9/06/2008

காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்

வணக்கம்! கடந்த ரெண்டு நாளா வாசகர்களுக்கு பழங்காலத்து அளவு முறைகள் சொன்னோம். இப்ப அந்த அளவு முறைகளை வெச்சு எப்படி கணக்கு போட்டு இருப்பாங்கன்னு பாக்கப் போறோம். அதான் நீங்களே அந்த கணக்கைப் போட்டு விடைய சொல்லப் போறீங்களே?!

புதுசா வந்து இந்த பதிவைப் படிக்குறவங்க, முந்தின பதிவைப் படிச்சுட்டு வந்து கணக்குப் போட்டியில கலந்துக்குங்க.

கணக்கு -1:

காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை வாழைக்காய்?

கணக்கு-2:

ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?


குறிப்பு: உங்க விடைய பின்னூட்டத்துல பதியுங்க.

மவனே, இது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. இப்பத்தான் நண்பர் அனுப்புனாரு. காலத்துக்கு ஏத்த, நெஞ்சைத் தொடுற பாட்டு:

தன்னை வியந்து தருக்கலும்
தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும்
முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமையும்
தன்னை அழிக்கும் படை!


பொருளுரை: பழமை என்ற பெயரில் முன்னோர்களது உழைப்பையும் அதன் பயனான அறிவையும் புறக்கணிப்பது, நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் மூடத்தனமான செயல்.

கெராமத்துல பெரியவங்க சொல்லுவாங்க,
"சாரோலையப் பாத்து குருத்தோலை சிரிக்கப்படாது"ன்னு.

38 comments:

தெய்வசுகந்தி said...
This comment has been removed by a blog administrator.
பழமைபேசி said...

//தெய்வசுகந்தி has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

முயற்சி பண்ணியிருக்கிறேன். சரியான்னு தெரியல!
//

தெய்வசுகந்தி! வாங்க!! வருகைக்கும், பாராட்டுக்கும், முயற்சிக்கும் நன்றி!!!

ரெண்டாவது கணக்குக்கு உங்க விடை சரியான விடை.

rapp said...

:):):)

பழமைபேசி said...

//விடை தரலைன்னாலும் பரவாயில்ல. வருகைப் பதிவேட்டுல உங்க வருகைய பதிவு செஞ்சீங்க பாருங்க... அங்கதான் நீங்க பிரத்யேகம்!!!

இப்னு ஹம்துன் said...

1). ஐயா,
காலே அரைக்கால் என்றால் அரைவீசம் அதாவது 1/32. அதன்படி ஒருகாசுக்கு 128 வாழைக்காய் ஆகிறது.

2). இரண்டாவது வினாவுக்கும் அதே விடை, அதாவது 128 தேங்காய்கள். சரியா?

பழமைபேசி said...

//இப்னு ஹம்துன் has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

1). ஐயா,
காலே அரைக்கால் என்றால் அரைவீசம் அதாவது 1/32. அதன்படி ஒருகாசுக்கு 128 வாழைக்காய் ஆகிறது.

//
வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி! ரெண்டாவது கணக்குக்கான விடை சரி!!

இப்னு ஹம்துன் said...

முதல் வினாவுக்கு விடை 132 வருகிறது

முந்தைய பின்னூட்டத்தை சரிசெய்துகொள்ளுங்கள் ஐயா!

பழமைபேசி said...

//இப்னு ஹம்துன் has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

1). ஐயா,
காலே அரைக்கால் என்றால் அரைவீசம் அதாவது 1/32. அதன்படி ஒருகாசுக்கு 128 வாழைக்காய் ஆகிறது.
//
நீங்கள் கணக்கிடும் முறை சரியானது. ஆனால் கணக்கின் பொருள் கொள்தலில் சிறு மாற்றம் தேவை. சிறு குறிப்பு தருகிறேன், அதை வைத்து முயற்சி செய்யுங்கள்.
ஒருவன் மணி என்ன என்று கேட்கிறான். அடுத்தவன் சொல்கிறான், "மூனே முக்கால்" என்று.

பழமைபேசி said...

