வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
அமெரிக்காவில்:
அமெரிக்க செய்திகள் ஒன்றிரண்டை முதலில் பார்ப்போம். மைக்ரோசாஃப்ட்( Microsoft) நிறுவனம் வேலைக் குறைப்பினால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு, தவறுதலாக விடுப்புத் தொகையில் அதிகமாகக் கொடுத்து விட்டதாகவும், அதைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெருமளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், துவங்கிய நாளில் இருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் இப்போதுதான் முதன் முறையாக வேலைக் குறைப்பின் காரணமாய், பணியாளர்களை விடுவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், அமெரிக்காவின் முதுகெலும்பு என்றும், உலகத் தொழிற்பேட்டை என்றும் வர்ணிக்கப்பட்ட டெட்ராய்ட் நகரை மையமாகக் கொண்ட நிறுவனங்களான, GM, Chrysler ஆகியவற்றை சீன நிறுவனம் வாங்க, பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பது, பரபரப்பாக பேசப்படுகிறது. அதே வேளையில், இந்த நிறுவனங்கள் அரசின் உதவித் தொகையை அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அந்த முயற்சி தோல்வியுறும் நிலையில், விற்பனை செய்வது அல்லது நலிவுற்றதாக அறிவிப்பது என்கிற நிலையில் இருப்பதாக, அதிகாரப்பூர்வமற்ற உள்ளிடைத் தகவல்கள் கூறுகிறது.
எழுது தமிழ், பேச்சுத் தமிழ், தமிலீசு, தமிங்கலம்
தமிலீசு, தமிங்கிலத்துக்கான விளக்கத்தை அன்பர் ஒருவரும், நண்பர்கள் ஏன் நீங்கள் கொச்சைத் தமிழில் எழுதுகிறீர்கள் என்றும் வினவியதின் பொருட்டு, நாம் அவற்றைப் பற்றி அலசுகிறோம் அன்பர்களே. எழுது தமிழ் என்பது, எழுதுவதிலும், மேடைப் பேச்சுகளிலும் வெகுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முறையான உரையாடல், ஆவணங்கள், கட்டுரைகள், விண்ணப்பங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளில் இம்முறை பாவிக்கப்பட்டு வருகிறது. இதுவே, ஒருவர் அடுத்தவர் மனதை நெருங்கிச் செல்ல வேண்டுமாயின், இம்முறை உகந்ததாக இருப்பதில்லை. ஆயினும், இதுவே தமிழ்மணம் என்பதை மறுக்க இயலாது.
அடுத்தபடியாக, பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ். இது, வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். ஆனால், மக்களை எளிதில் சென்றடைய முடிகிறது என்பது எம் கருத்து. பதிவுலகில், பெரும்பாலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எம்மைப் பொறுத்தமட்டில், எமக்கு எழுதுவதற்கும் வாகாக உள்ளபடியினால், இச்சாயலில் சரளமாக எழுத முடிகிறது. எனினும் தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.
தமிலீசு முறை என்பது, நுட்பம் குறித்த ஒன்று. கணினி உலகத்தில், உருமாற்றி இல்லாத காலங்களிலும், தமிழ் விசைப் பலகை இல்லாத காலங்களிலும், ஆங்கில எழுத்துகளால் தமிழில் தகவல்ப் பரிமாற்றம் செய்ய வேண்டி உள்ளது. தமிழை, ஆங்கில மொழி எழுத்தில் பாவிப்பதையே தமிலீசு என வழக்கத்தில் குறிப்பிடுகிறோம். கூடுமானவரை, இதைத் தவிர்ப்பதும் நன்று என்ற மனப்பான்மையிலேயே பெருமளவில் நம்மவர்கள் இருக்கிறார்கள்.
இறுதியாக வருவது, தமிங்கிலம். தமிலீசுக்கு நேர்மாறானது. தமிழ் எழுத்துகளால், பரங்கியர் மொழியான ஆங்கிலத்தைப் பாவிப்பது. இன்றைய காலகட்டத்தில், தமிழுக்கு நேர்ந்த ஊறு இது என்றால் மிகையாகாது. எங்கும் இம்முறை வியாபித்திருப்பதை நாம் காணலாம். இம்முறை பற்றி நம் எண்ணங்களை மேலும் எழுதி, அனாமதேய அன்பர்களின் வாழ்த்தைப் பெறுவதிலும், அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் இருந்து விலகியிருப்போமே?! அஃகஃகா!!

