5/16/2010

இனியரும் இளைஞரே!

இளைஞன் என்பவன் யார்? நான் இளைஞனா, இல்லையா?? வயதை அளவீடாய்க் கொண்டு அளவிடும் பருவங்களுள் ஒன்று என்பது பொதுவாகப் புழக்கத்தில் உள்ளது. வளரிளம் (adolescent) பருவத்திற்கு அடுத்து வருவது இளமைப் பருவம். இந்தப் பின்னணியில், பதினெட்டு வயது முதல் இருபதுகளின் கடைசிக்குள் இருப்பவன் இளைஞன். இது பெரும்பாலானவர்களின் புழக்கம்.

இளம்பருவத்தில் இருப்பவர்களின் மனதில் எளிதாய் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அவர்களது எண்ண அலைகள் குறுங்கோணத்தில் கட்டுண்டு போகாது, மேலும் மேலும் விரிவடைய வல்லது. அதையொத்து, மாற்றங்களை ஏற்கவல்லாரையும், சூழலுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதற்கேற்ப வினையாற்றுவோரையும் இளைஞர்கள் என்றே குறிப்பிடுவர்.

ஒப்பீட்டுக் கோணத்தில், மூத்தவன் அருகில் இருக்க ஒருவனை இளையன் எனச் சொல்வதும் உண்டு அல்லவா? அந்த வகையிலே, வயதிற்க் குறைந்தவன் இளையன் என ஆகிறான்.

செம்மொழியாம் தமிழ் மொழியில், இளமை எப்படி எல்லாம் கையாளப்பட்டு இருக்கிறது?

இள இளநீர், இளவேனில்
கன்னி கன்னிப்பேச்சு, கன்னிக்கோழி
குமரி குமரிவாழை
குஞ்சி குஞ்சியாச்சி
குட்டி குட்டியப்பன்,குட்டியம்மா
சிறிய சிற்றன்னை, சிறிய தந்தை
சிறு சிறுகாலை, சிறு பிள்ளை
சின்ன சின்னப்புள்ளை
நுழாய் நுழம்பு நுழாய்ப்பாக்கு
நொரு நொருப்பிஞ்சு
பச்சை பச்சைப்புள்ளை
பசு பசுங்குருவி பசுங்காய்
பிள்ளை பிள்ளையாண்டான்
பூ பூம்பிஞ்சு பூங்குஞ்சு
பை பைங்கூழ்
முட்டு முட்டுக்குரும்பை

ஆகவே, இளமை என்பது இடம், பொருள், ஏவல் என்பனவற்றைத் தழுவி மாறுபட்டு நிற்கிறது என்பதைக் காணலாம். மாற்றங்களுக்கும், கொள்கையை ஒத்த எண்ண விரிவாக்கங்களுக்கும் இடம் கொடுப்பவரா நீங்கள்? கோபதாபங்களை அடக்கி, மனக்கிலேசங்களை ஒடுக்கி, மனிதருள் மனிதராய் இரண்டறக் கலப்பவர் எவரும் இளைஞரே! அந்த வகையில் நீங்களும் இளைஞரே!!

என்ன இவன்? பத்து நாளா இடுகை எதும் இடாம இருக்குறதைப் பாத்துத் தொலைஞ்சான் இவன்னு மகிழ்ச்சியா அல்ல இருந்தோம்?? இப்ப எதுக்கு இளமையப் பத்தி பெரிய வியாக்கியானம்னு யோசிக்கிறீங்களா? இஃகிஃகி! அதுல ஒரு நுண்ணியம் இருக்குது இராசா, இருக்குது!!

இந்த சின்ன வயசா இருந்தும், எப்படி உங்களுக்கு தமிழ் மேல ஒரு ஈடுபாடு அப்படின்னு சிலர் கேட்டாங்க. இளைஞனுக்குள் இவ்வளவு அனுபவம் இருக்கான்னு ஒரு அம்மா மின்னஞ்சல் அனுப்பி இருந்தாய்ங்க. மகிழ்ச்சிதான்! மனதாரப் பாராட்டி, எளிமை போற்றும் அவங்க மனசும் இளமையானதே அப்படின்னு அவங்க புரிஞ்சிகணும் என்பதற்குத்தான் இந்த இடுகை. இஃகிஃகி!!

15 comments:

Unknown said...

இப்ப என்ன, நீங்க, கதிர், வானம்பாடி, கேபிள் சங்கர், நர்சிம் எல்லாரையும் யூத்துன்னு நாங்க சொல்லனுமா?

அதுக்கு எம்புட்டு பில்டப்பு சாமீ..

Paleo God said...

அதானே!!

செந்தமிழ்ல யூத்துன்னு சொல்லுவோம். :)

அந்த படிக்கட்டுல குழந்தையா ஏறி சறுக்கி வந்தபோதே இளைஞனா மாறி எடுத்த படம்தானே அது??!

