2/07/2009

அமெரிக்க வேலை:பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ வரைவு

வணக்கம்! கண்டதைச் சொல்லி, பீதியக் கிளப்பி விளம்பரம் தேடுறதுக்கு அல்லங்க இந்த பதிவு. ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான். ஆகவே, தப்பா நினைச்சிக்கிடாதீங்க. ரெண்டு சட்ட மற்றும் கூடுதல் சட்ட‌ முன் வரைவுகள், இப்ப ஒப்புதலுக்காகவும் அல்லது பாதி ஒப்புதலோடவும் இருக்குங்றது நம்ம எல்லார்த்துக்கும் தெரிஞ்ச விசயம்.

ஒன்னு பாதிக்கப்பட்ட உடமைகள் சலுகை(TARP) நிதிக்கான கூடுதல் சட்ட‌ முன் வரைவு, அடுத்தது பொருளாதார வளர்ச்சி தூண்டுத‌ல்(National economic stimulus package) நிதிக்கானது. இதுக ரெண்டுலயுமே, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது குறிச்சி, நேரிடையாகவே அல்லது மறைமுகமாவோ சொல்லப்பட்டு இருக்குங்றாங்க அரசியல் பக்கிக. எனக்கு முழுத் தகவலும் இப்ப கிடைக்கலை. வலையிலயும் தேடிப் பாத்தேன், நான் வேலை பாக்குற‌ நிறுவன அலுவலரும் கைய விரிச்சிட்டாரு. கிடைச்ச உடனே தர்றேன்னு சொல்லி இருக்காரு. ஒப்புதல் வாங்கி, சட்டமான அம்சங்களைக் கீழ குடுத்து இருக்கேன்.

சரி, சுருக்கமா அதன் விளைவுகளைப் பாக்கலாம் இப்ப. ஏற்கனவே பாதிக்கப்பட்ட உடமைகளுக்கான சலுகை நிதி வாங்கின‌ நிறுவனங்கள்ல வேலை பாக்குற ஊழியர்கள், தன்னோட H1B நீட்டிப்புக்கு போகும் போது மறுக்கப் படலாம். ஏற்கனவே இந்த அம்சம் முன்வரைவுல இருந்து, அப்புறம் தூக்கிட்டாங்களாம். இப்ப, குடியரசுக் கட்சிக்காரங்க என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலை. இந்த நிலைமைல இருக்குறவிங்க, அவிங்க அலுவலக சட்டத்தரணிகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்குங்க. நானும், விபரம் தெரிய வர்றப்ப பதியுறேன்.

ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேரும் போது, அந்த நிறுவனத்தைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டு சேருங்க. ஒப்பந்த வேலைக்குப் போறதுன்னாக் கூட யோசிச்சி செய்யலாம். பாதிக்கப்பட்ட நிறுவனத்துல‌ ஏற்கனவே வேலை செய்யுறவிங்க, அடுத்த நல்ல வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்க.

நிரந்தரவாசிக்காக விண்ணப்பிச்சிருக்குறவிங்க, அதுக்கு முந்தைய நிலையான வேலைக்கான அங்கீகார நிலைக்கு(EAD) மாறலாமாங்றதையும் யோசிக்கலாம். ஏன்னா, சில பேர் அதற்கான வாய்ப்பு இருந்தும் H1Bலயே தொடர்வது உண்டு. காரணம், வருசா வருசம் நீட்டிப்புக்குப் போகவேண்டியது இல்லைன்னு.

மேற்படிப்புக்கு வர்றவிங்க, ஏற்கனவே படிச்சிட்டு இருக்குறவிங்க, அவிங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு என்ன ஆச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அது இனிமேல் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒன்னும் விபரமாத் தெரிய மாட்டேங்குது. எல்லாம், இனியும் ஒரு மாசம் ஆகணும். இவனுக நல்லாக் குழப்பி, பல கலந்துரையாடல் நடத்தி, தெளிவா சொல்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும்.

"The current amendment provisions were “ambiguous”. We expect more clarity to arise when it goes for reconciliation to the Congress!"

The amendment that passed isn’t as tough as the one Grassley proposed on Feb. 5, which would have prohibited firms from hiring H-1Bs altogether. The modified amendment instead makes TARP recipients jump through extra hoops before they can hire those foreign workers. Specifically, it subjects recipients of TARP funds to the same rules so-called H-1B dependent employers must follow. (An H-1B dependent employer is one whose workers brought in with that visa comprise 15% or more of the employer's total workforce.) These rules include:

1. The employer can’t displace any similarly employed U.S. worker with an H-1B hire within 90 days before or after applying for H-1B status or an extension of status.

