9/27/2008

பிசைந்து உண்பது கேவலமா?

சில வருடங்களுக்கு முன்னாடி, ஒரு தமிழ் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். நல்ல நண்பர். வெளி நாட்டுக்கு வந்து பதினஞ்சு வருசம் இருக்கும். அதனால, அவர் ஊர்ல இருந்து இங்க அமெரிக்காவுக்கு வந்த அப்ப, ஊர் எப்படி இருந்ததோ, அந்த சூழ்நிலை பழக்க வழக்கத்துல அப்படியே மனசும் மூளையும் தங்கிப் போச்சு. இதுல வேற, இவர் கிராமப் பின்னணி கொண்டவர், கொங்குச்சீமை. நீங்க ஓரளவுக்கு அந்த மனுசனை யூகம் செய்து இருப்பீங்கன்னு நினைக்குறேன். அவ்வளவு ஒரு வெள்ளை மனசு.

நானும் கிட்டத்தட்ட அவரோட பின்னணியக் கொண்டவன்தான். அதனாலதானோ என்னவோ, அவரு மேல ரொம்ப மரியாதை. இப்படியாக, நாங்க ரெண்டு பேரும் சேந்து இனியொரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். நல்லா, வகை வகையா சோறும் கறியும். நண்பரோட மாமியார் ஊர்ல இருந்து வந்து இருந்தாங்க. அவங்க சமையல்தான்! ஊர் விருந்து அப்படியே இங்க வந்த மாதிரி இருந்தது. அங்க தாங்க ஒரு பிரச்சினை!!

அந்த மிளகு இரசம், அவ்வளவு அட்டகாசமா இருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும், நல்லா சோறும் இரசமுமா பிசஞ்சு ஒரு பிடி பிடிச்சோம். சமைச்சுப் போட்ட அந்த அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நான் நினைக்குறேன், மருமகன் வீட்டுக்கு அமெரிக்கா வந்த அந்த அம்மா இன்னைக்குத்தான் சிரிச்சே இருக்கும்னு நினைக்குறேன். ஆனா, அந்த அம்மாவோட மகளுக்கும் விருந்துக்கு அழைச்ச நண்பர் முகத்துலயும் சட்டுன்னு ஒரு மாற்றம்.

அப்புறமாத்தான் தெரிஞ்சது மத்த விருந்தினர் முன்னாடி கையால சாப்பிட்டது அவங்களுக்கு பிடிக்கலைன்னு. அதுவும் சோறும் இரசமும் பிசஞ்சு (பெனஞ்சு) திண்டது அவங்களை முகம் சுழிக்க வெச்சு இருக்குன்னு. அதுக்கு அப்புறம், அவர் எங்க கூடப் பழகுறதையே குறைச்சிகிட்டாரு. நாங்க செஞ்ச குத்தம் என்ன? தமிழன் பண்பாடே கையால சாப்புடுறது தானே? இல்ல, இரசமும் சோறும் பிசையாம எப்படி உண்பது? நல்லாப் பிசஞ்சு ஒன்னும் ஒன்னும் கலந்து, அப்படியே கவளம் கவளாமா உண்பதுதானே வழக்கம். அப்படிச் சாப்பிட்டாத்தானே ருசியும்?! நாகரிகம்ங்ற பேர்ல, ஏண்டா நீங்களும் குழம்பி அடுத்தவனையும் இம்சை பண்ணுறீங்க? தமிழன் தமிழனா இருக்கட்டும். கண்டு பாவனை ஒரு நாளும் அமைதியைத் தராது.

மென்பொருள் கட்டிய கைகள் இவை. பெரும் தொகை ஒப்பந்தங்களை நிறைவு செய்த கைகள் இவை. என்றாலும், மாட்டுச் சாணம், எருமைச் சாணம் அள்ளிய கைகள் எம் கைகள். அம்மாவுடைய, பெற்ற மகளுடைய வாந்தியை ஏந்திப் பிடித்த கைகள் எம் கைகள். எம் இடது கை விபத்தில் காயம் பட்ட போது வலது கையால் கழுவினதால், எம் இரண்டு கைகளும் மலம் கழுவிய கைகள்தான். அவ்வப்போது பெற்ற குழந்தைக்கும் கழுவும் கைகள்தான் எம் கைகள்.