அப்படியே போட்டிருக்கற உடைக்கும் தனித்தனியே தமிழ் பெயர் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.

இஃகிஃகி!!

vasu balaji said...

நெம்ப நாளைக்கப்புறம் பழைய பழமை:). இந்த யூத்து யூத்துன்னு ஒருத்தரு அலப்பறை பண்ணிட்டிருக்காரு. அவருக்குத் தேவை இது.:)))

vasu balaji said...

// முகிலன் said...

இப்ப என்ன, நீங்க, கதிர், வானம்பாடி, கேபிள் சங்கர், நர்சிம் எல்லாரையும் யூத்துன்னு நாங்க சொல்லனுமா?

அதுக்கு எம்புட்டு பில்டப்பு சாமீ..//

அல்லோ! எளக்கியம். நாமதான் மாணவரணித் தலைவர். அப்புறம் எப்புடி என் பேர் வரலாம். ஒழுங்கு நடவடிக்கைக்கு சட்டத்துக்கிட்ட பேசுறேன்:))

க.பாலாசி said...

//சூழலுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதற்கேற்ப வினையாற்றுவோரையும் இளைஞர்கள் என்றே குறிப்பிடுவர்.//

ஓ... சரிதான்....

வயசானவங்க சொன்னா சரியாத்தானிருக்கும்....

//மனக்கிலேசங்களை ஒடுக்கி, மனிதருள் மனிதராய் இரண்டறக் கலப்பவர் எவரும் இளைஞரே! அந்த வகையில் நீங்களும் இளைஞரே!!//

அப்டின்னா நீங்களும்!!!!!!?????.... இஃக்கி....

கயல் said...

ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்பத்தான் தமிழ் கூறும் நல்லாசானை பார்க்க முடிகிறது.வாழ்த்துக்கள்.:-)

சரண் said...

// முகிலன் said...

இப்ப என்ன, நீங்க, கதிர், வானம்பாடி, கேபிள் சங்கர், நர்சிம் எல்லாரையும் யூத்துன்னு நாங்க சொல்லனுமா?

அதுக்கு எம்புட்டு பில்டப்பு சாமீ..//

வாய்விட்டு சிரிக்க வெச்சதுக்கு நன்றி..

இளமை + இனிமை - இடுகை

இஃகிஃகி!!

naanjil said...

தம்பி பழமை

என்னையும் உங்கள் இளைஞர் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தயவு செய்து எழுதுவதை விட்டு விடாதீர்கள்.

காலிஃபோர்னியாவில் சிலிக்கான்வேலியில் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா சிறப்பாக‌
இன்று நடைந்தேறியது. சிறப்பான நிகழ்ச்சி.
இங்கு 1500 மேல் மாணவர்கள் தமிழ் பயில்கிறார்கள்.

அன்புடன்
நாஞ்சில் பீற்றர்.

பழமைபேசி said...

@@முகிலன்

தம்பி, வாங்க, வணக்கம்! இதுக்கு மேலவும் விவரணை வேணுமா என்ன?

@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

அடுத்து வந்த இளவலுக்கும் வணக்கம்!

தலைவார்ப்பட்டை
பின்னக்கீத்துச் சட்டை
கச்சைப் பட்டை
சல்லடம்
செராய்
தொடுதோல்

@@வானம்பாடிகள்

பாலாண்ணே, வணக்கம்! நன்றி!!

@@ க.பாலாசி

பிள்ளைத்தமிழ் நாயகனே வாங்க! வணக்கம்!!

@@கயல்

கவிஞருக்கு வந்தனம்!

@@சரண்

சிரிங்க தம்பி; சிரிங்க!!

@@naanjil

நிகழ்ச்சி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா; நீங்களும் இளைஞரே!!

Jerry Eshananda said...

வணக்கம் வாத்தியாரே...

Mahi_Granny said...

மிகவும் பிரமிப்புட ன் , மகிபனின் பாட்டி

Mahi_Granny said...

nanji said about siliconvalley tamilschool annual day function. where and when entu solliyirunthal naanum vanthiruppenay.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இளமை பற்றி அழகான பதிவு.

எண்ண ஓட்டங்கள் இளமையாக இருக்கும் யாவரும் இளைஞரே.

வளரிளம்பருவம் என்ற புது வார்த்தையைத் தெரிந்து கொண்டேன்.

அண்ணா.. வாரத்திற்கு ஒரு பதிவேனும் போடவும்.

அன்புடன் அருணா said...

"இனியரும் இளைஞரே!"
நல்லாருக்கு!

பத்மா said...

மனசுல தான் இளமை .ஆமாம்ன்னு சொல்லி ஓட்டும் போடறேன்