9/05/2008

"மாமாங்கம்"னா என்ன?

அளவைகள் பத்தி ரெண்டு பதிவுகள் போட்டோம். ஒன்னு, கூப்பிடு தூரம் என்றால் என்ன? அடுத்தது முக்கோடி என்றால் என்ன? அதோட தொடர்ச்சியா இப்ப, மாமாங்கம்னா என்ன? கொஞ்ச நாளா கெராமத்துக் கதைக எழுத ஆரம்பிச்சு இருக்கோம் பாருங்க. அதுகள்ல, பேச்சு வாக்குல மாமாங்கம்னு வரும். கண நேரத்துலன்னு வரும். அப்ப, இதுகளைப் பத்தின விபரம் இருந்தா நல்லாயிருக்கும். அதான்ங்க! சரி, இனி விபரத்தை பாப்பமா?!

நீட்டல் அளவை

காதம் - 10 மைல்
ஓசனை - 4 காதம்
கல் - 1 மைல் (1609 மீட்டர்)
முழம் - முழங்கை முதல் நடுவிரல் நுனி வரை
சாண் - கட்டை விரல் நுனி முதல் சிறு விரல் நுனி வரை
ஒட்டைசாண் - கட்டை மற்றும் ஆள்காட்டி விரலுக்கும் உள்ள இடைவெளி
சாட்கோல் - சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்- கட்டை விரல் நீளம்
அடி- 12 அங்குட்டம்
காசாகிரம் - மயிர் நுனியளவு
ஆள் - மனிதனுடைய உயரம்
சேன் - உயரம் / நீளம்
உவை - பார்க்கும் தொலைவு

எடுத்தல்

4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
8 பலம் = 1 சேர்
5 சேர் = 1 வீசை
5 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 கண்டி

பொன்னளவை

5 கடுகு = 1 சீரகம்
5 சீரகம் = 1 நெல்
4 நெல் = 1 குன்றிமணி
2 குன்றி மணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
10 பணவெடை = 1 கழஞ்சு

முகத்தல்

260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
2 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி அல்லதி படி
8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
3 தூணி = 1 கலம்
21 மரக்கால் = 1 கோட்டை

18 மரக்கால் = 1 புட்டி
4 (சிறு)படி = 1 வள்ளம்
40 வள்ளம் = 1 கண்டகம்
6 மரக்கால் = மூட்டை ( ஐயத்திற்கு உட்பட்டது)
64 மூட்டை = 1 கரிசை
5 மரக்கால் = 1 பறை
80 பறை = கரிசை

கால அளவு

கற்பம் (கல்பம்) - பிரம்மாவின் ஒரு நாள் - 4,32,00,00,000 வருஷம்
பதுமகற்பம் - பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி - அரை நாழி
கன்னல் (நாழிகை) - 24 நிமிடங்கள்
கணம் - நொடிபோழுது, கண் இமைக்கும் நேரம்
படலம் - செயல் நடக்கும் நேரம்
யாமம் - 3 மணி நேரம் - 7 1/2 நாழிகை
மண்டலம் - 40/41/45 நாள்கள்
மாமாங்கம் - 12 வருடங்கள்

வட்டம் = 5 மாமாங்கம்

இது போக, இனியும் நிறைய அளவு முறைகள் இருந்து இருக்கு. அதுகளை வர்ற காலங்கள்ல பாப்போம்.

29 comments:

துளசி கோபால் said...

ப்ரொஃபைல் படத்துலேச் சின்னப் பையனா இருக்கீங்க. இந்த அளவுக்குப் பழமை விரும்பியா?

நல்ல பதிவு.

பாராட்டுகள்.

பழமைபேசி said...

துளசி கோபால் said...
ப்ரொஃபைல் படத்துலேச் சின்னப் பையனா இருக்கீங்க. இந்த அளவுக்குப் பழமை விரும்பியா?

நல்ல பதிவு.

//மிக்க நன்றி! பழையது பயிலப் பயில பரவசம்!!

