9/30/2010

ஏற்றவன்

வழிந்தோடும் இருளின்
பதட்டம் தணிப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வெற்றிப் பட்டியலில்
இடம் அமைப்பவன்
உற்றவனை ஏற்றவன்

வயிற்றுப் பசிக்கு
தின்னக் கொடுப்பவன்
உற்றவனை ஏற்றவன்

மரணத்தின் இடுகாட்டில்
துணை நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

தேடலில் புதையாது
காத்து நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

நேசிப்பை நேசிக்க
மறக்காது நிற்பவன்
உற்றவனை ஏற்றவன்

மலர்களின் அழகை
இரசித்துப் பகிர்வான்
உற்றவனை ஏற்றவன்

இந்த அற்றவனுக்கு உற்ற ஏற்றவன் இவன்!!!

10 comments:

ஈரோடு கதிர் said...

நடந்துங்கடி நடத்துங்க

Unknown said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

கலக்கல்...

Unknown said...

இது அழகுக்கு அழகு.

ஒரு கேள்வி.
உறாதல் ஆகா இருந்தா உறவுக்கு பங்கம் வந்து விடாதா? எதுக்கும் பிரயோசனம் இல்லைன்னு வீட்டை விட்டு துரதிட்டாங்கனா?

அப்ப எதுவும் அற்றவனா ஆகி விடுவோமே.

அப்ப உற்றவனை ஏற்றவனா ஏற்பதே நலமா?

(கதிர். தப்பா நினைக்காதீங்க. இது வெறும் வார்த்தை ஜாலம்.)

பவள சங்கரி said...

ஆஹா. புலவர்களுக்குள் போட்டி வந்தால் இரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். கலக்குங்க.

vasu balaji said...

அப்புடி போடுங்க மாப்பு.

sakthi said...

ஆஹா புலவரே அருமை அருமை

தெய்வசுகந்தி said...

கலக்குங்க!! அடுத்தது என்ன?

ராஜ நடராஜன் said...

எசப்பாட்டா?அப்ப சரி!

ஆரூரன் விசுவநாதன் said...

அதுயவடியவ........எங்க நாட்டமை பாட்டுக்கு எதிர் பாட்டு பாடறதேய்ய்ய்ய்ய்