நன்றி: சித்தகிரி கண்காட்சி
சூதனம்
மேலே உள்ள படத்தில், எருது ஒன்றுக்கு குளம்புத்தகடு (இலாடம்) பொருத்துவதைப் பார்க்கலாம். பொருத்துபவர், சூதன். தச்சு வேலைகளைச் செய்பவரையும், சூதன் என்றே தமிழில் சொல்வது. சூதனைப் போல், நெளிவு சுழிவுடன், நுணுக்கமாக இருந்து கொள் என்பதே, பேச்சு வழக்கில், சூதனமாக என்பது மருவி, "சூதானமாக இருங்க அப்பு!" என்று ஆனது. படத்தில் இருப்பவற்றைப் பற்றி, மேலும் அதிகமாகக் கூற வேண்டி உள்ளது. கால அவகாசமின்மையால், அவற்றை எதிர்வரும் காலங்களில் காண்போம் மக்களே!!!
24 comments:
அமெரிக்க செய்திகள் ஒன்றிரண்டை முதலில் பார்ப்போம். மைக்ரோசாஃப்ட்( Microsoft) நிறுவனம் வேலைக் குறைப்பினால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு, தவறுதலாக விடுப்புத் தொகையில் அதிகமாகக் கொடுத்து விட்டதாகவும், அதைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெருமளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், துவங்கிய நாளில் இருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் இப்போதுதான் முதன் முறையாக வேலைக் குறைப்பின் காரணமாய், பணியாளர்களை விடுவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.//
ஆமா நேற்று நானும் படித்தேன்!!!
கல்க்குங்கப்பு!!
அடுத்தபடியாக, பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ். இது, வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். ஆனால், மக்களை எளிதில் சென்றடைய முடிகிறது என்பது எம் கருத்து. பதிவுலகில், பெரும்பாலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எம்மைப் பொறுத்தமட்டில், எமக்கு எழுதுவதற்கும் வாகாக உள்ளபடியினால், இச்சாயலில் சரளமாக எழுத முடிகிறது. எனினும் தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.//
சரியா சொன்னீன்ங்க!
மைக்ரோசாஃப்ட்லயே ஆள்குறைப்பா? சூதானமாத்தான் இருக்கோணும் !!
/"சூதானமாக இருங்க அப்பு!"/
நினைவுகளை மட்டுமல்ல
சொற்களை நினைவுப் படுத்துகிறது
தங்களின் இடுகை
வாழ்த்துகள்
ஆஹா அண்ணே..சூதானத்துக்கு அர்த்தம் இது தானா? சூப்பர்...
அருமை. தெரியாத பல விஷயங்கள் தெரியவருகிறது. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது
சூதானத்துக்கு அர்த்தம் எனக்கும் தெரியாது இதுவரை..
பள்ளயம் எப்பவும் போல ருசி. :)
@@thevanmayam
@@Mahesh
@@திகழ்மிளிர்
@@Sriram
@@முரளிகண்ணன்
@@முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் எல்லோருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!!
//கால அவகாசமின்மையால், அவற்றை எதிர்வரும் காலங்களில் காண்போம் மக்களே!!!
//
கால அவகாசம் இல்லாத அளவுக்கு ரொம்பவும் வேலையப் போடு இழுத்துக்கிறீங்களோ???
பார்த்து சூதனமா இருங்கப்பு :)
மக்களே, சூதுன்னா, சூழ்ச்சின்னும் பொருள் இருக்கு. அந்த சூதுக்கும், அதைச் செய்யுற சூதாடிக்கும், நான் சொன்ன சூதனுக்கும் தொடர்பு இல்லை மக்கா! ஆகவே, பாத்து சூதானமா இருந்துக்குங்க... இஃகிஃகி!
nice post.
