டய கேட்டாலும் புரியாத மாதிரி வேறு ஏதாவது கட்டய பத்தி சொல்லி கடுப்ப கிளப்பிராதரும்.
//

வாங்க புளியங்குடியார்...முட்டுக்கட்டை, எட்டுக்கட்டைன்னு இன்னும் நிறைய இருக்கே?

Natty said...

இஃகி இஃகி.. ;) தேடி பிடிச்சு வார்த்தைகளை தேர்வு செய்யறீங்க பாஸ்.. ;)

Natty said...

எல்லா கட்டைகளுமே தொடர்ந்து சூடான இடுகையில் இடம் பிடிக்கிறது... ;) பத்திகிச்சு பத்திகிச்சு..

Natty said...

// இராகவன் ஐயா வாங்க! இது நேயர் விருப்பமுங்க ஐயா!! //

பாஸூ... உங்க விருப்பத்தெல்லாம் போட்டுட்டு.. நேயர் மேல பழி போடுரீங்களே.. .இது நியாயமா! தர்மமா! அடுக்குமா!

அது சரி(18185106603874041862) said...

//
(என்னா வில்லத்தனம்?)
//

ரிப்பீட்டேய் :0)))

ஆனாலும் வில்லத்தனம் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ரேஞ்சுக்கு ஏறிக்கிட்டே போகுது :0)))