இதைச் சொல்ல ஏன் வெட்கப்பட வேண்டும்? இந்த வலக் கையை குலுக்க மனம் கூசுகிறதா? குலுக்காதே! ஆனா, ஒன்று மட்டும் நிச்சயம்! எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்!!

(ஆத்தோட சீராடிட்டு, பொ**க் கழுவாமப் போனா,
ஆத்துக்கு நட்டமா? இல்ல, கழுவாமப் போற உனக்கா??)

43 comments:

பிரேம்ஜி said...

//மென்பொருள் கட்டிய கைகள் இவை. பெரும் தொகை ஒப்பந்தங்களை நிறைவு செய்த கைகள் இவை. என்றாலும், மாட்டுச் சாணம், எருமைச் சாணம் அள்ளிய கைகள் எம் கைகள். அம்மாவுடைய, பெற்ற மகளுடைய வாந்தியை ஏந்திப் பிடித்த கைகள் எம் கைகள். எம் இடது கை விபத்தில் காயம் பட்ட போது வலது கையால் கழுவினதால், எம் இரண்டு கைகளும் மலம் கழுவிய கைகள்தான். அவ்வப்போது பெற்ற குழந்தைக்கும் கழுவும் கைகள்தான் எம் கைகள்.//

அற்புதம்.அட்டகாசம்.சாட்டையடி.

கல்வெட்டு said...

//ஏண்டா நீங்களும் குழம்பி அடுத்தவனையும் இம்சை பண்ணுறீங்க? //

:-))) good one

துளசி கோபால் said...

எப்படீங்க..... எப்படீங்கறேன்....

ஹைய்யோ அட்டகாசமாச் சொல்லிட்டீங்க.

கையால் பிசைஞ்சு தின்னும்போது இருக்கும் திருப்தியும் மனநிறைவும் கரண்டியால் தின்னும்போது இல்லையே(-:

என் மகள் ரசம் சோத்தை ஃபோர்க் வச்சு ( எல்லாத்துக்கும் அவளுக்கு ஒரு ஃபோர்க் வேணும். எதுக்குத்தான் முள்கரண்டி என்னும் விவஸ்தையே கிடையாது!) தின்னும்போது எனக்கு அப்படியே வயிறு எரிஞ்சுபோயிரும். தாங்க முடியாம நானே நல்லாப் பிசைஞ்சு கொடுத்துருவேன்.

குடுகுடுப்பை said...

எங்க வீட்டுக்கு வாங்க ரசம் சாதத்தை ஒரு நடத்தி நடத்திருவோம்

பழமைபேசி said...

//பிரேம்ஜி said...

அற்புதம்.அட்டகாசம்.சாட்டையடி.
//

வாங்க பிரேம்ஜி! நன்றிங்க!!

பழமைபேசி said...

//
கல்வெட்டு said...
//ஏண்டா நீங்களும் குழம்பி அடுத்தவனையும் இம்சை பண்ணுறீங்க? //

:-))) good one
//

வாங்க கல்வெட்டு! நன்றிங்க!!

பழமைபேசி said...

//
துளசி கோபால் said...
எப்படீங்க..... எப்படீங்கறேன்....

ஹைய்யோ அட்டகாசமாச் சொல்லிட்டீங்க.
//

வாங்க வாத்தியார் அம்மா! நன்றிங்க!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
எங்க வீட்டுக்கு வாங்க ரசம் சாதத்தை ஒரு நடத்தி நடத்திருவோம்
//
வாங்க! ரொம்ப நன்றிங்க!! உங்க மின்னஞ்சல் அனுப்புங்க. என்னுடையது என்னோட விபரப்பட்டைல இருக்கு.

புருனோ Bruno said...

ஒவ்வொரு உணவைவும் சாப்பிடுவதற்கு ஒரு முறை உள்ளது.