சூதானமாக இருங்க அப்பு!" சரிங்க அண்ணன்
//இறுதியாக வருவது, தமிங்கிலம். தமிலீசுக்கு நேர்மாறானது. தமிழ் எழுத்துகளால், பரங்கியர் மொழியான ஆங்கிலத்தைப் பாவிப்பது. இன்றைய காலகட்டத்தில், தமிழுக்கு நேர்ந்த ஊறு இது என்றால் மிகையாகாது. எங்கும் இம்முறை வியாபித்திருப்பதை நாம் காணலாம். //
சரியான கருத்துக்கள்.
அண்ணனுக்கு லாடம் கட்டி எவ்வளவு நாள் ஆச்சு
@@ஸ்ரீதர்
@@நசரேயன்
@@தமிழர் நேசன்
@@குடுகுடுப்பை
உங்கள் எல்லோருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!!
//குடுகுடுப்பை said...
அண்ணனுக்கு லாடம் கட்டி எவ்வளவு நாள் ஆச்சு
//
யாரையண்ணே?! உங்களையெல்லாம் அப்பிடிச் செய்வேனா??
/மக்களே, சூதுன்னா, சூழ்ச்சின்னும் பொருள் இருக்கு. அந்த சூதுக்கும், அதைச் செய்யுற சூதாடிக்கும், நான் சொன்ன சூதனுக்கும் தொடர்பு இல்லை மக்கா! ஆகவே, பாத்து சூதானமா இருந்துக்குங்க... இஃகிஃகி!/
:)))))))))))))))
அப்பு நீங்க கண்டிப்பா உங்க கொங்கு நடையிலேயே எழுதுங்க, தயவு செய்து. யார் கண்டா, நாளைக்கு நீங்கள் நாட்டார் மரபுகளை அடிப்படையாக கொண்டு எழுதும் எழுத்தாளர்களின் வரிசையில் கொங்கு நாட்டு நாட்டார் மரபுகளை எழுதும் முதண்மையான எழுத்தாளராக திகழலாம். இன்று வட்டார மொழி எல்லாம் சிதைந்து வருகிறது. வட்டார மொழியிலும் ஒரு அழகியல் உள்ளது அதை எழுத்தில் கி. ரா. போல் பதிவு செய்வது மிக முக்கியம். எதோ நம்மால் முடிந்தவறை செய்வோமே. ஆங்கிலம், வடமொழி போன்றவற்றை வேண்டுமானால் தவிருங்கள் ஆனால் வட்டார மொழி நடையை மறவாதீர்கள். உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை. மேலும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்.
முப்பது வருடங்களில் இப்போதுதான் முதன் முறையாக வேலைக் குறைப்பின் காரணமாய், பணியாளர்களை விடுவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் ரொம்பவே தத்தளிக்கிறது... பலர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள்... சிறு முதலாளிகள் சொல்லவே வேண்டாம்...
தமிழ், பேச்சுத் தமிழ், தமிலீசு, தமிங்கலம்
நல்ல விளக்கம்... எனக்கு புதுசா இருந்தது!!!!!
சூதனம்..... சில சமயம் எங்களூரில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்...
நன்றீ!
//Jasmine said...
உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை. மேலும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றிங்க...எல்லாம் உங்க எல்லாருடைய ஆதரவுதான்...
சூதனமா இருங்கப்புக்கு...இதான் விளக்கமா?! அறிந்துகொண்டேன்... நன்றி நண்பரே!
தமிழன்பரே. பேச்சுத் தமிழில் எழுதினால் எந்த குறையும் இல்லை. அது தான் எளிதாக வருகின்றதென்றால் அப்படியே எழுதலாம். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை.
//குமரன் (Kumaran) said...
தமிழன்பரே. பேச்சுத் தமிழில் எழுதினால் எந்த குறையும் இல்லை. அது தான் எளிதாக வருகின்றதென்றால் அப்படியே எழுதலாம். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை.
//
நன்றிங்க குமரன்! கொஞ்சம் ஆறுதலா இருக்குங்க!!
Post a Comment