5/20/2010

பூமியின் அழகே...பரிதியின் சுடரே!

இவன் பயின்ற பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் எம்மவர்! எம்மவர் அவர் ஈழத்துக் கவிஞராம் சேரன்!! அவர் படைத்தார் பாடல்! நம்மக்கள் பிடித்தனர் அபிநயத்தோடு ஆடல்!!

காணொளியைக் கண்டு களியுங்கள். கவிஞரைக் காணவும் கவிஞர்தம் படைப்புகளை ஆராதிக்கவும் வாரீர் ஜூலை 2,3ல் நடக்கவிருக்கும் தமிழ் விழாவுக்கு! கடுகதியில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதால், உடனே முந்துங்கள் நுழைவுச் சீட்டுக்கு!!

நான் ஒருங்கிணைப்புச் செய்து, தொகுக்க இருக்கும் வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!! தலைப்பிலான கவியரங்கிற்கு சீரிய கவிஞர் தாமரை அவர்கள் தலைமை ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவியரங்க நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை ஒட்டி, கவியரங்கத்திற்கான பங்காளர் ஏற்பு மே 15ந் தேதியுடன் நிறைவுற்றது. மேலும் நிகழ்ச்சிக்கான மேலதிகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கவியரங்கத்திற்கு உங்களனைவரது ஆதரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.பட்டிமண்டபம் மற்றும் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் விரைவில் தொடர்பு கொள்ளவும்.4 comments:

வானம்பாடிகள் said...

காணொளியும் கவியொலியும் அருமை.

BaMa said...

நெகிழ வைக்கும் வரிகள் கொண்ட "தோணிகள் வரும் ஒரு மாலை". அருமை!

தாராபுரத்தான் said...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

மணிநரேன் said...

அருமை...:)