9/01/2008

கனவில் கவி காளமேகம் - 3

வணக்கம்! ரெண்டு மூணு நாளா நம்ம கனவுல வராத கவி காளமேகம், இன்னைக்கு வந்தாருங்க. வந்தவரு, வழக்கம் போல நலம் விசாரிச்சுட்டு பேரனுக்கு ஆப்பு வெக்க ஆரம்பிச்சுட்டாரு. அதை அப்படியே உங்களுக்குக் கீழ குடுத்து இருக்குறேன்.

"பேராண்டி, உணர்வும் உணர்ச்சியும் ஒன்னா, வேற வேறயா?"

"எனக்கு இது தெரியுமே? வேற வேற!"

"அப்படியா? விபரமா சொல்லு பாப்போம்"

"உணர்வு வந்து உடல் ரீதியா நடக்குறது. உணர்ச்சிங்கிறது மனசு சம்பந்தப்பட்டது. சரியா?"

"சரியாச் சொன்னடா பேராண்டி! உணர்வுகள்னா என்ன, என்ன?"

"வாய், கண், மூக்கு, காது, உடல் வழியா ஏற்பாடுற உணர்வுகள்தான்!"

"அப்ப உணர்ச்சிகள்?"

"நீங்களே சொல்லுங்க"

"நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகைன்னு ஆக மொத்தம் எட்டு"

"இளிவரல், மருட்கை இந்த ரெண்டும் வெளங்கலை!"

"அப்படிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ! இளிவரல்னா வருத்தம். மருட்கைனா பெருமை!! இப்ப புரியுதா?"

"புரியுது தாத்தா!"

"இப்படி, மனசுல ஏற்பாடுற உணர்ச்சிகளை உடம்புல காமிக்கறதை மெய்ப்பாடுன்னும் சொல்லுவாங்க. "

"நீங்க, எட்டுதான் சொன்னீங்க. அப்ப நவரசம்னு சொல்லுறாங்குளே அது?"

"அடே, நாங்க இந்த எட்டுல ஒன்னு ஒன்னுக்கும் நாலு உட்பிரிவுன்னு மொத்தம் முப்பத்து ரெண்டு வகை உணர்ச்சிகளை எங்க காலத்துல வெச்சி இருந்தோம். அது பின்னாடி ஒன்பது வகையா சுருக்கி இருக்காங்க. அந்த ஒன்பதுதான், சிரிப்பு, அழுகை, ஏளனம், வியப்பு, பயம், வீரம், மகிழ்ச்சி, கோபம், சாந்தம்ங்றது."

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

2 comments:

Mahesh said...

நல்லாத்தான் வெளக்கியிருக்காரு... நல்லவேளை உங்க கனவுல கலைஞருக்கு வர மாதிரி அண்ணாவோ, பெரியாரோ அடிக்கடி வரதில்ல.... வந்தா என்னென்ன வெளக்குவாங்களோ :))))

பழமைபேசி said...

Mahesh said...
நல்லாத்தான் வெளக்கியிருக்காரு... நல்லவேளை உங்க கனவுல கலைஞருக்கு வர மாதிரி அண்ணாவோ, பெரியாரோ அடிக்கடி வரதில்ல.... வந்தா என்னென்ன வெளக்குவாங்களோ :))))


//அவங்க எழுதின புத்தகங்க படிச்சா, அவிங்களும் வந்தா வரலாம்......