நத்தார் நாள் விடுப்பையொட்டி வலையில் தமிழை நுகர்ந்து கொண்டிருந்தேன். நுகர்ந்தவாக்கில் எம்மண்ணில் இருப்பதாய் உணர்ந்ததும், கண்டு கொண்டிருந்த காணொலியை ஆய்வு செய்திடப் பார்த்தால், எம்மண்ணின் சொந்தக்காரன் மா.பிரகாசு. உயிரோடு மண்ணையும் கலந்து சுவாசித்துக் கொண்டிருப்பவன். தமிழுக்காக, தமிழருக்காக ஈகங்களைச் செய்தவன்; செய்கிறவன். கொண்ட கொள்கைக்காய் வாழ்கிறானவன்!!
அழைத்துப் பேசினேன். மனதாரப் பாராட்டினேன். நான் தொலைத்த மண்ணை இலாகவமாய்ப் படம் பிடித்திருக்கிறான். கூடவே, அறமோங்க நறுந்தேன்த் தமிழால் ஊர்ப் பெரியவரைப் பாராட்டவும் செய்திருக்கிறான் அவன். நானும் அவனும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். பிரகாசு, அண்ணனால் செய்ய வேண்டியதை இளவல் நீ செய்கிறாய். நீ வாழ்க! நின் தொண்டு வளர்க!!
4 comments:
அழைத்துப் பேசினேன். மனதாரப் பாராட்டினேன்.
இனிய நத்தார், புத்தாண்டு வாழ்த்துகள்..
வாழ்த்துகள்.
அது என்ன நத்தார்?
அமெரிக்காவில் இல்லாவிட்டாலும் நானெல்லாம் புதுமைபேசியே...........
இயேசு பிறந்த நாளை, natal/ dies natalis என போர்ச்சுக்கீசிய/இலத்தீன் மொழியில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களால் ஆளப்பட்டு வந்த மண்ணான தமிழீழத்திலும் இச்சொற்களின் பயன்பாடு இருந்து வர, அதற்கீடான தமிழ்ச்சொல்லான நத்தார் என்பதும் புழக்கத்திற்கு வந்து, இன்று அது இலங்கை முழுதுமாகப் பயன்பாட்டில் இருக்கிறது.
நத்தம் என்பது, பிறந்த இருப்பிடத்தைக் குறிப்பதாகும். நத்தை-பிறப்பிடத்துக்குள்ளாகவே இருக்கும் உயிரினம். அப்படியாக, இயேசுவின் பிறந்த இடத்தில் நடக்கும் விழாவின் திருவிழாவையொட்டி நடக்கும் நிகழ்வு நத்தார் என்பதாகும்.
Post a Comment