2/14/2009

காதல் ஒரு கேடா?

காதலர் தினம் நடந்தேறி வரும் வேளையில், காதல் கேடானாதா எனும் கேள்வி சில, பலருக்கு ஏற்படலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதற்கான விடை சரியானதாக இருக்க வேண்டும் என்பது எம் அவா.

கண்ணாளன் என்று விளிக்கிற பாடல்களைக் கேட்கிறோம். கண்ணாளன் என்றால் காதலன் அல்லது கணவன் என்று பொருள் கொள்ளலாம். அது போலவே, பெண்பாலில் சொல்லப்படுவது கண்ணாட்டி. அப்படியாக வரும் ஒரு பாடல்,


பட்டணம் தான் போகலாமடி பொம்பளே,
பணம் காசு தேடலாமடி!
நல்ல கட்டாணி முத்தே, என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே!!


இதே பொருள் கொண்டு, கிராம‌ப் புற‌ங்க‌ளில் சொல்லும் வ‌ழ‌க்கு, "க‌ண்ணும் க‌ருத்துமா இருந்து பழகிக்க! க‌ண‌க்கு வ‌ழ‌க்கைப் பாத்து ந‌ட‌ந்துக்க‌!!" இவையெல்லாம் கிராம‌ங்க‌ளில் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ள் சொன்னாலும் கூட‌, அவ‌ர்க‌ள் சொல்ல‌ வ‌ருவ‌தைப் புரிந்து கொள்ளும்ப‌டியான‌ வாழ்க்கை முறை மாறிவிட்ட‌து என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம்.

க‌ண்ணைப் போல, தனக்கு முத‌ன்மையாய் அன்புட‌ன் இருப்ப‌வ‌ர், அந்த‌ க‌ண்ணாட்டி அல்ல‌து க‌ண்ணாள‌ன். அதே பொருளில், முத‌ன்மையான‌ அன்பைக் கொண்டும், ந‌ல்ல‌ உள்ள‌த்தோடும் இருக்க‌ப் ப‌ழ‌கிக் கொள்ள‌ வேண்டு மென்ப‌துதான் க‌ண்ணும் க‌ருத்துமா இருக்க‌ப் ப‌ழ‌கிக்க‌. இதையே, க‌ண்க‌ள் கொண்டு பார்த்துக் க‌வ‌ன‌மா இருத்த‌ல் என்கிற‌ பொருளில் புழ‌ங்கி வ‌ருகிறோம். என‌க்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌து, அன்போடும் ந‌ல்லுள்ள‌த்தோடும் இருப்ப‌து க‌ண்ணும் க‌ருத்துமாயிருப்ப‌து என்ப‌து.

க‌ண‌க்கு வ‌ழ‌க்குப் பாத்து ந‌ட‌ந்துக்க! ஆன்றோர் சான்றோர் பெரியவர்கள் கணித்துச் சொல்வது கணக்கு. புத்திசாலியாய் தனக்குத் தானே கணித்துக் கொள்வதும், ஒரு கணக்கு. வழக்கு என்றால், ஊரில், அனுபவத்தின் பேரில், காலங்காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு மரபு. இதன் அடிப்படையில் சொல்வதுதான், கணக்கு வழக்குப் பாத்து நடந்துக்க.

ஆக‌, கண், அதாவது காதல் எனும் ப‌ண்பும் உயிர்மைக்கு அவ‌சிய‌மாகிற‌து. க‌ண், அதாவ‌து விழி எனும் உறுப்பும் உயிர்மைக்கு அத்தியாவ‌சியமாகிற‌து. கண்(காதல்) கொண்டோர் தின‌ம், காத‌ல‌ர் தின‌ம்; அத்தகைய‌ நாளில் நீங்க‌ள் க‌ண் தான‌ம் செய்யுங்க‌ள். அது ப‌ண்பாயினும் ச‌ரி, உறுப்பாயினும் ச‌ரி!!

தான‌த்திற்கு ஒப்பான‌து, பேணி காப்ப‌துவும். வ‌ருடாந்திர‌ க‌ண் ப‌ரிசோத‌னை செய்வ‌து வாழ்விற்கு மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று! ந‌ம்மில் நிறைய‌ப் பேர், வ‌ருட‌த்திற்கு ஒரு முறைய‌ல்ல‌, வாழ்விலேயே ஒரு முறை கூட‌ப் ப‌ரிசோத‌னை செய்து இருக்காமால் இருப்போம். விழித்துக் கொள்வீர்! கண்ணுறுவது (காதல்) கேடல்ல! அதைப் பேணி காக்காமல் விடுவதுதான் பெருங்கேடாக அமையக் கூடும்!!