கைகள், ஸ்ட்ரா, ஸ்பூன், போர்க் என்ற அந்த உணவுக்கு தக்க தான் பழக்கத்தை மாற்ற வேண்டுமே தவிர சாப்பிடும் இடத்திற்கு ஏற்று அல்ல என்ற எளிய உண்மை கூட இவர்களுக்கு புரியவில்லை. பாவம் அவர்கள் அறிவு அவ்வளவு தான்

--

புருனோ Bruno said...

நமது முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் ஒரு விருந்தில் கையால் சாப்பிட ஆரம்பிக்கும் போது “Eat with spoon. that is hygienic" என்று ஒருவர் கூற, இவரோ “My hands are more hygienic than these spoons as Only I am using that" என்று பதிலடி அளித்ததாக கூறுவார்கள்

புருனோ Bruno said...

//தமிழன் பண்பாடே கையால சாப்புடுறது தானே? //

அப்படி சொல்ல முடியாது.

கையால் சாப்பிடுவது என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளுக்கு ஏற்ற முறை

தட்டில் உள்ள மாழ்பழ துண்டுகளை போர்க்கினால் சாப்பிட்டால் அதனால் பண்பாட்டிற்கு பாதிப்பில்லை

ஆனால்

இட்லியை ஸ்பூனால் (அல்லது கத்தியால்) வெட்டி அதை போர்க் வைத்து சாம்பாரில் தொட்டு சாப்பிடும் நபர்களை பார்த்தால் எனக்கு பரிதாபம் தான் ஏற்படும் - இட்லியை சாம்பாரில் (மற்றும் சட்னியில்) பிசைந்து சாப்பிடும் ரூசியை அவர்கள் அறியவில்லை. பாவம்

--
தமிழர்கள் கூட ஸ்பூன், போர்க் ஆகியவை உபயோகிக்கலாம் --> ஆனால் சில வகை உணவுகளுக்கு (உதாரணம் ஐஸ் க்ரீம் :) ) தான் அவை ஏற்றவை --> பிற உணவுகளுக்கும் அதையே உபயோகிப்பது அறிவின்மைதானே தவிர வேறு ஏதும் இல்லை
--
எப்படி வெறும் கையால் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது அறியாமையோ அதே போல் தான் ஸ்பூனால் ரச சாதம் சாப்பிடுவதும். அறியாமை !!

அவ்வளவுதான்

நாமக்கல் சிபி said...

//தமிழன் பண்பாடே கையால சாப்புடுறது தானே? இல்ல, இரசமும் சோறும் பிசையாம எப்படி உண்பது? நல்லாப் பிசஞ்சு ஒன்னும் ஒன்னும் கலந்து, அப்படியே கவளம் கவளாமா உண்பதுதானே வழக்கம். அப்படிச் சாப்பிட்டாத்தானே ருசியும்?! நாகரிகங்ற பேர்ல, ஏண்டா நீங்களும் குழம்பி அடுத்தவனையும் இம்சை பண்ணுறீங்க? தமிழன் தமிழனா இருக்கட்டும். கண்டு பாவனை ஒரு நாளும் அமைதியைத் தராது//

நிச்சயமா!

கரண்டி வெச்சி சாப்பிட்டா சாப்பிட்ட நிறைவு இருக்காதே!

mraja1961 said...

பதிவு மிக அருமை நண்பரே மேல்நாட்டு கலாச்சாரத்தில் மிதந்து தமிழ் கலாச்சாரத்தை மறக்கும் அனைவருக்கும் சரியான சாட்டையடி.

அன்புடன்
மகாராஜா

Anonymous said...

Super !

பழமைபேசி said...

//
புருனோ Bruno said...
//தமிழன் பண்பாடே கையால சாப்புடுறது தானே? //

அப்படி சொல்ல முடியாது.

கையால் சாப்பிடுவது என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளுக்கு ஏற்ற முறை

எப்படி வெறும் கையால் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது அறியாமையோ அதே போல் தான் ஸ்பூனால் ரச சாதம் சாப்பிடுவதும். அறியாமை !!

அவ்வளவுதான்
//
வாங்க புருனோ! நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த சூழ்நிலைல, நாங்களே முன்வந்து ஒரு சிறு கரண்டி ஒன்னு குடுங்கண்ணு கேட்டே வாங்கி இருப்போம்.
நான் சொல்ல வந்தது பொதுவான ஒரு பழக்கத்தை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

பழமைபேசி said...

