++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++
கபலை ஓட்டுறதுன்னும், சால் ஓட்டுறதுன்னுஞ் சொல்லுறது இதானுங்க. சின்ன வயசுல, எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ஓட்டுறதை அப்பிடி நின்னு வேடிக்கை பாப்பனுங்க. காளைக, கிணத்து மேட்டுல, கீழ இருந்து மேல வரும்போது மெதுவா வரும்ங்க, சால்ல தண்ணிய மோந்த பொறகு, ய்ஃகெய்ன்னு சொன்னதுதான் தாமுசம், காளைக ரெண்டும் சல்லுன்னு கீழ போகும்ங்க. அப்ப, ஓட்டுறவிங்க, வடத்து(கயிறு) மேல ச்சங்குன்னு எட்டி லாவகமா உக்காருவாங்க பாருங்க, அது அசத்தலா இருக்கும். அவ்ளோ பெரிய சாலு கெணத்துக்குள்ள இருந்து மேல வார்றதப் பாக்க, அப்பிடியொரு வேடிக்கையா இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
(அன்பால)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்புறம், இந்த நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்குன்னெல்லாம் ஊர்ல சொல்லிப் பேசுறதக் கேட்டு இருப்பீங்க. அதுகளக் கொஞ்சம் பாக்குலாமுங்க இன்னைக்கி. அவன் பலே ஆளு, நாலுந்த் தெரிஞ்சவன், முக்கியமா நீக்குப்போக்கு தெரிஞ்சவன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதாவது, மத்தவங்ககிட்ட இருக்குற குத்தம்(குற்றம்) கொறைகளைக் கண்டுக்கிடாம, சகசமாப் பழகுறவன்ங்கிறது அர்த்தமுங்க. கெட்டவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் நீக்கும் போக்கு கொண்டவன்ங்றதுங்க.
சரி, அப்ப போக்குநீக்குன்னா? எதோ ஒன்னு வெளியில போறமாதர இருந்தா அது போக்குநீக்கு(make a drain)ங்க. மேல கபலை ஓட்டுறதுல சால் இருக்கு பாருங்க, அதைச் செய்யும் போது, தண்ணி சிந்தாம ஓட்டை ஒடசல் இல்லாமச் செய்ன்னு சொல்லும் போது, வழக்கத்துல சொல்லுறது, "டேய்! சால்ல எந்த விதமான போக்குநீக்கில்லாம இருக்கோனும். இல்லாட்டி, உங்கப்பங்கிட்டச் சொல்ல வேண்டி வரும்!!"ன்னு.
சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும். எதானாச்சி சும்மா, ஒப்புக்குச் சப்பான(excuse) காரணத்தைச் சொல்றது. சாக்குங்றதே ஒரு போலியான செய்கை! அதுலவேற, மகாப் போலியான சாக்குன்னு சொல்லுறதுதாங்க நொண்டிச் சாக்கு. இது எப்பிடி இருக்குன்னு பாருங்க?! இஃகிஃகி!
நொண்டிக் குதிரைக்கு, சறுக்கினது சாக்கு!
35 comments:
பள்ளயம் நல்லா வெந்து பதமா இருக்குங்கோவ் !!!
ஆமா... அது கபலையா... கமலையா?
அப்பறம் நெம்ப நாளைக்கபறம் ஒரு சிறு திருத்தம் சொல்லிகிடறனுங்... execuseனு போட்ருக்கீங்...அது excuseதானுங்?
மீ தெ செகண்ட்... இருங்க படிச்சிட்டு வர்றேன்...
//Mahesh said...
பள்ளயம் நல்லா வெந்து பதமா இருக்குங்கோவ் !!!//
நன்றிங்க!
//ஆமா... அது கபலையா... கமலையா?//
ரெண்டும் இல்லைங்க.... கவிட்டிய நல்ல தமிழ்ல சொல்லுறது கவலை. ரெண்டு கவலைகளை நிறுத்தி, அதுல குறுக்குச் சட்டம் வெச்சி ஓட்டுறதுதான் இது. அப்பிடியாக இதைச் சொல்லுறது கவலைச்சால்ன்னு....அதுவே பேச்சு வழக்குல கபலைன்னு கெராமத்துல சொல்வாங்க.
//அப்பறம் நெம்ப நாளைக்கபறம் ஒரு சிறு திருத்தம் சொல்லிகிடறனுங்... execuseனு போட்ருக்கீங்...அது excuseதானுங்?
