தமிழ்மணம்
அனைவரும் நினைப்பது என்ன? தமிழ்மணம் என்றால் தமிழ் கமழ்வது, அல்லது தமிழ் மணப்பது என்றுதான். ஆனால், அது அப்படி அல்ல.
மணம் என்றால் கூடுதல். இரு மனங்கள் ஒன்றாகக் கூடி இணையும் மங்கள நிகழ்ச்சியானது, திருமணம். அது போலத்தான், தமிழர்கள் ஒன்றாகக் கூடும் இடம் தமிழ்மணம்.
இன்னும் ஐயப்பாடு நீங்கவில்லையா? மணலி என்று சொல்கிறோம்? அது என்ன மணக்கும் இடமா?? அல்ல! மக்கள் கூடும் இடம் மணலி! மணத்தக்காளி? கொத்து கொத்தாகக் கூடியபடி இருக்கும் பழங்கள் மணத்தக்காளி! ஆக, நிச்சயமாக தமிழ்மணம் என்பது தமிழர்கள் தமிழால் கூடிக் குலாவும் இடம்தான்.
அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே? ஆற்றங் கரையோரத்து உராஞ்சிக்கல், ஒற்றையடிப் பாதையில் இருக்கும் சுமைதாங்கிக் கல், ஊருக்குள் ஆங்காங்கே கிடக்கும் மாசிக்கல் போல தமிழனுக்கான கட்டமைப்புக்கல்லாக அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே?!
உராய்ஞ்சு தள்ளுவதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் உராஞ்சிக்கல்லுக்கு உயிர் என ஒன்றிருந்தால் அதற்கு நோகாதா?
சுமைதாங்குகிற கல்லுக்குத்தான் உயிர் இருந்தால் நோகாதா?
அங்குமிங்குமாகப் போய் வரும் பாதசாரிகள், கால்களின் மாசை அப்புறப்படுத்தும் பொருட்டுத் தம் கால்க்ளால் போட்டுத் தேய்க்கும் போது, மாசிக்கற்களுக்கு உயிர் என ஒன்றிருந்தால் வலிக்காமல் போகுமா??
வரலாற்றுச் சின்னங்களாய் இருக்கும் அவற்றுக்கு என்றேனும் ஒரு பொழுதை காணிக்கை ஆக்கிக்கொள்வோமே?! ஆண்டாண்டு காலமாய் வலி தாங்கும் அவற்றுக்கு, என்றேனும் ஒரு பொழுதில் நாமும் ஏதேனும் ஒரு வலியைப் பொறுத்துக் கொள்வோமே??
13 comments:
நல்ல கருத்தாகத் தெரிகிறது.
அழகு :)
அண்ணா உங்கள் கருத்து அருமையாக இருக்கிறது!!
கல் க்கு உயிரும் மணமும் இருக்கும் என சிந்திக்க சாந்தமான மனம் வேண்டும். என்ன செய்ய....
பெயர் வைத்தவர் பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார் :)
மண், மணி, மணத்தல், மண்டுதல் இவை யாவிலும் கூடுதல், திரளுதல் என்ற உட்பொருள் பொதிந்திருப்பதைக் காணலாம்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் (742)
என்ற குறளில் மணிநீர் என்பது திரண்டு, நெடிதாய்ச் சேர்ந்திருக்கும் நீர்நிலையையும் ஒரு நாட்டின் அரணாகக் குறிக்கிறது.
மேலும் ஒரு எண்ணம் - நாற்றம் என்பது ஒரே ஒரு பொருளிலிருந்து வருவதாகவும், மணம் என்பது பல பொருட்களின் ஒட்டு மொத்த நுகர்வுணர்வை குறிப்பதாகவும் தோன்றுகிறது. கற்பூரம் நாறும், கமலப்பூ நாறும், மீன் நாறும். மலர்கள் மணக்கும், குங்கிலியம் மணக்கும்.
மனதைக் கிளறியமைக்கும் தேடவைத்தமைக்கும் நன்றி!
//சுந்தரவடிவேல் said...
பெயர் வைத்தவர் பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார் :)//
பழமைபேசி? அது எனக்கு நானே சூட்டிகிட்ட பெயருங்க... இஃகிஃகி... சும்மா உங்ககோட ஒரு முசுப்பாத்தி!
கூடுதல் கருத்துச் செறிவுக்கு நன்றிங்க சுந்தர்!!
@@DrPKandaswamyPhD
@@புதுகை.அப்துல்லா
@@RAMYA
@@நிகழ்காலத்தில்...
@@அருள்
ஒறம்பரைமார் (உறவின்மார்) அல்லாத்துக்கும் நன்னிங்கோ!!
ம்ம்ம்ம்
பாதிக்கப்பட்டவனுக்கும் பாதித்தவனுக்கும் உதவுவதே நல்ல சமுதாயப்பணி என்றார் குரு.
பாதிக்கப்பட்டவனுக்கு உதவலாம். சரி. பாதித்தவனுக்கு எப்படி? என்றனர் சீடர்கள்.
பாதிக்கப்பட்டவனுக்கு அவனுடைய பாதிப்பிலிருந்து மீள உதவி செய்ய வேண்டும். அது போல் பாதிப்படைய செய்தவனுக்கு நல்லுரைகள் கூறி அவனை அறத்தோடு, மீண்டும் தவறாத நிலையில் வாழ அறவுரைகள் சொல்லித் திருத்த வேண்டும் என்றார் குரு.
(இதில் குரு நபிகள். சீடர்கள் அவர்தம் தோழர்கள்)
@@சுல்தான்
நிச்சயமாங்க அய்யா!!
வழி மொழிகிறேன்....
கருத்து அருமை!!
வணக்கம் நல்லது....
Post a Comment