//
நாமக்கல் சிபி said...

நிச்சயமா!

கரண்டி வெச்சி சாப்பிட்டா சாப்பிட்ட நிறைவு இருக்காதே!
//
வாங்க நாமக்கல் சிபி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

பழமைபேசி said...

//
mraja1961 said...
பதிவு மிக அருமை நண்பரே மேல்நாட்டு கலாச்சாரத்தில் மிதந்து தமிழ் கலாச்சாரத்தை மறக்கும் அனைவருக்கும் சரியான சாட்டையடி.

அன்புடன்
மகாராஜா
//வாங்க மகாராஜா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

பழமைபேசி said...

//
vijay said...
Super !
//
வாங்க விஜய்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

நாமக்கல் சிபி said...

இன்னும் நம்ம ஊர்ல ஏன் இறுக்கமில்லாத கதர் வேட்டி சட்டை அணிகிறோம், அங்கே ஏன் முழுதாக கவர் செய்யும்படி கோட்,சூட், ஷூ அணிகிறார்கள் என்ற வேறுபாடு தெரியாமல் இங்கேயும் ஆஃபீஷியல் டிரஸ் என்ற பெயரில் இன் பண்ணு, ஹூவைப் போடு என்று கொடுமை செய்கிறார்கள்!

அதை என்ன சொல்றீங்க!

பழமைபேசி said...

//
புரிந்துணர்வுதான் காரணம். அங்க அவயம் வெளிப்படுற மாதிரி இருந்தா அது அவ்வளவு நல்லா இருக்காது. ஆனா, அந்தக் காலத்துல எல்லாம் அவ்வளவு அம்சமா கட்டி இருப்பாங்க. ஏன், இன்னைக்கும் கூட. உதாரணம்: நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பேராசிரியர் க. அன்பழகன். எல்லாம், நாம தாழ்வு நிலை வந்திடும்ன்னு நினைச்சு, நாமாகவே ஒரு தாழ்வு நிலையை உண்டு பண்ணுற காரியங்கள்ல இதுவும் ஒன்னு. நாம, நாமா இருந்தாத்தான் உயர்வு. இன்னைக்கும் பல் நாட்டுக் கலாசாரத்தை உணர்த்தும் படியான விளம்பரங்களில் கனடாவும் சரி, இன்ன பிற நாடுகளும் சரி, வேட்டி சட்டையைத்தான் நிழல் படங்கள்ல காண்பிக்கிறாங்க. ஆகவே, பாரம்பரியம், தனித்துவத்தை விட்டுக் கொடுப்பது முறையல்ல!.

பழமைபேசி said...

//நாமக்கல் சிபி said...
இன்னும் நம்ம ஊர்ல ஏன் இறுக்கமில்லாத கதர் வேட்டி சட்டை அணிகிறோம், அங்கே ஏன் முழுதாக கவர் செய்யும்படி கோட்,சூட், ஷூ அணிகிறார்கள் என்ற வேறுபாடு தெரியாமல் இங்கேயும் ஆஃபீஷியல் டிரஸ் என்ற பெயரில் இன் பண்ணு, ஹூவைப் போடு என்று கொடுமை செய்கிறார்கள்!

அதை என்ன சொல்றீங்க?!
//
புரிந்துணர்வுதான் காரணம். அங்க அவயம் வெளிப்படுற மாதிரி இருந்தா அது அவ்வளவு நல்லா இருக்காது. ஆனா, அந்தக் காலத்துல எல்லாம் அவ்வளவு அம்சமா கட்டி இருப்பாங்க. ஏன், இன்னைக்கும் கூட. உதாரணம்: நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பேராசிரியர் க. அன்பழகன். எல்லாம், நாம தாழ்வு நிலை வந்திடும்ன்னு நினைச்சு, நாமாகவே ஒரு தாழ்வு நிலையை உண்டு பண்ணுற காரியங்கள்ல இதுவும் ஒன்னு. நாம, நாமா இருந்தாத்தான் உயர்வு. இன்னைக்கும் பல் நாட்டுக் கலாசாரத்தை உணர்த்தும் படியான விளம்பரங்களில் கனடாவும் சரி, இன்ன பிற நாடுகளும் சரி, வேட்டி சட்டையைத்தான் நிழல் படங்கள்ல காண்பிக்கிறாங்க. ஆகவே, பாரம்பரியம், தனித்துவத்தை விட்டுக் கொடுப்பது முறையல்ல!.

