9/27/2009

Stepney!

மக்களே, இரண்டு நாள் பயணம் சிறப்பாக முடிந்தது. இலக்கியக் கூட்டத்தைப் பற்றி விபரமாக நாளை இடுகை இடுகிறேன், கடுமையான களைப்பாக இருப்பதே இதற்குக் காரணம்! எனினும் பயணத்தின் போது கிடைத்த ஓரிரு சுவாரசியத் தகவல்கள்:

பசு - ஆப்பி
யானை - இலண்டம்
குதிரை, கழுதை, ஒட்டகம் - இலத்தி
பறவைகள், பல்லிகள் - எச்சம்
நாய், ஓநாய், நரி - கட்டம்
காடை, கவுதாரி - புடம்
எருமை, மாடு - சாணம்
ஆடு, மான், முயல் - பி(பு)ழுக்கை
விலங்குகள் - விட்டை
மனிதன் - மலம்

”ச்சே, என்ன ஆச்சு இவனுக்கு? வந்ததும் வராததுமா இப்படி ஒரு இடுகை தேவையா?”, இப்படி எல்லாம் நீங்க மூக்கால அழுவீங்களா இருக்கும்; அழுங்க, தாராளமா அழுங்க, அது உங்க பிரச்சினை; ஆனா நான் மூக்கால அழறதைப் பத்தியும் அனத்திட்டுத்தான் போவேன்.


அழும்போது வடியுற கண்ணீர்ல கொஞ்சம், பக்கத்துல இருக்குற நாளச்சுரப்பிகள்னால மூக்குலயும் வெளிப்படும் அப்படின்னு அறிவியல் காரணங்களைச் சொல்லிச் சமாளிக்கலாம். ஆனா, நமக்கு மரபு வழின்னு ஒன்னு இருக்கல்ல? மூக்குல வாயில அழறான்னு சொல்றோம். ஆனாக் கண்ணுல மூக்குல அழறான்னு சொல்றதில்லை பாருங்க!

கண்களில் மட்டுமல்லாது மூக்கில் வடியும்படியும் அழறான் அப்படின்னு, அழுகையோட வீரியத்தைச் சுட்டிக் காட்டுறதுதான் மூக்குல அழறது. யேய் அவன் ஒரு நாள் விடுப்புக் கொடுக்கறதுக்கே மூக்குல அழறான், நீ வேற?! இங்க, அவனது ச்லிப்பை மிகைப்படுத்திச் சொல்றதுக்காக அந்த வழக்கு. இதுலயும் ஒரு படி மேலா மிகைப்படுத்துறது, அவனுக்குத் தெரிஞ்சா வாயில மூக்குல அழுவான், நீ வேற!

இனிமேக் கொண்டு அதெப்படி வாயில அழ முடியும், அதெப்படி மூக்குல அழ முடியும்னு கேட்டுத் தொல்லை செய்யக் கூடாது நீங்க!

பெரிய, மகா, மா... மாமடையன், மா என்பது மாங்காய், ஆக, மாமடையன் என்பது மாங்கா மடையன்! அடுமடையன்? அடுப்பங்கரையில் இருக்கும் மடையன்! ஆமா, சமைச்சது சரியில்லாதப்ப உங்களை அப்படிச் சொல்லுறதுதான அது?! என்ன ரொம்ப சலிச்சுகிறீங்க?? அப்ப உடனே சேமம் ஒன்னைக் கைவசம் வெச்சுகுங்க? இஃகிஃகி, அதென்ன சேமம்?

சேமிப்பு, உடனடித் தேவைக்கானதைத் தவிர்த்து இருக்கும் மாற்று; சேமச் செருப்பு, தேவைக்காக இருப்பதைத் தவிர இருக்கும் செருப்பு! ஆக, சேமம்னா
Stepney! இப்ப சொல்லுங்க, நீங்க தயார்தானா சேமத்துக்கு? உடனே வேலைய ஆரம்பிங்க அப்ப!

ஆனா மவனே இப்பவே சொல்லிட்டேன், நானும் ஒரு சேமச்செருப்பு வாங்க கடைத் தெருவுக்கு போறேன்னு அவங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது! கிடையாது!!

9 comments:

தமிழ் நாடன் said...

என்னடா ஆங்கிலத்துல தலைப்பு அப்படீன்னு பார்த்தேன்! நல்ல ஆராய்ச்சி நல்ல தகவலகள்!

vasu balaji said...

வரூம் வராதுல இவ்ளோ இருக்கா:)). ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு:))

Mahesh said...

Provident fund is/was called "sEma nidhi". I think now it is called "vaippu nidhi"

EllArum oru "sEma pathivu" vechukarathu nallathu... enna maniyAre?

ஈரோடு கதிர் said...

/கேட்டுத் தொல்லை செய்யக் கூடாது நீங்க!//

இனிமே கேக்க மாட்டோம்


ஸ்டெப்னி விளக்கம் அருமை

பழமைபேசி said...

// தமிழ் நாடன் said...
என்னடா ஆங்கிலத்துல தலைப்பு அப்படீன்னு பார்த்தேன்! நல்ல ஆராய்ச்சி நல்ல தகவலகள்!
//

எதோ, நம்மால ஆனது...

// வானம்பாடிகள் said...
வரூம் வராதுல இவ்ளோ இருக்கா:)). ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு:))
//

இஃகிஃகி!

@@Mahesh

நல்லாச் சொன்னீங்க அண்ணே!

//EllArum oru "sEma pathivu" vechukarathu nallathu... enna maniyAre?//

ஆகா!

@@கதிர் - ஈரோடு

மாப்பு வாங்க, நல்லா இருக்கீயளா?

*இயற்கை ராஜி* said...

ஹி,..ஹி

ஆரூரன் விசுவநாதன் said...

காலைல பார்த்த நண்பர்கிட்ட எப்படியிருக்கீங்க? என்றதுக்கு அவர்
சேமமா இருக்கேன்னார்? அதுக்கு இதுவா அர்த்தம்.......

அவ்வ்வ்............


அருமையான பகிர்வு

வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்டெப்னி விளக்கம் தெளிவா இருக்கு சார்

பழமைபேசி said...

@@இய‌ற்கை

நன்றிங்க!

@@ஆரூரன் விசுவநாதன்

அகஃகா, அவரு சேமமாவா இருக்காரு... அய்யோ பாவம்....

//பிரியமுடன்...வசந்த் said...
ஸ்டெப்னி விளக்கம் தெளிவா இருக்கு சார்
//

நன்றிங்க!