நான் இப்பத்தான் வேலையால இருந்து வந்த நான். வந்ததும், நம்ம தமிழ்நாட்டுப் பொடியன்கள் என்ன விசர்க்கதை கதைக்குறாங்களென்டு, கொம்ப்யூட்ர்ல இருந்து பார்க்க வெளிக்கிட்ட நான்?
எனக்கு இந்த கூகுள்காரண்ட பஸ், நல்ல தமிழ்ல சொல்ல வெளிக்கிட்டால் இமிழ்தி! அந்த இமிழ்தியில போயிப் பார்த்தால்டப்பா, ஊர்க்கதைகளும், பகடிக்கதைகளும், கூத்தாடிகள்ன்ட சினிமாக் கதைகளும், பெட்டைகள்ட்ட பிடிபட்டு அடி உதை வாங்கி வாற கோதாரிக்கதைகள் என்டும் கணக்கக் கதைக்கினும் நம்ம தமிழ்ச் சனம்.
எனக்கு எங்கட ஊர்ச் சந்தைதான் ஞாவகத்துக்கு வருமென்ன? சங்கானைச் சந்தையில கிடைக்காதது எதுவுமுண்டே? சந்தைக்கு வாற சனமெல்லாம் இருந்து, நாலாபொறத்துக் கதைகளும் கதைப்பாங்களென்ன? அது போலத்தான்... இவிங்களண்ட கதைகளும்.
சில நேரங்கள்ல விசர்க்கதைகளும் கதைச்சிக் கொழுவிக் கொள்றாங்கள் பொடியங்கள். அதுல பெட்டைக நல்ல சூட்டிப்போட இருக்கினம். சொல்ல வெளிக்கிடுற விசியத்தைடாப்பா, வாழப் பழத்துல ஊசியேத்துறாப் போலச் சொல்லிட்டு அந்தக் கெடையுட்டுப் போயிருவாங்களென்ன பெட்டைகள்? நான் இதைப்பத்திக் கண நாளா யோசிச்சன். எங்கியும் போயி வாய் குடுக்குறதை நிப்பாட்டினன். ஊரு வம்பு நமக்கெதுக்கு, என்ன சொல்றீயள்?
அதுலயும் பாருங்கோவன். சில பொடியங்களுக்கு அது வடிவா விளங்கல . . . அவைக்கு இமிழ்தியில மற்றவங்கள் என்ன கதைக்கிறாங்கள் எண்டு விடுப்பு பார்க்கத்தான் தெரியும்.
அந்தக் கதைகளுக்கு நடுப்புலயும் ஒரு பொடியன் நல்ல கேள்வி ஒன்டு கேட்டு வெச்சவன். ஏன், நம்ம தமிழ்ச்சனம் ‘ரொறன்ரோ’, ”றோட்டில”, “கூல் றிங்க்” என்டெல்லாம் எழுதுறாங்கள் என்டு கேட்டு வெச்சவன்.
நாம அதைப்பத்திக் கதைக்குறதுக்கு முன்னாடி, எழுதுறவர் எழுத, வாசிக்கிறவர் எப்படிச் சரியா விளங்கிக் கொள்றார் என்டதை எல்லாரும் கருத்துல கொள்ள வேணும். அப்பத்தான் அதுல இருக்குற ஒரு ஒழுங்கு புடிபடுமென்ன? நம்மட ஆட்கள்டாப்பா, சும்மா போற போக்குல எதையோ எழுதலையென்ன?!
சரி, இனி விசியத்துக்கு வருவம். தமிழ் எழுத்துக்கான ஒலிப்பு, அந்த எழுத்துல இருந்து எப்ப மாறுபட்டு நிக்கிது எண்டு பாப்பம். தமிழ் எழுத்துகளால, தமிழ்ச் சொற்களை எழுதைக்க எந்த மாறுபாடும் நாம கொள்றது இல்லை. உலகம் முழுமைக்கும் ஒன்டு போலத்தான் எழுதுறம். அதே போலத்தான் வாசிக்கிறம்.
உதாரணத்துக்கு, ஆற்றல், கடல், கடலோரம், வளர்ச்சி, இப்படி எந்த தூய தமிழ்ச் சொல் என்டாலும் ஒரே ஒலிப்புத்தான்.
