புக்கைன்னா, பருப்பைச் சேர்த்து வேகவெச்சி சோறோட குழைய விடுறது; கம்பங்களியை உப்புத் தண்ணியில ஊற வெச்ச தண்ணி, கம்பந்தண்ணி! கம்பை வேகவெச்சி, மெலிசா இருக்குற துணி அல்லது, தட்டை வெச்சி வடிச்செடுக்குறது கமபங்கஞ்சி; கம்பை நல்லா வேகவிட்டு, குழையவிட்டு
நீர்மம் ஆக்கி உப்புப் போட்டுக் குடிக்கிறது கம்பங்கூழ்!!
அதே கம்பை அரைச்சி மாவாக்கி, அந்த மாவை வேகுற தண்ணியில போட்டு எடுத்தா அது ஊதுமாக்கூழ்; கூழ்ல காய்கறி, விதைக்கொட்டைகளைத் தொடப்பம் போட்டுத் துளாவி விட்டா அது கம்பங்கூழ்த் துளாவி ஆய்டும்.
கம்பையும் பாசிப்பயறையும் ஒன்னா வேகவெச்சி கொஞ்சூண்டு நல்லெண்ணைய ஊத்தி உருசிபடத் தின்னா அது புக்கை. கம்பை ஆட்டாங்கல்லுல அரைச்சி கல்லுல ஊத்துனா கம்பந்தோசை. பனியாரக் கல்லுல ஊத்தினா குழித்தோசை அல்லது பனியாரம் ஆய்டும். அரைச்ச மாவை அவிய விட்டா, கம்பங் கொழுக்கட்டை ஆய்டும். நொதிக்க வெச்சி வேகவெச்சா, அது கம்பு இட்லி ஆய்டும்.
கோயமுத்தூர் காளிங்கராயன் வீதியில இருக்குற ஒரு கடையில இதெல்லாம் ஒரு காலத்துல சமைச்சிக் குடுத்துட்டு இருந்தாங்க. இன்னும் அந்தக் கடை இருக்கா? இல்லன்னா, ஆந்திர எல்லையில இருக்குற சிறீகாகுளம் போனாக் கிடைக்கும்.
அம்மணிகிட்ட இருந்து அடுத்த கேள்வி... சோறு, களி, கூழுக்குண்டான வேறுபாடு என்ன? தானியத்தை அரிச்ச பின்னாடி பானையில போட்டு பருக்கை பருக்கையா வேக வெச்சா அது சோறு! உராஞ்சிக் கல்லுல போட்டு மாவாக்கினதை கொதிதண்ணியில போட்டு களிம்பு நிலைக்கு கொண்டு வர்றது களி; அதையே நீர்ம நிலைக்கு கொண்டாந்தா கூழ்!!
5 comments:
ஆஹா.. ஆஹா... பகிர்ந்து கொண்ட விவரங்களால் கம்மங்கூழ் குடித்த குளிர்ச்சி...
கல்லூரியிலப் படிக்கும் போது ராகி கூழு அல்லது பார்லி கஞ்சி காலையில தினமும் கிடைக்கும். அப்பா என்ன taste! இரண்டு புல் கப் அடிச்க்கப் பிறகு மதியம் சாப்பாடு நேரமானா கூட தாங்கும். மலரும் நினைவுகள்.
வெயிலில் குளுமை சேர்த்தது இந்த பதிவு... மேலும் ஊர நியாபகம் வந்தது.
thaimaasam thearnopikku podum
thanneer panthalil, mannu paanaiyil
kuzhu kuzhunu oru choppu kammnchorru pzhuthanneer kudicha
nenappu varuthu, thampiannov..
நிறைவான மணம் கமழும் பகிர்வு. பாராட்டுக்கள்.
Post a Comment