கி. மு. காலத்தில் இலங்கையை ஆண்ட 'ஏலேல' என்ற தமிழ் மன்னனைப்பற்றி, பலவிதமான கதைகள் சொல்வார்கள்('ஏலேலோ' என்று இப்போதும் மீனவர்கள் பாடும் கீதம், இந்த அரசனைப்பற்றிய வாழ்த்துதானாம்). சுவாரசியமான இந்தக் கதைகளில் ஒன்று - அவன் மழையைத் தடுத்து நிறுத்தியதாகச் சொல்கிறது.
நாமெல்லாம் மழைக்கு ஏங்கிக்கொண்டிருக்கையில், இந்த அரசன் ஏன் மழையைத் தடுக்கவேண்டும்? அதற்குக் காரணம் ஒரு கிழவி. அந்தக் கிழவி, தன் வீட்டுக்கு வெளியே வெய்யிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாளாம். அப்போது திடீரென்று மழை பெய்து, காய வைத்த அரிசியை, மீண்டும் நனைத்துவிட்டது.
'இந்த மாதத்தில் மழை பெய்வது வழக்கமில்லையே', என்று புலம்பிய அந்தக் கிழவி, நேராக ஏலேல மன்னனின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறாள், 'ராசா, உன் ஆட்சியில இப்படிக் கண்ட நேரத்திலே மழை பெய்யுதே, இது என்ன நியாயம்? நனைந்துபோன என் அரிசிக்கு என்ன பதில்?', என்று முறையிட்டிருக்கிறாள்.
இதைக் கேட்ட அரசருக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது. 'இயற்கையைக் கட்டுப்படுத்துவது அரசரின் அன்றாடப் பணிகளில் இல்லைதான். என்றாலும், என் பிரஜைகளில் ஒருவர் இப்படி வருத்தப்படுகிறாரே, அதற்கு நான் ஏதேனும் செய்தாகவேண்டுமே!', இப்படிப் பலவிதமாய் யோசித்துக் குழம்பிய அரசன், நிச்சயமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல், தன்னுடைய குலதெய்வத்தை நினைத்து தவத்தில் அமர்ந்துவிட்டான்.
சிறிது காலம் கழிந்தது. அரசனின் உறுதியை மெச்சிய தெய்வம், அவனுக்குமுன்னே தோன்றி, 'என்னப்பா வரம் வேண்டும்?', என்று கேட்க, அரசன் விசயத்தைச் சொன்னான். அந்த தெய்வம், மழைக்கான தெய்வத்தை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் நிறைவாக, 'இனிமேல், உரிய காலத்தில்தான் மழை பெய்யவேண்டும்', என்று முடிவுசெய்யப்பட்டது.
ஆகவே, ஏலேல மன்னன் ஆட்சி செய்த காலம்வரை இலங்கையில் கண்ட நேரத்தில் மழை பெய்யாதாம். வாரம் ஒரு முறை, அதுவும் இரவில் மட்டும் பெய்யுமாம். தண்ணீருக்குத் தண்ணீர், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லை. இதைப் போற்றும் விதமாக மீனவர்கள் 'ஏலேல' என்று சொல்லி மன்னனை வாழ்த்திய வண்ணம், படகு செலுத்துவது வாடிக்கை ஆனது.
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்குச் சாத்தியமான உண்மையெனத் தெரியலீங்க.காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.
//ஏலேல மன்னன் செய்தி எனக்குப் புதிது.கதை எந்தளவுக்குச் சாத்தியமான உண்மையெனத் தெரியலீங்க.காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.//
சீக்கிரமே காளமேகர் சரக்கு ஒன்னு எழுதிடுவோம்.....
http://kathalukai.blogspot.com/
கதை நல்லாருக்கு
@ராஜ நடராஜன்,கதையை அனுபவிக்கணும் ஆராயக் கூடாது :-) கதைனாலே நடந்தது இல்ல தானே :-) தப்புன்னா மெதுவா கொட்டுங்க
எங்கேயோ கேட்ட மாதிரியா இருக்குதேன்னு படிச்சுகிட்டே வந்தா பின்னூட்ட திண்ணையில உட்கார்ந்து நாம பேசிகிட்ட பழமதான் இது:)
நாங்க நெனச்சது என்னவோ ஒடம்பு சோர்வ போக்குறதுக்காக அவங்க இப்படி செய்றாங்கன்னு !
இவ்வளவு சரியான விளக்கம் யார்கிட்ட இருந்து ?