பிறகு எங்க குழப்படி? ஆங்கிலச் சொற்களை எழுத வெளிக்கிடும் போதுதான் தமிழ்நாட்டுச் சனங்களுக்கு குழப்பம் வருதென்டு சொல்றாங்கள். ஆக, வடிவா விளங்கிக் கொள்ளுங்க படிக்கிற சனமெல்லாம்! ஆங்கிலச் சொல் எழுதைக்குத்தான் குழப்பம்.
ஏனப்படி? இப்ப நாம விளங்கப் பண்ணுறது ஆங்கிலச் சொற்களுக்கு மட்டுமே. அதை நல்லா கவனத்துல கொள்ள வேணுஞ் சரியே?!
Canada - கனடா
da - இந்த ஒலிப்பை ‘டா’ என்டு நம்ம சனம் எழுதுவினம். அதுனாலத்தான், அது கனடா.
darling - டார்லிங்
TaTa - ராரா
ta - ரா.
இதுல தமிழ்நாட்டுச் சனம் குழம்புது என்ன? நாங்க ஒலிக்கைக்க, ta என்டு ஆங்கில ஒலிப்புத்தான் ஒலிக்கிறோம். ‘ரா’ன்டு இருக்குற தமிழ் வரிவடிவத்தோட ஒலிப்பு நாங்க ஒலிக்கல்லே!! சரி! ஏனிப்படி?? ஏனென்டால், சரியான ஆங்கில ஒலிப்பைத் தமிழ் வரிவடிவத்துல கொண்டு வரத்தான். நாங்கள், தமிழ்நாட்டு ஆட்கள் ‘டொரோன்டோ’ என்டு எழுதைக்க, Dotondo' என்டு வாசிச்சுச் சிரிக்கிறமென்ன??
இப்ப, பாருங்க. tire என்ட ஆங்கிலச் சொல்லை, தமிழ்ல ’ரயர்’ என்டு தமிழ் எழுத்துல வாசிக்கக்குள்ளையும் அதே ஒலிப்புல வாசிக்கிறம் நாங்களென்ன??
உடனே ஒரு கேள்வி எழுமென்ன? ‘ரா’ங்குற தமிழ் எழுத்தை. ‘ta'ங்ற ஆங்கில ஒலிப்புக்குக் கடன் குடுத்தாச்சு. ஆங்கிலத்துல வாற ‘ra'ங்ற ஒலிப்புக்கு என்ன செய்வீங்கள்ன்ட கேள்வி வரும். ஆங்கிலத்துல ‘ர’, ‘ற’ ஒலிப்புகள் பெரும்பாலும் ஒன்டு போலத்தான் வரும். அதுனால, ‘ra'க்கு ‘ற’வைப் பாவிக்கறம்.
Robert - றோபற்
Toronto - 'To'(ரொ)ro(ற)n(ன்)to(ரோ), ரொறன்ரோ
அடுத்து, உன்னொன்டு என்னண்டால், அது Cool Drink??
இந்தச் சொல்லுல 'D'ங்ற ஆங்கில எழுத்து ஏறி வாறது கிடையாது. அதுனாலத்தான், ‘கூ(coo)ல்(l) றி(dr)ங்(n)க்(k)’. அமைதி காத்து வாற எழுத்தைக் ஒலியில கணக்குக் கிடையாதுதானே? அது மாத்திரமே அல்ல. தமிழ் வரிவடிவத்துல, மெய்யெழுத்துக் கொண்டு சொல் வரக்கூடாதென் டும் நாங்கள் ‘கூல் ட்றிங்க்’ என்டு எழுதமாட்டம். அதே, cool dirink என்டு ஆங்கிலத்துல சொல் இருந்தால், அது ‘கூல் டிறிங்க்’ ஆகி இருக்குமென்ன??
முடிவாச் சொல்றது என்னென்டால், எங்கட தமிழ் ஒழுங்குல ஆங்கில எழுத்துகளுக்கான தமிழ் வரிவடிவம் இதுதான்.
da - ட
ta - ர
ti - ரி
ra - ற
ri - றி
r - ர்
rt - ற்
கூடுதலா சில ஆங்கிலச் சொற்களைப் பார்த்து விளங்கப் பண்ணிக்கலாம் வாங்க.
