2/07/2009

அமெரிக்காவில், "இன்னைக்கு வீட்லயே இரு!" வழக்கம் அமல்

வணக்கம்! பொருளாதார மந்தம், அதன் விளைவுகள், எதிர் நடவடிக்கைகள்ன்னு நாலும், உலகம் பூராவும் நடந்துட்டு இருக்கு. இங்க அமெரிக்காவுல, பொருளாதார வளர்ச்சி(stimulus package) முடுக்குநிதிக்கான திட்ட முன்வரைவு, அமெரிக்க நடுவண் அரசாங்கத்தோட கீழ்சபையில ஒப்புதல் வாங்கி, மேல் சபையோட ஒப்புதலுக்கு போயிருக்கு. சனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில ஒரு பொதுவான ஒப்புதல் கை கூடினதை ஒட்டி, நேத்தைக்கே வாக்கெடுப்பு முடிஞ்சு, உடனே அதிபரோட ஒப்புதலுக்கு போகும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா போகலை, திங்கள்கிழமை மேல்சபையில வாக்கெடுப்பு இருக்கும்ன்னு சொல்லுறாங்க அரசியல் பக்கிக!

இந்த நிதி ஒதுக்கீடு ($780 Billion) அமலுக்கு வந்தா, வேலை வாய்ப்பு பெருகும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. நிதி ஆதாரம் கூடினா, சிறு தொழில்கள் பெருகலாம். பொருளாதாரம் ஏற்றப் பாதைக்கு திரும்பும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, இந்த நிதி ஒதுக்கீடுனால ஒன்னும் பலன் இருக்காதுன்னும் சிலர் சொல்லுறாங்க. அது குறிச்ச வேடிக்கையான, ஒரு எள்ளல் மின்னஞ்சல் கூட உலகம் பூராவும் உலாவிகினு இருக்கு. அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.

எனக்கு எங்க அமுச்சியவிங்க நினைவு வந்தது நேத்து. ஒன்னுமில்லைங்க, என்னோட அருமை நண்பர், திருச்சிக்காரப் பயல் Rockfort மகேந்திரன் கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு வேலை பாக்குறாரு. வழக்கம் போல அலைபேசில அழைச்சாக்க, எப்பவும் அலைபேசில கொறஞ்ச குரல்ல மருகுற ஆளோட சத்தம் வெகு தூக்கலா இருந்துச்சி. என்னடா இது ஆச்சரியமா இருக்கேன்னு கேட்டப்பதாங்க, எனக்கு எங்க அமுச்சியவிங்க ஞாவகம் வந்துச்சி.

சுருக்குப் பையில பணம் கொறச்சலா இருந்துச்சின்னு வையுங்க, திடீல்ன்னு எங்க தோட்டத்துல வேலை செய்யுற சுப்பனையும், வள்ளியையும் கூப்ட்டு இன்னைக்கி வீட்லயே இருந்துக்குங்கன்னு சொல்லிப் போடும் எங்க அமுச்சி. அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம். அதனாலதான், வீட்ல இருந்த நம்ம திருச்சிக்காரப் பய மகேந்திரனோட குரல் வலுவா இருந்துச்சுங்க. இந்த வழக்கத்தோட பேருதாங்க இன்னைக்கு வீட்லயே இரு(Furlough) வழக்கம்.

நேத்தைக்கு இதனால மட்டும் 38 மில்லியன் வெள்ளி மிச்சம் ஆச்சுதாம் மாகாண அரசுக்கு.மேலும் இந்தத் திட்டம் 2010ம் ஆண்டு பாதி வரைக்கும் தொடரலாம்ன்னு ஒரு யூகம் இருக்காம். ஏன்னா, கலிஃபோர்னியா அரசுக்கு 40 பில்லியன் பற்றாக்குறை இருக்குதாமுங்க, அதான்!
சரி இப்ப, அந்த மின்னஞ்சலோட தமிழாக்கத்தைப் பாப்பமா?

கேள்வி: அது என்ன பொருளாதார வளர்ச்சி முடுக்கு நிதி?
பதில்: இந்த நிதியை, அரசு கந்தாயங் கட்டுபவர்களுக்குத் தரும்.

கேள்வி: அரசுக்கு எப்படி இந்த நிதி கிடைக்கும்?
பதில்: கந்தாயங் கட்டுபவர்களிடம் இருந்து.

கேள்வி: ஆக, அரசு நமக்கே நம் பணத்தைத் திருப்பித் தருகிறது?
பதில்: கொஞ்சமா.

