9/22/2010

கிட்டப்பார்வை

எட்டத்தில்...
எதிர்த் திசையில் செல்லும்
தொடருந்தைக் கண்டதும்
ஆசை ஆசையாய்

கையசைத்து விட்டு
வாஞ்சையுற்றுச் சொன்னான்...
யாரோ நல்லவங்க
நல்லபடியா
போய்ச் சேரட்டும்!!

இதோ
இவனது தொடருந்து
இவனிருக்கும் திசையில்...
பரபரப்போ பரப்பு

அவசர அவசரமாய்
முண்டியடித்து ஏறி
அக்கடாவென அமர்ந்தபின்
அண்டி இருக்கும்
இவர்களைச் சொன்னான்
மனுசங்களா இவிங்க?
இவங்கெல்லாம்....
செத்துத் தொலைஞ்சா தேவலை!!


15 comments:

ப.செல்வக்குமார் said...

அட சாமி , இப்படி கூட இருக்காங்களா ..?

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மனித மனம் சில நேரங்களில் இப்படித்தான் போய் வேடமணியும்............

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மன்னிக்கவும், எழுத்துப் பிழை, பொய் வேடமணியும்.

ராஜ நடராஜன் said...

இடுகை யாருடைய கண்ணுக்கும் தெரியாம கீழே உட்கார்ந்துகிட்டுருக்குதாக்கும்:)

Sethu said...

எப்பிடிங்க கண்டுபிடிச்சிங்க.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா

திருஞானசம்பத்.மா. said...

நீங்க தொடருந்துலையும் போறீங்களா..??

வானம்பாடிகள் said...

இந்த ரெண்டாவதா சொன்னத வச்சிப் பார்க்கிறப்ப முதல்ல சொன்ன ‘நல்லபடியா போய்ச்சேரட்டும்னு’ சொன்னதும் வில்லங்கமால்ல தோணுது.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

அஃகஃகா!!

அண்ணனுக்கு நிகர் வேற யாரு? அவரேதான்!!

எட்ட இருக்கும் போது, அகச்சூழல்ல அன்பு தவழும். கிட்ட இருக்கும் போது, புறச்சூழல்னால அதுல தடங்கல்... அதான் இதுல நடக்குது!! இஃகி!!!

அரசூரான் said...

எங்கயோ இடிக்குதே (கொஞ்சம் தள்ளி உட்காரலாம்ல) இஃகி இஃகி. இக்கரைக்கு அக்கரை பச்சை.

பிரியமுடன் பிரபு said...

நல்லாயிருக்கு

Mahi_Granny said...

''எட்ட இருக்கும் போது, அகச்சூழல்ல அன்பு தவழும். கிட்ட இருக்கும் போது, புறச்சூழல்னால அதுல தடங்கல்... அதான் இதுல நடக்குது;''இதையும் இடுகையிலே சேர்த்திருக்கலாமோ .

ஈரோடு கதிர் said...

மாப்பு

எதுவும் அனுபவமோ!?

sakthi said...

நல்லாயிருக்குங்க பழமைபேசியாரே!!!

ஆட்டையாம்பட்டி அம்பி said...

தமிழ் அறிவு அதிகம் கிடையாது. இருந்தாலும் நேக்கு புரிந்த வரிக்கும் கவிதை ரொம்ப நன்னா இருந்தது.

என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன்!
அல்லது
அமெரிக்கா அம்பட்டன்!