க‌ண்ணும் க‌ருத்துமா இருந்து பழகிக்க!
க‌ண‌க்கு வ‌ழ‌க்கைப் பாத்து ந‌ட‌ந்துக்க‌!!



அழுக்குவண்ணாத்தி, ஒன்னைப் பாத்து எவ்ளோ நாளாச்சு?!

23 comments:

பழமைபேசி said...

கண் மருத்துவர் இன்னைக்கி விடுப்புல போயிட்டாரு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

kann check up a irukkum.. :p aanaalum neer pazhamai pesingiratha nama oththukkaromngnaa.. vazhi needoozhi..

பழமைபேசி said...

//Eezhapriya said...
kann check up a irukkum.. :p aanaalum neer pazhamai pesingiratha nama oththukkaromngnaa.. vazhi needoozhi..//

வாங்கோ, வணக்கம்! இஃகிஃகி!!

நசரேயன் said...

நானும் கண்ணை பரிசோதனை செய்யத்தான் போனேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நானும் கண்ணை பரிசோதனை செய்யத்தான் போனேன்
//

நம்பிட்டோம்!

Anonymous said...

அண்ணனுடைய அனுபவம் பேசுகிறது...அதன் வெளிப்பாடு இந்த பதிவு.

Saminathan said...

//அழுக்குவண்ணாத்தி //

இந்தப் பறவையின் சரியான தமிழ்ப்பெயர்
தெரியுமா..?

வேத்தியன் said...

எங்கேயோ தொடங்கி கடைசில எங்கேயோ முடிச்சுட்டீங்க...
:-)
நல்ல பதிவுங்க...

பழமைபேசி said...

//Sriram said...
அண்ணனுடைய அனுபவம் பேசுகிறது...அதன் வெளிப்பாடு இந்த பதிவு.
//

பொது இடத்துல இப்பிடி உண்மையப் போட்டு உடைச்சா நான் என்னா பண்வேன்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

கலகலப்ரியா said...

எலே வெங்காயம்.. அது வண்ணாத்தி .. அதனால பொம்பளயாதான் இருக்கணும்.. பழமைபேசிக்குப் பெயர் தெரிஞ்சிருந்தா போட்டிருப்பாங்க.. இப்போ என்ன நல்ல தமிழ் பெயர்தானே.. "ஆயிரம் முடி தாங்கிய அங்கயற்கண்ணி" நு பேரு வச்சிடலாம்.. பேரு புடிக்கலைனா நெட்ல தமிழ் பேரு லிஸ்ட் இருக்கும் ஒண்ண செலக்ட் பண்ணுங்க..

vasu balaji said...

கண் பரிசோதனை பண்ணனும்னு சொல்லிட்டு பார்த்து நாளாச்சின்னா வில்லங்கமால்ல இருக்கு. வண்ணாத்தி கண் டாக்டர பார்க்க போச்சோ தெரியல. ஒரு வேள அது பாஷைல சொன்னத தான் பழமை வாதி கொம்மன்ட் ல போட்டாங்களோ. லீவ்னு?

பழமைபேசி said...

//ஈர வெங்காயம் said...
//அழுக்குவண்ணாத்தி //

இந்தப் பறவையின் சரியான தமிழ்ப்பெயர்
தெரியுமா..?
//

மைனா!

சாதாரண மைனா (அக்ரிடொதெர்ஸ் ட்ரைஸ்டிஸ், Acridotheres tristis) தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது.

பழமைபேசி said...

//
வேத்தியன் said...
எங்கேயோ தொடங்கி கடைசில எங்கேயோ முடிச்சுட்டீங்க...
:-)
நல்ல பதிவுங்க...
//

நன்றிங்க வேதியன்!

பழமைபேசி said...

//Eezhapriya said...
எலே வெங்காயம்.. அது வண்ணாத்தி .. அதனால பொம்பளயாதான் இருக்கணும்.. பழமைபேசிக்குப் பெயர் தெரிஞ்சிருந்தா போட்டிருப்பாங்க.. இப்போ என்ன நல்ல தமிழ் பெயர்தானே.. "ஆயிரம் முடி தாங்கிய அங்கயற்கண்ணி" நு பேரு வச்சிடலாம்.. பேரு புடிக்கலைனா நெட்ல தமிழ் பேரு லிஸ்ட் இருக்கும் ஒண்ண செலக்ட் பண்ணுங்க..
//

அஃகஃகா! கலாய்ப்புக் கனகாம்பரமா நீங்க? பிரமாதம்!

பழமைபேசி said...