//
இப்னு ஹம்துன் has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

முதல் வினாவுக்கு விடை 132 வருகிறது

முந்தைய பின்னூட்டத்தை சரிசெய்துகொள்ளுங்கள் ஐயா!
//

நீங்கள் கணக்கிடும் முறை சரியானது. ஆனால் கணக்கின் பொருள் கொள்தலில் சிறு மாற்றம் தேவை. சிறு குறிப்பு தருகிறேன், அதை வைத்து முயற்சி செய்யுங்கள்.
ஒருவன் "மணி என்ன?" என்று கேட்கிறான். அடுத்தவன் சொல்கிறான், "மூனே முக்கால்" என்று.

பழமைபேசி said...

// rapp said...
:):):)
//

Ayya rapp,

விடை தரலைன்னாலும் பரவாயில்ல. வருகைப் பதிவேட்டுல உங்க வருகைய பதிவு செஞ்சீங்க பாருங்க... அங்கதான் நீங்க பிரத்யேகம்!!!

cheena (சீனா) said...

முதல் கணக்கு : 88
இரண்டாம் கணக்கு : 128

cheena (சீனா) said...

விடைகள் சரியா சொல்லவும்

பழமைபேசி said...

//
cheena (சீனா) has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

//
வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி! ரெண்டாவது கணக்குக்கான விடை சரி!!

பழமைபேசி said...

//
cheena (சீனா) has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

விடைகள் சரியா சொல்லவும்.

//
ரெண்டாவது கணக்குக்கான விடை சரி!!

ஒருவன் "மணி என்ன?" என்று கேட்கிறான். அடுத்தவன் சொல்கிறான், "மூனே முக்கால்" என்று.

மேல சொன்ன குறிப்பை வெச்சி முயற்சி பண்ணுங்க. முதலாவது கணக்குக்கும் விடை கண்டு பிடிச்சுருவீங்க.

தெய்வசுகந்தி said...

காலே அரைக்கால் - 3/8

11 வாழைக்காய்கள்

பழமைபேசி said...

//
தெய்வசுகந்தி has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":


//
கணக்குக்கான விடை சரி!!
நன்றி! வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

muthal vidai : 11 -

அவசரத்தில் ஒரு எட்டு விட்டுப் போய் விட்டது

11 சரியான விடை

பழமைபேசி said...

//cheena (சீனா) has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":

அவசரத்தில் ஒரு எட்டு விட்டுப் போய் விட்டது
//

கணக்குக்கான விடை சரி!!
நன்றி! வாழ்த்துக்கள்!!
அடிக்கடி வந்து கலந்துக்குங்க.... பதிவுகளை படிச்சுப் பாருங்க... கருத்துக்களை பதியுங்க.

ஆயில்யன் said...

கணக்குக்கும் எனக்கும் காத தூரம்!

ஸோ இப்போதைக்கு எண்ட்ரீ போட்டுக்கிறேன்

அப்பாலிக்கா வர்றேன் :))))

பழமைபேசி said...

//
ஆயில்யன் said...
கணக்குக்கும் எனக்கும் காத தூரம்!

ஸோ இப்போதைக்கு எண்ட்ரீ போட்டுக்கிறேன்

அப்பாலிக்கா வர்றேன் :))))
//
விடை தரலைன்னாலும் பரவாயில்ல. வருகைப் பதிவேட்டுல உங்க வருகைய பதிவு செஞ்சீங்க ... வருகைக்கு நன்றி! அப்புறமா வாங்க, விடையப் பதிவு செஞ்சி வெக்கிறேன்.

பழமைபேசி said...

நித்திரை கொள்ள ஆயத்தம். விழித்தெழுந்த பின்பு கணக்குக்கான விடைகளைப் பதிவு செய்கிறேன். அதுவரையில் நீங்கள் உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். நன்றி!
சரியான விடை அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Mahesh said...

1. 16 வாழக்காய்க - 1/32 க்கு 1/2 வாழக்கான்னா 32 x 1/32 க்கு 16 காய்க
2. 128 காய்க - இது 2^n

எப்பிடியெல்லாம் ஒக்காந்து ஓசிக்கிறாங்கன்னு சிரிக்கப்படாது ஆமா சொல்லிப்புட்டேன்.....