பழமைபேசி said...

கிட்டத்தட்ட நாம தினமும் பாக்குறதுதான்..... உருளைக்கிழங்கு வத்தல் வெச்சி சாப்பிட்டாத்தான் வெள்ளைக்காரனுக்கு ஒரு திருப்தி. அதுகளை எடுத்துச் சாப்பிட்ட பின்னாடி பொட்டலத்துக்குள்ள ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் விட்டு, மிச்சம் மீதி ஏதாவது அகப்படுதான்னு பாப்பான்.
ஒன்னும் இருக்காது. ஆனா, அந்த உப்பும் காரமும் ரெண்டு விரல்லையும் ஒட்டி இருக்கும். அதப் பாத்துட்டு, ஒவ்வொரு விரலையும் வாயில முழுசுமா விட்டு ஒரு உருஞ்சு உருஞ்சி, அந்த ருசிய அப்படியே அனுபவிப்பான். நாம, அதை தப்பா சொல்லலை. கை கழுவிட்டு சாப்பிட உக்காந்தானா அவன்? இருந்தாலும், நாம அதை சகிச்சுக்குறோம். ஆனா, நம்மாளு நாம பண்ணுறதை சகிச்சிக்க மாட்டேங்குறான். டேய், இது எந்த ஊர் ஞாயம்டா இது?

Dr. சாரதி said...

கடந்த வார இறுதியில் ஒரு அமேரிக்கன் தம்பதியினர் என்னோட வீட்டுக்கு இரவு உணவு உண்ண வந்திருந்தார்கள். அவர்களுக்கு மீன் குழம்பும் பொறித்த மீனும் தயாரித்து கொடுத்தேன். உண்ண ஆரம்பிக்கும் பொது நான் சொன்னேன் கையால் பிசைந்து உண்டால் நன்றாக இருக்கும் என்று, உடனே அவர்கள் கையால் உண்ண ஆரம்பித்விட்டார்கள். அவர்களுக்கு கையால் எப்படி அள்ளி சாப்பிடுவதென்று தெரியவில்லை பின்னர் நான் தெளிவாக சொல்லிகொடுத்தேன் அவர்களும் சந்தோசமாக உண்டார்கள், ஆனால் நம்மூரில் இருந்து பிழைக்க வந்தவர்கள் காட்டும் பந்தாதான் தாங்கமுடியவில்லை.

புருனோ Bruno said...

//இன்னும் நம்ம ஊர்ல ஏன் இறுக்கமில்லாத கதர் வேட்டி சட்டை அணிகிறோம், அங்கே ஏன் முழுதாக கவர் செய்யும்படி கோட்,சூட், ஷூ அணிகிறார்கள் என்ற வேறுபாடு தெரியாமல் இங்கேயும் ஆஃபீஷியல் டிரஸ் என்ற பெயரில் இன் பண்ணு, ஹூவைப் போடு என்று கொடுமை செய்கிறார்கள்!

அதை என்ன சொல்றீங்க!//

உண்மையில் பெரிய கொடுமைங்க

புருனோ Bruno said...

//ஒன்னும் இருக்காது. ஆனா, அந்த உப்பும் காரமும் ரெண்டு விரல்லையும் ஒட்டி இருக்கும். அதப் பாத்துட்டு, ஒவ்வொரு விரலையும் வாயில முழுசுமா விட்டு ஒரு உருஞ்சு உருஞ்சி, அந்த ருசிய அப்படியே அனுபவிப்பான். நாம, அதை தப்பா சொல்லலை. கை கழுவிட்டு சாப்பிட உக்காந்தானா அவன்? இருந்தாலும், நாம அதை சகிச்சுக்குறோம். ஆனா, நம்மாளு நாம பண்ணுறதை சகிச்சிக்க மாட்டேங்குறான்.//

அப்படி போடு.

