3/27/2013

நான் வித்யா!

யோகா கிளாசுக்கு
பாரதி நகர் போயிருக்கும்
அம்மாவுக்குத் தெரியாமல்
தாத்தாவுக்கு காப்பி
போட்டுக் கொடுக்கிறாள்
தாயம்மா பாட்டி!
அந்த மாமாவிடம்
இனிமேல் இங்கு
வர வேண்டாமென்று
சொல்லி அழும்
சின்னமணி அக்காவுக்கு
கன்னத்தில் நல்ல அறை!!
சாக்கடையில்
தவறி விழுந்த
பிரவீணாவுக்கு
கைகால் கழுவிவிட்ட
பிச்சைக்காரத் தாத்தாவை
பிடித்துக் கொண்டு
போகிறது போலீசு!
சதர்ன் மில்
முரளி அண்ணனுக்கு
ஷிப்ட் மாறினது தெரியாமல்
மொட்டை மாடிக்குப் போகும்
மெளலி மாஸ்டர் வீட்டு
சந்திரகலா அக்கா!
மேரி மிஸ்ஸுடைய
செல்போனில் ரீடையல்
போட்டுப் பார்த்ததில்
அது எங்க ஸ்கூல் பஸ்
டிரைவர் அண்ணன்தானாம்
பிடீ பிரியடில் சொன்னான்
த்ரீ ஏ தினேஷ் குமார்!
அம்மாவிடம் சொல்லி
பெர்மிசன் வாங்க வேண்டும்
என்னுடைய ஸ்கூல் டே
பெர்பாமன்சுக்கு ட்ரீட்
ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
ஆமாம் நான் இன்றைக்கு
கலைமகள் வித்யாலயா
பிரைமரி ஸ்கூலில்
ஒன் சீ படிக்கும் வித்யா!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ட்ரீட்...?

இப்போதே நல்ல ஆரம்பம்...!

சீராளன்.வீ said...

மிக நன்றாய் நடைமுறையில் நடப்பதை உணர்வு பூர்வமா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்