//
typo... நன்றிங்க!
//ச்சின்னப் பையன் said...
மீ தெ செகண்ட்... இருங்க படிச்சிட்டு வர்றேன்...
//
வாங்கோ...வாங்கோ...
பள்ளயம் நல்லா இருக்குது...
பேச்சுவழக்குலே பதிவு போடறதுலே பின்னி பெடலெடுக்கறீங்க. நானெல்லாம் மெட்ராஸ்லே பொறந்து வளந்தவன்.. இந்த பாஷைய படிச்சதும் ஒரு கிராமத்துலே போற மாதிரியே ஃபீலிங் வந்துடுது... :-)))
பொருளாதார தூண்டுநிதி//
எசமான்...உங்க தமிழோட அடிமை வந்துருக்கேன் :)
அண்ணே நம்ப புதுக்கோட்டை பக்கத்துல இதையே குறுக்கு சால் ஒட்டுறதுன்னும் சொல்லுவாய்ங்க.
(அன்பால)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!
நீங்க எப்படிங்க?
சுவாரசியமான பள்ளயம்! அந்த படமும் சொன்ன செய்திகளும் மிகச் சுவை!!
பிரமாதம் அண்ணே
வந்துடேங்க! ஆனாலும் பேச்சு வழக்கு தமிழ்ல கலக்குறீங்க ! இப்ப எங்க பக்கம் கிராமத்துகள்ள கெணறு மட்டுந்தான் இருக்கு. பல வீடுகள்ள கிணத்தையும் காலி பண்ணிட்டு போரப் (bore) போட்டுடாங்க. அப்புறம் நா பொறந்து வளந்த ஊர்ல இருந்த விவசாய நிலமெல்லாம் இப்ப வீடா மாறிப் போச்சுங்க ஐயா !
இன்னொரு விசயம்! பள்ளயம் நல்லா இருக்குங்க.
//ச்சின்னப் பையன் said...
பள்ளயம் நல்லா இருக்குது...
பேச்சுவழக்குலே பதிவு போடறதுலே பின்னி பெடலெடுக்கறீங்க.
//
நன்றிங்கண்ணே! நீங்க எல்லாம் வந்து போறதுல கிடைக்குற ஊக்கந்தான் காரணம்!!
\\பள்ளயம் நல்லா வெந்து பதமா இருக்குங்கோவ் !!!
\\
\\பேச்சுவழக்குலே பதிவு போடறதுலே பின்னி பெடலெடுக்கறீங்க\\
\\எசமான்...உங்க தமிழோட அடிமை வந்துருக்கேன் :)
\\
repeattee
பள்ளயம் நெம்ப நல்லா இருக்குங்கோவ்
//சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும்.//
ஹி ஹி ஹி
//எம்.எம்.அப்துல்லா said...
பொருளாதார தூண்டுநிதி//
எசமான்...உங்க தமிழோட அடிமை வந்துருக்கேன் :)//
அண்ணே, நாங்கெல்லாம் உங்க அன்புக்கு அடிமைங்றதுதான் உண்மையான உண்மை!
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நம்ப புதுக்கோட்டை பக்கத்துல இதையே குறுக்கு சால் ஒட்டுறதுன்னும் சொல்லுவாய்ங்க.
//
அப்பிடியாங்கண்ணே, தகவலுக்கு நன்றிங்கோ...
/*பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி */
அண்ணே நமக்கு ஏதும் துண்டு இருக்கா?
/*நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்கு*/
நல்ல விளக்கம்
//ஒரு வாரம் பத்து நாளா, இழு பறியா இருந்த, பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி ($838 billion economic stimulus bill)க்கான மசோதா சித்த நேரத்துக்கு முன்னாடிதேன், ஒரே ஒரு ஓட்டு எச்சா வாங்கி, அமெரிக்க மேல்சபையில செயிச்சு இப்ப அதிபரோட கைச்சாத்துக்கு முன்னேறி இருக்குங்க. //
குவைத்திலும் நீங்க சொன்ன economic stimulus bill மாதிரி rescue plan அரசாங்கம் அறிவிக்குதுங்க.ஆனா MP களுக்கு வாங்குன கடனையெல்லாம் குவைத் மக்கள் திருப்ப கட்ட மாட்டாங்கன்னு குரல் விடுறாங்க.
நான் ஊட்டுக்குப் போறேன்.மிச்சத்தை நாளை சொல்லுறேன்.