2. The employer can’t place any H-1B worker at the worksite of another employer – meaning it can’t outsource a worker for a client – unless that employer first makes a “bona fide” inquiry as to whether the other employer has displaced or will displace a U.S. worker within 90 days before or after the placement of the H-1B worker.

3. The employer has to take good-faith steps to recruit U.S. workers for the job opening, at wages at least equal to those offered to the H-1B worker. The employer must offer the job to any U.S. worker who applies and is equally or better qualified than the H-1B worker.

The amendment falls short of preventing large banks from using H-1Bs brought into the U.S. by outsourcing firms like India-based Infosys (INFY), Wipro (WIT), and Tata, which are among the top recipients of petitions for the H-1B visa program. “Most of the H-1B use, and abuse, happens through relationships banks have with outsourcing firms,” says Hira. “I don’t think [the amendment] restricts them from working w those firms.” In other words, a bank could still legally force a laid-off American employee to train a replacement worker who is on an H-1B visa.

A related provision was passed in the U.S. House on Jan. 21 as an amendment to a bill that passed to reform TARP.

That measure, introduced by U.S. Representative Sue Myrick (R-N. Carolina), prohibits TARP recipients from outsourcing call-center work to foreign companies. The bill has not yet been taken up by the Senate. Source

அவசரத்துல கல்யாணம், அவகாசத்துல அழுகைன்னு பெரியவிங்க சொல்வாங்க. அதனால, புது வேலை, வேலை மாற்றம், அமெரிக்காவுக்கு படிக்க வர்றவிங்க, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்ல இருக்குறவங்க, அவசரப்படாம, தொலைநோக்குப் பார்வைல முடிவு எடுங்க! ஏய், என்ன அறிவுரையா? ஐயோ அப்பிடி எல்லாம் இல்லைங்க. என்னோட நண்பர் வெங்க்கிய நினைச்சேன்! எழுதினேன்!! இஃகிஃகி!!

பொறுப்பி(disclaimer): சட்டத்தரணிகளே குழம்பி இருக்குற இந்த நேரத்துல, நான் கொடுத்து இருக்குற தகவல்கள் சரியானதாகவும் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கு. இஃகிஃகி!

8 comments:

Anonymous said...

THIS WILL NOT BE A PROBLEM AT ALL FOR H1B SINCE BAIL OUT COMPANIES ARE NOT IN HIRING MODE, THERE ARE IN LAYOFF MODE.

So, the bill absolutely has no impact!!!

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

இராகவன் நைஜிரியா said...

முழுவதும் படிச்சு பார்த்தேங்க...

ரொம்ப குழப்புது...

அமெரிக்காவுல இருக்கிற நண்பர்கள், சொந்தங்களை நினைச்சா கவலையாவும் இருக்குது.

எல்லாம் நல்லபடியா நடக்க ஆண்டவனை வேண்டுவோமாக.

Unknown said...

H1- ல இருந்தா தலைக்கு மேல எப்பவுமே கத்திதான். அதுவும் இப்ப இருக்குற நிலைமையில, நிறைய கத்திகள் தொங்க/விழ வாய்ப்புண்டு. எதுக்கும் கொஞ்சம் சூதானமா இருந்துக்குங்கப்பூ.. முடியாத பட்சத்துல இருக்கவே இருக்கு நமது இந்தியா. வாங்க, எப்படியும் பொழச்சுக்கலாம் :)

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
முழுவதும் படிச்சு பார்த்தேங்க...

ரொம்ப குழப்புது...
//

ஐயா, நீங்க சொல்லுறது சரிதான்....அந்த நிலைமை(H1B)ல இருக்குறவிங்களுக்குப் புரியும்...இஃகிஃகி!

பழமைபேசி said...

//தஞ்சாவூரான் said...
வாங்க, எப்படியும் பொழச்சுக்கலாம் :)
//

நன்றிங்க ஐயா!

Anonymous said...

Hi
I want some details about H1B visa. can you give ur mailid for chat? (no need to publish)
thks

பழமைபேசி said...

//Anonymous said...
Hi
I want some details about H1B visa. can you give ur mailid for chat? (no need to publish)
thks
//

Please find it in my profile.