- வேளா வேளைக்குச் சாப்பிடணும். நாளொன்னுக்கு நாலுவாட்டி, ஆனா அரை வயித்துக்குதான் சாப்பிடணும்.
- எப்பவும் போல, மதியச் சாப்பாட்டுல எதனா ஒரு பழம் கட்டாயமாச் சேர்த்துகிடணும்.
- உடற்பயிற்சி செய்யுறதுல எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. ஒரு நாள் அப்படி இப்படி தவறினாலும் மறுநாள் சரியாச் செய்திடணும்.
- தனக்கு வர்ற தோழிகளோட அழைப்பை எடுக்காம விட்டு, அழைப்புக் கிடக்கத்து(voice mail)க்கு போக வுட்டுடணும். மாறா, எடுத்துப் பேசுறது கூடாது.
- விசாழக்கெழமை தவறாம பள்ளிக்கூடத்துக்குப் போயி, பாப்பாவோட வீட்டுப்பாடத்தை வாங்கி மின்நகலா மின்னஞ்சல்ல அனுப்பி வெச்சிடணும்.
- எக்காரணம் கொண்டும் இருத்தாத(press) உடுப்புகளை வேலைக்குப் போகும் போது உடுத்திட்டுப் போயிடக்கூடாது.
- அன்றாடம், உறக்கத்துக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற கழிவுகளைக் கட்டி வெளியில வெச்சிடணும். அல்லாட்டா வீட்டுல நாத்தம் அடிக்கத் துவங்கிடும்.
- வர்றதுக்குள்ள, எல்லாக் குளியலறைத் தொட்டிகளும் கழுவப்பட்டு இருக்கணும்.
- சமையலறையில எடுத்ததை எடுத்த இடத்துலயே வெச்சிடணும்.
- பால் காலாவதி ஆயிடிச்சின்னா கழிச்சிக் கட்டிட்டு வேற பால் வாங்கிக்கணும்.
- சாம்பார் தூள் சம்படத்தை திறந்து வெக்கவே கூடாது. நிறைய நேரம் திறந்து வெச்சா, தூளுக்குண்டான சுவை பறிபோயிடும்.
- எண்ணெயக் கிண்ணத்துல ஊற்றித்தான் வாடணும். கொள்கலத்தை அப்பிடியே சாய்ச்சி ஊத்தி வாடக்கூடாது.
- பாத்திரங்களுக்குள்ள நெகிழி அகப்பைகளை மட்டுந்தான் பாவிக்கணும். அப்படிச் செய்யாம உள்பூச்சை உரசிக் கீறல் செய்து வெச்சா, வேற பாத்திரங்கள்தான் வாங்கணும்.
- பின்னலாடைத் துணிகளைக் கையால துவைச்சிப் போடணும். அல்லாட்டி நெறம் வெளுத்து வீணாப் போகும். துவைக்க முடையின்னா துவைக்காமயே கிடக்கட்டும். நான் வந்து துவைச்சிக்கிறேன்.
- காலையில எழுந்ததும், சாக்குப்போக்கு சொல்லாம ஊருக்கு அழைச்சிப் பேசிடணும்.
- தன்னோட வண்டிய ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மறக்காம அஞ்சு பத்து மணித்துளிக்காவது இயக்கத்துல வுட்டு வைக்கணும்.
- எக்காரணம் கொண்டும் இரவு பத்து மணிக்கு மேல உறக்கத்தைக் கெடுத்துட்டு வெட்டி வேலை பார்க்கக் கூடாது. அதுக்கு முன்னாடி பாத்திரங்களைக் கழுவாம வுட்டு வைக்கக் கூடாது.
- ஆண்டு முடியப் போகுது; அதனால பல்மருத்துவர்கிட்டயும் கண் மருத்துவர்கிட்டயும் தவறாமக் காட்டிட்டு வந்திடணும். அங்க தேமேன்னு கடன் அட்டையப் பாவிக்கக் கூடாது. வரிக்கழிவு அட்டையப் பாவிக்கணும். அல்லாங்காட்டி, அட்டையில இருக்குற நூத்தி இருவது வெள்ளி நமக்கு நட்டமாப் போய்டும்.
- டிசம்பர் 23ந் தேதிக்கு முன்னால, மறக்காம, நத்தார்நாள்(Christmas) பரிசுகளை, பாப்பாவோட பள்ளி ஊர்தி ஓட்டுநருக்கும் அவங்க வகுப்பு ஆசிரியருக்கும் கொண்டு போய்க் கொடுத்திடணும்.
- இந்த மாத மின்கட்டணம், பற்றுச்சீட்டுக் கட்டணம் எல்லாம் நானே செலுத்திட்டேன். அடுத்த மாதத்திற்கான கட்டணம் டிசம்பர் 27ல செலுத்துற மாதிரி தானியக்கச் செலுத்திக்கு ஊட்டங்கொடுத்திடுங்க. நான் வந்ததுக்கு அப்புறமா அந்த ஊட்டத்தை மறுபடியும் நிறுத்திடலாம்.
விமானம் இஃகூசுடன்ல அமெரிக்க மண்ணிலிருந்து இன்னும் எழும்பக் கூட இல்லை. ஆனா, நாங்க துவக்கிட்டம்ல ஆட்டத்தை?!
போகவுட்டுப் பண்ணையம் பாக்குற வித்தகம் எங்களுக்குத் தெரியாததா என்ன?! இஃகி இஃகி!!
8 comments:
தங்கமணி... என் பெண்சாதி ஊருக்கு போயிட்டாங்க.
ஹும் பட்டர்மில்க் குடிக்கிற பையனெல்லாம் பட்வைசர் (படம்) போட்டா... முடியல. :)
பட்டியல் சிறுசா இருக்கே. நிறைய மறந்துட்டீங்களோ?
தங்கமணி, திரும்பி வந்து நிக்கப் போறாங்க, எதுக்கும் சித்த பாருங்க...
போகவுட்டுப் பண்ணையம் பாக்குற வித்தகம் எங்களுக்குத் தெரியாததா என்ன?
"கிளிப்பிள்ளை"க்கு பாராட்டுக்கள்...
அது செரி:)))
ம்.நடக்கட்டும்.
:))
அப்ப சரிதான், அண்ணனுக்கு ஜாலி ...
Post a Comment