5/24/2010

கனவில் கவி காளமேகம் - 18

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம், மாசக் கணக்குல வராமப் போயிட்டாருங்க. நேற்றைக்குப் பாருங்க, இரவு மணி பதினொன்னு வரைக்கும் தமிழ், தமிழ்னு இலக்கியப் பல்வழி அழைப்பு. அதுல கலந்துகிட்டு, களைப்பாப் போயிப் படுத்தேன்... அப்படி ஒரு நித்திரை!

இடையில யாரோ வந்து, தலை மாட்டுல நின்னு கூப்புடுற மாதரயே இருந்திச்சி.... மனக் கண்ணைத் திறந்து பார்த்தா, நம்ம அப்பிச்சி... அவர் என்ன சொன்னார்னு மேல படிங்க....

“அப்பிச்சீஈஈ....”

“டே, பேராண்டீ....”

“என்னுங்க அப்பிச்சி, நெம்ப நாளாக் காணாமலே போயிட்டீங்க?”

“அட... ஆமா... நீதான் அல்லும் எல்லும் ஊரா ஊராத் திரிஞ்சிட்டு இருந்தே... அந்த நேரத்துல உனக்கெதுக்கு செரமம்னுதேன்...”

“நீங்கவாட்டுக்கு வந்து போயிட்டு இருங்க அப்பிச்சி.... பாக்குற நாலு சனம், என்ன அப்பிச்சிக்கும் பேராண்டிக்குமு இணக்கக்கேடான்னு கேக்குறாங்க பாருங்க?!”

“எலும்பு இல்லாத நாக்கு எப்பிடி வேணுமுன்னாலும் திலும்பும்டா... அவங்க கெடக்குறாய்ங்க... நீ மனசுல எதையுமு வெச்சிக்காத பாரு!”

“செரீங் அப்பிச்சி.... அதென்னங்கப்பிச்சி அல்லும் எல்லும்??

“அல் அப்படின்னா இரவு; எல் அப்படின்னா பகல்; அல்லும் பகலும் அப்படின்னு சொல்லிச் சொல்றதில்ல?! அதாண்டா, எங்க காலத்துத் தமிழ்ல அல்லும் எல்லும்!”

“ஓ, அப்படிங்களா அப்பச்சி?”

“ஆமாண்டா கண்ணு.... அதே கிரமத்துல சொல்றதுதான் அல்லோன்... அல்லில் வலம் வருபவன் அல்லோன்....அமாவாசையில் அல்லோன் அகப்படான்!”

பக்கிணிப் பொழுது வேலை செஞ்சும் பொல்லாப்புன்னு சொல்லிச் சொல்றாங்களே... அதென்னங்க அப்பிச்சி?”

“டே... எப்படறா இதையெல்லாங்கூட ஞாவகத்துல வெச்சிருக்க நீயி?”

“அய்ய... நம்ம கட்டைக்காட்டுல கல்லக்கா புடுங்க வாறவங்கல்லாம் பேசுன பழமை மறந்து போயுருங்ளாக்கூ?”

“என்ற பேராண்டியா? கொக்கான்னேன்?? ஆமாடா சின்னவனே.... கல்லக்கா எப்பப் புடுங்குவாங்க? தை, மாசில நல்ல வேசை காலத்துல புடுங்குவாங்க... அப்ப சில நேரங்கள்ல, இரவைக்குத் தூங்காமக் கொள்ளாம இருந்து வேலை செய்வாங்க... அப்பச் சொல்றதுதான் இந்த சொல்லு... பக்கிணிப் பொழுதுன்னா, காலைல இருந்து அடுத்த நா சாயங்காலம் வரைக்கும்... அதாவது, ரெண்டு பகலுமு, ஒரு இராத்திரியுமு!”

“ம்ம்ம்... இப்ப ஞாவகத்துக்கு வருதுங்க அப்பிச்சி....”

”நீயாவது இதெல்லாம் ஞாவகத்துல வெச்சிருக்கபாரு!”

“ஆமாங்க அப்பிச்சி.... நம்ம பக்கத்தூட்டு குப்புசாமியண்ணன் ஊட்டுக் கொமாரு திண்டுக்கல்லுல வேலை பாக்குறானுங்க.... பதினஞ்சி வருசங்களுக்கு அப்புறம் போன வாரந்தான் அவங்கூடப் பேசுனனுங்க அப்பிச்சி!”

“அப்படியா... அவனுமு நீயுந்தான மாடுகளைக் கொறைக்கு ஓட்டிட்டுப் போயி, ஒட்டுக்கா மாடு மேச்சிட்டு இருப்பீங்க?! அவனுமு, உன்ன மாதரயே நெறைய பழைய பழமைகளைப் பேசுவானே??”

”ஆமுங்... அப்பிச்சி, உங்ககிட்ட இன்னொன்னு கேக்கோணுமிங்க.... அடுத்தவிங்க குறுக்கால குறுக்கால பேசாம இருக்கச் செய்யுறதுக்கு ஒரு சொல் சொல்லுவாங்கல்லங்... அதென்ன சொல்லுங் அப்பிச்சி??”

மூகாத்துறதுன்னு சொல்றதைக் கேக்குறயாடா பழமை?”