Robert Stanley Weir றோபேற் ஸ்ரான்லி வியர்
Sir Adolphe Basile Routhier சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே
Star Trek ஸ்டார் இட்ரெக்
Scarborough Civic Centre ஸ்காபுரோ சிவிக் சென்ரர்
Srilanka சிறீலங்கா
Rin றின்
Tin ரின்
Din டின்
TV ரிவி
DV டிவி
சரிங்க உறவுகளே, பிழையேதும் சொல்லி இருந்தால் பொறுத்து மன்னிக்க வேணும் நீங்கள். நான் முசுப்பாத்தியாத்தான் கதைக்க வெளிக்கிட்டன். மனசுல போட்டுக்காதிங்கோவன். நான் வாறேன். பேந்து பாப்பமென்ன?!
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ற - to write this use Ra
வெற்றி - write as veRRi
In most of the sites, the above is followed and it is familiar
ற - use Ra
வெற்றி - use veRRi
In most of the sites, the above is follwed and is well accepted
என் கருத்துக்கள் இங்கு உள்ளன
அருமை.
@@NAGARAJAN
நன்றிங்க!
@@சின்னப் பையன்
நெம்ப நாளா, ஆளைக் காணமே?
@@புருனோ Bruno
முடியலைங்க மருத்துவரே! ஒத்த கருத்துள்ளவர்கள், அவர்களுக்கான இதழ் நடத்தக் கூடாதா?? அவர்களுடைய இதழ்/எழுத்தை வாசித்து விட்டு அநியாயம் எனச் சொல்வது நன்றன்று!
அடுத்து? தனிமனிதனின் பெயரைப் பற்றி, அவர் தவிர்த்து எவரும் விமர்சிக்கும் தகுதி கிடையாது.
பழ&மைபே`சி என வரிவடிவம் கொடுத்து, அதை பழமைபேசிக்கு நிகரான ஒலிப்பில் கூற வேண்டும் என நான் குறிப்பிட்டால் அப்படித்தான் கூற வேண்டும். அறம் போற்றப்படும் இடத்தின் நடைமுறை அது.
Mani எனும் ஆங்கில வரிவடிவத்தில் ஒலிப்பை, ஆங்கில ஒலிப்பில் கூற முற்படின் மானி, மேனி என்றும் சொல்லக்கூடும். ஆனால் கேட்டறிந்து, மணி என்றே விளிப்பர்.
பங்கு...
என்னத்த சொல்ல...
ஒன்னும் புரியாத எனக்கே நல்லா புரிஞ்சது...
அதெப்படி ச்றீலங்க பாஷை..?
நான் எனது பெயரை (Peter) பீற்றர் என்றுதான் எழுதுகிறேன். பீட்டர் என்று எழுதுவதில்லை.
நான் எனது பெயரை (Peter) பீற்றர் என்றுதான் எழுதுகிறேன். பீட்டர் என்று எழுதுவதில்லை.
பழமையண்ணே,
நானும் இதைப்பத்திக் கண நாளா யோசிச்சன்.
பதிவிட்டு விளங்க வைச்சதுக்கு நன்றிங்க.
மின்தமிழில் ர/ற ன/ந பற்றிய இழையில் நான் எழுதியது.
http://groups.google.com/group/mintamil/msg/697d6bc0dd133f69
எனக்குப் புரிந்த வரையில் பீற்றர் என்பதே சரி. றொரன்றோ என்று தான் எழுதவேண்டும். ஈழத்தமிழர்கள் சரியாக உச்சரிக்கின்றனர் ஆனால் எழுத்துகளை மாற்றி விடுகின்றனர்.
//
Mani எனும் ஆங்கில வரிவடிவத்தில் ஒலிப்பை, ஆங்கில ஒலிப்பில் கூற முற்படின் மானி, மேனி என்றும் சொல்லக்கூடும். ஆனால் கேட்டறிந்து, மணி என்றே விளிப்பர்.
//
எப்படி மணி என்று உச்சரிக்க வைத்தீர்கள்? நானும் என் பெயரை இவர்கள் சரியாக உச்சரிக்க வைக்கப் போராடிக்கொண்டிருக்கிறேன். பகீரத முயற்சிக்குப் பிறகு மனி என்ற அளவுடன் நிற்கிறது. ணகரம் இவர்களுக்கு வருவதே இல்லை.