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
ப்ரொஃபைல் படத்துலேச் சின்னப் பையனா இருக்கீங்க. இந்த அளவுக்குப் பழமை விரும்பியா?

நல்ல பதிவு.

பாராட்டுகள்.
//
அன்பரே, புகைப்படம் மாற்றப்பட்டு விட்டது. வருகைக்கு நன்றி!

சிக்கிமுக்கி said...

கிடைத்தற்கரிய செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்!

பாராட்டுகள்!

எங்கிருந்து தொகுத்தீர்கள் என்று தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும்.

பழமைபேசி said...

//
சிக்கிமுக்கி said...
கிடைத்தற்கரிய செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்!

பாராட்டுகள்!

எங்கிருந்து தொகுத்தீர்கள் என்று தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும்.

//நண்பரே, இது ஒரு கூட்டு முயற்சி. இங்கு தமிழ்ப் பண்பாட்டுக் குழு ஒன்று உள்ளது. அவர்கள் சேகரித்த தகவலும், என்னுடன் உள்ள குறிப்புகள், புத்தகங்கள் மற்றும் வலையகத்தில் இங்கும் அங்குமாய்ச் சேர்த்ததே இது. பாராட்டுக்கு நன்றி!

கிரி said...

போட்டு தாக்குறீங்க போங்க..

கலக்கல் தகவல் :-)

துளசி கோபால் said...

ஆஹா.....

இது!

நன்றி நண்பரே.

பழமைபேசி said...

//
கிரி said...
போட்டு தாக்குறீங்க போங்க..

கலக்கல் தகவல் :-)

//வாங்க கிரி! உடுமலைக்கு உடுமலை பாராட்டு!! நல்லா இருக்கு!!!

நம்ப மகேசு கண நேரத்துலன்னு எழுத, இந்த பதிவு வர வேண்டியதாப் போச்சு.

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
ஆஹா.....

இது!

நன்றி நண்பரே.
//
உங்கள் சித்தம்! எமது பாக்கியம்!!

Mahesh said...

அய்யோ... இன்னும் இதெல்லாம் மறக்காம் வெச்சுருக்கிங்களே... நமக்கெல்லாம் 10 மில்லி மீட்டர் 1 சென்டிமீட்டர் ங்கற மெட்ரிக் அளவை வாய்ப்பாடே மறந்து போச்சு.

//6 மரக்கால் = மூட்டை
64 மூட்டை = 1 கரிசை
//

இதும்படி பாத்தா 384 மரக்கால் ஒரு கரிசைன்னு ஆகுது

//5 மரக்கால் = 1 பறை
80 பறை = கரிசை
//

இதும்படி பாத்தா 400 மரக்கால் ஒரு கரிசைன்னு ஆகுது
எப்பிடி? எங்கியோ தப்போ?

சுப.நற்குணன்,மலேசியா. said...

தமிழன் கண்ட கணிதமுறைகளை அழகுற இடுகையில் வழங்கியுள்ளீர்கள். இதனையும் இன்று பலர் நம்புவதில்லை. தமிழனுக்கு அறிவே இல்லை என்பதே பலருடைய கருத்து.. ஏன், தமிழர் சிலருக்கும் அதே கருத்துதான்.
தொடர்ந்து எழுதுக>

பழமைபேசி said...

//
//6 மரக்கால் = மூட்டை
64 மூட்டை = 1 கரிசை
//

இதும்படி பாத்தா 384 மரக்கால் ஒரு கரிசைன்னு ஆகுது

//5 மரக்கால் = 1 பறை
80 பறை = கரிசை
//

இதும்படி பாத்தா 400 மரக்கால் ஒரு கரிசைன்னு ஆகுது
எப்பிடி? எங்கியோ தப்போ?