///சீக்கிரமே காளமேகர் சரக்கு ஒன்னு எழுதிடுவோம்.....///
அதை கேக்கதான காத்துகிட்டு இருக்கோம்.
அந்த காலத்திலெ எப்படியெல்லாம் கதெ வுடறாங்கப்பா...
மக்களே, இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்னாடி விகடன்ல படிச்சதா நினைவு...அதுவும் மதன் அவர்கள் எழுதினதின்னு நினைக்குறேன்!
கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண்ணே... படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்...
//கபீஷ் said...
கதை நல்லாருக்கு //
வாங்கோ, நெம்ப நாளைக்கு அப்புறம் வாரீங்க...இஃகிஃகி!
//@ராஜ நடராஜன்,கதையை அனுபவிக்கணும் ஆராயக் கூடாது :-) கதைனாலே நடந்தது இல்ல தானே :-) தப்புன்னா மெதுவா கொட்டுங்க
//
அதான? நீங்க சொன்னாச் செரியா இருக்கும்!
ஏலேல மன்னனுக்கு எல்லாளன் என்றும் பெயர் இருக்கிறது.
இலங்கையில் எல்லாளன் என்று தான் சொல்வோம்.
கி.மு.205 - 161 இல் இலங்கையை ஆண்ட மன்னன்
வாசலில் ஆராய்ச்சி மணி கட்டி வைத்து ஆட்சி செய்த மனு நீதிச்சோழன் கதை உண்மையோ தெரியவில்லை.
ஆனால் எல்லாளன் வாசலில் மணி கட்டிவைத்து நீதி தவறாத ஆட்சி செய்ததாக வரலாறு.
நீங்கள் கூறிய கதையில் பாதி சரித்திரத்தில் இருக்கிறது.
மன்னனிடம் ஒரு பாட்டி "அரிசி மழையில் நனைந்ததுக்காக முறையிட்டதாக படித்துள்ளேன்".
உங்களது பகிர்வுக்கு நன்றி.
அண்ணே அப்படியே பாட்டி வடை சுட்ட கதையும் சொல்லுங்க
தூங்கிகிட்டுருந்த பதிவு எகிறுது எகிறுது:)
பிரசவத்துக்குத்தான் மாசக்கணக்கின்னா பதிவுக்குமா?
//Sriram said...
கெளம்ப வேண்டிய நேரம் ஆயிடுச்சு அண்ணே... படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்...
//
பகிர்வுக்கு நன்றி!!!
வட சுட்ட பாட்டி வேற யாரும் இல்ல அண்ணா. நம்ம ஔவையர் அந்த காலத்துல இன்னமா வட சுடுவனாக தெரியுமா -Nithy Toronto
Paatti vadai sutta kathai:
http://australianbookkeeper.blogspot.com/2009/01/blog-post_01.html
இப்பவும் இலங்கையில மழை பெய்யுது....சிகப்பு கலர்ல :((
//காளமேளப் புலவர் சரக்கு ஒன்றை எடுத்து விடுங்க பார்க்கலாம்.
//
ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே யிறையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும்
உற்றிடு பாம்பெல்லெனவே யோது.
அய்யய்யோ ஆர்வக் கோளாறுல ...நர்சிம் அண்ணே பழமைபேசி அண்ணே மாதிரி பெரிபெரி ஆளுங்க இருக்கசொல்ல நா கூவிட்டேன்.
பொன்னியின் செல்வனில் ஏலேல சிங்கன் வரலாறு வருகிறதே,படித்திருக்கிறீர்களா?
அன்புள்ள வலை நண்பர்களே,
இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto
இங்க தமிழக அரசு கூட தாறு மாறா தண்ணியை விற்காம டாஸ்மாக் நடத்தி விற்பனை செய்கிறது. அதுக்கும் இந்த எலேலா சொல்லிடலாமுள்ள அண்ணே
அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு பொண்டாட்டியோ?
//Eezhapriya said...
அப்போ ஐலசா யாருங்ணா? அந்தாளு பொண்டாட்டியோ?
//
இல்லங்க, அது வந்து அரசன் ஐலவிலன்மகள். அவிங்கதான் மீனவர்களுக்காக பரிந்து பேசினவங்க....
அடங்ங்ங் .. கொக்க மக்கா .. சரி.. ஆராய்ஞ்சு பார்ப்போம்!
நல்ல கதைதான். இப்ப அந்த மன்னன் மாதிரி வேந்தர்கள் இருந்தால்.......
Post a Comment