-மணிவண்ணன்
அட்லாண்டா.
//முடியலைங்க மருத்துவரே! ஒத்த கருத்துள்ளவர்கள், அவர்களுக்கான இதழ் நடத்தக் கூடாதா??//
தாராளமாக நடத்தலாம்
// அவர்களுடைய இதழ்/எழுத்தை வாசித்து விட்டு அநியாயம் எனச் சொல்வது நன்றன்று!//
ஆனால் பொதுவில் எழுதும் போது பொதுவில் என்ன பழக்கமோ அப்படி எழுதுவது நன்று
//அடுத்து? தனிமனிதனின் பெயரைப் பற்றி, அவர் தவிர்த்து எவரும் விமர்சிக்கும் தகுதி கிடையாது.//
ஹி ஹி
//பழ&மைபே`சி என வரிவடிவம் கொடுத்து, அதை பழமைபேசிக்கு நிகரான ஒலிப்பில் கூற வேண்டும் என நான் குறிப்பிட்டால் அப்படித்தான் கூற வேண்டும். அறம் போற்றப்படும் இடத்தின் நடைமுறை அது.//
கண்டிப்பா க
இங்கு பிரச்சனை அதுவல்ல
நான் விரிவாகவே விளக்கியுள்ளேன்
//Mani எனும் ஆங்கில வரிவடிவத்தில் ஒலிப்பை, ஆங்கில ஒலிப்பில் கூற முற்படின் மானி, மேனி என்றும் சொல்லக்கூடும். ஆனால் கேட்டறிந்து, மணி என்றே விளிப்பர்.//
உண்மை தான்
இங்கு பிரச்சனை அதுவல்ல
நான் விரிவாகவே விளக்கியுள்ளேன்
கானா பிரபா என்பதை kana pdaba என்றோ kana ptaba என்றோ எழுதாமல் kanapraba என்று எழுதிவி ட்டு
KTS Kannabitan TaviShankat என்றோ KDS Kannabidan daviShankad என்றோ எழுதாமல் KRS Kannabiran RaviShankar என்று எழுதிவிட்டு
torontoவை மட்டும் ரொறன்ரோ என்று எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கிறது
--
தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் போது (அதாவது encoding) ஒரு விதியும்
ஆங்கில சொற்களை தமிழில் எழுதும் போது (அதாவது decoding) வேறு ஒரு விதியும்
கடைபிடிப்பது என்னைப்பொருத்தவரையில்
அபத்தம்
அநியாயம்
--
இது என் கருத்து
--
உங்களை பொருத்தவரையில் அது
பத்தம் !!
நியாயம்
என்று இருந்தால் அது உங்கள் கருத்து
உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்
ஏற்றுக்கொள்ளவில்லை
//ஒத்த கருத்துள்ளவர்கள், அவர்களுக்கான இதழ் நடத்தக் கூடாதா??//
கானா பிரபா என்பதை kana pdaba என்றோ kana ptaba என்றோ எழுதாமல் kanapraba என்று எழுதிவி ட்டு
KTS Kannabitan TaviShankat என்றோ KDS Kannabidan daviShankad என்றோ எழுதாமல் KRS Kannabiran RaviShankar என்று எழுதிவிட்டு
torontoவை மட்டும் ரொறன்ரோ என்று எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கிறது ஒத்த கருத்து இல்லையே
--
//அடுத்து? தனிமனிதனின் பெயரைப் பற்றி, அவர் தவிர்த்து எவரும் விமர்சிக்கும் தகுதி கிடையாது.//
சரி தான்
எங்க பெயரை மட்டும் சரியாக எழுதுவோம் (கானா பிரபா என்பதை kana pdaba என்றோ kana ptaba என்றோ எழுதாமல் kanapraba என்று எழுதுவோம் )
ஆனால்
torontoவை மட்டும் டொரொண்டோ என்று எழுதாமல் ரொறன்ரோ என்று எழுதுவோம்
ஹி ஹி ஹி
என்ன கொடுமை சார் இது
---
எங்களின் பெயரை சரியாக எழுதிவிட்டு அடுத்தவர்களின் பெயரை சிதைப்பதை சுட்டிக்காட்டினால் சண்டைக்கு வருவோம்
--
ஹி ஹி ஹி
Post a Comment