மகேசு, நான்கூட தட்டச்சுப் பிழையோனு நினைச்சேன். ஆனா, குறிப்புல அப்ப்டித்தான் இருக்கு. ஊர்ல விசாரிச்சுட்டு சொல்லுறேன்.
உங்களுக்கு எல்லாம் நன்றி சொல்லணுமா? தொடர்ந்து இந்தமாதிரி நல்ல வேலைய செய்யணும் நீங்க....

பழமைபேசி said...

//
சுப.நற்குணன் - மலேசியா said...
தமிழன் கண்ட கணிதமுறைகளை அழகுற இடுகையில் வழங்கியுள்ளீர்கள். இதனையும் இன்று பலர் நம்புவதில்லை. தமிழனுக்கு அறிவே இல்லை என்பதே பலருடைய கருத்து.. ஏன், தமிழர் சிலருக்கும் அதே கருத்துதான்.
தொடர்ந்து எழுதுக>
//
அப்படி எல்லாம் இல்லீங்க ஐயா! தமிழ் ஆதி மொழிகளில ஒன்னு. அறிவால் உலகத்தையே வலம் வந்தவர்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஹா...சின்னப்பையன் புரொபைல் படம் மனதுக்குள் நிற்கிறது. அதே முகம்...இரண்டையும் சேர்த்துப் போட்டுவிட்டால் நல்லாருக்கும்...

இடுகையில் இப்போது தமிழின் அளவீடுகளைப் பதிகிறீர்கள். எங்கள் ஊரில் விவசாயிகள் சிலர் இன்னமும் இவ்வகையான அளவீடுகளைப் பாவிப்பார்கள். அனைவருக்கும் மீண்டும் நினைவுபடுத்துகிறீர்கள். நல்லது..

பழமைபேசி said...

//
மதுவதனன் மௌ. said...

//மதுவதனன் வாங்க... உங்களைக் காணவில்லைன்னு புகார் செய்ய இருந்தேன். நிறைய பதிவுகளை நீங்க படிக்கலை. படிச்சுட்டு கருத்துகளைச் சொல்லுங்க.

பழமைபேசி said...

////
மதுவதனன் மௌ. said...
ஹா...சின்னப்பையன் புரொபைல் படம் மனதுக்குள் நிற்கிறது. அதே முகம்...இரண்டையும் சேர்த்துப் போட்டுவிட்டால் நல்லாருக்கும்...//

உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டு விட்டது! :-)

பழமைபேசி said...

//சிக்கிமுக்கி said...
கிடைத்தற்கரிய செய்திகளைத் தந்திருக்கிறீர்கள்!

பாராட்டுகள்!

எங்கிருந்து தொகுத்தீர்கள் என்று தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும்.
//

//பழமைபேசி said...
//தமிழநம்பி said...
இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

அதையும் குறிப்பிட்டிருக்கலாமே!
//
இந்த விபரங்களை உடுமலை பழனி வேலனார் புத்தகத்தில் இருந்து படித்ததாக என் வீட்டார் சொல்லக் கேள்வி. நீங்கள் கூறிய பயனுள்ள தகவலையும் பதித்து விடுகிறேன். முடிந்தால் அது எங்கு கிடைக்கும் என்ற தகவலை தெரியப்
படுத்துங்கள். பிரதி ஒன்றைப் பெற மிகவும் ஆவல். மிக்க நன்றி!

தெய்வசுகந்தி said...

இதுல நிறைய அளவுகள், நான் சின்ன வயசுல எங்க அப்பாரைய்யன் சொல்லி கேட்டிருக்கிறேன். வள்ளம் மரக்கால் எல்லாம் ஊருல கடலைமுத்து அளக்கறப்ப உபயோகிச்சு இருக்கோம்.

ஆனா இப்படி எல்லா அளவும் தெரியாது. தொகுத்து கொடுத்ததுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள். தொடருங்கள்.

பழமைபேசி said...

//
தெய்வசுகந்தி said...
இதுல நிறைய அளவுகள், நான் சின்ன வயசுல எங்க அப்பாரைய்யன் சொல்லி கேட்டிருக்கிறேன். வள்ளம் மரக்கால் எல்லாம் ஊருல கடலைமுத்து அளக்கறப்ப உபயோகிச்சு இருக்கோம்.

