இது நமக்கு நூறாவது பதிவுங்க! அந்த நூறாவது பதிவுல முக்கோடி பத்தின விபரத்தை பதிய வெக்கிறதுல பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளுறேனுங்க. சரி, இனி விபரத்தை பாப்பமா!
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம்(இலட்சம்) -hundred thousand
1000000 = பத்து இலட்சம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one quatrillion
10000000000000000 = வெல்லம் -ten quatrillion
100000000000000000 = அன்னியம் -hundred quatrillion
1000000000000000000 = அர்த்தம் - quintillion
10000000000000000000 = பரார்த்தம் — ten quintillion
100000000000000000000 = பூரியம் -hundred quintillion
1000000000000000000000 = முக்கோடி - one sextillion
10000000000000000000000 = யுகம் -ten sextillion
100000000000000000000000= பத்து யுகம் -hundred sextillion
1000000000000000000000000= நூறு யுகம்- septillion
10000000000000000000000000= ஆயிரம் யுகம்- ten septillion
100000000000000000000000000= மகாயுகம்- hundred septillion
சரி, இதுக்கு மேலயும் நாம ஒன்னுக்கு ஒன்னுங்ற அடிப்படைல விபரம் தந்தா வாசிக்றவங்க அடிக்க வந்துடுவாங்க. ஆனாலும், இரத்தின சுருக்கமா எனக்குத் தெரிஞ்சதை கீழ குடுத்து இருக்கேன். ஆங்கிலமுறை(U.S) மொதல்ல. ஆங்கில முறைல, அமெரிக்காவுல ஒரு மாதிரி; மத்த நாடுகள்ல ஒரு மாதிரி. இங்க நாம குடுத்து இருக்குறது, அமெரிக்க ஆங்கில முறை.
..., octillion, nonillion, decillion, undecillion, duodecillion, tredecillion, quattuordecillion, quindecillion, sexdecillion, septendecillion, octodecillion, novemdecillion, vigintillion and centillion.
சரி, அதுக்கு ஈடா நம்ம பெரியவங்க வெச்ச அலகு என்ன? ரொம்ப சுலபமுங்க....
....மகாயுகம், நூறு மகாயுகம், ஆயிரம் மகாயுகம், இலட்ச மகாயுகம், கோடி மகாயுகம், அண்டம், நூறு அண்டம், ஆயிரம் அண்டம், ..., ..., ... பிரபஞ்சம்.
இப்ப நாம குடுக்கப் போறது, அமெரிக்க ஆங்கில முறைக்கும் வேறநாட்டு ஆங்கில முறைக்கும் உண்டான ஒரு ஒப்பீடு:
Number of zeros | U.S. & scientific community | Other countries |
3 | thousand | thousand |
6 | million | million |
9 | billion | 1000 million (1 milliard) |
12 | trillion | billion |
15 | quadrillion | 1000 billion |
18 | quintillion | trillion |
21 | sextillion | 1000 trillion |
24 | septillion | quadrillion |
27 | octillion | 1000 quadrillion |
30 | nonillion | quintillion |
33 | decillion | 1000 quintillion |
36 | undecillion | sextillion |
39 | duodecillion | 1000 sextillion |
42 | tredecillion | septillion |
45 | quattuordecillion | 1000 septillion |
48 | quindecillion | octillion |
51 | sexdecillion | 1000 octillion |
54 | septendecillion | nonillion |
57 | octodecillion | 1000 nonillion |
60 | novemdecillion | decillion |
63 | vigintillion | 1000 decillion |
66 - 120 | undecillion - vigintillion | |
303 | centillion | |
600 | centillion |
6 comments:
ஆவ்வ்வ்....(கொட்டாவி தாங்க)...
வாழ் நாள் முழுக்க ஒவ்வொரு நொடியா எண்ணிணா கூட இந்த எண்களை எட்ட முடியாது போல இருக்கே...இப்பவே கண்ண கட்டுதடா சாமீ....
'எண்' பாண்டியன்
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
இத படிச்சு முடிக்கறதுக்குள்ள ஒரு யுகம் போன மாதிரி இருக்கு. என்னமோ போங்க.... இதெல்லாம் படிச்சப்பறம் நம்ம சம்பளத்துல இருக்கற சைபருக்கெல்லாம் மதிப்பே இல்ல...
//
Mahesh said...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
இத படிச்சு முடிக்கறதுக்குள்ள ஒரு யுகம் போன மாதிரி இருக்கு. என்னமோ போங்க.... இதெல்லாம் படிச்சப்பறம் நம்ம சம்பளத்துல இருக்கற சைபருக்கெல்லாம் மதிப்பே இல்ல...
//
மகேசு,
ஒரு பதிவை பதிஞ்சுவிட்டா மட்டும் அது முடிஞ்சு போறது இல்ல. படிச்சுப் பாத்து, அதை சரியா கையாளவும் வேணும். அப்பத்தான அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு. அந்த வகைல நான் உங்களுக்கு நொம்ப நன்றி சொல்லணும். விட்டுப் பின்னுறீங்களே! நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆமா இப்பொதான் மறுபடி படிக்கும்போது பாத்தேன்..
//
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
//
Zillion ன்கறது ஒரு சொல்ல முடியாத அளவற்ற எண்கறத சொல்றதுக்கு உபயோகிக்கலாம். அது ஒரு உருவக வார்த்தை. உண்மையில கிடையாதுன்னு நெனக்கிறேன். Quatrillionங்கிறது (quatre=4 in Latin)தான் சரியா இருக்கும்னு தோணுது. கீழ ஆங்கில முறையை சொல்லும்போது சரியா எழுதியிருக்கீங்க.
//
//
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
//
Zillionன்கறது ஒரு சொல்ல முடியாத அளவற்ற எண்கறத சொல்றதுக்கு உபயோகிக்கலாம். அது ஒரு உருவக வார்த்தை. உண்மையில கிடையாதுன்னு நெனக்கிறேன். Quatrillionங்கிறது (quatre=4 in Latin)தான் சரியா இருக்கும்னு தோணுது. கீழ ஆங்கில முறையை சொல்லும்போது சரியா எழுதியிருக்கீங்க
//
வாங்க மகேசு வாங்.... இன்னும் உள்ளதான் இருக்கீங்களா? இதுல இருந்து என்ன தெரியுது? நம்ப மகேசு இருக்கும் போது, தைரியமா இருக்கலாம்னு தெரியுது.சரியாத் திருத்தராறே பிழைய?! நொம்ப நன்றிங்க!!
உபயோகமானதாக உள்ளது மேலும் இதை இந்திய ரூபாயின் மதிப்பில் கொடுத்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்
Post a Comment