கேள்வி: இந்த நிதியோட நோக்கம்?
பதில்: நீங்க இந்த பணத்துல போயி நாலும் வாங்குவீங்க, அது பொருளாதார வளர்ச்சிய முடுக்கும்.

கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதார வளர்ச்சியையல்ல‌ முடுக்கும்?
பதில்: டப்பிய மூடு?!

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!

கொசுறு: நம்ம ஊர்ல எல்லாம், காசு குடுத்துப் பதவி வாங்கி, வாங்கின பதவியில காசு பாப்பாங்க. நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு இருக்கைய‌ சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.

27 comments:

ரவி said...

அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.

where ?

வேத்தியன் said...

ஐயா பார்த்து செய்யச் சொல்லுங்க...
முதல்ல வெள்ளிக்கிழமை நில்லுனு சொல்லிட்டு அப்புறமா ஒரேயடியா வீட்டிலியே நில்லுனு சொல்லப் போறாங்க...
:-)

ஸ்ரீதர்கண்ணன் said...

கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதரத்தையல்ல முடுக்கும்?
பதில்: டப்பியக் கட்டு!

:)))))

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.
where ?
//

இளைய குத்தூசி...படைப்பு ஆக்கத்துல இருந்திச்சி...அதான்! இப்ப சேத்தாச்சு.

ராஜ நடராஜன் said...

நான் வேலைக்குப் போகலேன்னா காசு இல்லங்கிறது சரி.ஆனா நீ வெள்ளிக்கிழமை வேலைக்கு வராதேன்னு சொன்னா அதுக்கு காசு தரணுங்க.

பழமைபேசி said...

//வேத்தியன் said...
ஐயா பார்த்து செய்யச் சொல்லுங்க...
முதல்ல வெள்ளிக்கிழமை நில்லுனு சொல்லிட்டு அப்புறமா ஒரேயடியா வீட்டிலியே நில்லுனு சொல்லப் போறாங்க...
:-)
//

எல்லாம் ஒபாமா வழி காட்டுவாரு....இஃகிஃகி!

S.R.Rajasekaran said...

இன்னக்கி சந்தைல வேற எதோ பொருள் விக்கிறாங்க போல .நாம கிளம்பு வேண்டியதான் .Happy SUNDAY

பழமைபேசி said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதரத்தையல்ல முடுக்கும்?
பதில்: டப்பியக் கட்டு!

:)))))
//

இஃகிஃகி!

இராகவன் நைஜிரியா said...

பொருளாதர மந்தம் அப்படின்னு சொல்லிகிடு என்ன என்னமோ பண்ணிகிட்டு இருக்காங்க...

எல்லாம் நல்ல படியா நடக்கணமுன்னு மனசு கெடந்து அடிச்சுகிது...

கேயஸ் தியரி மாதிரி... அமெரிக்காவுல பொருளாதர மந்தம் அப்படின்னா எங்க பாத்தாலும் அது இல்ல எதிரொலிக்கிது..

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நான் வேலைக்குப் போகலேன்னா காசு இல்லங்கிறது சரி.ஆனா நீ வெள்ளிக்கிழமை வேலைக்கு வராதேன்னு சொன்னா அதுக்கு காசு தரணுங்க.
//

பொது நலனும் இதுல அடங்கி இருக்குறதால மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
இன்னக்கி சந்தைல வேற எதோ பொருள் விக்கிறாங்க போல .நாம கிளம்பு வேண்டியதான் .Happy SUNDAY
//

பாத்து நம்ம ஊர்ப் பொருளா வாங்குங்க அப்பு!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
எல்லாம் நல்ல படியா நடக்கணமுன்னு மனசு கெடந்து அடிச்சுகிது...
//

அதேதானுங்க ஐயா! நல்லதே நடக்கணும்!!

Anonymous said...

வீட்ல இருந்து என்ன உருப்படியான வேலை பார்த்தீங்கள்.?nilaamathy

பழமைபேசி said...

//Anonymous said...
வீட்ல இருந்து என்ன உருப்படியான வேலை பார்த்தீங்கள்.?nilaamathy
//

அஃகஃகா! வாங்க நிலாமதி!! என்னங்க கண நாளா உங்களக் காணலை இந்தப் பக்கம்? நல்ல சுகம்தானே??

நான் வேற மாகாணத்துல, தனியாருக்கு வேலை பாக்குறனுங்க...

Anonymous said...

//மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!//

யாருங்க அவரு?

எங்க கவர்னர் ஆர்னால்டை சொல்றீங்களா? சர்ர்ர்ர்ர்ர்தான்.

பழமைபேசி said...

//Anonymous said...
//மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!//

யாருங்க அவரு?