ஆனா இப்படி எல்லா அளவும் தெரியாது. தொகுத்து கொடுத்ததுக்கு நன்றி.
//
ஆமுங்க... எங்க அப்பிச்சி பருத்தி எல்லாம் பொதி, மனுவுன்னு யாவாரிகளுக்கு தராசுல நிறுத்தி போடுவாரு...

மிக்க நன்றி!
மத்த பதிவுகளையும் படிங்க! ஆதரவு குடுங்க!! விபரத்தை மத்தவங்களுக்கும் சொல்லுங்க. தமிழ் வாழ்க!!!!

துளசி கோபால் said...

பின்னூட்ட சுவாரசியத்துலே முக்கியமான ஒன்னைக் கோட்டை விட்டுட்டோமோ?

மாமாங்கம்= 12 வருட காலம்.

சரியாங்க?

பழமைபேசி said...

//
துளசி கோபால் said...
பின்னூட்ட சுவாரசியத்துலே முக்கியமான ஒன்னைக் கோட்டை விட்டுட்டோமோ?

மாமாங்கம்= 12 வருட காலம்.

சரியாங்க?
//
சரிதானுங்க... நீங்க, "பழமை விரும்பியா?"னு கேட்டீங்க.... யாரோ நல்லா பாடின பாட்டு... உங்களுக்காக:

இது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. இப்பத்தான் நண்பர் அனுப்புனாரு. காலத்துக்கு ஏத்த, நெஞ்சைத் தொடுற பாட்டு:

தன்னை வியந்து தருக்கலும்
தாழ்வின்றிக் கொண்ணே வெகுளி பெருக்கலும்
முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமையும்
தன்னை அழிக்கும் படை!

பொருளுரை: பழமை என்ற பெயரில் முன்னோர்களது உழைப்பையும் அதன் பயனான அறிவையும் புறக்கணிப்பது, நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் மூடத்தனமான செயல்.

துளசி கோபால் said...

சரியாத்தான் சொல்லி இருக்காங்க. எல்லாம் அனுபவம் பேசுனது.

நானும் ஒருவிதப் பழமை விரும்பிதான்.

ஆண்ட்டீக் பைத்தியம். முக்கியமா பழங்கால நகை, சித்திரம் இப்படி.....

பழமைபேசி said...

@@துளசி கோபால்

உங்க தகவலுக்குத்தான் அந்தப் பாட்டு.... நீங்க தப்பா எடுத்துக்கப் போறீங்க?! அடிக்கடி வந்து போங்க!
நன்றி!

பழமைபேசி said...

//அப்படிப் போடுங்க.... நொம்ப சந்தோசம்... கொஞ்ச நேரத்துல நான் ஆடிப் போய்ட்டேன். ஏன்னா, மறு பக்கத்துல எப்படி எடுத்துக்குறாங்கன்னு சின்ன பயம்.
நொம்ப சந்தோசம்

Arizona penn said...

pazhamai pesi, ungalukku en vaazhthukkal....ippadi pazhaiyya kaala alavu muraigalai therinthu kolvathu migavum payanulladhaaga irukkirathu !!!!!

பழமைபேசி said...

//
selwilki said...
pazhamai pesi, ungalukku en vaazhthukkal....ippadi pazhaiyya kaala alavu muraigalai therinthu kolvathu migavum payanulladhaaga irukkirathu !!!!!
//
மிக்க நன்றி!
மத்த பதிவுகளையும் படிங்க! ஆதரவு குடுங்க!! விபரத்தை மத்தவங்களுக்கும் சொல்லுங்க. தமிழ் வாழ்க!!!!

Unknown said...

அய்யா தகவல் அறிந்தேன் மிகவும் மகிழ்ந்தேன்

தயவுகூர்ந்து என்னை உங்கள் குழுவில் இணைக்கவும்

Unknown said...

9543055554