பள்ளயம் நல்லா இருக்குங்க...
:-)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
பள்ளயத்துக்கும் ....முளைபயிருக்கும் எதாச்சும் சம்பந்தம் உண்டுங்களா? பள்ளயம்னா உங்க தமிழ்ல அர்த்தம் விளங்கலையே அண்ணே! அதென்ன அவியல் மாதிரியா? இல்ல சும்மா ஈரத் துணியில முடிஞ்சு உத்தரத்துல வயல்ல விதைப்புக்கு மொத நா ராத்திரிக்கு கட்டி வைப்பாங்களே முளைப்பயிருனு ஒன்னு அதுங்களா?ரெண்டும் ஒன்னுங்களா இல்ல வேற வேறயா அதையும் சொல்லிபோட்டுப் போய் வேலை வெட்டியா பாருங்க அண்ணே.
\\சால்ல தண்ணிய மோந்த பொறகு, ய்ஃகெய்ன்னு சொன்னதுதான் தாமுசம், காளைக ரெண்டும் சல்லுன்னு கீழ போகும்ங்க.\\\
அந்த கயத்து மேல உக்காந்து போயருக்கிங்களா .ரெண்டு கயதையும் பிடிடுசிக்கிட்டு போறதுக்கு ரெம்ப தைரியம் வேணும்.கொஞ்சம் பாலன்ஸ் தவறினாலும் டங்கு டணால் ஆயிரும்
\\\(அன்பால)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்\\\
யாராச்சும் நோட் பண்ணுங்கப்பா! தத்துவம் ,தத்துவம்,தத்துவம்
\\அதாவது, மத்தவங்ககிட்ட இருக்குற குத்தம்(குற்றம்) கொறைகளைக் கண்டுக்கிடாம, சகசமாப் பழகுறவன்ங்கிறது அர்த்தமுங்க.\\
உங்களை மாதிரி
\\உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும். எதானாச்சி சும்மா, ஒப்புக்குச் சப்பான(excuse) காரணத்தைச் சொல்றது.\\
நல்லா இருக்குன்னு நாங்க சொல்றமாதிரி
//ஸ்ரீதர்கண்ணன் said...
(அன்பால)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!
நீங்க எப்படிங்க?
//
மிஞ்சுனாக் கெஞ்சுவோம்; கெஞ்சுனா மிஞ்சுவோம்!
இஃகிஃகி!!
//சந்தனமுல்லை said...
சுவாரசியமான பள்ளயம்! அந்த படமும் சொன்ன செய்திகளும் மிகச் சுவை!!
//
நன்றிங்க, நன்றிங்க!!
//Sriram said...
பிரமாதம் அண்ணே
//
நன்றிங்க Sriram!
//முரளிகண்ணன் said... //
நன்றிங்க முரளிகண்ணன்!
aumaiya nalla suvaiya irukkumna
//மஞ்சூர் ராசா said...
பள்ளயம் நெம்ப நல்லா இருக்குங்கோவ்
//
நன்றிங்க ஐயா!
//அசோசியேட் said...
பள்ளயம் நல்லா இருக்குங்க.
//
நன்றிங்க ஐயா!
//Poornima Saravana kumar said...
//சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும்.//
ஹி ஹி ஹி
//
உங்களுக்கு ஒரே சிரிப்பு இன்னைக்கு....இஃகிஃகி!
//நசரேயன் said...
/*பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி */
அண்ணே நமக்கு ஏதும் துண்டு இருக்கா?//
ஆமா, நமக்கும் கொஞ்சம் வரி குறையுமல்லோ?
//February 10, 2009 10:56 AM
நசரேயன் said...
/*நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்கு*/
நல்ல விளக்கம்
//
நன்றிங்க!
ஏணுங்க நமக்கு அந்தியூருங்களா?
நான் அங்க ஒருவாட்டி வந்து இருக்கேங்க.
:)
அன்பின் பழமைபேசி
எங்க பக்கம் சாமிக்குப் ( முன்னோர்களுக்கும் ) படைக்கிற எல்லாத்தெயுமே பள்ளயம்னு சொல்லுவோம்.
சூப்பர் இடுகை
நெரெய தமிழ்ச் சொற்கள் - தெரிஞ்சிக்கிறோம் - நன்று நன்று
நல்வாழ்த்துகள் பழமைபேசி
நட்புடன் சீனா
Post a Comment