மக்களே,
$13 மில்லியன் திட்டப்பணிய என்னை நம்பிக் கொடுத்து இருக்காங்க. அதுக்கு ஒரு நெருக்கடின்னு வரும் போது, முழு ஒத்துழைப்பையும் நல்கனுந்தானே? அதான், வலைப்பக்கம் ஒதுங்க முடியலை சரிவர. அது இன்னும் சில நாட்களுக்குத் தொடரும்.
அன்பர் PKP தனது இடுகையில சொல்லி இருக்கார்: மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது
என்னைப் பொறுத்த வரைக்கும், எனது ஓய்வு நேரத்தை தமிழ் கற்பதிலும், கற்றதை வலைப்பூ வழியாகப் பகிர்ந்து கொள்வதிலும் செலவிடுறேன். ஆனால் பதிவுலகம் என்பதே அவசரமற்றது, முக்கியமற்றது, சுயமுன்னேற்றத்துக்கு உதவாததுன்னு சொல்லிட்டாங்களே? எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?
9/11/2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்...தொடர்ந்து அதில் கவனம் செலுத்துங்கள்...
//ஆனால் பதிவுலகம் என்பதே அவசரமற்றது, முக்கியமற்றது, சுயமுன்னேற்றத்துக்கு உதவாததுன்னு சொல்லிட்டாங்களே? எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?//
சரியான கேள்விதான்...நம்முடைய நல்ல சிந்தனைகள் அனைத்தும் பொதுவானவைதான்...பகிரப்படும்போது...
//எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா//
வாழ்க்கையில் கிடைத்த பல எளிய விடயங்கள் கிடைக்காமலே போயிருக்கும்.
வாழ்க்கை முழுதும் தங்கள் சுயநலம் பாராமல் யார் யாரோ செய்த தியாகங்கள் தான் என்ன்று நாம் வாழும் சுக வாழ்க்கை..
உங்கள் வேலைப்பளு புரிகிறது, ஆனாலும் தினமும் ஒருமுறையேனும் சந்திக்க விரும்புகிறோம்
பதிவுலகம் என்பது மனம் தொடர்பானது. கூட்டி கழித்துப் பார்ப்பவர்களுக்கு இங்கு வேலையில்லை. படித்தலும், அதை பகிர்தலும், எல்லோருக்கும் வருவதில்லை.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
//$13 மில்லியன் திட்டப்பணிய என்னை நம்பிக் கொடுத்து இருக்காங்க
//
செம்மையாகப் பணிமுடிக்க இறைவனை வேண்டுகின்றேன்
*****************
//எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?
//
சபாஷ் :)
பதிவுலகம் என்பது மனம் தொடர்பானது. கூட்டி கழித்துப் பார்ப்பவர்களுக்கு இங்கு வேலையில்லை. படித்தலும், அதை பகிர்தலும், எல்லோருக்கும் வருவதில்லை ..... <====
பழம அதுவேதான் எனது நிலையிம் இந்த விசயத்தில். நம்மில் பல பேரு இன்னமும் பள்ளி அறைகளை விட்டு வெளியே வரவில்லை, ஆஆஆங்.. நான் படிச்சததை எதுக்கு உன்கிட்ட பகிர்ந்துகிட்டுன்னு, நானும் படிக்கவே இல்லைடா அந்த பாடமின்னு சொல்லுவோம்ல அது மாதிரிக்கா... நீங்க வாங்க பழம, வந்து கத்துக்கிட்டதா எங்களுக்கும் சொல்லுங்க - தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு அதானே வள்ளுவம் ...
//எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?//
நல்லா கேட்டீங்க போங்க....
///ஆனால் பதிவுலகம் என்பதே அவசரமற்றது, முக்கியமற்றது, சுயமுன்னேற்றத்துக்கு உதவாததுன்னு சொல்லிட்டாங்களே? எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?//
இதுக்கொரு இடுகையப் போட்டு கடமைய பார்க்க போக வேண்டியதுதான்.கடமையைச் செய். பயனை எதிர் பாராதேன்னும் சொல்லி இருக்காங்கள்ள. என்ன பயன்னு வேற யோசிச்சிண்டிருந்தா விருதாவா போயிடும்.