பழமைபேசி said...

@@@Dr. சாரதி said...

சரியா சொன்னீங்க.... வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க....

பழமைபேசி said...

//புருனோ Bruno said...

அப்படி போடு.
//

வாங்க...வாங்க....

Anonymous said...

நீங்க சொன்னது ரொம்ப சரிங்க. நம்ப முறைப்படி கைல்ல சாப்பிடுவது ரொம்ப
நல்ல முறை.இதுல எந்த கேவலமும் இல்ல.

நாம் கைல சாப்பிடும்போது உணவு எந்த அளவு சூடாக உள்ளது, அதன் தன்மை போன்றவை தெரியும் . கைகளுக்கும் ,விரல்களுக்கும் நல்ல பயிற்சி இதனால் கிடைக்கிறது.

நம்ம பழக்கத்த, பண்பாட்ட
முதல்ல நல்ல புரிஞ்சிக்கனும்.

பழமைபேசி said...

//@@RedLotus said...

நாம் கைல சாப்பிடும்போது உணவு எந்த அளவு சூடாக உள்ளது, அதன் தன்மை போன்றவை தெரியும் . கைகளுக்கும் ,விரல்களுக்கும் நல்ல பயிற்சி இதனால் கிடைக்கிறது.
//

இது நல்ல தகவல்... நன்றிங்க....

சரண் said...

//September 28, 2008 6:48 AM
பழமைபேசி said...
கிட்டத்தட்ட நாம தினமும் பாக்குறதுதான்..... உருளைக்கிழங்கு வத்தல் வெச்சி சாப்பிட்டாத்தான் வெள்ளைக்காரனுக்கு ஒரு திருப்தி. அதுகளை எடுத்துச் சாப்பிட்ட பின்னாடி பொட்டலத்துக்குள்ள ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் விட்டு, மிச்சம் மீதி ஏதாவது அகப்படுதான்னு பாப்பான்.
ஒன்னும் இருக்காது. ஆனா, அந்த உப்பும் காரமும் ரெண்டு விரல்லையும் ஒட்டி இருக்கும். அதப் பாத்துட்டு, ஒவ்வொரு விரலையும் வாயில முழுசுமா விட்டு ஒரு உருஞ்சு உருஞ்சி, அந்த ருசிய அப்படியே அனுபவிப்பான். நாம, அதை தப்பா சொல்லலை. கை கழுவிட்டு சாப்பிட உக்காந்தானா அவன்? இருந்தாலும், நாம அதை சகிச்சுக்குறோம். ஆனா, நம்மாளு நாம பண்ணுறதை சகிச்சிக்க மாட்டேங்குறான். டேய், இது எந்த ஊர் ஞாயம்டா இது?
//

இது சூப்பரப்பு!!!!

பழமைபேசி said...

//
சூர்யா said...

இது சூப்பரப்பு!!!!
//

வாங்க சூர்யா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

vetri said...

பழமை பேசியாரே,

புலம் பெயர்ந்து வாழும் நம்மில் பலர் இந்த அனுபவத்தை (கையால் சாப்பிடும் பழக்கம் குறித்த மேற்கத்தியரின் கேள்விகள்) பெற்றிருக்கிறோம்..

முக்கியமான இந்த சமாச்சாரத்தை பதிந்ததற்கு மிக்க நன்றி!! நண்பர்கள் பலர் தத்தமது அனுபவங்களையும் அருமையாக பகிர்ந்திருக்கிறார்கள்.

இதோ நமது அனுபவம். இது நடந்த போது, அமெரிக்க நாட்டுக்கு அப்போது தான் புதிதாக வந்திருந்தோம். வீட்டிலிருந்து எடுத்து வந்த மதிய உணவை உடன் வேலை செய்யும் மேற்கத்திய நண்பர்களுடன் உணவு அறையில் (Break Room) சாப்பிடத் தயாரானோம். நண்பர்கள் வெளியே கடையிலிருந்து பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை வாங்கி வந்திருந்தார்கள்(நாமும் அவர்களுடன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளச் சென்றிருந்தோம்).