“ஆங்... அதேதானுங் அப்பிச்சி! இப்ப அலைபேசி, தொலைபேசியெல்லாம் வந்திடுச்சி பாருங்க... தமிழ்ப் பேரவையோட தமிழ்விழாவுக்கு, கவியரங்கம், இலக்கிய வினாடி வினான்னு பலதுக்கும் பல்வழி அழைப்பு நடந்துட்டு இருக்குங்க அப்பிச்சி... அப்ப, அவங்க அலைபேசி, தொலைபேசில இருக்குற உள்வாங்கியில அவங்கவங்க ஊட்டு நாயமெல்லாம் கேக்குதுங்க அப்பிச்சி.... அதான், அதை எப்படி அமித்தி வெக்கிறதுன்னு சொல்லும் போது, இந்த சொல்லு தேவைப்பட்டதுங்.... உங்க அலைபேசியக் கொஞ்சம் மூகாத்துங்க அப்பிடின்னு இனி சொல்லலாம் பாருங்க....”

“நெம்ப நல்லா!”

“அப்பிச்சி... நெம்ப நாள்க் கழிச்சு நீங்க வந்ததுல மனசு நிறைஞ்சு போச்சுங்க... அப்பப்ப வரோணுமாக்கூ?”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....


(......கனவுல இன்னும் வருவார்......)

18 comments:

சீமாச்சு.. said...

good Job. Learnt new words :) Tamil Vaalga..

அபி அப்பா said...

கானாடுகாத்தான் போய் வந்த எஃபக்ட். ஜூப்பரு!

vasu balaji said...

ஆஹா! பாட்டனுக்கும் பேரனுக்கு ரவுசப்பாரேன். தமிழ் சினிமாவுல உச்சக்காட்சி மாதிரியே என்னா சீனு:)). அப்புச்சி என்ன வஞ்சாலும் பரவால்ல. நாலு வார்த்த கெடச்சிது. பழைய பழமை கேட்டாச்சி. நன்றிங் தாத்தோவ்.:))

Prasanna Rajan said...

அது எப்பிடிங்க காளமேகத்தாரு உங்க கனவுல மட்டும் கரெக்டா வாராரு. :)கொஞ்சம் எங்க கனவுல வந்தா பதிவு போட்டு ஓட்டலாம்ல...

//
உங்க அலைபேசியக் கொஞ்சம் மூகாத்துங்க
//

நீங்க வேற, எதுனாச்சும் கெட்ட வார்த்தைனு நெனைச்சுற போறாங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

கவி காளமேகத்தின் தாக்கம், மறந்து போன வார்த்தைகளுக்குப் புதுப் பொழிவு கொடுத்துள்ளது......

ரசிக்கும் படியான எழுத்து நடை......

வாழ்த்துக்கள்

Mahi_Granny said...

எங்களுக்கும் மனசு நிறைஞ்சு போச்சுதுங்க சார்

Karthick Chidambaram said...

// மூகாத்துங்க //
புதிய வார்த்தை என் அறிவுக்கு தந்தமைக்கு நன்றி!

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருகிறீகள் . மீண்டும் அப்பிச்சீஈஈ கனவில் வரட்டும் நாங்களும் வருவோம் கனவில் இல்லை !நினைவில் உங்கள் பதிவை வாசிக்க .
பகிர்வுக்கு நன்றி !

ஈரோடு கதிர் said...

//பாட்டனுக்கும் பேரனுக்கு//

ஏனுங்க... வானத்துல பாடறவரே
அது பாட்டனில்லீங்... அப்புச்சிங்....

மாப்பு...
அப்பிச்சி ஒடம்பு சொகந்தானுங்ளே...

க.பாலாசி said...

//“என்ற பேராண்டியா? கொக்கான்னேன்??//

அதானே...

அடிக்கடி தூங்குங்க... எங்களுக்கும் நெறைய வார்த்தைகளை தெரிஞ்சிக்கணும்னு ஆசையிருக்குங்க அப்புச்சி(:-)...

நேசமித்ரன் said...

பகிர்வுக்கு நன்றி

தாராபுரத்தான் said...

ஊர் ஊரு்ரா சுத்திக்கிட்டு இருந்தீங்களா? அதான பார்த்தேன்.. நம்ம அப்பூ சும்மாவே இருக்காதே.. எதையாவது நோண்டிக்கிட்டே இருப்பாங்களே ..

Mahesh said...

நானுமுங்கோட என்ராது, அம்மிணிகளை ஊருக்கு கெளப்பியுட்டபோது கோடவே அப்பிச்சியையுமு மணியண்ணன் தாட்டியுட்டாரு போலன்னு ரோசனை பண்ணேன்... :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வட்டார மொழி அருமை..

நீங்க சொல்லியிருக்கற தமிழ் வார்த்தைகளை காதால் கேட்டது கூட இல்லை.. :) நன்றி பகிர்வுக்கு..

அண்ணாமலை..!! said...

நல்ல பயனுள்ள பதிவு!
ரொம்ப நன்றிகள் உங்களுக்கு!

ராஜ நடராஜன் said...

அப்பிச்சி வந்துட்டார்:)

தாராபுரத்தான் said...

செம்மொழி தமிழே உங்களுதான் போல இருக்குதங்கக.

HK Arun said...

மீகம்! அருமையாக எழுதியுள்ளீர்கள். நல்ல பழந்தமிழ் சொற்களையும் ஆங்காங்கே தவழ விட்டுள்ளீர்கள்.