//Bala said...
கண் பரிசோதனை பண்ணனும்னு சொல்லிட்டு பார்த்து நாளாச்சின்னா வில்லங்கமால்ல இருக்கு. வண்ணாத்தி கண் டாக்டர பார்க்க போச்சோ தெரியல. ஒரு வேள அது பாஷைல சொன்னத தான் பழமை வாதி கொம்மன்ட் ல போட்டாங்களோ. லீவ்னு?
//

வாங்க பாலாண்ணே! மைனா என்னை ஏசுறதையெல்லாம் வெளில சொல்லிடாதீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

பழமைபேசி said...

வடக்குக் கரோலைனா மக்கள் இங்க கண் தானத்துக்கு பதிஞ்சுகிடலாம்.

https://www.donatelifenc.org/becomeadonor/

மறத் தமிழன் said...

அட.... அட காதலைப் பற்றி நன்றாக அலசியிருக்கின்றீர்கள்...

பாராட்டுக்கள் நண்பா...

பழமைபேசி said...

//மறத் தமிழன் said...
அட.... அட காதலைப் பற்றி நன்றாக அலசியிருக்கின்றீர்கள்...

பாராட்டுக்கள் நண்பா...
//

நன்றிங்க நண்பா!

கலகலப்ரியா said...

பழமை பேசி.. குருவிக்கு பேரு வைக்க சொன்னா.. எனக்கு பேரு வைக்கிறீங்க.. ஆனா நீங்க குருவிக்கு வச்ச பேரு நல்லா இருக்கு.. மைனா.. அருமையான தமிழ் பெயர்.. இது அடை காக்கற மைனாவோ.. நம்ம ஊர்ல மைனா எல்லாம் அழகா ஸ்லிம்மா இருக்கும்.. பக்கத்ல இருந்த பெருசு வேற கண்ணை சுருக்கிண்டு மைனா மாதிரி இருக்கேன்னு சொல்லிச்சி.. நான்தான் அதிகப்ரசங்கித் தனமா.. இவ்ளோ பெருசா நோ வே நு சொல்லிட்டேன்.. ஹ்ம்ம். ஒத்த மைனா பார்த்தா நட்பு முறிஞ்சிடும்-நு வேற சொல்லுவாங்க.. (அடடே.. மூட நம்பிக்கைல எல்லாம் நம்பிக்கை வந்துடும் போல இருக்கே.. நேற்றுதான் ஒரு நண்பரை நைய புடைச்சேன்..ஹிஹி)

எம்.எம்.அப்துல்லா said...

ஐ லவ் யூ பழமைபேசி :))

பழமைபேசி said...

//Eezhapriya said...
பழமை பேசி.. குருவிக்கு பேரு வைக்க சொன்னா.. எனக்கு பேரு வைக்கிறீங்க.. ஆனா நீங்க குருவிக்கு வச்ச பேரு நல்லா இருக்கு.. மைனா.. அருமையான தமிழ் பெயர்.. இது அடை காக்கற மைனாவோ.. நம்ம ஊர்ல மைனா எல்லாம் அழகா ஸ்லிம்மா இருக்கும்..//

இது பேரு "ஊர் மைனா"தாங்க...கிராமங்கள்ல அழுக்கு வண்ணாக் குருவின்னும் சொல்றது!

//பக்கத்ல இருந்த பெருசு வேற கண்ணை சுருக்கிண்டு மைனா மாதிரி இருக்கேன்னு சொல்லிச்சி.. //

மைனா! நானும் மைனான்னே கூப்பிடுறேன்...எதுக்கு இந்த பீடிகை எல்லாம்?

// ஒத்த மைனா பார்த்தா நட்பு முறிஞ்சிடும்-நு வேற சொல்லுவாங்க..
//

அப்பிடீங்களா.... அப்ப இணையோடயே வாங்க...இஃகிஃகி!! கோவிச்சுகாதீங்க!!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
ஐ லவ் யூ பழமைபேசி :))
//

அண்ணே, வாங்க வாங்க!! நன்றிங்க அண்ணே, உங்க தோழமைக்கு நாங்கெல்லாம் கொடுத்து வச்சி இருக்கணும்.

கலகலப்ரியா said...

எலே பழமை பேசி.. நம்மளையே கலாய்க்கறிரோ.. பண்ணுங்க பண்ணுங்க.. இப்போ இது பேசற மூட் ல இல்ல.. இல்லேன்னா தெரியும் சேதி.. ஏதோ மஹிந்தா புண்ணியம்.. பொழைச்சி போங்கோ.. அவ்வ்வ்வ் :P(ஆமாம் இது என்ன அவ்வ்வ்வ்.. நாய்க்குட்டி பேன் தொல்லை தாங்காம அவ்வ்வ் நு கவ்வுற மாதிரி இருக்கு...)