என்னைப் பொறுத்த வரைக்கும், ///எனது ஓய்வு நேரத்தை தமிழ் கற்பதிலும், கற்றதை வலைப்பூ வழியாகப் பகிர்ந்து கொள்வதிலும் செலவிடுறேன். ஆனால் பதிவுலகம் என்பதே அவசரமற்றது, முக்கியமற்றது, சுயமுன்னேற்றத்துக்கு உதவாததுன்னு சொல்லிட்டாங்களே? எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?//
பங்காளி, ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க,
$13 மில்லியன் திட்டப்பணிய செம்மையா முடிங்க...
அதனால நலம் பெறுவது யார் யார் எல்லாம்னு பாருங்க,
அவங்க எல்லாம் பொது இல்லையா :))
சுயம் நல்லா இருந்தாத்தானே பொதுவைப் பற்றி அக்கறைப் படமுடியும்.
வெற்றியோடு வாருங்கள் !!!
வாழ்த்துகிறேன்
//$13 மில்லியன் திட்டப்பணிய என்னை நம்பிக் கொடுத்து இருக்காங்க. //
வாழ்த்துகள்.
புரியறவங்களுக்கு புரியாம இருக்காது: புரியாதவங்களுக்கு புரியாது.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்: தமிழ்பணியும்தான்
தங்கள் பணியை செம்மையாய் செய்து முடிக்க வாழ்த்துகள்..
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
சொல்பவர்கள் சொல்லிகிட்டுத்தான் இருப்பாங்க... அதைப் பற்றிக் கவலைப் படமுடியாதுங்க..
விரைந்து வெற்றிகரமாக பணி முடிக்க வாழ்த்துக்கள்.
//
$13 மில்லியன் திட்டப்பணிய என்னை நம்பிக் கொடுத்து இருக்காங்க
//
சொக்கா...இம்புட்டு துட்டா?? :0))
//ல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?//
13 million வேலையைக்கண்ணும் கருத்துமா பண்ணிட்டு அப்பறம் வாங்க. நாங்கெல்லாம் எங்க போயிறப்போறோம்.
பழமை அண்ணே. உங்கள் பணியை நல்ல படியாக முடிக்க வாழ்த்துகள்.
அண்ணே என் பதிவில் உள்ள இந்த வரிகளைப் பொதுவாகப் பார்க்க வேண்டாம்.
//நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும் அது நாம் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை// என்று தான் கூறவந்தேன்.
எந்த மாதிரி நாம் பதிவுலகைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே நாம் வீணடிக்கிறோமா இல்லையா என்பதும். நீங்கள் செய்வது என்னைப் பொருத்த வரை சேவை.
நான் படித்ததைப் பகிரவே இந்தப் பதிவை எழுதினேன். இது நேரத்தை வீணடிப்பவர்களுக்கே பொருந்தும். அனைவருக்கும் அல்ல :)
நல்ல கேள்வி.
@@க.பாலாஜி
@@கதிர் - ஈரோடு
@@ஆரூரன் விசுவநாதன்
@@எம்.எம்.அப்துல்லா
@@இயற்கை நேசி|Oruni
@@ Mahesh
@@ வானம்பாடிகள்
@@நிகழ்காலத்தில்...
@@ஸ்ரீ
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@பட்டிக்காட்டான்..
@@இராகவன் நைஜிரியா
@@துபாய் ராஜா
@@அது சரி
@@சின்ன அம்மிணி
@@ஊர்சுற்றி
நன்றி அன்பர்களே!
@@ ச.செந்தில்வேலன்
வாங்க வாங்க தம்பி! வெட்டிப் போட்ட பக்கத்தைப் படிச்சதும் கொஞ்சமா வருத்தம்... அம்புட்டுதேன்... நன்றிங்க தம்பி!
Post a Comment