எங்க கவர்னர் ஆர்னால்டை சொல்றீங்களா? சர்ர்ர்ர்ர்ர்தான்.
//

Arnold Alois Schwarzenegger

அட பாத்தீங்கள்ல? எனக்கே நெம்பக் கூச்சமாத்தான் இருக்கு...இஃகிஃகி!

Mahesh said...

டப்பிய மூடு !! இது டாப்பு !!

சிங்கைலயும் பல நிறுவனங்க மாசத்துக்கு 5 நாள் லீவு எடுத்துக்க சொல்லியிருக்காங்க. ஓவர் டைம் கிடையாது. :(

RRSLM said...

//நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு பதவிய சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.//
பதவியை விக்கவில்லை அவர். அவர் செனட் முத்திரை பதித்த அவருடைய அவரும் Seat' யை இருண்டு நுழைவுச்சீட்டுக்கு ஏலம் விடுகின்றார்.
இத சொன்னதுக்கு என் டப்பியை முட சொல்லிராதிங்க :)
.

பழமைபேசி said...

//Raரா said...

அடச் சே, உங்களை அப்பிடி சொல்வேனா? பொருட் பிழையத் திருத்தினதுக்கு நன்றிங்க.

பழமைபேசி said...

//Mahesh said...
டப்பிய மூடு !! இது டாப்பு !!

சிங்கைலயும் பல நிறுவனங்க மாசத்துக்கு 5 நாள் லீவு எடுத்துக்க சொல்லியிருக்காங்க. ஓவர் டைம் கிடையாது. :(
//

அண்ணே, இப்ப நீங்க பிழை திருத்துறதே இல்ல?! அவ்வ்வ்வ்வ்வ்......

அசோசியேட் said...

.////அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம்.////

பார்த்துங்க , வேலைக்கு போனா நம்மகிட்ட காசு கேக்க போறாங்க .

மதன் said...

தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் கலிஃபோர்னியா வரைக்கும் அடுச்சுக் கெளப்புது..! ”திடீல்னு..” மறந்தே போயிருந்த இந்த வார்த்தை எனக்கு பல ஞாபகங்கள கொண்டு வந்துச்சுங்க..!

உண்மைத்தமிழன் said...

கலிபோர்னியான்னு இல்ல..

இப்ப சென்னையிலேயும் இது அமலுக்கு வந்தாச்சு..

ரொம்பப் பெரிய கம்பெனில சனிக்கிழமைல கட்டாய விடுமுறை கொடுத்துர்றாங்க..

ஏஸி கட்டணம், மின்சாரக் கட்டணும், அலுவலகச் செலவுகள் குறையுமேன்னுதான்..

எங்க ஆபீஸ்லேயும்தான்..

தகவலுக்கு நன்றி ஸார்..

உண்மைத்தமிழன் said...

///பழமைபேசி said...
//செந்தழல் ரவி said...
அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.
where ?//
இளைய குத்தூசி...படைப்பு ஆக்கத்துல இருந்திச்சி...அதான்! இப்ப சேத்தாச்சு.///

இளைய குத்தூசியா.. போச்சுடா.. இது எப்பல இருந்து..?

இப்படி உசுப்பி, உசுப்பித்தான்..

பழமைபேசி said...

//ASSOCIATE said...
பார்த்துங்க , வேலைக்கு போனா நம்மகிட்ட காசு கேக்க போறாங்க .
//
அய்ய, அது ஏற்கனவே அழுதுட்டுத்தான இருக்கோம்? Social Security, State Tax, Fed Tax...அவ்வ்வ்வ்வ்வ்.....

பழமைபேசி said...

//மதன் said...
தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் கலிஃபோர்னியா வரைக்கும் அடுச்சுக் கெளப்புது..! ”திடீல்னு..” மறந்தே போயிருந்த இந்த வார்த்தை எனக்கு பல ஞாபகங்கள கொண்டு வந்துச்சுங்க..!
//

நம்மூர்ப் பழமை நம்மள உட்டுப் போயுருங்ளாக்கூ? இஃகிஃகி!

பழமைபேசி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இளைய குத்தூசியா.. போச்சுடா.. இது எப்பல இருந்து..?

இப்படி உசுப்பி, உசுப்பித்தான்..
//

உண்மைத் தமிழன் ஐயா, வாங்க வாங்க...

ஐய, நாம இளைய குத்தூசிய அப்பிடித்தான் கூப்பிடறது.... அவரோட அபரிதமான குத்தூசி நடையப் பாத்துதானுங்க...மத்தபடி உசுப்புறதெல்லாங் கிடையாதுங்கோய்....அதுக்கெல்லாம் ஏது நேரம் நமக்கு?