வ‌ழ‌க்க‌ம் போல‌ நாமும் கையை க‌ழுவி விட்டு, சாப்பாட்டை கையால் எடுத்து சாப்பிட‌ ஆர‌ம்பித்தோம்.

ந‌ண்ப‌ர்: wow..wow..wow...that's yucky, why you(Indians) all eat with your hand? Why now use a spoon or fork? Do you think eating with your hand is hygenic?

நாம்: Good questions..these are the answers..
1. We trust our own hands and use it wherever possible than relying on external tools and we carry it all the times
2. No spoon or fork is as flexible as our hands or fingers
3. You saw I washed my hand before eating. But you didn't, and holding that sandwich in your hands, taking the fries with your hands, though you touched so many doors and objects from the shop untill we come here.. hmm...can we talk about hygenic again?

ஆங்கில‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும்..ஆனால், உள்ள‌தை உள்ள‌ ப‌டி சொல்ல‌ அது ப‌ய‌ன் ப‌ட்ட‌து.

வெற்றி

பழமைபேசி said...

//
vetri said...
பழமை பேசியாரே,
//
வணக்கம் ஐயா! நல்ல தகவலை கேள்வி பதிலா அளித்தமைக்கு மிக்க நன்றி!!

பழமைபேசி said...

பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி! நல்லதொரு முயற்சியுடன் அடுத்த வார இறுதி விடுமுறையில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

astle123 said...

என்னைப் போன்ற ஒரு முழு தமிழனை பார்த்த மனநெகிழ்ச்சி!!!

வாழ்த்துக்கள்.

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
-பாரதியார்

பழமைபேசி said...

//வீரன்(Veeran)

வாங்க வீரன்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

ரிஷி (கடைசி பக்கம்) said...

Is it I saw all our people in Singapore not hesitating to eat in hand.

It looks weird. Why your friend confuse with eating habit.

//ஒன்று மட்டும் நிச்சயம்! எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்//

I like it

பழமைபேசி said...

//
@@கடைசி பக்கம் said...
//

வாங்க கடைசி பக்கம்! நன்றிங்க!!

இந்த சொலவடை பிடிச்சிருக்கா? எல்லாம் உங்க சிங்கப்பூர்ல இருந்து வந்ததுதான். விபரங்களுக்கு:

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_6942.html

Anonymous said...

பழமை பேசி, எதையோ பார்த்து சூடு போட்ட கொண்ட கதை தான். நான் கூட சிலர் தோசையை ஸ்பூனில் சாப்பிடுவதை பார்த்து வியந்திருக்கிறேன். அடப்பாவிங்களா நீங்க எல்லாம் எப்படி சாப்டுகிட்டு இருந்தீங்க, இப்போ என்னடா ஸ்பூன் வேண்டி கெடக்கு என்று கேள்வி கேட்டால் வெறும் புன்னகை தான் பதிலாக வருகிறது. என்னத்த பண்ண!

மோகன்

பழமைபேசி said...

//pathivu said...
பழமை பேசி, எதையோ பார்த்து சூடு போட்ட கொண்ட கதை தான். நான் கூட சிலர் தோசையை ஸ்பூனில் சாப்பிடுவதை பார்த்து வியந்திருக்கிறேன். அடப்பாவிங்களா நீங்க எல்லாம் எப்படி சாப்டுகிட்டு இருந்தீங்க, இப்போ என்னடா ஸ்பூன் வேண்டி கெடக்கு என்று கேள்வி கேட்டால் வெறும் புன்னகை தான் பதிலாக வருகிறது. என்னத்த பண்ண!

மோகன்
//

ஆமாங்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!

சிவக்குமரன் said...

நல்லதொரு விவாதம்! நல்லதொரு பதிவு

கண்ணகி said...

மனிதன் பநீங்கள். உங்கள்தம்பி உங்கள் கோபம் எனக்குப் பிடித்திருக்கிறது. போலித்தனமில்லாத ழைய இடுகைகளை இப்போதுதான் படிக்கிறேன். கீப் இட் அப

கண்ணகி said...

தம்பி உங்கள் கோபம் என்க்குப்பிடிதிருக்கிறது. போலித்தனமில்லாத மனிதன் நீங்கள். கீப் இட் அப.