7/20/2011

பில்ட்மோர் பண்ணையகம் - எழில் கொஞ்சும் படங்கள்

அரசி நகராம் சார்லட் நகரில் இருந்து, மிசிசிபி ஆற்றங்கரையாரத்திற்கு இடப்பெயர்வு நிகழும் தருவாயில், வட கரொலைனா மாகாணத்தின் பில்ட்மோர் காடுகளில் இருக்கும் பில்ட்மோர் பண்ணையகத்திற்குச் சென்று தங்கும் ஒரு வாய்ப்புக் கிட்டியது.

இந்த பண்ணையகமானது, George Washington Vanderbilt II என்பாரால் 1889க்கும் 1895க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட, தனியாருக்குச் சொந்தமான, அமெரிக்காவின் மிகப்பெரிய வீடாகும். 250 அறைகளும், கிட்டத்தட்ட 70 கூடங்களும், நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகள், கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவிலான சோலை வனங்கள் கொண்டதாகும் இப்பண்ணை வீடு.

இரு நாட்கள் தங்கி இருந்து பெற்ற அனுபவத்தை அடுத்தடுத்த இடுகைகளில் காணலாம். இப்போதைக்கு, கீழ்க்கண்ட கவின்மிகு காட்சிப் படங்களைக் கண்டு களியுங்கள்!!

நகர்ச்சில்லுகளைச் சொடுக்கி, பெரிய அளவில் காணவும்!!



8 comments:

ஓலை said...

அருமை பழமை.

Kumky said...

அழகு...

அதே வானம்..

அதே பூமி...

Mahesh said...

Have you moved out?? Wish the new place brings more prosperity.

vasu balaji said...

அருமை. நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பரே இன்று வலைச்சரத்தில் கொங்குத்தமிழ் என்ற தலைப்பில் தங்கள் வலைப்பதிவைப் பகிர்ந்துள்ளேன்.

நன்றி

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_23.html

மாதேவி said...

அருமையான இடம்.

கொங்கு நாடோடி said...

ஏனுங்கண்ணா நிசான் 360Z நம்ப காருங்களா?

பழமைபேசி said...

//கொங்கு நாடோடி said...
ஏனுங்கண்ணா நிசான் 360Z நம்ப காருங்களா?//

அல்லங்கோ!!!