பழமைபேசி said...

//Mahesh has left a new comment on your post "காசுக்கு எத்தனை வாழைக்காய்? - புதிர்":
//

ரெண்டாவது கணக்குக்கான விடை சரி!!

ஒருவன் "மணி என்ன?" என்று கேட்கிறான். அடுத்தவன் சொல்கிறான், "மூனே முக்கால்" என்று.

மேல சொன்ன குறிப்பை வெச்சி முயற்சி பண்ணுங்க. முதலாவது கணக்குக்கும் விடை கண்டு பிடிச்சுருவீங்க.

Mahesh said...

அப்போ 1.30க்கே விழித்து எழுந்தாச்சா ? போய் இன்னுங் கொஞ்சம் தூங்குங்க சார்...

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!
ரெண்டாவது கணக்குக்கு எல்லாரும் சரியான விடை அளித்து இருந்தார்கள்.
முதலாவது கணக்குக்கு யாரும் ஒரே தடவையில் சரியான விடை தரவில்லை.
ஏனென்றால், அதில் சிறு தமிழ் விளையாட்டும், புரிந்து கொள் தலும் அடங்கி உள்ளது.
காலே அரைக்கால் என்கிற போது காலையும் அரைக்காலையும் கூட்ட வேண்டும்.
நாலே அரைக்கால் என்கிற போது நாலையும் அரைக்காலையும் கூட்ட வேண்டும்.

இது போன்ற கணக்குகளை அந்தக் காலத்தில் மனக்கணக்காக கிராமங்களில் புழங்கி வந்தார்கள்.

விடை: முறையே 11, 128

Mahesh said...

ஓஓஓஓஓஒ..... நான் 1/4 ஐயும் 1/8 ஐயும் பெருக்கீட்டேன்

பழமைபேசி said...

//Mahesh said...
அப்போ 1.30க்கே விழித்து எழுந்தாச்சா ? போய் இன்னுங் கொஞ்சம் தூங்குங்க சார்...
//

ஆச்சுங்க.... இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தோம்... இனி போக வேண்டியதுதான்...
நாளை சந்திப்போம்.... நாளைய வெளியீடு: அரசூர் அருக்காணி கதை கேளுங்க...

Mahesh said...

நம்ம யாவாரி 5 காய் கொசுறா குடுத்தாரு...ஹி ஹி ஹி

பழமைபேசி said...

@@Mahesh

//ச்சும்மா..... பழங் காலத்து வாழ்க்கை பத்தின சிறு விழிப்புணர்வு.... அவ்ளோதான்......
நான் பாத்து இருக்கேன்.... பெருசுக விட்டுப் பின்னு பின்னுனு பின்னுவாக!

முரளிகண்ணன் said...

கேள்வி கேட்குறதாலதான் இஸ்கூலுக்கு நீங்க போகலை. இங்கயுமா?

பழமைபேசி said...

//
முரளிகண்ணன் said...
கேள்வி கேட்குறதாலதான் இஸ்கூலுக்கு நீங்க போகலை. இங்கயுமா?

//
மனக்கணக்கு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணுமே அப்பா?

ஆதவன் said...

தன்னை வியந்து வெண்பா மனம் கவர்ந்தது.

பழமைபேசி said...

//
ஆய்தன் said...
தன்னை வியந்து வெண்பா மனம் கவர்ந்தது.
//
வருகைக்கு நன்றி ஆய்தன்!

கோவை விஜய் said...

பழந்தமிழர் காலத்துக்கே சென்றது போல் பல அரிய தகவல்கள்.வாழ்த்துக்கள்

கோவை விஜய்

பழமைபேசி said...

//
கோவை விஜய் said...
பழந்தமிழர் காலத்துக்கே சென்றது போல் பல அரிய தகவல்கள்.வாழ்த்துக்கள்

கோவை விஜய்



//வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விஜய்!

Anonymous said...

11 vaalaikai
128 thengai

Mothilal said...

கால் அரைக்கால் = (1/4) + (1/8) = 3/8
நால் அரைக்கால் = 4 + (1/8) = 33/8

= (33/8)÷(3÷8)
= 11
11 கத்தரிக்காய்